என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Monday, September 3, 2012

விகடனில் எனது வலைப்பூ!

  
    
     இன்று காலை விகடன் வலை தளத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். கவர்ந்த தலைப்புகளை எல்லாம் படித்து விட்டு என் விகடனில் நுழைந்தபோது எதிர் பாராவிதமாக எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.ஆம் நீங்கள் நினைப்பது சரிதான். வலையோசையில் என் வலைப்பூ பற்றி எழுதி இருந்தார்கள். எனது மூன்று பதிவுகள் பற்றி குறிப்பிடப் பட்டிருந்தது, 
அந்த  மூன்று பதிவுகள் 
 1. காமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன் 
 2.  காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன?
 3.  என் மனைவிக்கு எதுவும் தெரியாது.

ஆனந்த விகடனில் படைப்புகள் இடம் பெற வேண்டுமென்பது பலரைப்  போல எனக்கும் கனவாக இருந்தது. அந்தக் கனவுபதிவுலகம் மூலமாக நிறைவேறும் என்று நான் நினைக்கவில்லை.என் விகடனில் பார்க்க

   ஆனால் ஒரு துரதிர்ஷ்டம் . வலையில் பார்த்துவிட்டு ஆனந்த விகடன் வாங்க கடைக்குச் சென்றேன். விகடன் வாங்கி விட்டு அதன் இணைப்பான என்விகடன் இருக்கிறதா என்று தேடினேன். கடைக்காரர் சொன்னார் இப்போது என் விகடன் இணைப்பாக தருவதில்லை இணையத்தில் மட்டும் வந்து கொண்டிருக்கிறதாம்.அதைக் கேட்டதும் எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. புத்தக வடிவில் இருந்தால் இன்னும் நிறையப் பேர் என் வலைப்பக்கம் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக இருந்திருக்கும். இருப்பினும் எப்படியோ இணைய விகடனிலாவது வெளியானதே என்று மகிச்சி அடைகிறேன்


மேலுள்ள  பதிவை வாசிக்க
காமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன் 
                ******************************
 இப்பதிவை வாசிக்க 
காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன? 
                                ***************

 இப்பதிவை வாசிக்க
என் மனைவிக்கு எதுவும் தெரியாது.
   என் படைப்புகள் இதற்கு முன்னர்  விகடனில் இடம் பெற்றதில்லை என்றாலும் ஆனந்த விகடன் நடத்திய ஒரு  போட்டியில் பரிசு பெற்றிருக்கிறேன். விகடனின் பவழ விழா கொண்டாட்டத்தின் போது வாசகர்களுக்கு பலேறு போட்டிகள் வைக்கப்பட்டது.  அதில் ஒன்று  ஒரு முழு படத்தின் ஒரு சில படத்துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக   ஒவ்வொரு வாரமும்   வெளியிடும். அவற்றை இணைத்து முழு படமாக ஆக்கவேண்டும். அதில் முக்கிய விஷயம் என்னவென்றால் கூடுதலாக சில படத்துண்டுகளும் இருக்கும் முழுப்படத்தை சரியான துண்டுகளை கொண்டு ஒட்டி இணைத்துவிட்டு
   தவறான மீதியுள்ள துண்டுகளையும் கண்டறிந்து தனியாக ஒட்டி அனுப்ப வேண்டும். படங்கள் எப்படி ஓட்டினாலும் சரியாக இருப்பது போலவே தோன்றும். இந்தப் போட்டியில் சரியாக ஒட்டி அனுப்பியவர்களில் நானும் ஒருவன். அந்தப் போட்டியின் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது. விகடனில் என் பெயரும் பரிசுத் தொகையும் வந்தபோது மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அந்த மகிழ்ச்சி இப்போதும் ஏற்படுகிறது.

ஆனந்த விகடனுக்கு என் மனமார்ந்த நன்றி! நன்றி.!

    (சென்னை தொலைக்காட்சியில் ஒரு முறை கவிதைக்காக பரிசு பெற்றேன் அதன் பின் நடந்த  சுவாரசியமான அந்த நிகழ்வை இன்னொரு பதிவில் தெரிவிக்கிறேன்).
                   *****************************************************
இதைப் படித்தீர்களா!

மன்னன் என்ன சொன்னான்? 
பாலகுமாரன் கவிதை
மேகம் எனக்கொரு கவிதை தரும்..


57 comments:

 1. என் பதிவே விகடனில் வந்தது போல்
  மிக்க மகிழ்ச்சி கொண்டேன்
  இன்னும் பல சிகரங்கள் தொட
  இன்னும் பல எல்லைகள் கடக்க
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. மிக்க மகிழ்ச்சி அய்யா! தங்களைப் போன்ற விஷய ஞானம் உள்ளவர்களின் ஆசிகளும் ஆலோசனைகளுமே எங்களை மேம்படுத்திக்கொள்ள உதவிக் கொண்டிருக்கிறது.
  நன்றி நன்றி.

  ReplyDelete
 3. //பழனி.கந்தசாமி said...
  பாராட்டுகள்//
  நான் பெரு மதிப்பு வைத்திருக்கும் மூத்த பதிவர்களில் தாங்களும் ஒருவர் தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்....இன்னும் மென் மேலும் வளர...

  ReplyDelete
 5. //கோவை நேரம் said...
  வாழ்த்துக்கள்....இன்னும் மென் மேலும் வளர...//

  நன்றி

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் அசத்துங்க

  ReplyDelete
 7. நீங்க தூள் கிளப்புங்க சார்...

  எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்... நன்றி...

  ReplyDelete
 8. வாழ்த்துகள் முரளி. தொடர்ந்து அசத்துங்க.

  த.ம. 4

  ReplyDelete


 9. வாழ்த்துக்கள் முரளி! தங்களைப் போன்ற இளைஞர்கள் வளரவேண்டும் என்பதே என் ஆசை!

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தோழரே

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் தல, தொடர்ந்து தங்கு தடையின்றி பயணியுங்கள்!

  இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் மீண்டும் ஒருமுறை!

  ReplyDelete
 12. மகிழ்ச்சி வாழ்த்துகள்..

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் முரளிதரன் அவர்களே

  ReplyDelete
 14. மனம் நிறைந்த வாழ்த்துகள் முரளி!

  ReplyDelete
 15. இனிய வாழ்த்துக்கள் ..பாராட்டுக்கள் .......

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் : வாழ்த்துக்கள் : வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் முரளிதரன்

  ReplyDelete
 19. வாழ்த்துகள்! மென்மேலும் வெற்றி வந்து சேரட்டும்!

  ReplyDelete
 20. இதைப் பார்த்தே அன்றே உங்களுக்கு தவகல் தர நினைத்தேன், ஆனால் அங்கே நீங்கள் மறு ஓமொழி எழுதி இருந்தீர்கள்.. அறிந்த்கொண்டீர்கள் என்பதை அறிந்து கொண்டேன்... வாழ்த்துக்கள் சார் விகடன் புகழ் முரளி சார் :-)

  ReplyDelete
 21. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சார்.....

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள் பாஸ்... :)

  ReplyDelete
 23. //மோகன் குமார் said...
  வாழ்த்துக்கள் அசத்துங்க//
  நன்றி நன்றி.

  ReplyDelete
 24. திண்டுக்கல் தனபாலன் said...
  நீங்க தூள் கிளப்புங்க சார்...
  எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்... நன்றி..//நன்றி உங்களைப் போன்றவர்களின் ஆதரவே காரணம்.

  ReplyDelete
 25. //வெங்கட் நாகராஜ் said...
  வாழ்த்துகள் முரளி. தொடர்ந்து அசத்துங்க.//
  நன்றி!நன்றி!

  ReplyDelete
 26. புலவர் சா இராமாநுசம் said...
  வாழ்த்துக்கள் முரளி! தங்களைப் போன்ற இளைஞர்கள் வளரவேண்டும் என்பதே என் ஆசை!//
  நன்றி அய்யா!தங்கள் அறிமுகம் கிடைத்தது பெரும் பாக்கியம்.

  ReplyDelete
 27. //செய்தாலி said...
  வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தோழரே//
  உங்கள் வாழ்த்துக்களை என்றென்றும் நினைவில் இருக்கும்

  ReplyDelete
 28. //வரலாற்று சுவடுகள் said...
  வாழ்த்துக்கள் தல, தொடர்ந்து தங்கு தடையின்றி பயணியுங்கள்!
  இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் மீண்டும் ஒருமுறை!//
  வரலாற்று சுவடுகள் வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்க கடமைப் பட்டிருக்கிறேன்.

  ReplyDelete
 29. //மதுமதி said...
  மகிழ்ச்சி வாழ்த்துகள்..//
  உங்கள் பற்பல பணிகளுக்கிடையில் வாழ்த்துக்கூறியதற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 30. kuttan said...
  வாழ்த்துக்கள் முரளிதரன் அவர்களே//

  நன்றி குட்டன் சார் முதல் முறை வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
  வாழ்த்துக்கு மிக நன்றி.

  ReplyDelete
 31. //அமுதா கிருஷ்ணா said...
  வாழ்த்துக்கள் சார்.//
  முதல் வருகை+வாழ்த்துக்கு நன்றி!

  ReplyDelete
 32. //வெங்கட ஸ்ரீநிவாசன் said...
  மனம் நிறைந்த வாழ்த்துகள் முரளி!/
  வாழ்த்துக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 33. /இராஜராஜேஸ்வரி said...
  இனிய வாழ்த்துக்கள் ..பாராட்டுக்கள்//
  தெய்வத் திருமகளின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 34. //Jaleela Kamal said...
  வாழ்த்துக்கள் : வாழ்த்துக்கள் : வாழ்த்துக்கள்//

  தங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜலீலா கமால்

  ReplyDelete
 35. //வை.கோபாலகிருஷ்ணன் said...
  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.//
  தாங்கள் இரண்டு முறை விருது வழங்கி இருக்கிறீர்கள்.
  தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  ReplyDelete
 36. //ezhil said...
  வாழ்த்துக்கள் முரளிதரன்//
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி!

  ReplyDelete
 37. //சேட்டைக்காரன் said...
  வாழ்த்துகள்! மென்மேலும் வெற்றி வந்து சேரட்டும்!
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார். உங்களை பதிவர் சந்திப்பில் பார்த்து மகிழ்ந்தேன்.தங்கள் குறும்புப் பேச்சை ரசித்தேன்.

  ReplyDelete
 38. //சீனு said...
  இதைப் பார்த்தே அன்றே உங்களுக்கு தவகல் தர நினைத்தேன், ஆனால் அங்கே நீங்கள் மறு ஓமொழி எழுதி இருந்தீர்கள்.. அறிந்த்கொண்டீர்கள் என்பதை அறிந்து கொண்டேன்... வாழ்த்துக்கள் சார் விகடன் புகழ் முரளி சார் :-)//
  மிக்க நன்றி சீனு

  ReplyDelete
 39. //சிட்டுக்குருவி said...
  மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சார்.//....
  மிக்க நன்றி சிட்டுக் குருவி.

  ReplyDelete
 40. //ராஜ் said...
  வாழ்த்துக்கள் பாஸ்... :)//
  நன்றி நன்றி ராஜ்

  ReplyDelete
 41. வாழ்த்துக்கள்.

  தங்களின் பல்சுவை படைப்புகளுக்கான ஒ(வ்வொ)ருசோறு பதமாக இருந்தன மேலுள்ள 3 பதிவுகளும்.

  ReplyDelete
 42. அன்டஹ் சிவகாமி மகனிடம்,,,,,,,,,,பாட்டு எப்பொழுது வேண்டுமானாலும் கேட்டுமகிழலாம்.கண்ணதாசன் அவர்கள் அவரது சொற்கட்டுகளாலே வாழ்ந்தார் எனக்கூறலாம்.

  ReplyDelete
 43. பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு...?

  வாழ்த்துக்கள் முரளிதரன் ஐயா.

  ReplyDelete
 44. விமலன் said...
  அந்த சிவகாமி மகனிடம்,,,,,,,,,,பாட்டு எப்பொழுது வேண்டுமானாலும் கேட்டுமகிழலாம்.கண்ணதாசன் அவர்கள் அவரது சொற்கட்டுகளாலே வாழ்ந்தார் எனக்கூறலாம்.//
  நன்றி விமலன் சார்!

  ReplyDelete
 45. AROUNA SELVAME said...
  பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு...?
  வாழ்த்துக்கள் முரளிதரன் ஐயா.//
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. அருணா செல்வம்

  ReplyDelete

 46. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்... நன்றி...

  ReplyDelete
 47. வாழ்த்துக்கள்.
  இணைப்பு தருவதை மிகச் சமீபத்தில் தான் நிறுத்தியிருக்கவேண்டும். துரதிர்ஷ்டம்.
  கண்ணதாசன் பற்றி இப்பத்தான் படிக்கிறேன், கல்யாணம் பற்றிப் படித்த நினைவிருக்கிறது.

  ReplyDelete
 48. //Avargal Unmaigal said...
  எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்... நன்றி...//
  நன்றி மதுரைத் தமிழன்.

  ReplyDelete
 49. //அப்பாதுரை said...
  வாழ்த்துக்கள்.
  இணைப்பு தருவதை மிகச் சமீபத்தில் தான் நிறுத்தியிருக்கவேண்டும். துரதிர்ஷ்டம்.
  கண்ணதாசன் பற்றி இப்பத்தான் படிக்கிறேன், கல்யாணம் பற்றிப் படித்த நினைவிருக்கிறது.//

  நன்றி சார்!

  ReplyDelete
 50. நானும் குதிரைக்கவிதை ரசித்துப் படீத்தேன் மிக்க நன்றி சகோதரா.vikatan Nalvaalthu.
  வேதா. இலங்காதிலகம்
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 51. kavithai (kovaikkavi) said...
  நானும் குதிரைக்கவிதை ரசித்துப் படீத்தேன் மிக்க நன்றி சகோதரா.vikatan Nalvaalthu.
  வேதா. இலங்காதிலகம்//
  நன்றி நன்றி

  ReplyDelete
 52. முரளி...மனம் நிறைந்த வாழ்த்துகள்.கண்ணதாசன் பற்றிய செய்தி சிலிர்க்கிறது.அருமையான பாடலும் கூட !

  ReplyDelete

 53. என் விகடனில் உங்கள் பதிவு பற்றி வந்ததற்கு பாராட்டுக்கள். இப்போது அவற்றைப் படித்தேன். கண்ணதாசன் பற்றிய செய்தி கேள்விப்பட்டது. மற்ற இரு கதைகளும் பிரமாதம். கல்வியில் நம் மக்கள் பலரும் பின் தங்கி இருப்பது குறித்து நான் பல பதிவுகள் காரணங்களுடன் ஆராய்ந்து எழுதி இருக்கிறேன். கலாச்சார காரணங்களால் பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு கல்வி அவசியம். அதிலும் பேதமற்ற கல்வி அவசியம். அதற்கு ஒரே தீர்வு, எல்லோருக்கும் இலவசக் கல்வி, எல்லோருக்கும் இலவச உணவு, எல்லோருக்கும் சம கல்வி. இதை அடைய சமூக மாற்றம் வேண்டும் கல்வி கட்டாஉஅமாக அரசின் கட்டுக்குள்தான் இருக்க வேண்டும் படித்துப் பாருங்களேன். ஆர்வமிருந்தால் சுட்டிகள் தருகிறேன். .

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895