என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Thursday, August 9, 2012

'டவுட்ராசு'வின் சந்தேகங்கள்-உங்களுக்கு பதில் தெரியுமா?


   போன வாரம் மின்சார ரயிலில் ஆபீஸ் போய்க்கிட்டிருந்தபோது  என்னுடன் ஏழாம் வகுப்பு படித்த தங்கராசு மாம்பலத்தில் ட்ரெயினில் ஏற அதைப் பார்த்த நான் எங்கே என்னைப் பார்த்துவிடுவானோன்னு பயந்து வேற பக்கமா திரும்பி நின்னுகிட்டேன்.

        அவனைபாத்து நீங்க ஏன் பயப்படுனும்னு நீங்க கேக்கறது எனக்கு புரியுது.? அவனைப் பத்தி உங்களுக்கு தெரியாது.டவுட்டு கேட்டே நம்மள சாகடிச்சிடுவான் சார்!அவனுக்கு வர்ற டவுட்டுக்கு பதில் சொல்ல முடியாது . ஏழாவது படிக்கும்போது எங்க ஹிஸ்டரி வாத்தியரையே திணற அடிச்சவன் சார்! அவன்.

     ஒரு நாள் வாத்தியார் உலகம் உருண்டை ன்றத பத்தி விளக்கமா சொல்லிக்கிட்டிருந்தார்.எல்லாம் முடிஞ்சதும் வாத்தியார் ஒரு ஆர்வக் கோளாறுல ஏதாவது டவுட் இருந்தா கேளுங்கன்னு சொன்னார்.
 உடனே தங்கராசு எழுந்தான் சார்.

    "சார் உலகம் உருண்டைததானே!அது தன்னைத்தானே சுத்துதுன்னு சொன்னீங்க அப்படின்னா ஏரோப்ளேன் ல ஒரு ஊர்ல இருந்து இன்னொரு ஊருக்குப் போறதுக்கு பறந்து போகாம மேல உயரமா போய் அப்படியே நின்னுக்கிட்டா பூமி  சுத்தும்போது நாம போக வேண்டிய ஊரு ஏரோப்ளேனுக்கு கீழ வரும்போது அப்படியே இறங்கலாம் இல்லே!" என்று கேட்டதும் மாணவர்கள் எல்லாம் சிரிக்க வாத்தியார் ஒரு நிமிடம் திகைச்சு போய் நின்னுட்டார்.
    அப்புறம் ஏதோ ஒண்ணை சொல்லி சமாளிச்சார் ஆசிரியர். ரொம்ப குஷியான தங்கராசு அன்னையிலிருந்து கண்ட மேனிக்கு கேள்வி கேட்டு வாத்தியார் டீச்சரை திணற அடிக்கறதையே தொழிலா வச்சுகிட்டான்.

   தங்கராசுங்கற அவன் பேரு டவுட் ராசுன்னு மாறி போச்சு.வாத்தியாரை வறுத்து எடுக்கறது மத்த ஸ்டூடன்ட்சுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.ஆனா ஒரு கட்டத்தில வாத்தியார் டீச்சரோடு சேர்த்து மற்ற ஸ்டூடன்ட்ஸ் கிட்டயும் தன் டவுட்டு வெறிய காமிக்க டவுட் ராசுவைப் பாத்து எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒருநாள் அவன் ஸ்கூலுக்கு வரலன்னா எல்லோரும் சந்தோஷப் பட்டாங்க.அந்த அளவுக்கு டவுட் டார்ச்சர் பண்ணுவான்.

         அடுத்த வருஷம் நான் வேற ஸ்கூலுக்கு போயிட்டேன்.அப்புறம் ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு அவனை தாம்பரத்தில பாத்தேன்.அவன்தானான்னு எனக்கு டவுட்டா இருந்துச்சு. அவனோ இந்த  ஒரு விஷயத்தில டவுட்டே இல்லாம என்னை கண்டுபிடிச்சிட்டான். அவனோட டவுட்டு வெறிக்கு ஒரு விஞ்ஞானியா ஆயிருப்பான்னு நினைச்சேன். ஆனா அப்படியெல்லாம் நடக்கல.  எங்கயோ கிளார்க்கா ஒர்க் பண்ணிக்கிட்டு இப்பவும் டவுட்டு கேட்டு டார் டாரா கிழிக்கிறானாம் சார். இன்னமும் மாறாத அவன் அன்னைக்கு என்னை புடிச்சு வச்சுக்கிட்டு பத்து இடத்தில பஞ்சர் ஓட்டுன ட்யூப்பா ஆக்கிட்டான் சார்.

        அப்படிப்பட்ட டவுட் ராசுவைத்தான் பாத்து ஒளிஞ்சிகிட்டது நியாம்தானே சார். ஆனா என் கஷ்ட காலம் அவன் என்னை பாத்துட்டான்
     நெரிசல்ல நுழைஞ்சு என் பக்கத்தில் வந்து முதுகை தட்டி,
"ஹாய், முரளி எப்படி இருக்க? பாத்து ரொம்ப நாளாச்சி..."என்று ஆரம்பிக்க ..,அதற்குள் ஒரு போன்கால் வர இத வச்சு எக்மோர் வரை எப்படியாவது சமாளிச்சிடலாம்னு சிக்னல் கிடைக்காதமாதிரி அந்தப் பக்கம்  திரும்பி நின்னு கால் அட்டென் பண்ணா ,"நான்தாண்டா தங்கராசு பேசறேன்.உன் நம்பர்தானான்னு செக் பன்னேன்" னு சொல்லி அதிரவைத்தான்.

    அப்புறம் வேற வழியில்லாம ராஜேந்திரகுமார் கதாபாத்திரம் மாதிரி நான் "ஙே" என்று விழிக்க டவுட் ராசு கண்டிநியூ பண்ணான்.   "இப்ப மடிப்பாக்த்தில இருக்கயாமே.மடிப்பாக்கம் பூந்தமல்லி பக்கம்தானே இருக்கு " என்று கேட்டு அழவைத்தான். 
எக்மோர்  வரதுக்குள்ள அவன் கேட்ட டவுட்டுக்கு பதில் சொல்ல முடியாம  நான் பட்ட அவஸ்தையை நீங்களும்  எப்படி இருக்கும்னு நீங்களே பாருங்க! இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்துகொள்ளத்தானே பதிவுலகம் இருக்கு.

இதோ டவுட் ராசுவின் சில டவுட்டுகள்.

 1. ஒல்லியா இருக்கிற ஊசிய குன்டூசின்னு ஏன் சொல்லறாங்க?
 2.  ஒருத்தரை புகழ்ந்து சொன்னாலோ ஜால்ரா போட்டாலோ காக்கா புடிக்கிறான்னு ஏன்னு சொல்றாங்க? காக்காய்க்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?
 3. முருகன்  பெருமைய சொல்ற திருப்புகழ் பாடல்கள் எல்லாம் பெருமாளேன்னு முடியுதே ஏன்?முருகனும் பெருமாளும் ஒண்ணா?
 4. பேங்க்ல கிழிஞ்ச ரூபாய் நோட்டை கொடுத்தா கிழிஞ்ச இடத்த பிரவுன் பேப்பர்ல ஓட்டச் சொல்றாங்களே!செல்லோ டேப்ல ஓட்டினா ஒத்துக்க மாட்டேங்கறாங்களே ஏன்?
 5. எல்லா சாப்பாட்டு வகையிலும்தான் உப்பு போடறாங்களே! உப்புமாவுக்கு மட்டும் அந்தப் பேர் எப்படி வந்தது.?
 6. ஹோட்டல்ல மட்டும் ஒரு காபி சாப்பிட்டிட்டு 1000 ரூபாய் நீட்டினாலும் சில்லறை இல்லைன்னு சொல்லாம குடுக்குறாங்களே ஏன்?
 7. பேய்க்கு வாழ்க்கை பட்டா  புளிய மரம் ஏறித் தான் ஆகணும்னு சொல்றாங்களே! ஏன்? நீ புளிய மரம் ஏறி இருக்கியா?(என்னா வில்லத்தனம்)
 8. துணை ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ன்னு சொல்லறாங்களே அவருக்கு என்ன வேலை?
 9. செவ்வாய் கிரகத்தில ......
          என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே எக்மோர் ஸ்டேஷன் வர அப்புறம் பாக்கலாம் என்று இறங்கி   ஓடினேன். 

**************************************
இதையும்  படியுங்க

41 comments:

 1. ஹா... ஹா... கலக்கல்...

  டவுட் ராசுவின் டவுட்டுகள்... ரசித்தேன்...

  தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 1)

  ReplyDelete
 2. இதெல்லாம் பெரிய பெரிய சந்தேகங்கள் தான் பார்க்கலாம் பதில் வருதான்னு.

  ReplyDelete
 3. எல்லாமே செம டவுட்..எனக்கொரு டவுட்..தாங்கள் அழைப்பிதழை வெளியிடவில்லையா..

  ReplyDelete
 4. பேய்க்கு வாழ்க்கை பட்டா புளிய மரம் ஏறித் தான் ஆகணும்னு//

  இது உங்களுக்கும் உங்க நண்பனுக்கும் நல்லாவே பொருந்துது ஹி ஹி...

  ReplyDelete
 5. மனம் விட்டு சிரித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 6. Sir please publish the invitation atleast by tomorrow. I am also planning to publish an article on the invitation and function tomorrow.

  ReplyDelete
 7. ம்ம்ம்ம் ஒரு மார்க்கமாத்தான் கிளம்பியிருக்கீங்க :D

  ReplyDelete
 8. அட டவுட் எல்லாம்
  எனக்கும் டவுட்டாத்தான் இருக்கு
  பதில் தெரியலை
  சூப்பர் பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. நல்லடவுட்டுக்கள்தான்! வாழ்த்துக்கள்!

  இன்று என் தளத்தில்
  ஒண்ணொன்னு .. ஒண்ணொன்னு வேணும்!
  http://thalirssb.blogspot.in

  ReplyDelete
 10. //திண்டுக்கல் தனபாலன் said...
  ஹா... ஹா... கலக்கல்.//
  நன்றி தனபாலன் சார்!..

  ReplyDelete
 11. //Sasi Kala said...
  இதெல்லாம் பெரிய பெரிய சந்தேகங்கள் தான் பார்க்கலாம் பதில் வருதான்னு//
  நன்றி சசிகலா!

  ReplyDelete
 12. //மதுமதி said...
  எல்லாமே செம டவுட்..எனக்கொரு டவுட்..தாங்கள் அழைப்பிதழை வெளியிடவில்லையா..//
  மெயில் கவனிக்காததால போடா முடியல.நாளை போட்டுவிடுகிறேன்.

  ReplyDelete
 13. //MANO நாஞ்சில் மனோ said...
  பேய்க்கு வாழ்க்கை பட்டா புளிய மரம் ஏறித் தான் ஆகணும்னு//
  இது உங்களுக்கும் உங்க நண்பனுக்கும் நல்லாவே பொருந்துது ஹி ஹி...//
  அத என் வாயால எப்படி சார் சொல்லுவேன்.

  ReplyDelete
 14. //மாசிலா said...
  மனம் விட்டு சிரித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.//
  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாசிலா நண்பரே!

  ReplyDelete
 15. //மோகன் குமார் said...
  Sir please publish the invitation atleast by tomorrow. I am also planning to publish an article on the invitation and function tomorrow.//நாளை காலை நிச்சயம் அழைப்பிதழ் பற்றி பதிவிடுவேன்

  ReplyDelete
 16. //ஹாரி பாட்டர் said...
  ஹி ஹி கலக்கல்/
  நன்றி ஹாரி பாட்டர்.

  ReplyDelete
 17. வரலாற்று சுவடுகள் said...
  ம்ம்ம்ம் ஒரு மார்க்கமாத்தான் கிளம்பியிருக்கீங்க :D//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 18. ////
  கோவி said...
  same doubt..//
  நன்றி கோவி சார்!

  ReplyDelete
 19. //Ramani said...
  அட டவுட் எல்லாம்
  எனக்கும் டவுட்டாத்தான் இருக்கு
  பதில் தெரியலை
  சூப்பர் பதிவு
  தொடர வாழ்த்துக்கள்//
  வருகைக்கும் கருத்துக்கும் வாக்கிற்கும் நன்றி.

  ReplyDelete
 20. //நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  ரைட்டு//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!.

  ReplyDelete
 21. //s suresh said...
  நல்லடவுட்டுக்கள்தான்! வாழ்த்துக்கள்!//
  நன்றி சுரேஷ் சார்!

  ReplyDelete
 22. சார்... எனக்கொரு டவுட்டு...

  இந்த டவுட்டெல்லாம் எப்படிங்க யோசிச்சிங்க....?

  ReplyDelete
 23. //பேய்க்கு வாழ்க்கை பட்டா புளிய மரம் ஏறித் தான் ஆகணும்னு சொல்றாங்களே! ஏன்? நீ புளிய மரம் ஏறி இருக்கியா///

  அப்படியா அது எனக்கு தெரியாதே....நீங்க சொன்ன அப்புறம் புளிய மரம் ஏற ஆசை ஆனா புளிய மரம் இங்கில்லையே நண்பா//

  வலைதளம் பக்கம் என் மனைவி வரமாட்டா அதுனாலதான் தைரியாமா போட்டேன்..ஹீ.ஹ்ஹீ அதுக்காக யாரும் போன் போட்டு என்னனை மாட்டிடி வீடாதிங்க மக்களே

  ReplyDelete
 24. புத்திசாலித் தனமான டவுட்டுகள்தான்!
  அருமை!
  சிரிப்பும் வருகிறது.பாராட்டுகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 25. உங்கள் ‘டவுட்’களையெல்லாம் குறித்து வைத்துக் கொண்டு, நண்பர்களிடம் எல்லாம் ‘டவுட்’ கேட்க ஆரம்பித்துவிட்டேன்.
  ‘டவுட் பரமசிவம்’ என்று பட்டம் சூட்டுவார்களோன்னு பயமா இருக்குங்க.
  நல்ல நகைச்சுவைப் பதிவுகளுக்கு ரொம்பவே பஞ்சம்.
  இன்னும் எழுதுங்கள். சிரித்து மகிழ்கிறோம்.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 26. உங்கள் ‘டவுட்’களையெல்லாம் குறித்து வைத்துக் கொண்டு, நண்பர்களிடம் எல்லாம் ‘டவுட்’ கேட்க ஆரம்பித்துவிட்டேன்.
  ‘டவுட் பரமசிவம்’ என்று பட்டம் சூட்டுவார்களோன்னு பயமா இருக்குங்க.
  நல்ல நகைச்சுவைப் பதிவுகளுக்கு ரொம்பவே பஞ்சம்.
  இன்னும் எழுதுங்கள். சிரித்து மகிழ்கிறோம்.
  மிக்க நன்றி.

  ReplyDelete
 27. சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும் பதிவு அருமை! சா இராமாநுசம்

  ReplyDelete
 28. புத்திசாலித்தனமான டவுட்தான் .என்ன நாம் இதுவரை யோசித்ததில்லை .நல்ல பதிவு.

  ReplyDelete
 29. ////எல்லா சாப்பாட்டு வகையிலும்தான் உப்பு போடறாங்களே! உப்புமாவுக்கு மட்டும் அந்தப் பேர் எப்படி வந்தது.?///

  அதானே ! இதெல்லாம் கேட்டா நம்மள கேனயன்பாய்ங்க!!!

  ReplyDelete
 30. AROUNA SELVAME said...
  சார்... எனக்கொரு டவுட்டு...
  இந்த டவுட்டெல்லாம் எப்படிங்க யோசிச்சிங்க....?//
  ஹிஹி.ஹிஹி நன்றி

  ReplyDelete
 31. Avargal Unmaigal said...
  அப்படியா அது எனக்கு தெரியாதே....நீங்க சொன்ன அப்புறம் புளிய மரம் ஏற ஆசை ஆனா புளிய மரம் இங்கில்லையே நண்பா//
  வலைதளம் பக்கம் என் மனைவி வரமாட்டா அதுனாலதான் தைரியாமா போட்டேன்..ஹீ.ஹ்ஹீ அதுக்காக யாரும் போன் போட்டு என்னனை மாட்டிடி வீடாதிங்க மக்களே//
  அப்படியெல்லாம் செய்வமா?நம்ம கதையும் கந்தலாயிடும் இல்ல.

  Read more: http://tnmurali.blogspot.com/2012/08/blog-post_9.html#ixzz23LuJrQkq

  ReplyDelete
 32. //kovaikkavi said...
  புத்திசாலித் தனமான டவுட்டுகள்தான்!
  அருமை!
  சிரிப்பும் வருகிறது.பாராட்டுகள்.
  வேதா. இலங்காதிலகம்.//
  நன்றி மேடம்!

  ReplyDelete
 33. //முனைவர் பரமசிவம் said...
  உங்கள் ‘டவுட்’களையெல்லாம் குறித்து வைத்துக் கொண்டு, நண்பர்களிடம் எல்லாம் ‘டவுட்’ கேட்க ஆரம்பித்துவிட்டேன்.
  ‘டவுட் பரமசிவம்’ என்று பட்டம் சூட்டுவார்களோன்னு பயமா இருக்குங்க.
  நல்ல நகைச்சுவைப் பதிவுகளுக்கு ரொம்பவே பஞ்சம்.
  இன்னும் எழுதுங்கள். சிரித்து மகிழ்கிறோம்.
  மிக்க நன்றி.//
  வருகைக்கு மிக்க நன்றி முனைவர் அய்யா!

  ReplyDelete
 34. //புலவர் சா இராமாநுசம் said...
  சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும் பதிவு அருமை! சா இராமாநுசம்//
  தங்கள் தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி புலவர் ஐயா!

  ReplyDelete
 35. //ezhil said...
  புத்திசாலித்தனமான டவுட்தான் .என்ன நாம் இதுவரை யோசித்ததில்லை .நல்ல பதிவு.//
  வருகைக்கு நன்றி எழில் மேடம்

  ReplyDelete
 36. கிஷோகர் said...
  ////எல்லா சாப்பாட்டு வகையிலும்தான் உப்பு போடறாங்களே! உப்புமாவுக்கு மட்டும் அந்தப் பேர் எப்படி வந்தது.?///
  அதானே ! இதெல்லாம் கேட்டா நம்மள கேனயன்பாய்ங்க!!!//
  நன்றி கிஷோகர்!

  ReplyDelete
 37. உங்ககிட்ட கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம எங்களையும் குழப்பறீங்களே முரளி....

  என்னா ஒரு வில்லத்தனம். :))

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895