என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Sunday, February 17, 2013

சூப்பர் சிங்கரின் விளைவுகளும் சீசன் 4 தொடக்கமும்

  விஜய் டிவியில் சுப்பர் சிங்கர் ஜூனியர் 3 நிறைவுற்று இப்போது சூப்பர் சிங்கர் 4 தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதலில் இருந்த சுவாரசியம் இருக்குமா என்று போகப் போகத்தான் தெரியும்.. இரண்டாவது கட்டத் தேர்வில் பலர் விரைவாக நிரகரிக்கப்பட்டனர்.சென்ற சீசனில் கலந்து கொண்டவர்கள் சொல்லி வைத்தாற்போல் உடனே தேர்வு செய்யப்பட்டு விட்டனர். சிலர் நன்றாகப் பாடியதாக எனக்குத் தோன்றியது ஆனாலும் நிராகரிக்கப் பட்டனர்.  புஷ்பவனம் குப்புசாமி, மஹதி சௌம்யா, டி.எல்.மகராஜன் போன்றவர்களோடு பழைய சூப்பர் சிங்கர்களும்  நடுவர்களாக இருந்தனர். இதில் புஷ்பவனம் குப்புசாமி ஸ்ரேஷ்டைகளை குறைத்துக் கொண்டால் நல்லது.
  ஆர்வக் கோளாறு காரணமாக பாத்ரூம் பாடகர்கள் பெரும்பாலோனோர் கலந்து கொண்டுள்ளனர். அதிலும் விளம்பர வியாபார உத்தி இருப்பதாகவே படுகிறது. கலந்துகொண்டு பாடியவர்களில் பலரும் பாடலைப் பாடும்போது கட்டாயம் கையை காலை முகத்தை அசைத்து பாடவேண்டுவது கட்டாயம் போல் பாடினர்.அப்போதுதான் தேர்ந்தெடுக்கப் படுவோம் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ? 

   அதற்கு காரணம் முந்தைய சீசன்களில் இது போல் உடலசைவுகளுடன் பாடுபவர்களை மனோ போன்ற  நடுவர்கள் ஊக்கப் படுத்தியதுதான் காரணாமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அது சற்றும் பொருத்தமில்லை என்று தெரிந்தும். முந்தைய சீசன்களில் இது குறைவாகவே இருந்தது.  பி சுசீலா, எஸ். ஜானகி,யேசுதாஸ், சித்ரா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ஆடாமல் அசையாமல் பாடி குரலின் மூலமே பாடலின் உணர்வுகளை வெளிப்படுத்தினர். இதை கலந்துகொள்பவர்கள் உணர்ந்தால் நல்லது. இவர்களை ஆட வைப்பது இவர்களின் ஆடைகளை தேர்ந்தெடுப்பது  போன்றவற்றை விஜய்டிவி தான் முடிவு செய்கிறது போலும். கடந்த சூப்பர் சிங்கர் ஜுனியரில் சில எபிசோடுகளில் கவர்ச்சியாகத் தோன்றும் வகையில் (குட்டைப் பாவாடை) அணிந்து கொண்டு கூட சிறுமிகளை பாடவைத்தனர். அது எனக்கு சற்று நெருடலாக தெரிந்தது. பெற்றோர்களும் அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்பது ஆச்சர்யமே. இந்த முறை அதை எல்லாம் தவிர்ப்பார்களா என்று பார்ப்போம்.
 அது போகட்டும்! நான் சொல்ல வந்தது சூப்பர் சிங்கரின் ஏற்படுத்திய  சில விளைவுகள். முன்பெல்லாம் சினிமா பாடலதானே என்ற ஒரு அலட்சியம் இருந்தது. அதனுள் ஏராளமான நுணுக்கங்கள் இருக்கின்றன என்பதை நான்  அதிகமாக அறிந்து வைத்திருக்க வில்லை. இந்கழ்ச்சியைப் பார்த்தபிறகுதான் ஒவ்வொரு பாடலுக்குள்ளும் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்பதை நடுவர்கள் சொல்லும்போது புரிந்து கொள்ள முடிந்தது. சுருதி தாளம் பாவம், சங்கதிகள் பற்றி பல விஷயங்களை ஓரளவிற்கு அறிவதற்கு இந்நிகழ்ச்சி உதவியாக இருந்தது என்று சொல்லலாம். மேலும்  இசைக் கருவிகளோடும் இணைந்து பாடுதல் பிற பாடகர்களுடன் சேர்ந்து பாடும்போது பின்பற்றவேண்டிய நடை முறைகள் இவையும் தெரிந்து கொள்ள முடிந்தது. பல பாடல்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள், பாடல்களின் ராகங்கள்,பல்வேறு இசை வடிவங்கள் இவற்றை அறிந்து கொள்வதற்கும் இந்நிகழ்ச்சி உதவி புரிந்தது. 

   மேலும் பல பாடகர்களின் அனுபவங்கள் பாடல் உருவான நிகழ்வுகள்  சுவையைத் தந்தது. என்னைப் போன்றவர்கள்  ரசிக்கத் தவறிய பிரபலமாகாத நல்ல பாடல்களையும் அறிய முடிந்தது.சில பாடல்கள் இந்நிகழ்ச்சியின் மூலமாகவே இன்னும்  புகழ் பெற்றது. வாய்ஸ் எக்ஸ்பர்ட் என்று ஒருவர் இருக்கிறார் என்பது எனக்கு இந்த நிகழ்ச்சியின் மூலமாகத்தான் தெரிய வந்தது. சும்மா இருக்கிற பல பாடகர்களுக்கு நடுவராக இருக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும். 
   இப்படி பல நல்ல விளைவுகள் இருந்தாலும் இதன் மூலம் பெற்ற துளி  இசை அறிவு நமக்கு நிறைய தெரிந்துவிட்டது போல பிரமையும் ஏற்படுத்தி உள்ளது. எப்படி என்று கேட்கிறீர்களா? நான் தினந்தோறும் மின்சார ரயிலில் அலுவலகம் செல்வது வழக்கம். கண்தெரியாத, நடக்க முடியாத,வயதான, மாற்றுத் திறனாளிகள் பலர் பல விதமான பாடல்களைப் பாடுவார்கள்.பயணிகளும் தங்கள் விருப்பப் பட்டதை அவர்களுக்கு அளிப்பார்கள். முன்பெல்லாம் இவர்கள் பாடுவதைக் கேட்க ஆர்வமாக இருக்கும். சினிமாவில் பாடுவதுபோலவே அப்படியே பாடுகிறார்களே என்று தோன்றும். அவர்கள் பாடுவதில் உள்ள குறைகள் கொஞ்சம் கூட தெரியாது. ஆனால் இப்போதெல்லாம் அந்தப் பாடல்களை ரசிக்க முடியவில்லை. நாம் ஏதோ இசையைக் கரைத்துக் குடித்தவர்போலவும் ஸ்ருதி விலகியும்,தவறான மெட்டிலும் தாளத்திலும் பாடுவதை  கேட்டு சகித்துக் கொள்ள முடியாமல்  ஏன் இப்படிப் பாடலை கொலை செய்கிறார்கள் என்றும் பாடாமல் இருந்தால் காசு கொடுக்கலாம் என்றும் தோன்றி இருக்கிறது. ஒரு விஷயம் பற்றிய மிகக் கொஞ்சமான  அறிவே, அதிகம் தெரிந்தது போன்ற கர்வத்தை ஏற்படுத்துவது கண்டு வெட்கப்பட்டேன். அவர்கள் போட்டிக்காகவாக பாடுகிறார்கள்? பிழைப்புக்காகப் பாடுகிறார்கள் என்பதை மறக்கக் கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன். அவர்களுக்கு ஜட்ஜாக நம்மை நினைத்துக் கொண்டது எவ்வளவு மடத்தனம் என்பதை உணரவும் செய்கிறேன். இது போன்ற எண்ணங்களை உருவாக்கியதில்  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் குற்றமில்லை என்னுடைய குற்றமே! மாற்றிக் கொள்வேன்.
 
   எப்படி இருப்பினும் பாகுபாடின்றி சாதாரண நிலையில் உள்ள திறமையான பாடகர்களுக்கும்  வாய்ப்பு வழங்கி உண்மையில் ஊக்குவிக்கவேண்டும் என்பதே எனது விருப்பம்.
இந்த  சீசனில் பங்குபெறும் பாடகர்களுக்கு வாழ்த்துக்கள்.

*************************************************************************************
முந்தைய  பதிவுகள்
இது சாதாரண காதல் இல்லீங்க!
இப்படியும் நடக்குமா?குஜராத்தில் ஒரு கொடுமை

37 comments:

 1. // ஆர்வக் கோளாறு காரணமாக பாத்ரூம் பாடகர்கள் பெரும்பாலோனோர் கலந்து கொண்டுள்ளனர். அதிலும் விளம்பர வியாபார உத்தி இருப்பதாகவே படுகிறது. //- நிஜம்தான் நானும் கூட பார்த்தேன். அதெல்லாம் அவர்கள் விளம்பர யுத்திதான்.

  // பி சுசீலா, எஸ். ஜானகி,யேசுதாஸ், சித்ரா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ஆடாமல் அசையாமல் பாடி குரலின் மூலமே பாடலின் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.// இப்ப பாடகிகள் சிலர் கவர்ச்சி நடிகைகள் மாதிரி உடுத்தி கொண்டு ஆடுகிறார்கள்.
  // சும்மா இருக்கிற பல பாடகர்களுக்கு நடுவராக இருக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும். //- ஹா..ஹா..!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்க்கும் நன்றி உஷா

   Delete
 2. ஒரு விஷயம் பற்றிய மிகக் கொஞ்சமான அறிவே, அதிகம் தெரிந்தது போன்ற கர்வத்தை ஏற்படுத்துவது கண்டு வெட்கப்பட்டேன். அவர்கள் போட்டிக்காகவாக பாடுகிறார்கள்? பிழைப்புக்காகப் பாடுகிறார்கள் என்பதை மறக்கக் கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன். அவர்களுக்கு ஜட்ஜாக நம்மை நினைத்துக் கொண்டது எவ்வளவு மடத்தனம் என்பதை உணரவும் செய்கிறேன். இது போன்ற எண்ணங்களை உருவாக்கியதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் குற்றமில்லை என்னுடைய குற்றமே! மாற்றிக் கொள்வேன்.//
  உண்மையிலேயே நீங்கள் ஒரு உயர் பண்பாளர் சார்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! Barari

   Delete
 3. பிள்ளைகளுக்கு பாடும் தகுதி உள்ளதோ இல்லையோ அதைப்பற்றி கவலைபடாமல் நீயும் போய் பாடேன் என்று உற்சாகப்படுத்தியதால் நிறைய பாத்ரூம் பாடகர்களும் வந்திருப்பார்கள்.ஆனால் பாத்ரூமில் பாட முயற்சித்தாலே அதையும் ஆர்வமாக எடுத்துகொள்ள வேண்டும்தவறில்லை.

  ReplyDelete
 4. சங்கீத சமுத்திராகச்சத்தின் விசரந்தையான விரிவாக்கமாக பார்க்கப்பட்டாலும் நிபோலோகின பரிபாலனா விதிகளில் வேற்றுமை காட்டும் நிகழ்வாகவே இது இருந்தது இருக்கவும் போகிறது என்று சொல்லும் அதே வேளையில் அத்தரத்தின் அமுத நிலையில் வெந்தையச் சாறாக சிறாரின் திறமைகளை வெளிக் காட்டுகிறது இது போன்ற நிகழ்சிகள், பிரம்ம கெளந்திர வர்க்க முறையில் இதை பார்த்தால் வரப்பில்லாத வாஞ்சை பயிரான கம்பு, சாமைகளுக்கு நடுவே... கரும்பு விளைவித்தது போலிருக்கும். அதனாலேயே அதை ரசிப்போம் என்று சொல்ல நான் கடமைப் பட்டிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Mr.Anani, inga Super singer 4 pathi pesuranga...neenga yethu pathi pesureenga???

   Delete
  2. நீங்க யாரோ எவரோ!கலாய்க்கிற மாதிரியே இருக்கு.
   எப்படி இருந்தாலும் நன்றி.

   Delete
 5. பி சுசீலா, எஸ். ஜானகி,யேசுதாஸ், சித்ரா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ஆடாமல் அசையாமல் பாடி குரலின் மூலமே பாடலின் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.//

  ஆம், உண்மை. குழந்தைகளை குழந்தைகளாய் பாடவிட்டால் போதும்.


  எப்படி இருப்பினும் பாகுபாடின்றி சாதாரண நிலையில் உள்ள திறமையான பாடகர்களுக்கும் வாய்ப்பு வழங்கி உண்மையில் ஊக்குவிக்கவேண்டும் என்பதே எனது விருப்பம்.
  இந்த சீசனில் பங்குபெறும் பாடகர்களுக்கு வாழ்த்துக்கள்.//

  என் கருத்தும் இதுதான் முரளிதரன்.
  இந்த சீஸனில் பங்குபெறும் பாடகர்களுக்கு நானும் வாழ்த்து சொல்கிறேன்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கோமதி மேடம்

   Delete
 6. உண்மைதான்! இந்த நிகழ்ச்சி நமக்கு சில சங்கீத அனுபவங்களையும் அறிவையும் கொடுக்கிறது! அதே சமயம் அதிக விளம்பரங்கள்! கவர்ச்சி, பிக்சிங் போன்றவையும் நடக்கிறது! அருமையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 7. அருமையான பதிவு அண்ணா! நானும் இந்த சூப்பர் சிங்கர் பார்த்துப் பார்த்து நானும் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்! எனக்கும் புஷ்பவனம் குப்புசாமியின் பேச்சுக்கள் கொஞ்சம் நெருடலாகவே இருக்கு!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் மணி. அவரது கோமாளித்தனங்கள் சகிக்கல

   Delete
 8. இது என்ன விளைவுகளை உண்மையிலேயே ஏற்ப்படுத்தியுள்ளது என்றால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றும் கலந்துகொள்ள முயற்சிக்கும் மாணவர்களின் கல்வியை இவர்களின் வியாபாரத்திற்க்காக பழாக்குகிறார்கள் . அவர்களுக்கும் உண்மையில் நல்ல திறமையானவர்களை தேர்ந்தெடுக்கவேண்டும் என்றால் ஒன்றிரண்டு நாட்க்களுக்குள் போட்டியை முடிக்கவேண்டும். சீரியல் மூலம் வீட்டிலுள்ள பெண்களை தொலைக்காட்சி அடிமையாக்கினார்கள் இப்போது இளம் மாணவர்களின் கல்வியையும் பாழாக்கு கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வதும் சரியே இது பற்றி தனியே ஒரு பதிவு போட நினைத்திருக்கிறேன்.

   Delete
 9. இந்த நிகழ்ச்சியில் சுதி சுத்தமாக பாடுபவர்களுக்கெல்லாம் சினிமாவில் வாய்ப்பு வந்து கதைவை தட்டும் என்றெல்லாம் யாரும் கனவுகானாதீர்கள். ஒய் திஸ் கொலவெறினு தனுஷ், தமிழை படு கேவலமாக உச்சரிக்கும் உதித் நாராயனன் இவர்களெல்லாம் பாடும் பாடல்கள் சுதி சுத்தமாக இருக்கிறதா?

  ReplyDelete
  Replies
  1. உதித் நாராயனன் நன்றாகப் பாடக் கூடியவர்தான். ஆனால் தமிழில் அல்ல. தமிழ்ப் பாடல்களுக்கு அவர் பொருத்தமானவர் அல்ல. தமிழை கொலை செய்து விடுவார்.

   Delete
 10. இந்தக் கொடுமையை பார்ப்பதை நிறுத்திவிட்டேன், சலிப்புத் தட்டி விட்டது .. !

  ReplyDelete
  Replies
  1. ஒரே விதமான நிகழ்ச்சி பல வருடங்கள் நடந்தால் நிச்சயம் சலிப்புதான்.

   Delete
 11. மின்வண்டிப் பயணத்தில் கேட்கும் பாடல்களின்போது ஏற்படும் உணர்வுகளை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். சூப்பர் சிங்கர் ஆரம்ப நிலைகளைக் கடந்த பின் வழக்கம்போல சூடு பிடிக்கலாம். பாடகர் கார்த்திக் சூப்பர் சிங்கர் மூலம் வந்தவர்தானே?

  ReplyDelete
  Replies
  1. பாடகர் கார்த்திக் ஏ.வி.ரமணனின் சப்தஸ்வரங்கள் மூலம் புகழ் பெற்றவர் என்று நினைக்கிறேன்.

   Delete
 12. சாதாரண நிலையில் உள்ள திறமையானவர்களை ஊக்குவிக்க வேண்டும் அய்யா.

  ReplyDelete
  Replies
  1. அதுவே என் கருத்தும்.

   Delete
 13. நீங்கள் கூறுவதுபோல் நன்றாக பாடிய சிலர் நிராகரிக்கப்பட்டனர். நடுவர்களுக்கு வேண்டிய சிலர் சுமாராகப் பாடியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனக்கென்னவோ இந்த போட்டி ஒளிவு மறைவில்லாமல் நடத்தப்படுகிறது என நம்பமுடியவில்லை.

  ReplyDelete
 14. BadshahFebruary 17, 2013 at 3:51 PM
  Mr.Anani, inga Super singer 4 pathi pesuranga...neenga yethu pathi pesureenga???//

  பாட்ஷா அய்யா நானும் அதைப் பற்றிதான் என் நெகிழ் மனதின் வியந்தகாரமான, நாவல் நாட்டின் தேங்கமழ் கபாதிரி நற்றமிழில் புதி மொகிழ்ந்தேன்.

  நீங்கள் கதைக்கும் கடும் தமிழ் எனக்கு வரா என அறிக! எம் தமிழில் பரப்புரைகள் , தூய வெண் நீள் நறு நெய்தாலாய் நெடுமொழிகள் ஆற்றிடும் போது கொங்கு முதிர் நறுவழை செருவிளைகளின் வசந்த சுகந்தத்தை உணர்கிறேன் நன்றி!!


  ReplyDelete
 15. பின்னணிப்பாடகர்கள் பெர்ஃபார்மராக இருக்க வேண்டிய அவசியமில்லை!ஆனால் நடுவர்கள் அந்த நடன உடலசைவுகளைத்தான் போற்றுகிறார்கள்!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் குட்டன்.

   Delete
 16. மூங்கிலில் நுழைந்து இசையாக பரிணமிக்கும் காற்றுபோல -
  தங்கள் கருத்துகள் ரசிக்கவைத்தன ..பாராட்டுக்கள்..

  ReplyDelete
 17. என்ன முரளி ..... பதிவொன்னும் போடலை ? சீக்கிரம் எதாவது ரிலீஸ் பன்னுப்பா பிரபல பதிவரா ஆனா மட்டும் பத்தாது பசக்கு பசக்குன்னு பதிவு போடனும் ஆமா..... மேட்டருக்கா பஞ்சம் .... ஈழமிருக்கு, குஷ்பூவுக்கு சப்போர்ட் பன்னலாம், அப்சல் குரு தூக்கை தாக்கலாம், டிபென்ஸ் ஊழல் இருக்கு எதாச்சும் பாத்து செய்யுப்பா

  ReplyDelete
 18. நான் பிரபல பதிவரா? கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு...... என்ன வச்சு காமடி கீமடி பண்ணலியே!

  ReplyDelete
 19. அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (20.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி எழுதுகிறேன். நாளைய வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

  ReplyDelete
 20. It has become boring nowadays...Judges/Selectors behave like comedians...

  ReplyDelete
 21. இந்த நிகழ்ச்சிகள் பார்க்கும் சூழல் இண்ணும் கிடைக்கவில்லை!ம்ம்ம்

  ReplyDelete
 22. என்றாலும் புஸ்பவனம் குப்பசாமி மிகக் கடுமையாக நடந்து பலரைத் தட்டிவிட்டார்.
  எனக்கும் அவர் போக்கு பிடிக்கவே இல்லை.
  நல்ல விமரிசனம். இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895