என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 7 நவம்பர், 2010

இசை வேந்தன் ஏ.ஆர்.ரஹ்மான்

             தமிழ் இசை மலையில் பிறந்து;
             இந்திய இசைச்  சமவெளியில் தவழ்ந்து;
             உலக இசைக்கடலில் நுழைந்த
             இசை நதியே !
                         தமிழ்த் திரை நிலத்தில் 
             விழுந்து முளைத்த               விதையே!
             இசையுலகில் செய்தாய் 
             புதிய விதியே!
                           சுற்றி வரும் பூமிக்கு               காதிருந்தால் 
             சற்று நேரம்               நின்றுவிட்டுத்தான் செல்லும்!
             உன் இசை ஒலிக்கும்போது,
                           காற்று கூட               களிப்படையும்!                உன் இசையைக்               கடத்தும்போது,
                           வெற்றி தேவதைக்கும்               சந்தோஷம்;
             உன் கால்களை               பற்றிக்கொள்ளும்போது!
                          மயக்கும் இசை பிறக்கும் 
             உன் மனதில்;                                கலக்கும் இசை               கைகூடும்                 உன் கைகளில்!
                          உன் கண்களில் கூட 
             தெரிவது                இசை வெளிச்சம்;
                           உன் இதயம்கூட 
             தாளத்தோடுதான் துடிக்கும்!
                          நாட்டுப்பற்றை நாற்பத்தேழோடு 
             மறந்து போன               மக்கள் மனதில் 
             வந்தே மாதரம் மூலம் 
             மீண்டும்               வந்தமரச் செய்தாய்!
                          இளைஞர்கள் மனதில் 
             இசையால் இடம் பிடித்தாய்!
                          இந்திய இசையை               இமயத்தில் 
             ஏற்றி விட்டாய்!
                           புதுப்புது               இசை வடிவங்களின் 
             பிரம்மாவே!                                        நீ               ஆஸ்கார் வாங்கியபோது                ஆ! என ஆச்சரியப்பட்டது உலகம்!                                   ஜெய் ஹே! என்று முடியும்                     தேசிய கீதம் கூட - இனி               ஜெய் ஹோ!               என்று மாறிவிடுமோ?                உன்னை               தமிழகத்தில்               பிறக்கச் செய்ததால்               இறைவனை போற்றுகிறோம்!                  'எல்லாப்புகழும் இறைவனுக்கே!'  *************************************************************************  செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!பகுதி3

சனி, 18 செப்டம்பர், 2010

எது கவிதை?


     சொற்களை கூட்டு சேர்த்து
          சொல்வது அல்ல கவிதை
     விற்பனை செய்ய விரைவாய்
          எழுதுவது அல்ல கவிதை
     கற்பனை செடியில் பூக்கும்
          கவின்மிகு கருத்து கவிதை
     பற்பல வடிவில் கவிதை
          உள்ளதை பார்ப்போம் வாரீர்!


     துடிக்கின்ற இளமை கவிதை
          துயரிலா வாழ்க்கை  கவிதை
     படிக் கின்றபோது இன்பம்
          தருகின்ற நூல்கள் கவிதை
     கடிக்கின்ற எறும்புக் கூட்டம்
          செல்கின்ற வரிசை கவிதை
     இடிக்கின்ற இடியின் ஒலியும்
          இணையிலா இயற்கை கவிதை


     காற்றுக்கு தலையை ஆட்டும்
          நாற்றுக்கள் நடனம் கவிதை
     ஆற்றுக்குள் நீந்தி ஆடும்
         அழகிய மீன்கள் கவிதை
     சேற்றுக்குள் முளைக்கும் நல்ல
         செந்நிறக் கமலம் கவிதை
     ஊற்றுக்கண் கண்டு பொங்கும்
         உழவனின் உள்ளம் கவிதை


     மலர்ந்திடும் பூக்கள் கவிதை
         மரங்களின் அசைவும் கவிதை
     புலர்ந்திடும் காலைப் பொழுதின்
         காட்சியும் புதுமைக் கவிதை
     வளர்ந்திடும் நிலவும் கவிதை
         வடிவிலா மேகம் கவிதை
     தளர்ந்திடும் முதுமை வரினும்
         தளர்வுறாக்  காதல் கவிதை





சனி, 11 செப்டம்பர், 2010

கவிதை துளிகள் - இறை வாழ்த்து


கற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான்
பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும்
உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா
பற்றியெனைத் தூக்கி விடு.