என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Wednesday, December 12, 2012

அப்படி என்னதான் இருக்கிறது ரஜினியிடம்?

   
   இன்று ரஜினியின் பிறந்த நாள்.ரஜினி ரசிகர்களுக்கோ இந்நாள் ஒரு திருவிழா.காலையில் இருந்தே சேனல்கள் ஆரம்பித்து விட்டன ரஜினியின் புகழ் பாட. எந்த சேனலை திருப்பினாலும் ரஜினி ரஜினி ரஜினி. பத்திரிக்கைகள் ஒரு வாரத்திற்கு முன்பே அவரைப் பற்றிய செய்திகளை வெளியிட்டு விற்பனையைப் பெருக்கிக் கொண்டன.

  அப்படி என்னதான் இருக்கிறது அவரிடம்? அந்தக் காலத்தில் கதாநாயகனுக்கு தேவைப்பட்ட சிவந்த நிறமோ அற்புதமான உடல் வாகோ அபரிதமான நடிப்பாற்றலோ இல்லாமல் சினிமாவில் நுழைந்து தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னனாகத் திகழ்வதற்கு காரணம் என்ன? பல்லாயிரக் கணக்கான ரசிகர்களை இன்றுவரை இவரால் மட்டும் எப்படி தக்கவைத்துக் கொள்ள முடிந்தது?
   இதற்கு பத்திரிகைகள் பலபல காரணங்களை ஆராய்ச்சி செய்து அடுக்கிக் கொண்டிருகின்றன.

   பல 'முதல் முதலாக' சினிமா இலக்கணங்களை தகர்த்தவர்.கருப்பாய் இருப்பவர்களுக்கும் காதாநாயகக் கனவு நிறைவேறும் என்று நிரூபித்தவர். 

   கதாநாயகன் அதீதமான தற்புகழ்ச்சிப்  பாடல்களை தொடங்கி வைத்தவர்   பொதுவாக என் மனசு தங்கம் என்ற பாடல் மூலம். கமல்ஹாசன் கூட இதிலிருந்து தப்ப முடியவில்லை, "நான் வெற்றிபெற்றவன் இமயம் தொட்டுவிட்டவன்"என்று தொடர்ந்தார். விஜய் அஜித் சிம்பு போன்றவர்களும் அந்தப் பாணியைத் தொடர்ந்தனர்.

   பழைய படங்களில்  வில்லன்கள் முகத்தை குரூரமாக வைத்துக் கொண்டு கதாநாயகனுடன் ஆக்ரோஷமாகச் சண்டை இடுவார்கள்.கதாநாயகனோ பயங்கரமாகச் சண்டை போடும்போது கூட அவர் முகம் சிறிது கூட மாறாது. இதையும் தன் பழி வாங்கும் கதைப் படங்களில் மாற்றினார் ரஜினி.     

   இவை  எல்லாவற்றுக்கும் மேலாக அவர் என்னதான் ஆன்மீகத்தின் மீது ஈடுபாடு கொண்டு அமைதியாக தோற்றமளிக்க முயன்றாலும் இயல்பாய் அமைந்துள்ள ஸ்டைல் என்ற ஒன்றுதான்  அவருடைய  ஈர்ப்பு சக்திக்கு காரணம் என்று பலரும் கருதுகிறார்கள்.
    இயல்பாகவே சற்று குழப்ப மனநிலை கொண்டவராக இருந்தபோதிலும் ரசிகர்கள் அதை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை.
   தன் மனதில் நினைத்ததை பட்டென்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கவும் தயங்கியதில்லை. ஜெயலலிதா கருணாநிதி இருவருக்குமே இதை செய்திருக்கிறார் ரஜினி.

    அவர் தமிழக மக்களுக்காக பல்வேறு விஷயங்களில் குரல் கொடுக்கவில்லை என்ற வருத்தமும் கோபமும் பலருக்கு உண்டு. ஆனால் ஒரே ஒரு நன்மை செய்திருக்கிறார். நிர்பந்தங்களின் காரணமாக அரசியலுக்கு வராததே அது.

   ரஜினி அவ்வப்போது குட்டிக் கதைகள் சொல்வது வழக்கம்.அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சொன்ன குட்டிக் கதை ஒன்று. எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் மீண்டும் இதோ?

       மலையின் உச்சியைத் தொட மூன்று தவளைகள் முயற்சி செய்து கொண்டிருந்தன. அந்த மலையோ அடர்ந்த காடும் பயங்கரமான பாம்புகளும்,விலங்குகளும், விஷப் பூச்சிகளும் நிறைந்தது. மலை மீது ஏறிக் கொண்டிருந்த மூன்று தவளைகளைப் பார்த்து கீழே உள்ள மற்ற தவளைகள் போகாதீர்கள் போனால் பாம்புகள் விழுங்கிவிடும் என்று கூச்சலிட்டன.பயந்துபோன ஒரு தவளை மலை ஏறாமல் திரும்பி விட்டது.தொடர்ந்து ஏறிக் கொண்டிருந்த   தவளைகளை விலங்குகள் கொன்றுவிடும்  என்று மீண்டும் பயமுறுத்த இன்னொரு தவளையும் திரும்பி விட்டது. ஒரே ஒரு தவளை மட்டும் எந்த எச்சரிக்கையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சென்று மலை உச்சியைத் தொட்டுத் திரும்பியது. அது மட்டும் எப்படி பயப்படாமல் பயணம் செய்து வெற்றிபெற்றது? 
     ஏனென்றால் அதற்கு காது கேட்காது.

   ரஜினியும் யாருடைய விமர்சனங்களையும் கிண்டல்களையும் பொருட்படுத்தாமல் தன் வழியில் பயணம் செய்தது அவர் வெற்றிக்குக் காரணமோ?

****************************************************************************************
ரஜினியின் பிறந்த நாளுக்கு முந்தைய நாளான பாரதியின் பிறந்த நாளை யாரும் கண்டு கொள்வதில்லை என்ற குறை உண்டு. கடந்த ஆண்டு பாரதி பிறந்தநாளில் கவிதை ஒன்றை பதிவிட்டிருந்தேன்.அதைப் பார்த்தவர் எண்ணிக்கை குறைவு. படித்தவர் எண்ணிக்கை அதை விடக் குறைவாக இருந்திருக்கக் கூடும்.
இதோ அந்தப் பதிவு 
http://tnmurali.blogspot.com/2011/12/blog-post_11.html 
மகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்

 

48 comments:

 1. //ரஜினியும் யாருடைய விமர்சனங்களையும் கிண்டல்களையும் பொருட்படுத்தாமல் தன் வழியில் பயணம் செய்தது அவர் வெற்றிக்குக் காரணமோ?//

  Factu factu factu thala

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும கருத்துக்கும் நன்றி ஹாரி

   Delete
 2. ****கதாநாயகன் அதீதமான தற்புகழ்ச்சிப் பாடல்களை தொடங்கி வைத்தவர் பொதுவாக என் மனசு தங்கம் என்ற பாடல் மூலம். ***

  பொல்லாதவன் இதுக்கு கொஞ்சம் முன்னால வந்த படம்னு நெனைக்கிறேன்..

  நான் பொல்லாதவன்
  பொய் சொல்லாதன்
  என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
  கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று ஆதாயம் தேடாதவன்
  ஆகாயம்போல் வாழ்பவன்!

  கண்ணதாசன் வரிகள்தான்..

  80ல எல்லாம் ரஜினி, என் பாட்டு இப்படி வரணும்னு சொல்லும் நிலையில் இல்லை. I dont think he instructed them. It just happened.

  அதேபோல்தான்

  ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை பாடலும்! It came before 1980. Somehow everyone loved those lines as it fits well for any audience! :-)

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வதும் சரிதான் வருண். அவராக வேண்டுமென்று திட்டமிட்டு செய்யவில்லை.நமது கவிஞர்கள் துதிப் பாடல் எழுதி நாயகனைக் கவர்வதில் வல்லவர்கள்.
   நீங்கள் சொன்ன படங்களில் அந்தக் கதாபத்திரத்தின் தன்மையை விளக்குவதாக
   அந்தப் பாடல்கள் இருந்தன.ஆனால் பிற்காலங்களில் வேண்டுமென்றே திணிக்கப்பட்ட பாடல்களாகவே அமைந்துள்ளது.

   Delete
  2. பின்னால வைரமுத்து எழுதிய பல பாடல்களில் சினிமா கதாபாத்திரத்துக்கு சம்மந்தம் இல்லாமல் "ரஜினிகாந்த்" என்கிற ஒரு மனிதனுடைய/நடிகனுடைய கருத்துக்கள்/கொள்கைகள்/ஆசைகள் அந்த கதாபாத்திரங்கள்மூலம் அளிக்கப் பட்டதென்பதென்னவோ உண்மைதான்! அதை நான் மறுக்கவில்லை! :-)

   Delete
  3. ஆம். ரஜினியை திருப்திப் படுத்தவும் அவரது ரசிகர்களைக் கவரவும் வைரமுத்து பயன் பயன்படுத்தும் உத்தி இது.

   Delete
 3. ரஜினி சொல்கிற மாதிரி அவர் வழி தனி வழி அது தான் வெற்றிக்கு காரணம்.

  ReplyDelete
 4. ஆன்மீகம் அவரை வழி நடத்திச் செல்கிறது!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. குட்டன்.

   Delete
 5. அதிஷ்டம்,அடக்கம்,ஆன்மிகம் அப்புறம் நமது தமிழ் நாட்டு மக்களிடம் அடுத்த மக்களின்மேல் உள்ள ஈர்ப்பு இதுவெல்லாம் சேர்ந்து அவரது நடிப்பில் தனி பாணியை கடைபிடித்தார் எளிமையோடும் அடக்கத்தோடும் எல்லோரிடமும் அனப்க பழகினார் அதனால் தானோ இந்த வ

  ReplyDelete
  Replies
  1. ஆம் கண்ணதாசன் சார்!

   Delete
 6. எல்லாவற்றுக்கும் மேலாக ரஜினி ஒரு நல்ல மனிதர்....

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்கூல் பையன்

   Delete
 7. கதையை அண்மைய தினங்களில் பல இடங்களிப் படித்துள்ளேன்...
  ரஜனி ரஜனிதான்

  ReplyDelete
  Replies
  1. எல்லோரும் அறிந்த கதைதான்.அவர் சொல்வதற்கு முன்பே இந்தக் கதையை பலர் அறிந்திருக்கக் கூடும். ரஜினி சொன்னதும் அது இன்னும் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

   Delete
 8. ரஜனி கொண்டாட வேண்டிய மனிதர்தானா என்பதற்கு இரு எதிர் கேள்விகளே பதிலாக இருக்க முடியும்!

  1. ஒரு சினிமா நடிகன். சினிமாவைத்தவிர வேறொன்றுமறியாதவன். அதிலும் கூட அவனை விட சிறந்த நடிகர்கள் இருந்ததுண்டு. அவர்களுக்கெல்லாம் இந்த பில்டப் இல்லை. ஒரு சினிமா நடிகனுக்கு தமிழ்கம் முழுவதும் விழாக்கோலம் பிறந்த நாள் வாழ்த்துச்சொல்ல. அன்னதானம் கோயில்களில் பூஜைகள் இத்யாதி. இவை தேவையா?

  2. சினிமாத்துறை மக்களை எவ்வழியிலும் உயர்த்தவில்லை. அவர்களின் வாழ்க்கையைக்கெடுக்கத்தான் செய்தது. அதே சமயம் பிறதுறைகளில் சாதித்து மக்களின் வாழ்வை வளப்படுத்தியோருக்கு இப்படித் தமிழகமே திரண்டுவந்து பிறந்த நாள் வாழ்த்துச்சொன்னதில்லை. சொலல்வும் மறுக்கிறது என்கிறார் ஒரு பதிவாளர் - பாரதியாருக்கு ஏனில்லை என்று பதிவு போட்டு.

  எதற்கும் எல்லையுண்டு. பொருத்தமும் வேண்டும். நடிகர்களும் இரசிகர்களும் கூடி அவர் வீட்டிற்கு போய் பிறந்த நாள் சொன்னால் அதுவே பொருத்தமும் எல்லையுமாகும்.

  The above was posted in another blog. It will gell well with your post too !

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது சரிதான் குணசேகர்

   Delete
  2. காவ்யா: இன்னொரு 10 தளத்தில் இதே பின்னூட்டத்தை வெட்டி ஒட்டுங்க!

   என்ன சொல்ல வர்ரீங்க? இதெல்லாம் ஒரு நடிகனுக்கு தேவையே இல்லாத மரியாதைனு தானே?

   வெட்டி ஒட்டினதெல்லாம் சரிதான். கடைசில உங்க கருத்தை தெளிவா சொல்லாமல்ப் போனா எப்படி? :)

   As you can see several people disagree with you! You and I cant tell them what they should do. Right? Because it is their freedom to wish whomever they want to! I hope you understand that! Thank you!:-)

   Delete
  3. பாராட்டலாம்.வாழ்த்தலாம் ஆனால் வழிபடவோ கொண்டாடவோ தேவை இல்லை என்பதுதான் என் கருத்தும்.

   Delete
  4. ரஜினி ஒரு நல்ல நடிகர், நல்ல மனிதர் இதில் மாற்று கருத்து இல்லை.... ஆனால் அவரை கடவுள் போல கண்மூடித்தனமாக ரசிகர்கள் கொண்டாடுவதைத்தான் ஏற்க முடியவில்லை...

   Delete
 9. ரஜினி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  நல்ல பகிர்வு.
  ரஜினி சொன்ன கதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி மேடம். சமீப காலமாக வலைப்பக்கம் அதிகம் காண முடியவில்லையே

   Delete
 10. அதிஷ்டம்... அது இஷ்டம் போல் அவரிடம் தங்கி விட்டது.

  பகிர்விற்கு மிக்க நன்றி முரளிதரன் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. கவிஞர் என்று காட்டிவிட்டீர்

   Delete

 11. வணக்கம்!

  என்னினிய நாடும் எழிற்றமிழ் மக்களும்
  என்றினிய கல்வியை ஏற்பாரோ? - அன்றே
  நடிகா்மேல் கெண்ட அடிமையுளம் நீங்கும்!
  முடிவைத் தமிழே மொழி!

  கவிஞா் கி. பாரதிதாசன் - பிரான்சு
  kambane2007@yahoo.fr

  ReplyDelete
  Replies
  1. கவிதை வடிவில் கருத்து நன்றி.

   Delete
 12. நிச்சயமாக நீங்கள் முடிவாகச் சொன்னதே உண்மை
  சிறப்புப் பதிவு மிகச் சிறப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார்

   Delete
 13. சமீப காலமாக வலைப்பக்கம் அதிகம் காண முடியவில்லையே//

  இப்போது வந்து விட்டேன் முரளிதரன்.

  பதிவு ஒன்று போட்டு இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. படித்துவிட்டேன் மேடம்.

   Delete
 14. //ஒரே ஒரு நன்மை செய்திருக்கிறார். நிர்பந்தங்களின் காரணமாக அரசியலுக்கு வராததே அது.//

  நிஜம்தான்.


  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி உஷா

   Delete
 15. நல்ல அலசல்! அருமையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 16. சிலர் ரஜினிக்கு வாழ்த்துச் சொல்லியும், பலர் அவரைத் திட்டியும் கல்லா கட்டிவிட்டனர். நல்ல பதிவு, இறுதியல் அருமையான தவளைக் கதை, நம் வாழ்விலும் பின்பற்றலாம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெயதேவ் தாஸ்

   Delete
 17. சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி ராஜேஸ்வரி மேடம்

   Delete
 18. அருமையான பதிவு... அப்பிடியே எனது தளத்திற்கும் வருகைதந்து பதிவை வாசித்தபின் follow பண்ணுங்கள் நண்பரே.. http://sajirathan.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. நன்றி சஜன்.உங்கள் வலைப பதிவின் fOLLOWER ஆகி விட்டேன்.

   Delete
 19. இங்கும் விஜய் தொலைக்காட்சி பார்க்க முடிந்தது. தமிழ் தொலைக்காட்சியில் ஆங்கில அறிவிப்பு ஆங்கிலப் பேச்சு எப்போதும் சிரிப்போம்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி மேடம்.

   Delete

 20. நாடு கெட்டதிற்கும், கெடுவதற்கும் , கெடப்போவற்கும் சினிமாவும் தொலைக்காட்சிகளுமே காரணம்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

   Delete
 21. என்னவோ எனக்கும் ரஜனியைப் பிடிக்கும்.பழைய படங்கள்தான் பிடிக்கும் இப்போ வரும் படங்கள் சரியில்லை என்று சொல்லிக்கொண்டே பார்க்காமலிருக்கமாட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. அதுதான் ரஜினியின் ப்ளஸ் பாயிண்ட்

   Delete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895