என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Friday, July 27, 2012

டி.ராஜேந்தர்! + சொல்லுங்கண்ணே! சொல்லுங்க!


    அலுவலக வேலை காரணமாக ஈரோடு போக வேண்டி இருந்தது. அதற்கு முன்பு ஒரு பதிவு போடலாமென்று "நீயா நானா- பாக்காதீங்க"  பதிவை அவசர அவசரமா போட்டுவிட்டு கிளம்பினேன்..நேற்று தான் திரும்பிவந்தேன். எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. நான் எதிர் பார்க்காத வகையில் 2000 பேருக்கு மேல் இந்தப் பதிவை பார்த்து-படித்து  இருக்கிறார்கள். (நம்ம ரேஞ்சுக்கு இது அதிகம் தானே?) அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றி.

      நிறையப் பேர் ஒரு மனதாக சொல்லியிருந்த விஷயம் போன வாரம் நடந்த "80 களில் இசையும் வாழ்வும்" என்ற தலைப்பு பற்றிய நீயா நானா நிகழ்ச்சி நன்றாக இருந்தது என்பதுதான்.அந்நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். நீயா? நானா? என்ற போட்டி இன்றி அனைவரும் ஒரே குரலாக கருத்துக்கள் முன் வைத்த நிகழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.  திரை இசை தன்மனதை எப்படிக் கவர்ந்தது;எப்படி பாதித்தது என்று குரல் வளம் பற்றிக் கவலையின்றி பாடிக் காட்டி உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் பிரமிக்கத் தக்கதாக இருந்தது.
   பல இசை அமைப்பாளர்கள் இருந்தாலும் 80களில் இளையராஜாவின் இசை ராஜாங்கத்தில் அனைவரும் மகிழ்ச்சியோடு அடிமைப்பட்டுக் கிடந்திருந்தாகவே தோன்றியது.அந்த உணர்விசைக் கலைஞனை பற்றி பக்கம் பக்கமாகப் பதிவுகள் போடலாம்..
   ஆனால் நான் சொல்ல வந்தது டி.ராஜேந்தர் பற்றி. அதீத  தன்னபிக்கையும் பலவகைத் திறனும்  கொண்டு ரசிகர்களைக் கவர்ந்தவர் டி.ராஜேந்தர். ஒரு தலை ராகம் படத்தில் இவர் எழுதி இசை அமைத்த அத்தனை பாடல்களும் நான் பள்ளியில் படித்துக்கொடிருந்தபோது மிகவும் பிரபலம். இவரது பாடலையும் ஒருவர் நினைவு கூர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இவரும்  பல நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். இன்றைய சினிமாவும் அரசியலும் இவரை கோமாளியாக்கி விட்டது வேதனைக்குரியது. இவரது தற்பெருமைப் பேச்சுக்களும் இதற்குக் காரணம். எதைப் பற்றியும் கவலைப் படாமல் கருத்து சொல்வது இவரது பலம் என்ற போதிலும் அதுவே பலவீனமாகவும் அமைந்துவிடுகிறது.
     சமீபத்தில் யூ ட்யூபில் வினு புட் ப்ராடக்ட்சுக்கு இவர் எழுதி இசையமைத்து  பாடி நடித்துள்ள விளம்பரம் பார்த்தேன் நன்றாகவே இருந்தது. தொலைக்காட்சியில் இவ்விளம்பரம் பார்த்ததாக  நினைவில்லை.
  ராப் இசை வடிவத்தில் அமைந்துள்ள இவ்விளம்பரம் தொலக்காட்சியில் ஒளி பரப்பானால் . நிச்சயம் பிரபலமடையும் என்றே நினைக்கிறேன்.
இதோ அந்த விளம்பரம்: பாருங்க!உங்க கருத்தை சொல்லுங்க


**************************************************************************************************

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க! 

   ஆதித்யா டிவியில் ஒளிபரபரப்பாகும்  சொல்லுங்கண்ணே! சொல்லுங்க! நிகழ்ச்சியை அவ்வப்போது பார்ப்பது  உண்டு முதலில் பார்க்கும்போது சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது. மாணவர்கள், இளைஞர்கள்,குடும்பப் பெண்கள் என்று பல பேர் இமான் அண்ணாச்சி கேட்கும் கேள்விகளுக்கு தவறான பதிலையே சொல்கிறார்கள் 

      உதாரணத்திற்கு செஞ்சிக் கோட்டையை காட்டியது யார் என்ற கேள்விக்கு இராஜராஜன்  என்று ஒரு மாணவன் சொன்னபோது அதை நெல்லைத் தமிழில் கிண்டலடித்தபோது  நானும் சிரித்தேன்.
   பின்னர் வேறு ஒரு கேள்விக்கு சென்னைக்கும் கோயம்பத்தூருக்கும் இடையில் இருக்கிற நாலு ரயில்வே ஸ்டேஷன் பேரை சொல்லுங்கன்னு கேட்டபோது திருநெல்வேலி திண்டுக்கல்  என்றெல்லாம் பதில் சொன்னபோது சிரிப்போடு சேர்ந்து எரிச்சலும் ஏற்பட்டது. 
   காரணம்  இதற்கு பதில் சொன்னது பள்ளியில் படிக்கும் மாணவர்கள். இது கூட தெரியாமல் இருக்கிறார்களே இந்த மாணவர்கள் என்று வருத்தம் ஏற்பட்டது. இதெல்லாம் சொல்லித் தராமல் ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்கள் மேல் கோபம் ஏற்பட்டது. பொது அறிவு ஏன் இவ்வளவு குறைந்து விட்டது என்ற ஆதங்கமும் ஏற்பட்டது. 
    இது தொடர்பாக ஆசிரியர் சிலரிடம் பேசிப்  பார்த்தபோது 'அனவைரும் தவறான பதில்களையே சொல்கிறார்கள். ஒரிருவர் கூட சரியான பதில்களை சொல்லாதது நம்ப முடியாததாக உள்ளது.வேண்டுமென்றே சரியான பதில் சொல்பவர்களை காட்டாமல் எடிட் செய்து விடுகிறார்கள்' என்று குற்றம் சாட்டினார்கள். நிகழ்ச்சி சுவாரசியத்திற்காக  சரியான பதில்  சொல்பவரையும் நகைச்சுவைக்காக குழப்பி தவறான பதில் சொல்ல வைத்து விடுகிறார் இமான் அண்ணாச்சி என்றும் சொல்கிறார்கள். எது உண்மை என்று தெரியவில்லை. தங்கள் பொது அறிவு தொலைக்காட்சி வாயிலாக நகைச்சுவையாக்கப்படுவது தெரிந்தும் மொத்தமாக சிரித்துக் கொண்டு போஸ்  கொடுப்பது ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது!************************* 

இதையும் படிச்சி வையுங்க!

37 comments:

 1. சொல்லுங்கண்ணே ! சொல்லுங்க ! - சில கேள்விகளுக்கான பதில்களை கேட்கும் போது, சிறு குழந்தைகளுக்குக் கூட தெரியுமே.... இவர்களுக்கு தெரியவில்லையே எனத் தோணும்...

  இது எல்லாம் செய்வதற்கான காரணம் : நிகழ்ச்சி 'ஹிட்' ஆக வேண்டாமா ?

  பார்த்து, சிரித்து விட்டு போக வேண்டியது தான். இதைப் பற்றி யோசித்தால், உண்மையான பதில் கூட நமக்கு குழப்பம் வந்து விடும்...

  நன்றி....
  (த.ம. 1)

  ReplyDelete
 2. இரண்டையும் வாசித்துவிட்டேன் ஐயா.ஆனால் பாருங்கள் தலைவனின் பாட்டை கேட்கவும் முடியவில்லை பார்க்கவும் முடியவில்லை.காணொளி சுற்றிக்கொண்டேயிருந்தது.திறக்கவில்லை.

  ReplyDelete
 3. டி. ராஜேந்தரின் பல பாடல்கள் இன்றும் பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கின்றன.ராஜாவின் ராஜ்யத்தில் அப்போது சிலபகுதிகளை கைப்பற்றியவர் ராஜேந்தர்! சொல்லுங்கன்ணெ ஆதங்கம் உண்மைதான்!நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கே உண்மை தெரியும்? என்னசெய்வது? பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 4. சொல்லுங்கண்ணே! சொல்லுங்க!

  சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் புத்திசாளிகளைக் காட்டாமல் முட்டாள்களைக் காட்டியே அவர்கள் நல்ல பேர் வாங்கிவிடுகிறார்கள் முரளிதரன் ஐயா.
  பகிர்விற்கு நன்றிங்க.

  ReplyDelete
 5. திறமை இருந்தால் மட்டும் போதாது தற்பெருமை + தலைக்கணம் இருந்தால் வாழ்வில் முன்னேற முடியாது என்பதற்கு டி.ராஜேந்தர் ஒரு உதாரணம்.

  ReplyDelete
 6. TR IS AN ALL-ROUNDER...WITH A BIG ROUND BELLY...HA HA...

  ReplyDelete
 7. டி ஆர் விளம்பரம் போட்டா டி ஆர் பி ஏறும்னு நினைக்கிறேன்

  ReplyDelete
 8. நீங்கள் சொல்வது சரி
  அந்த விளம்பரப் படப் பாடல்
  அருமையாக உள்ளது
  சொல்லுங்கண்ணே விஷய்மும் அப்படித்தான்
  சரியான பதிலை சொல்பவர்களை அவர்கள்
  எங்கரேஜ் பண்ணுவதில்லை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. சும்மா ஒரு நேரப்போக்குக்கு பார்த்து சிரிக்கலாம் வேறென்ன இருக்கு....? ஸோ இருந்தாலும் சில கேள்விகளுக்கு இவர்கள் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள், கடைசியிலாவது அதன் பதில்களை இவர்கள் சொன்னால் நல்லா இருக்கும்...!

  ReplyDelete
 10. சொல்லுங்கண்ணே! சொல்லுங்க! romba nalla irukkunney

  ReplyDelete
 11. டி.ஆரின் சில பாடல்களுக்கு நானும் அடிமை...
  விடை கிடைக்காத வினாக்கள் நிறைய..
  சொல்லுங்கண்ணே போல நானும் கேள்வியுடனே நிற்கிறேன்...

  ReplyDelete
 12. ****
  ரெவெரி said...
  TR IS AN ALL-ROUNDER...WITH A BIG ROUND BELLY...HA HA...
  ****

  இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு குசும்பு ஆகாது ஹி ஹி ஹி! (TM 5)

  ReplyDelete
 13. //திண்டுக்கல் தனபாலன் said.
  சொல்லுங்கண்ணே ! சொல்லுங்க ! - சில கேள்விகளுக்கான பதில்களை கேட்கும் போது, சிறு குழந்தைகளுக்குக் கூட தெரியுமே.... இவர்களுக்கு தெரியவில்லையே எனத் தோணும்...//
  வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

  ReplyDelete
 14. //மதுமதி said..
  இரண்டையும் வாசித்துவிட்டேன் ஐயா.ஆனால் பாருங்கள் தலைவனின் பாட்டை கேட்கவும் முடியவில்லை பார்க்கவும் முடியவில்லை.காணொளி சுற்றிக்கொண்டேயிருந்தது.திறக்கவில்லை.//
  நன்றி மதுமதி சார்!

  ReplyDelete
 15. ராஜேந்தர் உயிருள்ள வரை உஷா மற்றும் ஒரு தலை ராகம் போன்ற அருமையான படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இன்று அவரை கிண்டல் செய்ய மட்டுமே அனைவரும் பயன்படுத்துகிறோம்

  ReplyDelete
 16. அட நானும் ராஜேந்தரை காமடிப்பீஸால்ல நினைச்சுக்கிட்டிருந்தன். இப்போதான் உண்மை புரியுது. இந்த ரீ.வி எல்லாம் இப்பிடித்தான் பாஸ்.

  ReplyDelete
 17. டி.ஆர் இன் அந்த வீணாப்போன வாய் மட்டும் இல்லைன்னா நல்ல ஒரு திறமைசாலியாக இருந்திருப்பார். மகனும் அந்த வழியில் போவதாகத் தான் தெரியுது. ஹ்ம்ம் ...

  சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சியில், நீங்க சொல்வது போல சரியா சொல்றவங்களையும் சிலநேரங்களில் குழப்பி விட முயற்சி செய்வது உண்மை தான். சில நேரங்களில் பதில் சொல்லும் சிலது கலாய்ப்பதற்காக நிகழ்ச்சியை மொக்கையாக்குவதும் கடுப்பேற்றும் ஒரு விஷயம்.

  ReplyDelete
 18. //s suresh said..
  டி. ராஜேந்தரின் பல பாடல்கள் இன்றும் பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கின்றன.ராஜாவின் ராஜ்யத்தில் அப்போது சிலபகுதிகளை கைப்பற்றியவர் ராஜேந்தர்! //
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.சுரேஷ் சார்

  ReplyDelete
 19. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி AROUNA SELVAME .

  ReplyDelete
 20. //Avargal Unmaigal said...
  திறமை இருந்தால் மட்டும் போதாது தற்பெருமை + தலைக்கணம் இருந்தால் வாழ்வில் முன்னேற முடியாது என்பதற்கு டி.ராஜேந்தர் ஒரு உதாரணம்.//.
  வருகைக்கும் கருத்துக்கும்நன்றி மதுரைத் தமிழன்.

  ReplyDelete
 21. //ரெவெரி said...
  TR IS AN ALL-ROUNDER...WITH A BIG ROUND BELLY...HA HA...//
  பாவம் TR

  ReplyDelete
 22. //கோவை நேரம் said...
  டி ஆர் விளம்பரம் போட்டா டி ஆர் பி ஏறும்னு நினைக்கிறேன்//
  நன்றி கோவை நேரம்!

  ReplyDelete
 23. //Ramani said...
  நீங்கள் சொல்வது சரி
  அந்த விளம்பரப் படப் பாடல்
  அருமையாக உள்ளது//
  வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி ரமணி சார்

  ReplyDelete
 24. //MANO நாஞ்சில் மனோ said...
  சும்மா ஒரு நேரப்போக்குக்கு பார்த்து சிரிக்கலாம் வேறென்ன இருக்கு....? ஸோ இருந்தாலும் சில கேள்விகளுக்கு இவர்கள் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள், கடைசியிலாவது அதன் பதில்களை இவர்கள் சொன்னால் நல்லா இருக்கும்...//
  நன்றி நாஞ்சில் மனோ சார்,

  ReplyDelete
 25. சீனு said...
  சொல்லுங்கண்ணே! சொல்லுங்க! romba nalla irukkunney//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்,

  ReplyDelete
 26. //மகேந்திரன் said...
  டி.ஆரின் சில பாடல்களுக்கு நானும் அடிமை...
  விடை கிடைக்காத வினாக்கள் நிறைய..
  சொல்லுங்கண்ணே போல நானும் கேள்வியுடனே நிற்கிறேன்..//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

  ReplyDelete
 27. //வரலாற்று சுவடுகளுக்கு நன்றி..

  ReplyDelete
 28. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மோகன் குமார்

  ReplyDelete
 29. Gobinath said...
  அட நானும் ராஜேந்தரை காமடிப்பீஸால்ல நினைச்சுக்கிட்டிருந்தன். இப்போதான் உண்மை புரியுது. இந்த ரீ.வி எல்லாம் இப்பிடித்தான் பாஸ்.//
  நன்றி கோபி அவருடைய பழைய பாடல்களை கேட்டுப் பாருங்கள்.

  ReplyDelete
 30. //ஹாலிவுட்ரசிகன் said...
  டி.ஆர் இன் அந்த வீணாப்போன வாய் மட்டும் இல்லைன்னா நல்ல ஒரு திறமைசாலியாக இருந்திருப்பார். மகனும் அந்த வழியில் போவதாகத் தான் தெரியுது. ஹ்ம்ம் ...// ஹாலி விட ரசிகனுக்கு நன்றி

  ReplyDelete
 31. ச்ச....மனுசன் இப்பவும் இளமையா அதே சுறுசுறுப்போட அதே ஸ்டைலோட இருக்கிறார்.உயிருள்ளவரை உஷா பாடல்கள் இப்போதும் இனிமை.ஆனால் ஆளைத்தான் பிடிக்காது முரளி எனக்கு !

  ReplyDelete
 32. சமீபத்தில் யூ ட்யூபில் வினு புட் ப்ராடக்ட்சுக்கு இவர் எழுதி இசையமைத்து பாடி நடித்துள்ள விளம்பரம் பார்த்தேன் நன்றாகவே இருந்தது. தொலைக்காட்சியில் இவ்விளம்பரம் பார்த்ததாக நினைவில்லை.//

  பார்க்காத, கேட்காத விளம்பர பாடல்.
  நன்றாக இருக்கிறது.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 33. //ஹேமா said...
  ச்ச....மனுசன் இப்பவும் இளமையா அதே சுறுசுறுப்போட அதே ஸ்டைலோட இருக்கிறார்.உயிருள்ளவரை உஷா பாடல்கள் இப்போதும் இனிமை.ஆனால் ஆளைத்தான் பிடிக்காது முரளி எனக்கு //
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா!

  ReplyDelete
 34. கோமதி அரசு said...
  பார்க்காத, கேட்காத விளம்பர பாடல்.
  நன்றாக இருக்கிறது.
  பகிர்வுக்கு நன்றி.//
  நன்றி கோமதி அரசு மேடம்!

  ReplyDelete
 35. 70 80களில் இளையராஜாவெனும் சுனாமி சுழன்று அடித்து அனைவரையும் சாய்த்துவிட்டிருந்தபோது தனியே தன்னந்தனியே ,தனக்கென்று ஒரு கோட்டை கட்டி ஆட்சி செய்த டிஆரை மறக்கமுடியுமா.. இளையராஜாவின் 20 சிடிக்கள் இருப்பவரிடம் 2 டிஆர் ஹிட்ஸ்ம் இருக்கும்!

  ReplyDelete
 36. நகைச்சுவையான நிகழ்ச்சிதான் . ஆனால் அநேகர் தவறாக சொல்லும்போது கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருக்கும்.
  இங்கே வந்து பார்த்து கருத்து சொல்லுங்க நண்பரே....
  http://varikudhirai.blogspot.com/2012/08/the-silence-of-lambs.html
  " தி சைலன்ஸ் ஒப் த லேம்ப்ஸ் " - திரைப்படம் ஒரு கண்ணோட்டம்

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895