என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Thursday, July 12, 2012

பேருந்துப் பாவை                தூரத்தில்
                நகர  இயலாத அளவு 
                கூட்டத்தோடு வரும்
                நகரப் பேருந்தைக்கண்டு 
                உள்ளதை சொன்னார்கள் 
                'இந்த பஸ் 
                ரொம்ப மோசம்'


                எப்படியோ உள்ளே ஏறி 
                உன்னைப்  பார்த்ததும்
                உள்ளத்தைச் சொன்னார்கள்!
                'இந்த பஸ் 
                ரொம்ப வாசம்'


                நீ ஏறியதில்
                பேருந்துக்கும் 
                பேரின்பம் போலும்!.
                மேடு பள்ளங்களில் 
                ஏறி இறங்கி குதித்தாட 
                எங்கள் இதயமும் சேர்ந்தே...


                அண்ணல்கள் அனைவரும் 
                உன்னையே நோக்க 
                நீ யாரை 
                நோக்கப் போகிறாய்?

                உன்  பார்வைக் கதிர்வீச்சால் 
                எந்த இதயத்தை 
                தாக்கப் போகிறாய்?

                உன் சுட்டு விரல் நீட்டி 
                எங்களில்
                ஒருவரைக்  காட்டு!
                உன்னிடம் 

                இதயப் பரிமாற்றம் செய்ய!

                அந்தப்  பேரின்பப் பேரிடரில்
                சிக்கித் தவிக்கப் போகிறவர் 
                யார்?


                அது 
                தெரியும்வரை 
                எங்கள் மாரத்தான் ஒட்டமும்
                படிக்கட்டு சாகசங்களும் 
                தொடரும்.

*********************************************************

22 comments:

 1. ஐயோ.....

  அழகாக இருக்கிறது காதலுக்கான தவிப்பு

  ReplyDelete
 2. தினசரி நடப்பு இதுதானே!அழகு

  ReplyDelete
 3. ஓஹோ...பஸ் பயணத்துல உங்க முன்னாடி இருந்தது யாரு..? பின்றீங்க...

  ReplyDelete
 4. இயல்பான கவிதை! இனிய நடை!கருத்து வளம்!அமைந்த அருமையாக உள்ளது!

  சா இராமாநுசம்

  த ம 3

  ReplyDelete
 5. அட அட அட கலக்குறீங்க பாஸ். இதுக்குத்தானே பஸ்ல போறதே

  ReplyDelete
 6. அந்தப் பேரின்பப் பேரிடரில்
  சிக்கித் தவிக்கப் போகிறவர்
  யார்?


  அது
  தெரியும்வரை
  எங்கள் மாரத்தான் ஒட்டமும்
  படிக்கட்டு சாகசங்களும்
  தொடரும்.//

  அருமை அருமை
  படுகிறவர்கள் கைபட்டால்
  யதார்த்தம் கூட அழகிய கவியாகுமென்பதற்கு இதுதான் சான்று
  மனம் கவர்ந்த கவிதை
  தொடர வாழ்துக்கள்

  ReplyDelete
 7. தொடரட்டும் பயணங்கள். அருமை.

  ReplyDelete
 8. சொந்த அனுபவம் போல் இருக்கே ஹி ஹி ஹி (TM 6)

  ReplyDelete
 9. //அது
  தெரியும்வரை
  எங்கள் மாரத்தான் ஒட்டமும்
  படிக்கட்டு சாகசங்களும்
  தொடரும்.//

  நிலமையை அழகாக சுட்டிக்காட்டியது அருமை!

  ReplyDelete
 10. பரிமாற்றமும்,பயணங்களும் சரியான நேர கோட்டு நிகழ்வாகவே வாழ்வில்/

  ReplyDelete
 11. பார்வை ஒன்றே! கவிதைக்கு இல்லை வயது!

  ReplyDelete
 12. அட்டகாசமான அழகுக் கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. //தினமும் பேருந்தில் கல்லூரிக்கு சென்று காதலுக்கு காத்திருக்கும் இளைஞன் ஒருவன் எழுதும் கவிதை
  //

  காலையில் வந்து வாசித்து சென்றேன் நண்பரே...
  கவிதைக்கு முன்னுரை முதல் முதலாய் பார்க்கிறேன்...மலரும் நினைவுகள் தரும் கவிதை..

  ReplyDelete
 14. ''..அது
  தெரியும்வரை

  எங்கள் மாரத்தான் ஒட்டமும்
  படிக்கட்டு சாகசங்களும்
  தொடரும்...''
  ஆகா காதல் படுத்தும் பாடு!....
  வாலிபக் குறும்பு.
  நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 15. //உன்னைப் பார்த்ததும்
  உள்ளத்தைச் சொன்னார்கள்!
  'இந்த பஸ்
  ரொம்ப வாசம்'
  // ஹா ஹா ஹா அருமை சார்

  //அது
  தெரியும்வரை
  எங்கள் மாரத்தான் ஒட்டமும்
  படிக்கட்டு சாகசங்களும்
  தொடரும்.

  // இதுவும் உண்மை தான்  படித்துப் பாருங்கள்

  தல போல வருமா (டூ) பில்லா டூ

  http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_13.html

  ReplyDelete
 16. தொடரட்டும் பயணங்கள்... கவிதையும் தான்!

  ReplyDelete
 17. //சிட்டுக்குருவி said...
  ஐயோ.....
  அழகாக இருக்கிறது காதலுக்கான தவிப்பு//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 18. அருமை... பயணங்கள் முடிவதில்லை...
  பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்... (த.ம.10)

  ReplyDelete
 19. சென்னை பித்தன் அய்யா அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 20. //கோவை நேரம் said...
  ஓஹோ...பஸ் பயணத்துல உங்க முன்னாடி இருந்தது யாரு..? பின்றீங்க..//
  அதுக்கெல்லாம் நமக்கு குடுத்து வக்கல சார்.

  ReplyDelete
 21. இயல்பாகத் தோன்றிடும் எண்ணங்களை அழகிய
  கவிதை வடிவில் தந்த விதம் அருமை!...மேலும்
  தொடர வாழ்த்துக்கள் .

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895