என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Monday, January 21, 2013

பட்டிக்காட்டாரிடம் பதிவர்கள் கோரிக்கை.

  சைதப்பேட்டையில அலுவலக மீட்டிங் ஒண்ணு அட்டென் பண்ணிட்டு  அப்படியே பதிவர்கள் வராங்கன்னு கேள்விப்பட்டு புத்த கண்காட்சிக்கு விசிட் பண்ணேன்.

நூல் வெளியிட்ட பதிவர்களை
”அஞ்சிநடுங்கிட அரண்டு புரண்டிட
வாய் விட்டலறி மதிகெட்டோட”
     வைக்கணும்னு சதி திட்டத்தோட வந்திருந்த மெட்ராஸ் பவன் சிவகுமார் முதல்ல கண்ணுல பட்டார். தூரமா இருந்தாலும்  போன் பண்ணி கலாய்க்கறாங்களேன்னு இந்த முறை கூடவே இருந்தா தப்பிச்சிடலாம்னு  ஆரூர் மூணாவையும் பாதுகாப்புக்கு வச்சுக்கிட்டு பட்டிக்காட்டாரும் பக்கத்திலேயே இருக்க டிஸ்கவரி வாசல்ல நிறைய பதிவர்கள் ஒண்ணு கூடிட்டாங்க. புலவர் ஐயாவும் வந்திருந்தாரு.

   பெண் பதிவர்கள் பத்மா,தமிழரசி,சமீரா,தென்றல் சசிகலா,வெண்ணிலா வந்திருந்தாங்க இதுல  சசிகலாவையும், சமீரவையும் தவிர மற்றவங்களை முதன் முறையா பாக்கறேன். யார் பின்னாடியோ நின்னு தலைய மட்டும் நீட்டி எட்டிப் பாத்துக்கிட்டுருந்தவரை இவருதான்  "அஞ்சா சிங்கம்" ன்று அறிமுகம் செஞ்சார் ஜெய். இப்படி ஒளிஞ்சிக்கிட்டு இருக்கறதைப் பாத்தாலே தெரியுதே  அஞ்சா சிங்கம்னு யாரோ சொல்றது கேட்டது. தம்பி ஃபிலாசபி கருப்பு சட்டை வெள்ளை வேட்டி, நீளமான முடியோட கையைக் கட்டிக்கிட்டு போஸ் கொடுத்துகிட்டிருந்தாரு. 

    ஸ்ட்ரிக்டான ஆபீசர் மாதிரி  ப்ளாக்ல காட்சி அளித்த  கவியாழி கண்ணதாசன் நேர்ல பாத்தா சிரிச்ச முகத்தோட எளிமையா பல நாள் பழகின மாதிரி பேசினார். அவரோட ஆட்டோக்ராப் போட்ட  'அம்மா நீ வருவாயா? அன்பை மீண்டும் தருவாயா?" புத்தகத்தை ஆளுக்கு ஒண்ணு விலையில்லாம (ஓசிக்கு கௌரவமான பேரு) கொடுத்து அதிர்ச்சி(இன்ப அதிர்ச்சிதான்) குடுத்தார். குறிப்பா கவிதைன்னாலே காத தூரம் ஓடற சிவகுமார் கிட்ட குடுத்து இதை படிச்சி விமர்சனம் எழுதனும்னு அன்பு கட்டளை போட்டார். சிவகுமார்  மெட்ராஸ் பவன்ல பொங்கல் சாப்பிடும்போது  இஞ்சித் துண்டை கடிச்ச  கு.. (இருங்க! இருங்க! அவசரப்படாதீங்க)  குழந்தைமாதிரி  முழிச்சார் 

   சரிதாயணம்  எழுதின பாலகணேஷ் டிஸ்கவரிக்குள்ள அலவளவளவளாவிக் கொண்டிருந்தார். கண்ணதாசன் மாதிரி உங்க ஆட்டோக்ராப் போட்டு ஒரு புத்தகம் குடுங்கன்னு கேட்டதை காதுல வாங்காம, நீங்க ஒரு பாக்கியம் ராமசாமின்னு புகழ்ந்ததுக்கும் மயங்காம  காரியத்தில கண்ணா இருந்து ஸ்டாக் இல்லே இப்ப போய் எடுத்துட்டு வரப்போறேங்கராரு.( ஒசில குடுத்தா விமர்சனம் ஒழுங்கா இருக்கும். காசு குடுத்து வாங்கினா கராறா இருக்கும்.ஆமாம் சொல்லிட்டேன் )

   பதிவர் சத்ரியனோட கண் கொத்திப் பறவை நூல் அறிமுகத்திற்காக கேபிள் சங்கருக்கு காத்திருந்தாங்க!  சீக்கிரம் உள்ளே போனா சீப்பா நினைச்சுடு வாங்களோன்னு  கேட்லயே அரைமணி நேரம் நின்னுக்கிட்டு இருந்தாருன்னு நம்ப முடியாத வட்டாரத்தில இருந்து நம்பத் தகுந்த தகவல் வந்ததா சொன்னாங்க!

    போட்டோவுக்கு  போஸ் கொடுத்து நூல் வெளியிடும்போது சத்ரியன் பேசினார். மைக் இல்லாததால புத்தகைத்த சுருட்டி மைக் மாதிரி பிடிச்சிக்கிட்டிருந்தார் ஜெய். மைக்க பாத்ததுமே குஷியான பாலச்சந்தரின்(விவரத்திற்கு;கண்டேன் கே.பாலச்சந்தரை)  அறிமுகமான சிவா, "முன்னால போய் மைக்ல பேசுங்க" "முன்னால போய் மைக்ல பேசுங்க" ன்னு குரல் குடுக்க ஆரம்பிச்சிட்டாரு. இந்த சீனை ஒராயிரம் டேக் எடுத்ததால அந்த வசனத்தை மறக்க முடியலையாம். அவங்க அம்மா கிட்ட பேசும்போது கூட முன்னால போய் மைக்ல பேசுங்கன்னு சொல்றாருன்னா பாத்துக்குக்கோங்களேன்.

   சிவமைந்தனோட  திருவிளையாடல் அதோட முடியல நூல்  அறிமுகம் முடிஞ்சதும் அப்படியே கிளம்பிடலாம்னு நினச்சவங்களை புத்தகம் வெளியிட்டவங்க ட்ரீட் கொடுக்க தள்ளிட்டுப்  போய்ட்டார்.முதல் ரவுண்டு சத்ரியன் வேற வழியில்லாம எல்லோருக்கும் ஜூஸ் வாங்கிக் கொடுக்க அடுத்த ரவுண்டு கவியாழியும் மாட்டிகிட்டார். அதுலயும் திருப்தி அடையாம என் கிட்ட " சார்! நீங்க  புக் போட்டிருக்கீங்களா"ன்னு கேக்க அக்கறையா கேக்கறதா நினச்சி இல்லன்னு சொல்ல அடுத்த வருஷம் போடப் போறீங்களான்னு   திருப்பியும் கேட்க அடுத்த ரவுண்டு ஜூசுக்கு அடி போடறதை புரிஞ்சிக்கிட்டு இல்லேன்னு சொல்லி எஸ்கேப்.ஆயிட்டேன்

புக் வெளியிடுறதவிட ஜூஸ் செலவு அதிகாமாகும் போல இருக்கேன்னு நினைக்க வச்சு பதிவர்களை நூல் வெளியிடக் கூடாதுன்னு சதித்திட்டம் தீட்டிய சிவா பேச்சலராத் திரியறதாலதனா இந்த ஆட்டம் ஆடறார். அவர பேச்சு இலர் ஆக்கி கையது கொண்டு மெய்யது பொத்தி ஷாப்பர் பேக் தூக்க வைக்கனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு  நாலஞ்சு பேரு ரகசியமா கூடிப் பேசினங்கன்னு  ஒரு தகவல் சொல்லுது

  சும்மாவே  கைப்பேசி வாங்கி போன் போட்டு,  நடுவில கொஞ்சம் பையனைக் காணோம்னு தேடவச்சி டென்ஷன் ஆக்கி, அதைப் பதிவா போட்டு பட்டிக்காட்டாரை துப்பாக்கி  தூக்கி விஸ்வரூபம் எடுக்கற அளவுக்கு  அளவுக்கு செஞ்ச சிவாவுக்கு ,  பாடம் கத்துக் கொடுக்கிற ஒரே ஆள் பட்டிக்காட்டார்தான்னு முடிவு  பண்ணி அவரை அப்ரோச் பண்ணி இருக்காங்களாம்.

   அவரும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சிவா  வீட்டுக்குப் போய் அவங்க அம்மாகிட்ட இருக்கறதையும் இல்லாததையும் சொல்லி ஒரு கால் கட்டு போட்டு அவரோட கொட்டத்தை அடுத்த புக் ஃபேருக்குள்ள அடக்கறதா ஒத்துக்கிட்டார்.
  இதுக்கு ஃபிலாசபியும், அஞ்சாசிங்கமும் ரகசிய ஆதரவு தெரிவிச்சி இருக்காங்களாம். இது சக்சஸ் ஆனா இன்னும் நிறையப் பதிவர்கள் நிறைய நூல் வெளியிடுவாங்கன்னு ஒரு கருத்துக் கணிப்பு சொல்லுது

*******************************************************************************************

28 comments:

 1. கலக்கிட்டீங்க,முரளி சார்

  ReplyDelete
  Replies

  1. நான் இணைக்கும் முன்பாகவே இணைத்து வாக்கும் அளித்ததற்கு நன்றி குட்டன்

   Delete
 2. தமிழ் மணத்தில் இணைத்து,ஓட்டும் போட்டாச்சு

  ReplyDelete
 3. கலக்கல்....

  நடக்கட்டும் நடக்கட்டும்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி நாகராஜ் சார்

   Delete
 4. நல்ல கருத்து கணிப்புங்க அவங்க கல்யாண மண்டபத்திலேயே நிறைய நண்பர்கள் புத்தகம் வெளியிடனும் விருந்து கல்யாணம் மாப்பிள்ளை செலவு எப்படி ?

  ReplyDelete
  Replies
  1. மாப்பிள்ளை தலையிலேயே கட்டிட வேண்டியதுதான்

   Delete
 5. //பட்டிக்காட்டாரிடம்///

  அது என்ன மரியாதை ஓவரா இருக்கு ..

  எலேய் பட்டி இங்க வந்து பாரு இவரு உன்னை கெட்ட வார்த்தை சொல்லி கூப்பிடுறாரு .

  ReplyDelete
  Replies
  1. பட்டிக்காட்டோரோட பவர் தெரியாமப் பேசப் படாது

   Delete
 6. அசத்திட்டிங்க , இதுக்கு ஃபிலாசபியும், அஞ்சாசிங்கமும் ரகசிய ஆதரவு தெரிவிச்சி இருக்காங்களாம்.//

  ReplyDelete
  Replies
  1. அடுத்த நூல் வெளியீடு எப்போ சிவா கேக்கறார்?

   Delete
 7. நல்ல நகைசுவையாக எழுதி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கோமதி மேடம்

   Delete
 8. Replies
  1. நன்றி ஸ்கூல் பையன்

   Delete
 9. \\பாலச்சந்தரின் அறிமுகமான சிவா,\\ who is this?

  ReplyDelete
  Replies
  1. மெட்ராஸ் பவன் சிவகுமார் பாலச்சந்தர் சீரியல்ல ஓர் சீன் நடிச்சது உங்களுக்கு தெரியாதோ?

   Delete
 10. அண்ணே...goundamanifans தளத்தில் பட்டிக்காட்டான் சிறப்பு மலர் தயார் ஆகிட்டு இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. தட்டிக்கேட்க தயங்க மாட்டார் எங்க பட்டிக்காட்டார்.

   Delete
 11. என்னமோ நடக்குது! ஒண்ணும் புரியலை!

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் புத்தகக் கண்காட்சியில் நடந்த கூத்துதான்

   Delete
 12. சிவாவுக்கு சீக்கிரம் கால் கட்டுப் போடத்தான் வேண்டும்!

  ReplyDelete
 13. நடத்துங்க :)))

  சுவாரஸ்யம்.

  ReplyDelete
 14. படத்துல நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று சொல்லவே இல்லையே...!

  ReplyDelete
 15. எழுதிய விதம் நகைச்சுவை கொப்பளிக்குது! சிரிப்புத் தான! போங்க!
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 16. புத்தகம் கேட்டீங்களா...? எப்போ? என்னை பாக்கியம் ராமசாமின்னு புகழ்ந்தீ்ங்களா...? எப்போ? புத்தகக் கண்காட்சி இரைச்சல்ல சுத்தமாக் கேக்கலியேப்பா. ஹி... ஹி... கடுமையான விமர்சனங்கள்தான் தெம்பா செயல்பட உந்துசக்தி. அதையே வரவேற்கிறேன் முரளி. உங்களின் எழுத்தில் தென்பட்ட ஹாஸ்யத்தை மிகவும் ரசித்தேன். கீப் இப் அப்! பெஸ்ட் விஷ்ஷஸ்!

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895