என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Friday, August 10, 2012

வாங்க!வாங்க!எல்லாரும் வாங்க!

    26.08.2012 ஞாயிற்றுக்கிழமை தமிழ்ப் பதிவுலக வரலாற்றின் மகத்தான நாள். இதுவரை கலக்கிய பதிவர்கள்,தற்போதும் கலக்கிக் கொண்டிருக்கும் பதிவர்கள், இனி கலக்க இருக்கும் பதிவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கொண்டாட இருக்கும் நாள்தான் தமிழ் வலைபதிவர்கள் திருவிழா. தமிழகத்தின்  தலைநகரான சென்னையில் நடைபெற இருக்கும் இவ்விழாவிற்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவிற்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்ப் பதிவர்கள் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த  வேண்டிய நேரம் இது. அவ்வப்போது ஆங்காங்கே பதிவர் சந்திப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் தமிழ்ப் பதிவர்கள்அனைவரும் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்குவது இன்றியமையாதது. இது பல்வேறு வகையில் பதிவர்களுக்கு உதவும் என்பதில் ஐயமில்லை.
    இந்தக் கருத்தை நீண்ட நாளாக வலியுறுத்தி வருபவர் நமது மதிப்பிற்குரிய புலவர் இராமானுசம் ஐயா அவர்கள். அதற்கான நேரம் தற்போது கைகூடி வந்துள்ளது. புலவர் அய்யா,சென்னைபித்தன் உள்ளிட்ட பல்வேறு மூத்த பதிவர்களின் ஆலோசனைகளின்படி அனைவரும் பிரமிக்கும் வண்ணம் நடைபெற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றான். 
     வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாது பலவேறு சமுதாய பிரச்சனைகளுக்கு விவாதங்களும்  தீர்வுகளும் தமிழ்ப் பதிவுலகில் முன் வைக்கப்டுகின்றன. இந்த விழா தமிழ் பதிவர்களுக்கு பத்திரிகைகள்,சமுதாய அமைப்புகள் பொதுமக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரம் பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.

    உங்கள் மனம் கவர்ந்த பதிவுலக ஜாம்பவான்களைக் காணவும், ஜாம்பவான்கள் தங்கள் ரசிகர்களைக் காணும் அரிய வாய்ப்பாகவும் அமைய இருக்கும் இவ்விழாவிற்கு தவறாது கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம். ஒரு நாள் முழுவதும் நடைபெறும் இக் கொண்டாட்டத்தில் உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக கவியரங்கமும் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிப்பவர்கள் இவ்விழாவிற்காக நேரம் காலம் பாராது செயல்படும் கீழ்க்கண்ட(பின்னணியில் இன்னும் பலர் உள்ளனர்) பதிவர்களின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
        மதுமதி(தூரிகையின் தூறல்) 98941 24021  
பாலகணேஷ்(மின்னல்வரிகள்)-7305836166 சென்னைப்பித்தன்(நான்பேசநினைப்பதெல்லாம்)- 94445 12938
 புலவர் சா.இராமாநுசம்(புலவர்கவிதைகள்)- 90947 66822
      சசிகலா(தென்றல்)- 99410 61575

        
          சமூக வலைத்தளங்களில் பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் இன்னும் பல பதிவர்களை சென்றடையட்டும்.. நன்றி.. 

அற்புதமாக  அழைப்பிதழை வடிவமைத்த மின்னல் வரிகள் கணேஷ் அவர்களுக்கு நன்றி. அதுவும் லோகோ மிக அற்புதம்.

டிஸ்கி: ஒரே ஒரு கஷ்டம் தான் உங்களுக்கு காத்திருக்கு ; அதாவது நானும் ஒரு கவிதை(?) வாசிக்கப் போகிறேன்.

                                 *************************


20 comments:

 1. எங்கு காணினும் சக்தியட மாதிரி எங்கு காணினும் சந்திப்பு அழைப்புகள்.... ஒவ்வொருவரின் அழைப்பையும் ஏற்றுக் கொண்டே உள்ளேன்

  ReplyDelete
 2. வணக்கம் ,
  உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
  நன்றி.
  www.thiraddu.com

  ReplyDelete
 3. அழைப்பை ஏற்று வாருங்கள் பதிவர்களே..

  ReplyDelete
 4. அவசியம் வருகிறோம்
  கரும்புதின்னக் கூலியா ?

  ReplyDelete
 5. விழா சிறக்க வாழ்த்துக்கள்... நன்றி… (TM 4)

  ReplyDelete
 6. எங்களைப் பொறுத்தவரை உங்களின் கவிதையும் கரும்பென இனிக்கும் என்பது திண்ணம். வாழ்த்துக்கள் முரளிதரன். விழாவில் சந்தித்து மகிழ்வோம்.

  ReplyDelete
 7. அருமை!முரளி!
  தாஙுகள் நகைச் சுவைப் பதிவர் மட்டுமல்ல, நல்ல
  கவிஞர் என்பதை நான் அறிவேன்!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 8. விழாவில் சந்திப்போம் வாங்க வாங்க.

  ReplyDelete
 9. Will make it a point to attend. All the best.

  ReplyDelete
 10. தங்களின் கவிதையை இரசிக்க காத்திருக்கிறேன். விழாவில் சந்திப்போம்.

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் முரளி சார்!

  ReplyDelete
 12. வாங்க முரளி,கவிதை வாசித்து மகிழ்வூட்டுங்கள்.சந்திப்போம்

  ReplyDelete
 13. கண்டும் களித்தும் உறவாடி தம்முள் கலப்போம் நண்பர்களே.

  ReplyDelete
 14. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
  உங்கள் கவிதை கேட்க ஆவல்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற வாழ்த்துகள்...

  ReplyDelete
 16. விழா சிறக்க வாழ்த்துக்கள்.
  Vetha. Elangathilakam.

  ReplyDelete
 17. //// அதாவது நானும் ஒரு கவிதை(?) வாசிக்கப் போகிறேன்.///

  இந்த ஒரு காரணத்துக்காகவே நான் இந்த விழாவை புறக்கணிக்கிறேன். ஹி..ஹி..ஹி... # நாங்கெல்லாம் சிறீலங்கா அண்ணே, எப்புடி அம்புட்டு தூரம்??? நீங்க ஜமாய்ங்க!

  ReplyDelete
 18. பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துகள் முரளீதரன்....

  உங்கள் கவிதையும் தோரணம் கட்டப்போகிறதா... வாழ்த்துகள்.

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895