என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Monday, August 27, 2012

பதிவர் சந்திப்பால் ஏமாற்றம்


என்னோட ரசிகர்கள்தான் சார்! நம்புங்க! (புகைப்படம்  அனுப்பியவர் திரு மோகன்குமார்)
    பின்ன என்ன சார்! நீங்களே நியாயத்தை சொல்லுங்க. நான் 20 ந் தேதியிலிருந்து தமிழ் மண நட்சத்திரப் பதிவரா இருக்கேன். இதை யாரும் அவ்வளவா கண்டுக்கலன்னா அதுக்கு காரணம் பதிவர் திருவிழாதான்!
   நானும் முதல் அதிர்ச்சி செய்திய வெளிட்டப்ப  அதை ஹிட்டாக்கினீங்க. அப்புறம்  நான் கழுதை ன்னு (அதுதான் ஏற்கனேவே தெரியுமேன்னு சொன்னீங்க) ஒருபதிவைப் போட்டேன். சரின்னு சொல்லி நீங்களும் அந்தக் கழுதைய, சாரி! கவிதைய போனாப் போகட்டும் ரொம்ப நல்ல கழுதை ன்னு பாராட்டினீங்க.அதையும் நான் உண்மைன்னு நினச்சு வடிவேலு வாங்கிய கழுதைன்னு இன்னொரு பதிவைப் போட்டேன்.அதையும் நீங்க ஹிட் ஆக்கினீங்க 
  
  வாருங்கள்!வரலாற்றில் இடம் பெறலாம்!.   ன்னு பதிவப் போட்டு கூப்பிட்டேன். நீங்களும் மொத்தமா கிளம்ப ஆரம்பிச்சீங்க. அதுக்கப்புறம் சுஜாதா சொன்ன பச்சைப் பொய்கள் பதிவை எழுதினேன். சுஜாதா ரசிகர்கள் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டாலும் நிறையப் பேர் அதை படிச்சாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆவலுடன் அந்தரங்கம்னு அடுத்த பதிவை வெளியிட அதையும் ஆவலாத்தான் பாத்தீங்க!
    அப்புறம் முன்னணிப் பதிவர்களின் அலக்சா  தர வரிசை பின்னிலை ஏன்?அப்படின்னு பதிவைப் பாத்துட்டு இவனுக்கு ஏன் இந்த தொழில் நுட்ப பதிவு ஆசைன்னு கேட்டாலும், சரி பரவாயில்ல;  ஏதோ சுமாரா இருக்குன்னு ஒத்துக்கிட்டீங்க.

 அதுக்குள்ள 26 தேதி வந்துடுச்சா.பதிவர் திருவிழாவுக்கு போகணும்னு காலையில சீக்கிரம் எழுந்து ஒரு பதிவ போடலாமேன்னு மேகம் எனக்கொரு கவிதை தரும்  கவிதையைப் போட்டுட்டு (வித்தியாசமா பண்ணறேன்னு நினச்சி கட்டம் கட்டி கவிதை போட்டேன்) கிளம்பிட்டேன். சாயந்திரம் வீட்டுக்கு வந்து பாத்தா ஏமாந்திட்டேன் சார்! ஏமாந்துட்டேன்.
 
   நீ எல்லாம் எதுக்குடா கவிதை எழுதறன்னு கேக்காம கேட்டுட்டாங்க சார்!

  சரி இவ்வளவு நாள் எப்படி சகிச்சிட்டாங்கன்னு ஆராய்ச்சி பண்ணப்பதான் தெரிஞ்சுது என்பதிவைப்  பாக்கறவங்கல்லாம்  பதிவர் திருவிழாவுக்கு வந்துட்டங்கன்னு. அத்தனை பேரும் அங்க வந்துட்டதால (என்னா கூட்டம்! பார்க்க படம்) என்  கவிதைய படிக்கறதுக்கு ஆளில்லாம போச்சு சார். இதுவும் பத்தாதுன்னு இணையத்துலநேரடி ஒளிபாப்பு வேற. எப்படி என் பதிவு பக்கம் வருவாங்க! அதுவும் இல்லாம அங்க கவியரங்கத்தில கவிதை வேற வாசிச்சிட்டனா  இனிமே நம்ம பக்கம் வருவாங்களான்னு சந்தேகமாயிடுச்சி  சார்!

   இப்ப சொல்லுங்க எனக்கு நேத்து (26.08.2012) ஏமாற்றம் ஏற்பட்டதுக்கு  காரணம் இந்தப் பதிவர் திருவிழாதான் சார்! 

  ஆனா ஒண்னு சார்! இதுக்கெல்லாம் பயந்து கவிதை எழுதறத நிறுத்திடுவேன்னு மட்டும் நினச்சிடாதீங்க. இன்னொரு முடிவு பண்ணிட்டேன். இந்த மாதிரி பிரம்மாண்ட திருவிழா வரும்போது பதிவு எதுவும் போடக் கூடாது. குறிப்பா கவிதையை போட்டு ஏமாறக் கூடாதுன்னு.

என்ன சார்! நான் சொல்றது சரிதானே!

********************************************************

  நன்றி!
  கடந்த ஒரு வாரமாக தமிழ்மணம் நட்சத்திரப் பதிவராக பதிவுகளை இடும் அருமையான வாய்ப்பு கிடைத்தது. எட்டு பதிவுகள் மட்டுமே இட முடிந்தது. கடந்த ஒரு வாரமாக இதுவரை இல்லாத அளவிற்கு என் வலைப்பக்கத்திற்கு மூன்று மடங்கு அதிக பார்வையாளர்கள் வந்ததற்கு முக்கிய காரணம் தமிழ்மணமே.இந்த அங்கீகாரத்தை  நல்கிய தமிழ்மணத்திற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் இவ்வாய்ப்பை பெருவதற்கு   முக்கியக்  காரணமாக இருந்தவர்    திரு கோவி.கண்ணன் அவர்கள். முன்பின் தெரியாத என்னை  அவர் தமிழ்மணத்திற்கு பரிந்துரை செய்ததால்தான் இந்த அரிய  வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது பதிவுகளை படித்து கருத்தளித்து  வாக்கிட்டு,ஆலோசனை வழங்கியவர்களுக்கும்  பிற பார்வையாளர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
   இந்த ஒரு வாரம் என் பதிவுலக வாழ்க்கையில் மறக்க முடியாத வாரம். 

மீண்டும் சந்திப்போம்.

*****************************************51 comments:

 1. //ஆனா ஒண்னு சார்! இதுக்கெல்லாம் பயந்து கவிதை எழுதறத நிறுத்திடுவேன்னு மட்டும் நினச்சிடாதீங்க. இன்னொரு முடிவு பண்ணிட்டேன். இந்த மாதிரி பிரம்மாண்ட திருவிழா வரும்போது பதிவு எதுவும் போடக் கூடாது. குறிப்பா கவிதையை போட்டு ஏமாறக் கூடாதுன்னு. //

  மிகச் சரியாக சொன்னீர்கள் சகோ.... !!!

  அதற்காக அசராமல் கவிதை எழுதுவேன் என்று சொன்னீர்கள் பாருங்கள் இந்த நேர்மைதான் எனக்குப் பிடித்து இருக்கு !!!

  திருவிழாவுக்கு போகாதவர்கள் கூட நேரடியில் பிஸியாகி விட்டதால் பெரிதாக யாரும் கருத்திடவில்லை .. நான் உட்பட !!!

  ஆகவே உங்கள் வாசகர் வட்டம் சந்திப்புக்கு வந்தோரைத் தாண்டியும் உள்ளது சகோ.

  ReplyDelete
 2. இந்த வாரத்தில் தலைப்பு வைப்பது எப்படின்னு நீங்க ஒரு பதிவு போட்டிருக்கலாம் ; அசத்துறீங்க

  ReplyDelete
 3. தமிழ்மணத்தில் ஒருவாரமாக அசத்தல் பதிவுகள் தந்த உங்களுக்கு வாழ்த்துகள் முரளிதரன்....

  த.ம. 2

  ReplyDelete
 4. அழகான நன்றிமடல்....
  ஆனா இப்படி சாபம் விடக்கூடாது சார்.. அவர்கள் பல சிறப்புமிக்க தீர்மானங்களை எடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன் ...இன்று பூரா பதிவர் சந்திப்பு தொடர்பான பதிவுகளாகத்தன் இருக்கும் என நினைக்கிறேன்...
  ரசிப்போம்

  ReplyDelete
 5. இதுக்கெல்லாம் பயந்து கவிதை எழுதறத நிறுத்திடுவேன்னு மட்டும் நினச்சிடாதீங்க.

  வாழ்த்துகள்!!

  ReplyDelete
 6. ஹா ஹா ஹா சார் உங்க மேடைப் பேச்சுக்கு பலத்த வரவேற்ப்பு இருந்ததை நான் கவனிக்கத் தவறவில்லை....

  ReplyDelete
 7. நல்ல பதிவுகளை தான் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்...

  நீங்க அசர மாட்டீர்கள் சார்... எனக்கு தெரியும்...

  தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி... (TM 5)

  ReplyDelete
 8. நான் முரளி'ன்னு இவர் தன்னை அறிமுகப்படுத்தாமல், இந்த வார தம நட்சத்திர பதிவர் என்றே அறிமுகப்படுத்திக் கொண்டார்...

  இதனாலேயே இவரை நியாபகம் வைக்க முடிஞ்சது.. ஹி..ஹி....

  ReplyDelete
 9. அசராமல் அடித்து நொறுக்குங்கள் சார்

  ReplyDelete
 10. ஆமாங்க தங்கள் அறிமுகம் அசத்தல் .

  ReplyDelete
 11. நட்சத்திர ஜொலிப்பிற்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.

  மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?

  http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_27.html

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள்! நேத்து நான் வந்து உங்க கவிதையை படிச்சிருக்கேன்! மறந்துட்டீங்க பாத்தீங்களா?

  இன்று என் தளத்தில்
  நினைவுகள்! கவிதை!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
  நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html

  ReplyDelete
 14. தமிழ்மண ஸ்டார் வாரத்தை சிறப்பாய் நிறைவு செய்தீர்கள் தல! (TM 11)

  ReplyDelete
 15. இன்னும் நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. நீங்கள் சொன்னது எல்லாமே சரிதாங்க முரளீதரன் ஐயா.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள்... இந்தப்பதிவும் ஹிட்டுத்தான். வேற பதிவர் சந்திப்பு இல்லாததினால்..

  ReplyDelete
 19. தமிழ்மணத்தில் ஒரு வாரகாலம் மட்டுதான் நீங்கள் நட்சத்திரமாக ஜொலிக்க முடியும் ஆனால் நீங்கள் இடும் நல்ல பதிவுகளால் இணையத்திலும் எங்கள் மனதிலும் என்றென்றும் நீங்கள் நட்சத்திரமாக ஜொலிக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. சார் உங்கள் வலைத்தளத்தில் நீங்கள் தொடுத்த பூக்கள் அத்தனையையும் மாலையாக்கி விட்டீர்கள் போல ...
  வாழ்த்துக்கள் சார்.தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.நீங்க உங்க பிளாக்கில் எழுதிய பதிவுக்கு க்ளிக் வராமல் ஏமாந்து போய் இருக்கலாம் உங்கள் ரசிகர்களின் நேரடி விமர்சனங்களை பெற்றீர்கள் அல்லவா??.. (ஒன்றை இழக்கும் கும்போதுதான் இன்னொன்று கிடைக்கிறது.., சரிதானே ??)

  ReplyDelete
 21. அருமையான பதிவுகள் !!! நிச்சயம் அனைத்தையும் வாசிக்கின்றேன் ...

  ReplyDelete
 22. அண்ணா நீங்கள் வாக்களிக்க மறந்து விட்டேர்களே
  அந்த பக்கத்தில் நட்சத்திரங்கள் இருக்கும் அந்தந மேல் சுட்டியை படர விடுங்கள்,
  பின்னர் பிடித்த நட்சத்திரத்தை தேர்ந்தெடுங்கள்

  ReplyDelete
 23. அருணன் கோபால் said
  திருவிழாவுக்கு போகாதவர்கள் கூட நேரடியில் பிஸியாகி விட்டதால் பெரிதாக யாரும் கருத்திடவில்லை .. நான் உட்பட !!!
  ஆகவே உங்கள் வாசகர் வட்டம் சந்திப்புக்கு வந்தோரைத் தாண்டியும் உள்ளது சகோ.//

  அதிகம் பேர் கூடத்திற்கு வந்திருகிறார்கள் என்பதை மறைமுகமாகச் சொல்லி இருக்கிறேன்.

  ReplyDelete
 24. //கோவை நேரம் said...
  வாழ்த்துக்கள்.//
  நன்றி

  ReplyDelete
 25. //மோகன் குமார் said...
  இந்த வாரத்தில் தலைப்பு வைப்பது எப்படின்னு நீங்க ஒரு பதிவு போட்டிருக்கலாம் ; அசத்துறீங்க//
  நன்றி மோகன் புகைப்படம் அனுப்பியதற்கும்

  ReplyDelete
 26. //வெங்கட் நாகராஜ் said...
  தமிழ்மணத்தில் ஒருவாரமாக அசத்தல் பதிவுகள் தந்த உங்களுக்கு வாழ்த்துகள் முரளிதரன்....
  த.ம. 2//
  நன்றி நாகராஜ் சார்!

  ReplyDelete
 27. //சிட்டுக்குருவி said...
  அழகான நன்றிமடல்....
  ஆனா இப்படி சாபம் விடக்கூடாது சார்.. அவர்கள் பல சிறப்புமிக்க தீர்மானங்களை எடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன் ...இன்று பூரா பதிவர் சந்திப்பு தொடர்பான பதிவுகளாகத்தன் இருக்கும் என நினைக்கிறேன்...
  ரசிப்போம்//
  நன்றி சார் அதிகம் பேர் கூடத்திற்கு வந்திருகிறார்கள் என்பதை மறைமுகமாகச் சொல்லி இருக்கிறேன்.

  ReplyDelete
 28. இராஜராஜேஸ்வரி said...
  இதுக்கெல்லாம் பயந்து கவிதை எழுதறத நிறுத்திடுவேன்னு மட்டும் நினச்சிடாதீங்க.
  வாழ்த்துகள்!!//
  இராஜராஜேஸ்வரி மேடம்! வாழ்த்து சொன்னதற்கு நன்றி.

  ReplyDelete
 29. சீனு said...
  ஹா ஹா ஹா சார் உங்க மேடைப் பேச்சுக்கு பலத்த வரவேற்ப்பு இருந்ததை நான் கவனிக்கத் தவறவில்லை....//
  உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி

  ReplyDelete
 30. தமிழ்வாசி பிரகாஷ் said...
  நான் முரளி'ன்னு இவர் தன்னை அறிமுகப்படுத்தாமல், இந்த வார தம நட்சத்திர பதிவர் என்றே அறிமுகப்படுத்திக் கொண்டார்...
  இதனாலேயே இவரை நியாபகம் வைக்க முடிஞ்சது.. ஹி..ஹி...//
  கொஞ்சம் பெருமை பேத்திக்க விட மாட்டேங்கலே அதையும் போட்டு உடச்சிட்டீங்களே!
  நன்றி ப்ரகாஷ் முதல் வருகை என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 31. //அருள் said...
  பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.//
  நன்றி அருள்

  ReplyDelete
 32. //அரசன் சே said...
  அசராமல் அடித்து நொறுக்குங்கள் சார்//
  நன்றி அரசன்

  ReplyDelete
 33. //Sasi Kala said...
  ஆமாங்க தங்கள் அறிமுகம் அசத்தல் .//
  நன்றி சகோதரி

  ReplyDelete
 34. //வேடந்தாங்கல் - கருண் said...//
  உங்கள் முதல் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 35. Manimaran said...
  congrats &keep it up.... tm-10
  நன்றி மணிமாறன்.

  ReplyDelete
 36. //வெங்கட ஸ்ரீநிவாசன் said...
  நட்சத்திர ஜொலிப்பிற்கு வாழ்த்துகள்.//
  நன்றி! வேங்கர் ஸ்ரீனிவாசன்

  ReplyDelete
 37. s suresh said...

  வாழ்த்துக்கள்! நேத்து நான் வந்து உங்க கவிதையை படிச்சிருக்கேன்! மறந்துட்டீங்க பாத்தீங்களா?

  இன்று என் தளத்தில்//
  நன்றி சுரேஷ் சாத உங்களை மறக்க முடியுமா!

  ReplyDelete
 38. //வரலாற்று சுவடுகள் said...
  தமிழ்மண ஸ்டார் வாரத்தை சிறப்பாய் நிறைவு செய்தீர்கள் தல! (TM 11)//
  மிக்க நன்றி பாஸ்

  ReplyDelete
 39. AROUNA SELVAME said...
  நீங்கள் சொன்னது எல்லாமே சரிதாங்க முரளீதரன் ஐயா.
  வாழ்த்துகள்.//
  நன்றி நன்றி

  ReplyDelete
 40. S. Palanichamy said...
  இன்னும் நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்//
  நன்றி பழனிச்சாமி

  ReplyDelete
 41. //Jaleela Kamal said...
  வாழ்த்துக்கள்//
  நன்றி சார்

  ReplyDelete
 42. //விச்சு said...
  வாழ்த்துக்கள்... இந்தப்பதிவும் ஹிட்டுத்தான். வேற பதிவர் சந்திப்பு இல்லாததினால்//
  நன்றி விச்சு சார் ..

  ReplyDelete
 43. //Avargal Unmaigal said...
  தமிழ்மணத்தில் ஒரு வாரகாலம் மட்டுதான் நீங்கள் நட்சத்திரமாக ஜொலிக்க முடியும் ஆனால் நீங்கள் இடும் நல்ல பதிவுகளால் இணையத்திலும் எங்கள் மனதிலும் என்றென்றும் நீங்கள் நட்சத்திரமாக ஜொலிக்கிறீர்கள். வாழ்த்துக்கள்//
  நன்றி மதுரை தமிழன்!

  ReplyDelete
 44. விஜயன் said...
  சார் உங்கள் வலைத்தளத்தில் நீங்கள் தொடுத்த பூக்கள் அத்தனையையும் மாலையாக்கி விட்டீர்கள் போல ...
  வாழ்த்துக்கள் சார்.தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.நீங்க உங்க பிளாக்கில் எழுதிய பதிவுக்கு க்ளிக் வராமல் ஏமாந்து போய் இருக்கலாம் உங்கள் ரசிகர்களின் நேரடி விமர்சனங்களை பெற்றீர்கள் அல்லவா??.. (ஒன்றை இழக்கும் கும்போதுதான் இன்னொன்று கிடைக்கிறது.., சரிதானே ??)//
  தம்பி உன்னை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி

  ReplyDelete
 45. //இக்பால் செல்வன் said...
  அருமையான பதிவுகள் !!! நிச்சயம் அனைத்தையும் வாசிக்கின்றேன் ...//

  ReplyDelete
 46. செழியன் said...

  அண்ணா நீங்கள் வாக்களிக்க மறந்து விட்டேர்களே
  அந்த பக்கத்தில் நட்சத்திரங்கள் இருக்கும் அந்தந மேல் சுட்டியை படர விடுங்கள்,
  பின்னர் பிடித்த நட்சத்திரத்தை தேர்ந்தெடுங்கள்//
  வாக்களிக்க வருகிறேன்.

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895