என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Tuesday, August 7, 2012

செவ்வாய் கிரகம்-தொட்டுவிடும் தூரம்தான்

ரோவர் க்யூரியாசிட்டி அனுப்பிய படம் 
    இன்று செவ்வாய்க் கிழமை. செவ்வாய்க் கிரகத்தை பற்றி தெரிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

   நாசா சாதித்து விட்டது.ஆம்.மீண்டும் ஒருமுறை செவ்வாயில் ரோவர் Rover Curiosity விண்கலத்தை இறக்கி சாதனை படைத்து விட்டது.இந்திய நேரப்படி 06.08.2012 பகல் 11.00 மணிக்கு தரை இறங்கிய இச்செய்தியை தொலைக்காட்சிகள் வெளியிடும் முன்னரே பதிவிட்டு அசத்திய "அவர்கள் உண்மைகள்" மதுரைத் தமிழனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்வோம்.அவரது பதிவிற்கான இணைப்பு நாசாவில் இருந்து லைவ் தொலைக்காட்சி கவரேஜ்.

     இது தொடர்பான வேறு சில தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
 1. செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பப் படுவது இது ஏழாவதுமுறை.
 2.  ராக்கெட்டின் பின் புறத்தில் இருந்து ஓர் டன் எடையுள்ள ரோவர் கயிற்றில் தொங்க விடப்பட்டு செவ்வாயின் தரையில் இறங்கிய அந்த கடைசி ஏழு நிமிடக் காட்சி ஆங்கிலப் படங்களின் க்ளைமாக்ஸ் காட்சி போல பரபரப்பாக இருந்தததால் அதனை "The Seven Minutes of Terror has turned into the Seven Minutes of Triumph," என்று நாசா விஞ்ஞானிகள் வர்ணித்துள்ளனர்..
 3.   இந்த விண்கலம் அடுத்த இரண்டு ஆண்டுகள் செவ்வாயில் ஆய்வு நடத்தும் வகையில் வடிவைமக்கப் பட்டுள்ளது.
 4. ஒருகாரைப் போல இருக்கும் Curiosity அணு ஆற்றலில் இயங்குகிறது.
 5. இதில் துல்லியமாக படமெடுக்கக் கூடிய கேமராக்கள்,வானிலை அறியக்கூடிய கருவிகள்,பாறைகளைக்கூட துளையிட்டு ஆய்வு நடத்த ரோபோட்,வேதியியல் ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் கருவிகள் உள்ளன.
 6. இந்த  விண்கலம்  செவ்வாயில் உள்ள கேல் க்ரேட்டர்  என்ற 96 மைல் அகலமும் 3 மைல் உயரமும் உள்ள மலையை ஆய்வு செய்து பல தகவல்களை அளிக்கும்  என்று கூறப்படுகிறது.
 7. செவ்வாயின் மேற்பரப்பில் இரும்புத் துகள்கள்  தூசுபோல் நிறைந்திருப்பதால் செந்நிறமாக இக்கோள் கானப்படுகிறது.அதனால் செவ்வாய் செங்கோள் என்று அழைக்கப் படுகிறது.
 8. செவ்வாய்க்கும்  பூமிக்கும் சிலஒற்றுமைகள் காணப்படுகின்றன
 9. பூமியைப் போலவே செவ்வாய்க்கும் பருவ காலங்கள் உண்டு
 10. செவ்வாயில் ஒரு நாள் பூமியின் ஒரு நாளை விடசற்று அதிகமாக இருக்கிறது.
 11. செவ்வாயில்  ஒரு ஆண்டு என்பது பூமியின் ஒரு ஆண்டு மற்றும்  320 நாட்களுக்கு சமமாக இருக்கிறது.
 12. செவ்வாயின்  அச்சு 25.9 டிகிரி சாய்ந்திருக்கிறது.(பூமி தன் அச்சில் 23.5 டிகிரி சாய்ந்திருக்கிறது.
 13. செவ்வாய்க்கு ஃபோபோஸ், டெய்மாஸ் இரண்டு நிலாக்கள் உண்டு. 
 14. செவ்வாயின் காற்று மண்டலத்தில் பெருமளவு கார்பன்-டை-ஆக்சைடே நிறைந்துள்ளது.
 15. செவ்வாயின்  ஈர்ப்பு விசை, புவி ஈர்ப்பு விசையில் 38 சதவீதமே உள்ளது.அதாவது பூமியில் ஒருவர் 100 கிலோ எடை இருந்தால் செவ்வாய்க் கோளில்  38 கிலோ மட்டுமே இருப்பார்.
 16.  செவ்வாயில் அடிக்கடி புழுதிப் புயல் விசுமாம்.

செவ்வாயில் மார்ஸ் ரோவர் க்யூரியாசிட்டி தரை இறங்கியபோது நாசா வெளியிட்ட வீடியோ.

 

**** 
நன்றி: நாசா இணைய தளம் .
மேலும் தவல்கள் அறிய 
உங்கள்  கருத்துக்களை தவறாமல் தெரிவிக்கவும்
         

43 comments:

 1. நல்ல பகிர்வு. நானும் தொலைக்காட்சியில் இதன் நேரடி ஒளிபரப்பு பார்த்துக் கொண்டிருந்தேன். சாதனை நிகழ்த்திய விஞ்ஞானிகளிடம் இருந்த பரபரப்பும் குதூகலமும் என்னையும் தொற்றிக் கொண்டது....

  பகிர்வுக்கு நன்றி முரளீதரன்.

  த.ம. 1

  ReplyDelete
 2. செவ்வாய் பத்தின தகவல் அறிந்து கொண்டேன்...பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 3. நீங்கள் தந்துள்ள தகவல்கள் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள். அதுமட்டுமல்லாமல் என் வலைதளத்தினை தங்கள் பதிவில் சுட்டிக்காட்டி கெளரவப்படுத்தியதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  //இச்செய்தியை தொலைக்காட்சிகள் வெளியிடும் முன்னரே///
  இது எனக்கு தெரியாத விஷயமாக இருக்கிறதே


  நான் செய்தது எல்லாம் நாசாவின் லைவ் ஒலிபரப்பிற்கான லிங்கை எனது தளத்தில் முதலில் கொடுத்தது மட்டும்தான்..அதன் பின் அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இறங்கிய போது அதை பார்த்து கொண்டே அந்த நிகழ்ச்சியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து எனது வலைத்தளத்தில் பதிந்தது மட்டுமே

  இதை அமெரிக்கா செய்த சாதனை என்பதைவிட மனித இனம் செய்த சாதனையாகும்

  ReplyDelete
 4. கட்டுரையில் செவ்வாய் கிரகத்தைப் பற்றிய உங்களது ஆர்வம் தெரிகிறது. உடனுக்குடன் செய்தியை தெரிவிக்க நினைக்கும் உங்கள் ஆர்வம் வாழ்க! நல்ல தொகுப்பு.

  ReplyDelete
 5. மிக பயனுள்ள பகிர்வு. நன்றி சார். தொடர்ந்து இது போன்று பலருக்கு பயன்படும் பதிவுகளை வழங்குங்கள்

  ReplyDelete
 6. அவர்கள் உண்மைகள் சொன்னது போல், மனித இனம் செய்த சாதனை தான்.
  மனிதனால் முடியாதது எதுவும் இல்லை என்று ஆகி விட்டது.
  நானும் தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பை பார்த்தேன்.
  வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் இறங்கியவுடன் விஞ்ஞானிகளின் மகிழ்ச்சி ஆரவாரம், அதை ஒருவருக்கு ஒருவர் பரிமாறி கொண்ட விதம் எல்லாம் மகிழ்ச்சியாக இருந்தது.

  செவ்வாயின் ஈர்ப்பு விசை, புவி ஈர்ப்பு விசையில் 38 வீதமே உள்ளது.அதாவது பூமியில் ஒருவர் 100 கிலோ எடை இருந்தால் செவ்வாய்க் கோளில் 38 கிலோ மட்டுமே இருப்பார்.//

  குண்டாக உள்ளவர்களுக்கு நல்ல செய்தி. அங்கு வாழப்போகும் போது யாரும் அவர்களை குண்டு என்று சொல்ல முடியாது.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 7. நல்ல தகலவல்களைப் பகிர்ந்துளீர்கள்.. செவ்வாய் பற்றி நான் அறியாத புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன்

  ReplyDelete
 8. நிறைய தகவல்களை உள்ளடக்கிய பதிவு (TM 5)

  ReplyDelete
 9. நல்லதொரு தொகுப்பு... விளக்கம் அருமை... பாராட்டுக்கள்...

  தொடர வாழ்த்துக்கள்... நன்றி... (T.M.6)

  ReplyDelete
 10. நல்ல தகவலை உடனுக்குடன் வலைப்பதிவாலர்கள் தருகிறீர்கள். நன்றி.

  (அங்கே இரண்டு நிலாவா....? இனி கவிஞர்களுக்கு கொண்டாட்டம் தான்)

  ReplyDelete
 11. நானும் நாசா லைவ் பார்த்தேன்.. மகிழ்ச்சி.
  தொகுப்பு அருமை. நன்றி

  ReplyDelete
 12. கோள் பற்றியும்.,விண்கலம் பற்றியும் விளக்கமான தகவல் பகிர்வு!நன்றி முரளிதரன்

  ReplyDelete
 13. செவ்வாய் பற்றிய தகவல்களின் தொகுப்பு அருமை...
  செவ்வாயில் ஜீவராசிகளை தேடும் நம்மவர்கள்,பூமியில் வாழும் ஜீவராசிகளுடன் நல்லவிதமாக நடந்து கொள்வார்களாக!..

  ReplyDelete
 14. தகவல்களுக்கு நன்றி!

  ReplyDelete
 15. செவ்வாய் தொட்டுவிட்ட தூரம்.
  தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 16. எப்போ அங்கே ப்ளாட் போடறாங்க?
  தகவல்கள் அருமை

  ReplyDelete
 17. வெங்கட் நாகராஜ் said...
  நல்ல பகிர்வு. நானும் தொலைக்காட்சியில் இதன் நேரடி ஒளிபரப்பு பார்த்துக் கொண்டிருந்தேன். சாதனை நிகழ்த்திய விஞ்ஞானிகளிடம் இருந்த பரபரப்பும் குதூகலமும் என்னையும் தொற்றிக் கொண்டது....
  பகிர்வுக்கு நன்றி முரளீதரன்//
  நன்றி நாகராஜ் சார்!.

  ReplyDelete
 18. அருமையான தகவல்கள்! நன்றி!
  இன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை! தொடர் http://thalirssb.blogspot.in/2012/08/3.html

  ReplyDelete
 19. செவ்வாயை அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு எழுத்திட்டீங்க போங்க...

  செவ்வாய் ரியல் எஸ்டேட்காரங்க கையில அடுத்து சிக்கிக்குமோ...

  ReplyDelete
 20. பதிவிற்கு மிக மிக நன்றி நான் வேறு எங்கும் பார்க்கவில்லை. நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 21. அறியாத விஷயங்கள் நிறைய தெரிந்துகொண்டேன் நண்பா...!

  ReplyDelete
 22. செவ்வாய்க்கிழமை செவ்வாய்க்கிரகம் பற்றின பதிவை புதன்கிழமைதான் படிச்சேன்.புதிய தகவல்கள் முரளி.நன்றி !

  ReplyDelete
 23. //கோவை நேரம் said...
  செவ்வாய் பத்தின தகவல் அறிந்து கொண்டேன்...பகிர்வுக்கு நன்றி//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோவை நேரம்

  ReplyDelete
 24. //Avargal Unmaigal said...
  நீங்கள் தந்துள்ள தகவல்கள் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள். அதுமட்டுமல்லாமல் என் வலைதளத்தினை தங்கள் பதிவில் சுட்டிக்காட்டி கெளரவப்படுத்தியதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்//
  நான் பதிவ்டுவதற்கு இது தொடர்பாக முன் வேறு யாரேனும் பதிவிட்டிருக்கிரார்களா என்று பார்த்தபோது உங்கள் பதிவு முன்னதாக இடப்பட்டிருந்தத அதனை தெரிவித்தேன்.வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 25. //தி.தமிழ் இளங்கோ said...
  கட்டுரையில் செவ்வாய் கிரகத்தைப் பற்றிய உங்களது ஆர்வம் தெரிகிறது. உடனுக்குடன் செய்தியை தெரிவிக்க நினைக்கும் உங்கள் ஆர்வம் வாழ்க! நல்ல தொகுப்பு.//
  வருகைக்கு நன்றி அய்யா!

  ReplyDelete
 26. //மோகன் குமார் said...
  மிக பயனுள்ள பகிர்வு. நன்றி சார். தொடர்ந்து இது போன்று பலருக்கு பயன்படும் பதிவுகளை வழங்குங்கள்//
  நன்றி மோகன் குமார்.நிச்சயம் பதிவிடுவேன்.

  ReplyDelete
 27. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதி அரசு மேடம்

  ReplyDelete
 28. //சீனு said...
  நல்ல தகலவல்களைப் பகிர்ந்துளீர்கள்.. செவ்வாய் பற்றி நான் அறியாத புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன்//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனு சார்!

  ReplyDelete
 29. //வரலாற்று சுவடுகள் said...
  நிறைய தகவல்களை உள்ளடக்கிய பதிவு (TM 5)//
  தவறாமல் வருகை தரும் வரலாற்றுசுவடுகளுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 30. திண்டுக்கல் தனபாலன் said...
  நல்லதொரு தொகுப்பு... விளக்கம் அருமை... பாராட்டுக்கள்...
  தொடர வாழ்த்துக்கள்... நன்றி... (T.M.6)//
  தொடர் வருகைக்கும் வாக்கிற்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 31. //AROUNA SELVAME said...
  நல்ல தகவலை உடனுக்குடன் வலைப்பதிவாலர்கள் தருகிறீர்கள். நன்றி.
  (அங்கே இரண்டு நிலாவா....? இனி கவிஞர்களுக்கு கொண்டாட்டம் தான்)//
  வருகைக்கு நன்றி AROUNA SELVAME

  ReplyDelete
 32. //Uma said...
  நானும் நாசா லைவ் பார்த்தேன்.. மகிழ்ச்சி.
  தொகுப்பு அருமை. நன்றி//
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மேடம்

  ReplyDelete
 33. //சென்னை பித்தன் said...
  கோள் பற்றியும்.,விண்கலம் பற்றியும் விளக்கமான தகவல் பகிர்வு!நன்றி முரளிதரன்//
  நன்றி அய்யா!

  ReplyDelete
 34. விஜயன் said...
  செவ்வாய் பற்றிய தகவல்களின் தொகுப்பு அருமை...//
  நன்றி விஜயன் சார்!

  ReplyDelete
 35. //வே.நடனசபாபதி said...
  தகவல்களுக்கு நன்றி!//
  வருகைக்கு நன்றி சார்!

  ReplyDelete
 36. //நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  செவ்வாய் தொட்டுவிட்ட தூரம்.
  தகவலுக்கு நன்றி.//
  நன்றி சார்!

  ReplyDelete
 37. //ezhil said...
  எப்போ அங்கே ப்ளாட் போடறாங்க?
  தகவல்கள் அருமை//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எழில்

  ReplyDelete
 38. s suresh said...
  அருமையான தகவல்கள்! நன்றி!
  இன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை! தொடர்//
  வருகைக்கு நன்றி சார்!

  ReplyDelete
 39. HOTLINKSIN தமிழ் திரட்டி said...
  செவ்வாயை அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு எழுத்திட்டீங்க போங்க...
  செவ்வாய் ரியல் எஸ்டேட்காரங்க கையில அடுத்து சிக்கிக்குமோ...//
  வாங்கறதுக்கு எவனாவது கிடைச்சா நம்மாளுங்க விக்கறதுக்கு தயார்.

  ReplyDelete
 40. kavithai (kovaikkavi) said...
  பதிவிற்கு மிக மிக நன்றி நான் வேறு எங்கும் பார்க்கவில்லை. நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.//
  நன்றி மேடம்!

  ReplyDelete
 41. //MANO நாஞ்சில் மனோ said...
  அறியாத விஷயங்கள் நிறைய தெரிந்துகொண்டேன் நண்பா...!//
  வருகைக்கு நன்றி பாஸ்

  ReplyDelete
 42. //ஹேமா said...
  செவ்வாய்க்கிழமை செவ்வாய்க்கிரகம் பற்றின பதிவை புதன்கிழமைதான் படிச்சேன்.புதிய தகவல்கள் முரளி.நன்றி !//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹேமா

  ReplyDelete
 43. நல்ல தகவல்கள் முரளி. என் வலைப்பக்கத்தில் உங்களின் பின்னூட்டம் கண்டு வந்தேன். நன்றிகள்.

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895