என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Monday, December 10, 2012

மனிதன் எந்த வகை?  மனிதர்கள் முதலைகுணம்  கொண்டவர்களா? சிலர் அதன் குணம் கொண்டவர்கள் என்கிறார் பாலகுமாரன் தனது கரையோர முதலைகளில்.
      சீ! சீ! இந்தப் பழம் புளிக்கும் என்று எண்ணும் நரி குணம் உடையவர்கள் சிலர். ஓடி ஓடி களைத்து மானைப் பிடிக்க முடியாத புலி போல் சிலபேர்.கிடைத்தவரை தின்னும் ஆடு போல் சில பேர்.இப்படிப் பலவகைகளில் மனிதர்கள். ஆனால் முதலைகள் வித்தியாசமானவை

இதோ கரையோர முதலைகளில் ராமநாதன் என்ற பாத்திரத்தின் வாயிலாக பாலகுமாரன் படைத்த முதலைக் கவிதை

                      முதலைக்  கவிதை-பகுதி 3

                     புலிகளைப் போல முதலை 
                     மான்களை துரத்திப் போகா!
                     காக்கைகளைப் போலஎச்சில் 
                     இலைகளை நோட்டம் போடா;
                     எலிகளோ, ஈசல் கொல்லும்
                     பல்லியோ அல்ல முதலை;
                     கழுத்துவரை நீரில் அமர்ந்து 

                     கரையோரம் பார்த்திருக்கும்;
                     வேட்டைக்கு எறும்பு போகும்
                     புல்வெளியில் ஆடு மேயும் 
                     உலகத்து உயிர்கள் எல்லாம்
                     உணவுக்கு பேயாய் பறக்க 
                     வீட்டினில் இரையைத் தேடி 
                     ஏங்குவது முதலை மட்டும்;
                     ஒரு இலை விழுந்தால் கூட
                     முதலையின் முதுகு சிலிர்க்கும்;
                     ஒரு சுள்ளி முறிந்தால் போதும்
                     முதலையின் முகவாய் நிமிரும்;
                     ஒரு முறை சிக்கினாலும் 
                     உயிர் கொல்லும் போராட்டம்;
                     சக்கரம் அறுத்த போதும் 
                     முதலைகள் பிடியைத் தளர்த்தா;
                     ஒரு அதிசயக்  குழந்தை கேட்க 
                     முதன் முதலாய் முதலை விட்டது
                     பின் மனிதரை வளர்த்ததெல்லாம்
                     நீர் முதலை வழங்கிய வேதம்!

**************************************************************************************************************
இதைப் படித்தீர்களா?
மனிதரைத் தவிர மற்ற பிறப்புகள் சுத்தம்-பாலகுமாரன்.  
பாலகுமாரனின் முதலைக் கவிதைகள்-பகுதி 2   பாலகுமாரனின் கவிதைகள்!l
பாலகுமாரனின் இரும்பு குதிரைகள்-நிறைவுக் கவிதை

*************************************************************************************

33 comments:

 1. நல்ல நல்ல பகுதிகள் படிக்கிறேன் கருத்தை சொல்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி கண்ணதாசன் சார்!

   Delete
 2. நல்ல கருத்துக்கள் நிறைந்த அய்யா பாலகுமாரரின் படைப்பு ...அதை தொகுத்து தரும் உமது சேவை மகத்தானது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி முத்துராசன் ஐயா!

   Delete
 3. அழகிய பொருள் பொதிந்த கவிதை வரிகள்.

  ReplyDelete
 4. நல்ல கவிதை. கவிதைக்கே முத்தாய்ப்பான கடைசி வரியை இரசித்தேன்! பதிவிட்டமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நடன சபாபதி சார்!

   Delete
 5. அருமை கவிதை வடிவில் கருத்தை சொல்லும் திறமையை வணங்குகிறேன்,,,

  உலகத்து உயிர்கள் எல்லாம்
  உணவுக்கு பேயாய் பறக்க

  இந்த வரிகளில்தான் எத்தினை உண்மைகள்....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆகாஷ்

   Delete
 6. நல்ல கவிதைகளை, கருத்துக்களை தேடி தந்து விடுகிறீர்கள். நீங்கள் ஒரு அருமையான விமர்சகர், ரசனையாளர். பதிவு பக்கம் வந்தால் முதலில் தேடுவது உங்கள் பதிவைத்தான்..! மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உஷா அன்பரசு.

   Delete
 7. அழகான அர்த்தமுள்ள கவிதை ஐயா

  ReplyDelete
 8. நல்ல கவிதைநன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாலதி

   Delete
 9. எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் ரசிகர் நீங்கள் என்பது யாவரும் அறிந்த ஒன்று. அவரது கருத்தாழமிக்க கவிதையினை பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ் இளங்கோ ஐயா!

   Delete
 10. நல்லதொரு பகிர்வு! தொடரட்டும் உங்கள் பணி! தொடர்கிறேன்!

  ReplyDelete
 11. படிக்க வாய்ப்பு வழங்கிய உங்களுக்கு என் நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 12. நல்ல கவிதை... மீண்டும் படிக்கத் தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெங்கட் சார்!

   Delete
 13. பாலாவின் கவிதைப் பகிர்வு நன்று

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சொக்கன் சார்!

   Delete
 14. பாலகுமரன் கவிதை அருமை.

  நல்ல நல்ல கவிதைகளைத் தேடி கொடுக்கிறீர்கள்.
  மிக்க நன்றி முரளிதரன் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அருணா செல்வம்

   Delete
 15. பாடல் என்ன சொல்கிறது? முதலை நீரில் கிடந்து இரை தேடும் அவ்வளவுதானே?

  இறுதியில் அச்சிறுவனை விட்டுவிட்டது பின்னர் மனிதர்கள் வேதங்களை எழுத முதலைதான் காரணமென்கிறார்.

  புரியவில்லை. அந்த அதிசயக்குழந்தை யார்? ஏதேனும் புராணக்கதையோ?

  பாடலின் ஒருமை பன்மைகளை தாறுமாறாகப்போட்டு எழுதுகிறார். முதலில் முதலை என்று ஒருமையில் போட்டு பன்மை விகுதியில் முடிக்கிறார். இடையே முதலைகள் என்கிறார். பின்னூட்ட‌ம் போட்ட‌ த‌மிழாசான்க‌ளுக்கு இஃதெல்லாம் ஒரு பொருட்டில்லை போலும்.

  ச‌க்க‌ர‌ம் அறுத்த‌ போதும் முத‌லைக‌ள் பிடியைத் த‌ள‌ர்த்தா. என்ன‌ ச‌க்க‌ர‌ம்? எவ‌ரிட‌மிருந்து?

  பாட‌லில் அடிக்க‌ருத்தென்ன‌? விஞ்ஞான‌ உண்மையா? இல்லை வேறெதாவுமா? முர‌ளித‌ர‌ன்தான் சொல்ல‌வேண்டும்.


  ReplyDelete
  Replies
  1. அன்புள்ள Anonymous சார்!
   உங்களுக்கு கவிதை பிடிக்கவில்லை என்று தெரிகிறது. அது உங்கள் தனிப்பட்ட ரசனை. நான் என்னதான் விளக்கம் கூறினாலும் தங்கள் கருத்து மாறிவிடும் என்று எனக்குத் தோன்றவில்லை. விவாதங்களால் ஒரு நன்மையும் விளையப் போவதில்லை.ஒரு ஒரு கவிதை எல்லோருக்கும் பிடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எப்படி இருப்பினும் உங்கள் கருத்தை மதிக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 16. பாலக்குமரன் அவர்களின் முதலைக் கவிதை பகிர்வுக்கு நன்றி .

  ReplyDelete
 17. கவிதையை ரசித்தேன்.நன்றி முரளி !

  ReplyDelete
 18. 20 வருடத்திற்கு முன்பு படித்த இந்த கவிதை அந்த சூழ்நிலையை இப்போது நினைத்துப் பார்க்கின்றேன். நன்றி.

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895