என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Wednesday, November 14, 2012

குழந்தைகள் தினம்,குட்டீஸ்-சுட்டீஸ்,சன் தொலைக்காட்சி

           குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்
இன்று குழந்தைகள் தினம்.நாம் வாழ்த்துக்களை அனைத்துக் குழந்தைகளுக்கும் தெரிவித்துக் கொள்வோம். குழந்தைகள் தினம் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.நமது முன்னாள் பாரதப் பிரதமர் இந்தியாவின் சிற்பி என்றழைக்கப்படும் ஜவஹர்லால் நேரு அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரது பிறந்த நாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப் படுகிறது என்பது நாம் நாம் அனைவரும் அறிந்தததே!
நம்  நாட்டில் நவம்பர் 14 அன்று கொண்டாடப் பட்டாலும் இங்கிலாந்து நியூசிலாந்து கனடா போன்ற பல நாடுகளில் குழந்தைகள் தினம் நவம்பர் 20 அன்று கொண்டாடப் படுகிறது.காரணம் 1959 ம் ஆண்டு நவம்பர் 20 ஐ.நா சபை கூட்டத்தில்தான் குழந்தைகள் உரிமைகள் பற்றி பிரகடனம் செய்யப் பட்டது. ஆனால் அமெரிக்காவில் குழந்தைகள் தினம் ஜுன் முதல் ஞாயிறு அன்றுதான் கொடாடப் படுகிறது.
   UNICEF (United Nations International Children's Emergency Fund) நிறுவனம் உலக குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க  பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. இந்த திட்டங்களை நிறைவேற்றஅந்தந்த நாடுகளுக்கு  நிதி உதவி செய்து வருகிறது.
இன்று  தமிழகத்தில்  பள்ளிகளில் மட்டும்  குழந்தைகள் தினம் கொண்டாடப் படுகிறது. ஆனால் இன்று குழந்தைகளுக்கு விடுமுறை  தினம் அல்ல
 முந்தைய காலக்கட்டத்தை விட குழந்தைகள் பற்றிய புரிந்துணர்வு சற்று அதிகரித்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். தெரிந்தோ தெரியாமலோ நமது விருப்பு வெறுப்புகள் அபிலாஷைகளை குழந்தைகளிடம் திணிக்க முற்படுகிறோம். குழந்தைகளை புரிந்து கொள்ள முயல்வோம்.

கவிக்கோ அப்துல்  ரகுமானின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது.
                            
                             வளைக்கிறோம்
                             என்று நினைத்து 
                             உடைத்துவிடாதீர்கள்
                             குழந்தைகளை
************************************************************************************
   சன் தொலைக் காட்சியில் சமீபத்தில் குட்டீஸ் சுட்டீஸ் என்ற நிகழ்ச்சி குழந்தைகளுக்காக தொடங்கப் பட்டுள்ளது. ஞாயிறுக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஒளிபரபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை சொல்லுங்கண்ணே சொல்லுங்க புகழ் இமான் அண்ணாச்சி  சுவையாக தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையுடன் வழங்குகிறார்.
   குழந்தைகளிடம் இமான் கேள்விகள் கேட்க  மழலை மொழியில் அழகான உடல் அசைவுகளோடு  அவர்கள் அளிக்கும் பதில்கள் நம்மை கொள்ளை கொள்கின்றன. இமானின் டைமிங் கம்மென்ட்ஸ் குபீர் சிரிப்பை வரவழைக்கின்றன.
    ஒரு  சில பதில்களில் அண்ணாச்சியையே  திணற அடிக்கிறது குழந்தைகளின் பதில்கள். நான் எப்படி இருக்கிறேன் என்று இமான் கேட்ட கேள்விக்கு ரஜினிகாந்த் மாதிரி இருக்கிறீர்கள் என்று சொன்னது ஒரு குழந்தை. இன்னொரு குழந்தையிடம் அதே கேள்வியைக் கேட்டபோது பஞ்சு மிட்டாய் விக்கிறவர் மாதிரி இருக்கீங்க என்று அதிரடி பதில் கிடைத்தது.
’குழல் இனிது; யாழ் இனிது’ என்ப-தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.

என்ற குறளை மெய்ப்பித்துக் காட்டுகிறது இந்தப் பிஞ்சுகளின் மழலை மொழிகள் சீரியல்களைவிட இந்த நிகழ்ச்சி மனதுக்கு மகழ்ச்சி அளிக்கும்.
 நிகழ்ச்சி பார்க்காதவர்கள்  இந்த வீடியோக்களை கண்டு மகிழலாம். 


*************************************************************************************************************
கொசுறு:இதே நிகழ்ச்சி தெலுங்கு ஜெமினி டிவியில் பில்லலு பிலகலு என்ற பெயரில்  ஒளி பரப்பாகிறது.நிகழ்ச்சி வழங்குபவர் பாடகர் மனோ!

27 comments:

 1. குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜேஸ்வரி

   Delete
 2. குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...

  வளைக்கிறோம்
  என்று நினைத்து
  உடைத்துவிடாதீர்கள்
  குழந்தைகளை...

  It is a Gem...


  ReplyDelete
 3. வீடியோ காட்சிகள் சூப்பர்.
  நான் ரசித்துப் பார்த்தேன்.
  குழந்தைகளின் மழலைப் பேச்சைக் கெட்டுக்கொண்டே இருக்கலாம்.
  அருமையான பகிர்வு முரளிதரன் ஐயா. நன்றி.

  ReplyDelete
 4. யாழினும் இனியது
  மழலை....
  இனிய குழந்தைகள் தின
  நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி மகேந்திரன்

   Delete
 5. குழந்தைகள் தினத்தை நினைவூட்டி, அவர்களை வாழ்த்திய உங்களை நான் வாழ்த்துகிறேன்.

  குழந்தைகளையும் வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 6. ’குழல் இனிது; யாழ் இனிது’ என்ப-தம் மக்கள்
  மழலைச் சொல் கேளாதவர்.
  - உண்மையான வரிகள். குட்டீஸ்-சுட்டீஸ் தொலைக் காட்சியில் பார்த்தேன். நகர முடியாமல் கட்டி போட்டு விட்டார்கள்.

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி

   Delete
 7. நல்ல பகிர்வு! நானும் ஒரு முறை நிகழ்ச்சியை பார்த்திருக்கிறேன்! நல்ல நிகழ்ச்சிதான்! நன்றி!

  ReplyDelete
 8. கவிதை அழகு. நானும் நிகழ்ச்சியை பார்த்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசிகலா

   Delete
 9. அருமை...

  இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி DD சார்!

   Delete
 10. இந்த நிகழ்ச்சி விளம்பரப்படுத்தும்போது பார்க்கனும்ன்னு நினைச்சுப்பேன். ஆனா, ஞாயிறன்று மறந்து போவேன். இந்த வாரமாவது பார்க்கனும்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 11. Replies
  1. நன்றி மாற்றுப் பார்வை

   Delete
 12. பதிவர் மோகன்ஜி இல்லத்தில் தெலுங்கு ஒளிபரப்பைப் பார்த்தேன் என்று நினைக்கிறேன். பிள்ளைகளின் திறமையில் அசந்து போனேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 13. மிக மிக ரசனையோடு ரசித்தேன்.கள்ளமில்லா வார்த்தைகளை அள்ளிவிடுகிறார்கள்.அழகுக் குட்டிகள் !

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895