என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Wednesday, January 9, 2013

என்ன பெயர் வைக்கப்போகிறேன்?கண்டுபிடியுங்கள்!

   நான் பதிவுகள் தொடர்ந்து எழுத ஆரம்பித்து ஓராண்டுக்கு மேலாக  ஆகி விட்டது. எனக்கு ஒரு குறை உண்டு . என் பெயரையே என் வலைதளத்திற்கும் வைத்திருக்கிறேன். ஆரம்பத்தில் தொடர்ந்து எழுத முடியும் என்று தோன்றவில்லை. அதனால் பெயர் வைப்பது பற்றி சிந்திக்கவில்லை. நிறையப் பதிவர்கள் அவர்களின் வலைப் பதிவின்பெயாரால் அறியப்படுகிறார்கள். அந்த ஆசை (அற்ப ஆசைதான்) எனக்கும் இப்போது  ஏற்பட்டுள்ளது. பொங்கல் திருநாள் முதல் என் வலைப்பதிவிற்கு ஒரு பெயர் சூட்டலாம்  என்று உத்தேசித்திருக்கிறேன். இது எனது 197 வது பதிவு. 200 வது  பதிவு தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று எழுத நினைத்திருக்கிறேன். எனது வலைப்பதிவிற்கு சில பெயர்களை சிந்தித்து வைத்திருக்கிறேன். அந்தப் பட்டியலில் ஒன்றை என் வலைப் பதிவிற்கு சூட்டப் போகிறேன். அந்தப் பெயரை எனது பெயரோடு சேர்த்து சில நாள் இணைத்து  விட்டு கொஞ்சம் அறிமுகம் ஆனபின் என் பெயரை நீக்கிவிட எண்ணியிருக்கிறேன்.
  இந்தப் பட்டியலில் நான் எந்தப் பெயரைத் தேர்ந்தெடுக்கப் போகிறேன்? என்பதை நீங்கள்தான்  கணிக்கப்  போகிறீர்கள்? சரியாக சொல்பவருக்கு  இலவச இடம் வழங்கப்படும் (ஆமாம்! நீங்க நினைக்கறது சரிதான்! மனசுலதான் ஹிஹிஹி)
இந்தப் பெயர்களில் ஏற்கனவே வலைப் பதிவு இருந்தால்  தெரிவிக்கவும்

               1. விதைகள்
               2. வேரும் நீரும்
               3. நிழலின் நிழல்
               4. மெய்பிம்பம் மாயபிம்பம்
               5. சும்மா
               6. நிறப் பிரிகை
               7. விழுதுகள்
               8. பூக்கள் பலவிதம்
               9. குறைகுடம்
              10. கொஞ்சம் ஆசை! கொஞ்சம்  பேராசை!
              11. ஈர நெஞ்சம்
              12. சொன்னது நான்தானே!
              13. வெட்ட வெளிச்சம்
              14. விசைப்பலகை விதைத்தவை
              15. பதிவீர்ப்பு விசை 

              16. மூங்கில் காற்று 

(இதில் எனது சாய்ஸ் என்னவாக இருக்கும்? எனக்கே புரியல)
(வேறு சில பெயர்களும்யோசித்திருக்கிறேன். நீங்களும் உங்கள் ஆலோசனைகள சொன்னால் மகிழ்ச்சி அடைவேன்.)
********************************************************************************

கொசுறு:
ஆங்கிலமாக  இருந்தால் ப்ளாக் பெயர் வைப்பதற்கு சில மென்பொருள்கள் உள்ளன.
அதில்  ஒன்று 
     wordoid
இது ஒரு Online Blog name generator

******************************************************************************  

43 comments:

 1. நான் கண்டுபிடிச்சிட்டேன் நான் கண்டுபிடிச்சிட்டேன் இந்த 10ல் ஒன்றைத்தான் நீங்கள் தேர்ந்தெடுக்க போகீறீர்கள். எப்படி என் கண்டுபிடிப்பு.

  ReplyDelete
  Replies
  1. அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழனை நான் வழிமொழிகிறேன்....

   Delete
  2. வேற பேர் கூட யோசிச்சிக்கிட்டு இருக்கேன். நன்றி

   Delete
 2. நான் ஒன்றை சொல்லப் போய் அது தவறாக இருந்துவிட்டால் உங்கள் மனதில் இடம் பிடிக்க முடியாததால் தான் முந்தைய பின்னுட்டம்

  ReplyDelete
 3. விதைகள்
  சும்மா
  விழுதுகள்
  இப்படி சிறிய பெயராக இருந்தால் பல வழிகளில் உபயோகமாக இருக்கும் என்பது என் கருத்து

  ReplyDelete
  Replies
  1. இந்தப் பெயரெல்லாம் வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது.

   Delete
 4. கொஞ்சம் ஆசை! கொஞ்சம் பேராசை! எனப் பெயரிடப்போகிறீர்கள் என நினைக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்களை பார்க்கும்போது என் முடிவை மாற்ற வேண்டி இருக்கும் போல் இருக்கிறது.

   Delete
 5. பேரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது...

  ReplyDelete
  Replies
  1. முழுதாக மாற்றப் போவதில்லை.முன் பின் இணைப்பாக மட்டுமே சேர்க்கப் போகிறேன்.

   Delete
 6. "சும்மா அதிருதில்ல" - இது நல்லா இருக்கும்னு தோணுது.

  ReplyDelete
  Replies
  1. நம்ம பதிவுகள் அதிரடி பதிவு இல்லையே!

   Delete
 7. com வாங்க போறீங்களா...?

  ReplyDelete
  Replies
  1. இல்லை.இல்லை. டொமைன் நேமில் மாற்றம் இல்லை.

   Delete
 8. வரப்போகும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
  விழுதுகள் அல்லது பூக்கள் பலவிதம்.என்று பெயர் தேர்ந்து எடுப்பீர்கள் என நினைக்கிறேன்.
  சும்மா என்ற பெயரில் வலைத்தளம் உள்ளது.(திருமதி. தேனம்மை)

  ReplyDelete
  Replies
  1. நானும் சற்று குழம்பித் தான் போய் விட்டேன்.

   Delete
 9. நல்ல முடிவு, தளத்துக்கு பெயர் அவசியமே, சிறிய பெயராக வையுங்கள், டொமைனில் அப்பெயர் கிடைக்கக் கூடியதாக இருக்கட்டும், டாட்.காம் வாங்க உதவும், விரும்பும் பெயரை கூகிளில் தமிழில் தேடி யாரேனும் ஏற்கனவே வைத்துள்ளார்களா என பார்க்கவும், குழப்பம் வராது.. நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. ஆலோசனைக்கு நன்றி இக்பால் செல்வன் அவ்வாறே செய்கிறேன்.

   Delete
 10. சும்மா என்ற பெயர் தேனம்மை லக்க்ஷ்மணன் அவர்கள் எழுதி வருவது. எனக்கு நிறப் பிரிகை ம்ற்றும் பதிவீர்ப்பு விசை ஆகிய தலைப்புகள் பிடித்திருக்கிறது. எதுவாக இருப்பினும் உங்களுக்கு என் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நிறப்பிறிகையும் வைத்து விட்டார்களாம்.

   Delete
 11. திரு முரளிதரன், உங்கள் பெயருக்கேற்றார் போல் ‘புல்லாங்குழல்’ என்று கூட வைக்கலாம்.

  200வது பதிவிற்கு வாழ்த்துக்கள். (நாங்க 50க்கே தத்திங்கினத்தோம் போட்டிட்டிருக்கோம் இல்ல) அதனால உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  புல்லாங்குழலில் முரளிதரனின் வேணுகானம் ஒலிக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நல்ல ஆலோசனை மேடம் நன்றி.

   Delete
 12. இது உங்கள் உரிமை! அதைக் குழப்ப நான் விரும்பவில்லை.

  ReplyDelete
 13. ஐயா சொன்னதையே நான் வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 14. நல்ல முடிவு! பதிவுஈர்ப்பு விசை! இல்ல இல்ல எல்லா தலைப்புக்களுமே நன்றாக இருக்கிறது! உங்க சாய்ஸை அரிய ஆவலாக உள்ளேன்! நன்றி!

  ReplyDelete
 15. "சொன்னது நான்தானே! " - என்று நினைக்கிறேன். உங்கள் வலை வாசகம்.. நினைத்தேன் சொல்கிறேன்... என்பதால். ஹா.. ஹா...மிகச்சரியாக தப்பா ஒரு ஆன்சரை சொல்லிவிட்டேன்.

  ReplyDelete
 16. எனக்குப் பிடித்தது நிறப்பிரிகை... சிறிய தலைப்பாக இருந்தால் நலம்....200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்... பிறக்கப் போகும் பெயருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. "mokka rasu" is best

  ReplyDelete
  Replies
  1. அட! இதுவும் நல்லா இருக்கே!

   Delete
 18. விரைவில் ஒன்றை தீர்மானியுங்கள் சார்

  ReplyDelete
 19. "குறைகுடம்" எனக்கு நிரம்ப பிடித்திருக்கிறது.

  ReplyDelete
 20. பதிவுகளில் இடம்பெறும் செய்திகளை அல்லது கருத்துகளைப் பிரதிபலிப்பதாகப் பதிவின் பெயர் அமைவது நலம் பயக்கும்.

  உங்களுடைய ‘popular posts' களைப் பார்வையிட்டதில், பலதரப்பட்ட ‘பொருள்’களில் பதிவுகள் எழுதியிருப்பது தெரிகிறது. அதாவது, உங்களுடையவை ‘பல்பொருள்’ பதிவுகள்.

  இதைக் கருத்தில்கொண்டு, ‘பூக்கள் பலவிதம்’ என்று தலைப்பிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

  உங்களின் புதிய முயற்சிக்கு என் வாழ்த்துகள் முரளி.

  ReplyDelete
  Replies
  1. என் கணிப்பும் அதுவே.

   Delete
 21. எந்தத் தலைப்பை வைத்தாலும்
  நான் வந்து வாசிப்பேன் முரளிதரன் ஐயா.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. ’நிறப்பிரிகை’ என்னும் பெயரில் பத்திரிகை இருந்தது. இன்னும் இருக்கிறதா, தெரியவில்லை.

  எவரும், எவ்வகையிலும் [பிரபல நாவல், கட்டுரை போன்றவற்றிற்குத் தலைப்பாக] பயன் படுத்தாத தலைப்பாக இருப்பதும் சிறப்பு.

  பட்டியலில் இடம்பெறாத தலைப்புகளையும் நீங்கள் வைக்கலாமே?

  ReplyDelete

 23. என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள் என்று பொங்கலன்று மாலை சொல்லலாமா? :))

  ReplyDelete
 24. தயவு செய்து நீங்களே முடிவெடுங்கள்,

  ReplyDelete
 25. உங்கள் எண்ணம் மட்டுமே சிறந்தது.வாழ்த்துகள் !

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895