என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Sunday, August 5, 2012

மனித குணத்தில் ஒரு மாடு-அதிர்ச்சி செய்தி


   பொதுவாக விலங்குகள் பழிவாங்கும் குணம் உடையது அல்ல.அதுவும் வீட்டு விலங்குகள் மனிதனின் சுய நலத்திற்காக எவ்வளவோ துன்பங்களை பொறுத்துக்கொள்கிறது. சினிமாவில்தான் பாம்புகள், யானைகள், ஆடுகள் எல்லாம் கதாநாயகன் அல்லது கதாநாயகிக்காக பழிவாங்குவதை பார்த்திருக்கிறோம். ஆனால் சமீபத்தில் செய்தித் தாளில் படித்த செய்தி ஒன்று அதிர்ச்சியோடு ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.

     மத்தியப் பிரதேசத்தில் சாகர் மாவட்டத்தில் வசிக்கும் 65 வயதான பூப் நரைன் ப்ரஜாபதி என்பவரை காளை ஒன்று குத்திக் கொன்றது. இது ஏதோ ஜல்லிக்கட்டில் நடந்த நிகழ்வல்ல.

     ஆறுமாதங்களுக்கு  முன்னாள் தன் வீட்டருகே ஒரு காளை மாடு மேய்ந்து  கொண்டிருப்பதை பார்த்தார் ப்ரஜாபதி. உடனே கோபம் கொண்டு அதை ஒரு கம்பால் அடித்து விரட்டினார். அப்போது சென்ற மாடு 6 மாதம் கழித்து  பழி   வாங்குவதற்காக அவரைத் தேடி மீண்டும் அவர் வீட்டு வாசலில் படுத்துக்கொண்டது. வெளியே வந்த பிரஜாபதி அதைக்கண்டதும் பயந்து அதைத் துரத்துவதற்காக வெந்நீரைக் கொண்டு வந்து ஊற்றினார். அவ்வளுவுதான் ஆவேசம் கொண்ட மாடு அவர்மீது பாய்ந்தது. பயந்து போன பிரஜாபதி வீட்டுக்குள் ஓடினார். மாடும் விடவில்லை வீட்டுக்குள்ளும் துரத்தி வந்து அவரை தன் கொம்புகளால் குத்தித் தாக்கியது. அதோடு விடாமல் அவரை வெளிய இழுத்து வந்து கால்களாலும் மிதிக்க ஆரம்பித்தது. பிரஜாபதியின் அலறலைக் கேட்ட அக்கம் பக்கத்தவர் ஓடி வந்து  காளையை விரட்டினர். படுகாயம் அடைந்த அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். மாடும் மருத்துவமனைக்கு அவர்களை பின் தொடர்ந்து வந்ததாம். 
    சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் பிரஜாபதி அவரது உடலை தகனம் செய்ய சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.அங்கும் தொடர்ந்து வந்ததாம் மாடு. அவரது உடல் முழுவதுமாக எரியும்வரை அங்கேயே இருந்ததாம் அந்த மாடு. அப்பப்பா என்ன பழிவாங்கும் குணம்! 

      பழிவாங்கும் மனித குணம்  அதற்கும் தொற்றிக்கொண்டதோ?

    பிற விலங்குகளை நேசிக்கும் குணம் மனிதனுக்கும் குறைந்து வருவது போல மனிதனுக்கு அடங்கும் குணமும் விலங்குகளுக்கு குறைந்து வருகிறதோ என்னவோ?

மனிதன்  மாறவேண்டும்!

******************************************

29 comments:

 1. அதிர்ச்சியான சம்பவம்...

  த.ம. 1

  ReplyDelete
 2. வேதனை தரும் சம்பவம்... (த.ம. 2)

  அனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. வேறு ஏதாவது பிரச்சனையாக கூட இருக்கலாம்! ஆய்வு செய்ய வேண்டியது!

  ReplyDelete
 4. அதிர்ச்சியை உள்ளது நீங்கள் சொன்ன சம்பவம் :((

  ReplyDelete
 5. அதிர்ச்சியாகவும் அதிசயமாகவும் இருக்கிறது!

  இன்று என் தளத்தில் ஆன்றோர்மொழிகள்
  http://thalirssb.blogspot.in

  ReplyDelete
 6. பிற விலங்குகளை நேசிக்கும் குணம் மனிதனுக்கும் குறைந்து வருவது போல மனிதனுக்கு அடங்கும் குணமும் விலங்குகளுக்கு குறைந்து வருகிறதோ என்னவோ?

  அன்பை கொடுத்தால் அன்பை பெறலாம், ஆங்காரத்தை கொடுத்தால் ஆங்காரத்தை தான் பெற வேண்டும்.
  உயிர்கள் இடத்தில் அன்பு வேண்டும். என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
  அன்புக்கு எல்லா உயிர்களும் அடிபணியும்.
  நல்ல பதிவு.

  ReplyDelete
 7. "அன்பை கொடுத்தால் அன்பை பெறலாம், ஆங்காரத்தை கொடுத்தால் ஆங்காரத்தை தான் பெற வேண்டும்." என்ற கோமதி அரசு அவர்கள் சொன்னது சரி.

  ReplyDelete
 8. சாது மிரண்டால் காடுகொள்ளாது ..
  வாயில்லா உயிரினங்களிடம் அன்பு காட்ட வேண்டும்
  என்ற அடிப்படை உணர்வு இருந்தாலே போதும்...
  அவைகள் துன்புறுவதை பார்த்து ரசிக்கும்
  மனம் ஒழியவேண்டும்...

  ReplyDelete
 9. இருப்பிடத்திற்கு திரும்பிவந்த மாட்டின்மீது சுடு தண்ணீரை ஊற்றியதால் கோபமடைந்திருக்கலாம்.. மற்றவை.. அந்த மாட்டிற்கே வெளிச்சம்.

  ReplyDelete
 10. இந்தச் செய்தியை படித்தது என்னால்
  நம்பவே முடியவில்லை
  இது உண்மையில் ஆச்சரியப் படத்தக்க
  செய்தியும் அதிர்ச்சிதரும் செய்தியாகவுமே உள்ளது
  இதைபதிவாக்கி அனைவரும் அறியத் தந்தமைக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி! நாகராஜ் சார்!

  ReplyDelete
 12. திண்டுக்கல் தனபாலன் said...
  வேதனை தரும் சம்பவம்... (த.ம. 2)

  அனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

  வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி தனபாலன் சார்!

  ReplyDelete
 13. //வரலாற்று சுவடுகள் said...
  வேறு ஏதாவது பிரச்சனையாக கூட இருக்கலாம்! ஆய்வு செய்ய வேண்டியது!//
  இருக்கலாம்.விலங்கியல் நிபுனர்கள்தான் சொல்லவேண்டும்.

  ReplyDelete
 14. //மோகன் குமார் said...
  அதிர்ச்சியை உள்ளது நீங்கள் சொன்ன சம்பவம் :((//
  அதிர்ச்சியில் எழுதப்பட்ட பதிவுதான்.ஒரு படத்தில் வடிவேலு ஒரு நாயை அடித்து விட பின்னர் அது பிற நாய்களுடன் சேர்ந்து துரத்துவதை ஏதோ ஒரு சினிமாவில் பார்த்திருக்கிறேன்.அதை சினிமாவில் ரசிக்க முடியும். ஆனால் உண்மை நிகழ்ச்சி அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தும்.

  ReplyDelete
 15. s suresh said...
  அதிர்ச்சியாகவும் அதிசயமாகவும் இருக்கிறது!
  இன்று என் தளத்தில் ஆன்றோர்மொழிகள்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 16. கோமதி அரசு said...
  அன்பை கொடுத்தால் அன்பை பெறலாம், ஆங்காரத்தை கொடுத்தால் ஆங்காரத்தை தான் பெற வேண்டும்.
  உயிர்கள் இடத்தில் அன்பு வேண்டும். என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
  அன்புக்கு எல்லா உயிர்களும் அடிபணியும்.
  நல்ல பதிவு.//
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அம்மா!

  Read more: http://tnmurali.blogspot.com/2012/08/blog-post_5.html#ixzz22gjRSrYO

  ReplyDelete
 17. Muruganandan M.K. said...
  "அன்பை கொடுத்தால் அன்பை பெறலாம், ஆங்காரத்தை கொடுத்தால் ஆங்காரத்தை தான் பெற வேண்டும்." என்ற கோமதி அரசு அவர்கள் சொன்னது சரி.//
  வருகைக்கு நன்றி டாக்டர் சார்

  ReplyDelete
 18. மகேந்திரன் said...
  சாது மிரண்டால் காடுகொள்ளாது ..
  வாயில்லா உயிரினங்களிடம் அன்பு காட்ட வேண்டும்
  என்ற அடிப்படை உணர்வு இருந்தாலே போதும்...
  அவைகள் துன்புறுவதை பார்த்து ரசிக்கும்
  மனம் ஒழியவேண்டும்...//
  தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 19. //வே.சுப்ரமணியன். said...
  இருப்பிடத்திற்கு திரும்பிவந்த மாட்டின்மீது சுடு தண்ணீரை ஊற்றியதால் கோபமடைந்திருக்கலாம்.. மற்றவை.. அந்த மாட்டிற்கே வெளிச்சம்.//
  நன்றி சுப்ரமணியன்

  ReplyDelete
 20. Ramani said...
  இந்தச் செய்தியை படித்தது என்னால்
  நம்பவே முடியவில்லை
  இது உண்மையில் ஆச்சரியப் படத்தக்க
  செய்தியும் அதிர்ச்சிதரும் செய்தியாகவுமே உள்ளது
  இதைபதிவாக்கி அனைவரும் அறியத் தந்தமைக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்!

  ReplyDelete
 21. தகவலை அறிந்ததுமே வயிற்றில் புளியை கரைத்தது சகோ...

  நன்றி

  ReplyDelete
 22. மனிதன் மிருகம் ஆகிவிட்டான்....மிருகமும் மனிதன் ஆகிறதா...? ஆச்சர்யமாக இருக்கிறது!!!

  ReplyDelete
 23. பொதுவாகவே எல்லா மிருகங்களுக்கும் பழி வாங்கும் குணம் உண்டு. அது சந்தர்ப்பத்தைப் பொறுத்தது. ஒரு நாயை கல்லெடுத்து அடித்து விட்டால், மீண்டும் நாம் பார்க்கும் போது நம்மை விரட்டும் அல்லது குலைக்கும். சாதுவான நம் வீட்டு மாடுகளுக்கும் இந்த குணம் உண்டு. பாய்ச்சல் காளைக்கு நிச்சயம் அதற்கு கோபவெறி இருந்திருக்கும்.

  ReplyDelete
 24. பாம்பு பழிவாங்கும் என்பதையே பேத்தல் என புறம் தள்ளும் எனக்கு இதை செய்தித்தாளில் படித்ததும் மிகப் பெரிய அதிர்ச்சி..

  ReplyDelete
 25. புதுமையான தகவல்... கேட்பதற்கே வியப்பாய் உள்ளது

  ReplyDelete
 26. அதிர்ச்சியான தகவல் மனிதர்களை பார்த்து கற்றுக்கொண்டிருக்குமோ.

  ReplyDelete
 27. அப்பாடா.... இனிமேல் யாரும் மனிதனை எருமை மாடு என்றெல்லாம் திட்டமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 28. அம்மாடி...பயமாத்தான் இருக்கு.ஆனா இங்கயெல்லாம் இப்பிடி ஃப்ரீயா வெளில மிருகங்களைப் பார்க்கமுடியாதுதானே !

  ReplyDelete
 29. இந்த கதையை படிக்கும் போது எனக்கு வடிவேலு காமெடி தான் ஞாபகத்துக்கு வருது. கோபம் கொள்கிற வேளைகளில் மனிதனும்,மிருகமும் குணத்தால் ஒன்று.

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895