என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Thursday, May 24, 2012

பதிவர் சந்திப்பில் அறிந்த 'பயன்படா மரங்கள்'

 
  பதிவர் சந்திப்பு அறிமுகப் படுத்திய அற்புத மனிதர்  யோகாநாதன். மரங்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்துக்  கொண்டவர்.பக்கத்து வீட்டு மரத்தின் கிளை நம் வீட்டை எட்டிப் பார்த்தாலே சண்டையிட்டு அதை வெட்டும் வரை ஓயாத மனிதர்கள்தான் இங்கே அதிகம். 
  ஆனால்  மரங்களை வெட்டினால் இவர் மனம் துடிக்கும். இவர் சொல்வதைக் கேட்டால் உலகம் பிழைக்கும். பசுமை தழைக்கும்.
   சுற்றுச்  சூழல்ஆர்வலரான இவர் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துகிறார். இடமும் மின்சாரமும் கொடுத்தால் போதும் பிஞ்சு நெஞ்சங்களில் மரங்கள் பற்றிய விழிப்புணர்வை என்னால் பதிய வைக்கமுடிய்ம் என்று அறுதியிட்டுக் கூறுகிறார். ஆர்வமுள்ள ஆசிரியர்கள்
அவரை கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளாலாம்.
M.Yoganathan
Pr No : 3994,
Tamilnadu State Transport Corporation,
Maruthamalai Branch,
Coimbatore.


Home Address
107, Thirumalai Samy Naidu Street,
New Sidhapudur,
Coimbatore - 44.
Mobile
: 09443091398.
வலைத்தள  முகவரி 
http://yogutree.com

 இதோ மரங்களைப் பற்றிய ஒரு கவிதை
                  பயன்படா மரங்கள் 

             இயற்கைக்கு அழகு சேர்க்கும் 
              அணிகலன் மரமேயாகும் 
              இறைவன்  நமக்களித்த 
              இனியதோர் வரமே யாகும்

              மண்ணுக்கு மழையைத் தருமே
              உலகுக்கு நிழலைத் தருமே
              கண்ணுக்கு குளிர்ச்சி தருமே
              உண்பதற்கு உணவு தருமே

              மலைகளுக்கு ஆடையாகும் 
              குயில்களுக்கு மேடையாகும்
              பறவைகளுக்கு  கூடு ஆகும்
              ஒரு சிலர்க்கு வீடும் ஆகும்
              
              விருந்தினர்  உணவுஉண்ண
              விரும்பியே இலைகள்கொடுக்கும்
              மருந்துகள்  பலவும் தந்து 
              மன்னுயிர் வாழச் செய்யும் 

              எரித்திட விறகைக் கொடுக்கும் 
              அரித்திடும் மண்ணைத் தடுக்கும்
              உண்ணவே கனிகள்  கொடுக்கும்
              உயிர்வளி காற்றில் சேர்க்கும்

              வெம்மையை தடுத்து விடும்
              அசுத்தங்கள் எடுத்து விடும்
              பலப்பல பொருட்கள் செய்ய 
              பணிவுடன் தன்னைக் கொடுக்கும்

              பயன்பெறும் மனிதன் மரத்தை 
              ஒருநாளும் நினைப்பதில்லை 
              சுயநல மனிதர் அவர்க்கு 
              இயற்கையின்  மன்னிப் பில்லை

              மக்கட்  பண்பில்லா மனிதர் 
              மரம்போலே ஆவாரென்று
              வான்புகழ் வள்ளுவன் ஏனோ
              வாய் தவறி சொன்னான் அன்று 

              பயன்படா மரங்கள் என்றும் 
              மண்ணிலே முளைத்ததில்லை 
              மடிந்தபின்னும் மனிதருக்குதவும் 
              மரங்களுக்கு இணையே இல்லை.

              மரங்களின்  மகிமை அறியா
              மனிதரில்  சிலபேர் தன்னை 
              பயன்படா மரங்கள் என்பேன் 
              மறுப்பேதும் உண்டோ? சொல்வீர்!.


***********************************************************************************************
இதை படிச்சிட்டீங்களா?

16 comments:

 1. மரங்களின் மகிமை அறியா
  மனிதரில் சிலபேர் தன்னை
  பயன்படா மரங்கள் என்பேன்
  மறுப்பேதும் உண்டோ? சொல்வீர்!.  மரங்களிம் மகிமை அறியா மனிதர் பயன்படா மரங்களே ! மற்றபடி மரங்களெல்லாம் பயன் மிக்கவையே ! மனம் கவர்ந்த மரங்களின் பயன் மிக்க ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. மரங்களின் மகிமை அறியா
  மனிதரில் சிலபேர் தன்னை
  பயன்படா மரங்கள் என்பேன்
  மறுப்பேதும் உண்டோ? சொல்வீர்

  இல்லை! இல்லை! இல்லை!

  உண்மை!நன்மை! உண்மை!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 3. மரங்கள் மனித மனதையும் வளர்க்கின்றன,நல்ல சந்திப்பு,நல்ல் பொதுப்பணி,நல்ல முயற்சி வாழ்த்துகள்.இது மாதிரியானவர்கள் இருக்கும் போது கண்டிப்பாக மழை பெய்யும்.

  ReplyDelete
 4. மனிதர்களிலும் பயன்படா மரங்கள் உண்டுதான்.
  ’அன்று’ எழுதிய கவிதை அருமை

  ReplyDelete
 5. //இராஜராஜேஸ்வரி said...
  மரங்களிம் மகிமை அறியா மனிதர் பயன்படா மரங்களே ! மற்றபடி மரங்களெல்லாம் பயன் மிக்கவையே ! மனம் கவர்ந்த மரங்களின் பயன் மிக்க ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்..//
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 6. //புலவர் சா இராமாநுசம் said...

  மரங்களின் மகிமை அறியா
  மனிதரில் சிலபேர் தன்னை
  பயன்படா மரங்கள் என்பேன்
  மறுப்பேதும் உண்டோ? சொல்வீர்

  இல்லை! இல்லை! இல்லை!

  உண்மை!நன்மை! உண்மை!//
  நன்றி அய்யா!

  ReplyDelete
 7. //விமலன் said...
  மரங்கள் மனித மனதையும் வளர்க்கின்றன,நல்ல சந்திப்பு,நல்ல் பொதுப்பணி,நல்ல முயற்சி வாழ்த்துகள்.இது மாதிரியானவர்கள் இருக்கும் போது கண்டிப்பாக மழை பெய்யும்.//
  நன்றி!

  ReplyDelete
 8. //சென்னை பித்தன் said...
  மனிதர்களிலும் பயன்படா மரங்கள் உண்டுதான்.
  ’அன்று’ எழுதிய கவிதை அருமை//
  நன்றி!நன்றி!

  ReplyDelete
 9. ஊரில் இல்லை. எனவே வர முடியவில்லை. ஒரே ஊரில் இருந்தாலும் இந்த விழாவில் சந்தித்திருக்கலாம்

  ReplyDelete
 10. //மோகன் குமார் said...
  ஊரில் இல்லை. எனவே வர முடியவில்லை. ஒரே ஊரில் இருந்தாலும் இந்த விழாவில் சந்தித்திருக்கலாம்//
  ஆம் நீங்கள் வருவீர்கள் என்று எதிர் பார்த்தேன்.

  ReplyDelete
 11. //மரங்களின் மகிமை அறியா
  மனிதரில் சிலபேர் தன்னை
  பயன்படா மரங்கள் என்பேன்
  மறுப்பேதும் உண்டோ? சொல்வீர்!.//

  எப்படி மறுக்க முடியும்?

  மரங்களின் நண்பன் திரு யோகநாதனுக்கு
  தாங்கள் படைத்துள்ள இந்த நல்ல கவிதைக்கு
  என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. வே.நடனசபாபதி said...
  //மரங்களின் மகிமை அறியா
  மனிதரில் சிலபேர் தன்னை
  பயன்படா மரங்கள் என்பேன்
  மறுப்பேதும் உண்டோ? சொல்வீர்!.//

  எப்படி மறுக்க முடியும்?

  மரங்களின் நண்பன் திரு யோகநாதனுக்கு
  தாங்கள் படைத்துள்ள இந்த நல்ல கவிதைக்கு
  என் வாழ்த்துக்கள்!//
  நன்றி சார்,

  ReplyDelete
 13. மரங்களின் நண்பன் திரு யோகநாதனுக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 14. இருந்த மரங்களை வெட்டித் தறிச்சோம்.இப்ப புரியுது அதன் பலன்.இப்ப நடுவோம் மரங்களை.வாழ்த்துகள் !

  ReplyDelete
 15. //ஹேமா said...
  இருந்த மரங்களை வெட்டித் தறிச்சோம்.இப்ப புரியுது அதன் பலன்.இப்ப நடுவோம் மரங்களை.வாழ்த்துகள் !//
  நன்றி ஹேமா!

  ReplyDelete
 16. பயன்படா மரங்கள் என்றும்
  மண்ணிலே முளைத்ததில்லை
  மடிந்தபின்னும் மனிதருக்குதவும்
  மரங்களுக்கு இணையே இல்லை.


  அருமையான மரங்களை பற்றிய கவிதை.
  சிறு வயதில் பனை மரம் தன் பயனை சொல்லும் பாடல் பாடத்தில் உண்டு. அப்படி பள்ளிபாடத்தில் மரங்களை வெட்டாமல் வளர்க்க சொல்லிக் கொடுத்தால் நாடு நலம் பெறும், மழை பெறும்.
  மரங்களின் காவலர் திரு யோகநாதனுக்கு வாழ்த்துக்கள்.
  கவிதை வாசித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895