என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Friday, February 22, 2013

அமில வீச்சு! சகஜமாச்சு!-புஷ்பா மாமியின் புலம்பல்

  நேற்று  வாங்கிச் சென்ற பேப்பரை படித்து விட்டு திரும்பக் கொடுப்பதற்காக வந்திருந்தார் புஷ்பா மாமி. வழக்கம்போல் நான் மாட்டிக்கொண்டேன். மாமி தொடங்கினார்.
   "இது என்னடா அக்கிரமமா இருக்கு.இந்தப் பரிதாபமா இறந்து போன பொண்ணு வினோதினி மேல ஆசிட் ஊத்தின நெடி போறதுக்குள்ள இன்னொரு பொண்ணுமேல அநியாயமா ஆசிட் ஊத்திட்டான் இன்னொரு பாவி. இதைப் படிச்சியா?"

  "ஆமாம் மாமி! நானும் படிச்சேன். சென்னை ஆதம்பாக்கத்தில விஜயபாஸ்கர்,ப்ரௌசிங் சென்டர்ல பழக்கம் ஏற்பட்ட வித்யாங்கற பொண்ணுகிட்ட தன்னோட லவ்வ சொல்லி இருக்கானாம். பெத்தவங்க சம்மதம் வேணும்னு வித்யா சொல்ல , வித்யாவோட அம்மாகிட்ட பேசி இருக்கான். அவங்களும் சம்மதிச்சிருக்காங்க.ஆனா விஜய பாஸ்கரோட அம்மாவோ அதுக்கு ஒத்துக்கலை.தங்கையோட கல்யாணம் முடிஞ்சதுக்குப்புறம்தான் இதைப் பத்தி யோசிக்கணும்னு சொல்லவே விஜயபாஸ்கர் மன வருத்தப்பட்டு வித்யாவை சந்திக்க பிரவுசிங் சென்டருக்குப் போய் இருக்கான். அவனை வெளிய போகச் சொன்ன வித்யாமேல கோவப்பட்டு கையில ரெடியா கொண்டு வந்த ஆசிட்ட, மேல ஊத்திட்டானாம்! சரியா மாமி?

  "நான் என்ன க்விஸ் ப்ரோக்ராமா நடத்தறேன். அதான் பேப்பர்ல போட்டிருக்கானே! ஆசிட் முதல்ல முகத்தில படாம முதுகுலதான் பட்டிருக்கு. அதோட விட்டானா? பாவி!,  வலியால துடிச்சிட்டுக்கிட்டு இருந்த வித்யாவை பாத்து கொஞ்சம் கூட இரக்கம்  இல்லாம, முகத்தில் ஆசிட் படாதது தெரிந்ததும், கீழே கொட்டியிருந்த ஆசிட்டில் வித்யா முகத்தை வைத்து தேச்சிருக்கான். அந்தக் கட்டையில போறவன்! அக்கம் பக்கத்தில இருக்கவங்க கூச்சல் கேட்டு ஓடிவந்து ஆஸ்பிட்டல்ல சேத்திருக்காங்க.20 நாளா ஆஸ்பிட்டல்ல உயிருக்கு போராடிக்கிடிருக்கு அந்த பொண்ணு!

  "ஆமாம் மாமி! கேக்கறதுக்கே சங்கடமா இருக்கு."

  "சம்மதம் சொல்லியும் இப்படி பண்ணிட்டானே அந்த மகாபாதகன்.
வேலூர்லயும் ஒரு பையன் இப்படித்தான் பத்தாம் கிளாஸ் படிக்கிற பொண்ணு மேல ஆசிட் ஊத்திட்டானாம். நல்ல வேளை அந்த பொண்ணு மேல ஆசிட் படாம தப்பிச்சிட்டாளாம்......

  "இந்தப்  பசங்களுக்கெல்லாம் ஏன் இப்படி புத்தி போறது?.எதனால சைக்கோவா திரியாரானுங்க?  .  எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்தறதுதானே உண்மையான லவ்வு. ஒரு வயசு குழந்தையா இருந்தாலும் 60 வயசு பாட்டியா இருந்தாலும் ரோட்டில, ஏன் வீட்டில கூட இருக்க முடியாது போல இருக்கே! இந்த மாதிரி அக்கிரமம் பணறவங்களயும் வக்கிர புத்திக்காரங்களயும் தெருவில நடமாட விடக் கூடாது. நாளுக்கு நாள் இந்த மாதிரி சம்பவம் நடக்கிறது அதிக மாகிட்டே போகுது.கவர்ன்மென்ட் ஏதாவது நடவடிக்கை எடுக்கணுமோ இல்லையோ? என்னமோ மஞ்சதண்ணி ஊத்தி விளையாடற  மாதிரி ஆசிட்டை வீசறாளே! கூடிய சீக்கிரம் புல்லட் ப்ரூப் சட்டை மாதிரி ஆசிட் ப்ரூஃப் டிரஸ்சும், முகமூடியும் போட்டுக்கிட்டுதான் நடமாடனும் போல இருக்கே. பேசாமா மிக்சி க்ரைண்டருக்கு பதிலா அதை இலவசமா கொடுக்கலாம்........."

புஷ்பா  மாமி கிட்டத் தட்ட அரை மணிநேரம் புலம்பிவிட்டுத்தான்  போனார்.

  இப்படி பலரையும் வருத்தத்தில்  ஆழ்த்தி வருகிறது இந்த சம்பவங்கள். ஆணினத்திற்கே அவமானம் தரக் கூடிய செய்கை என்றுதான் கூறவேண்டும். அரசாங்கம் குற்றம் செய்தவரை தண்டிக்கலாம். ஆனால் குற்றத்தின் பாதிப்புகளில் இருந்து மீள்வது எளிதல்ல!  அரசை மட்டும் குறை கூறிப்பயனில்லை .பெற்றோர்களும் கொஞ்சம் கவனமா இருக்கவேண்டும் .பள்ளி கல்லூரி படிக்கின்ற வயதில் பையனோ பெண்ணோ இருந்தால்    குறிப்பாக பெண்ணாக  இருந்தால் அவங்களோட படிப்பு விஷயம் மட்டும் பேசாமல் இது போன்ற  விஷயத்தையும் பேசவேண்டும். அதுவும் கொஞ்சம் ஆண் பெண் பேதம் பார்க்காமல் சகஜமா பேசும் பெண்கள்  மிகவும்  எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதை காதல் என்று தவறாக நினைத்துக் கொண்டு இருக்க, திடீரென்று  அது இல்லையென்று தெரியும்போது  சேரக் கூடாத நண்பர்கள் கூட சேர்ந்து இது மாதிரி தவறுகளை செய்துவிடுகிறார்கள்
பெண்களை பெற்றவர்கள் மட்டுமல்ல  ஆண் பிள்ளைகளாக இருந்தாலும் அவர்களிடம் இதைப் பற்றி பேசவேண்டும். தவறான நட்பு ஏதேனும் இருக்கிறதா?  எங்கே போகிறார்கள்? திடீர் மாற்றங்கள் ஏதாவது தெரிகிறதா! என்பதை கவனிப்பது அவசியமானது. அவர்களுடைய நெருங்கிய நண்பர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இத்தகைய  சம்பவங்களில் தவறு  ஏதும் செய்யாவிட்டாலும் பக்கத்தில போய் நிற்பவனும்  மாட்டிக் கொள்கிற  அபாயம் உண்டு. என்பதை  நேரடியாகவும்  மறைமுகமாகவும் சொல்லத் தயங்கக் கூடாது.

  காதலித்துக் கொண்டிருக்கும் பெண்களே! நீங்கள் காதலர் தினத்தை உங்கள் காதல் துணையோடு கொண்டாடி இருப்பீர்கள். அவன் அடி மட்டத்தில் இருப்பவனாயினும் சரி, ஐ.டி யில் பணிபுரிபவனாயினும் சரி எதற்கும் உங்கள் காதலனை அவனறியாமல் "அமிலச் சோதனை" (a rigorous and conclusive test to establish worth or value) செய்து விடுங்கள்.

*****************************************************************************************************************
அமிலம்  வீசும் அரக்கர்களுக்கு இந்த தண்டனையும் தரலாம்.படித்துப் பாருங்கள்
அந்நியன் வருவானா?தண்டனை தருவானா?

:

32 comments:

 1. கூடிய சீக்கிரம் புல்லட் ப்ரூப் சட்டை மாதிரி ஆசிட் ப்ரூஃப் டிரஸ்சும், முகமூடியும் போட்டுக்கிட்டுதான் நடமாடனும் போல இருக்கே.///இப்படியும் மனிதர்களின்புத்தி ஏன் செயல்படுதோ? வருத்தமாய் உள்ளது

  ReplyDelete
  Replies
  1. கவனிக்கப் படவேண்டிய விஷயமாக உள்ளது கண்ணதாசன் சார்!

   Delete
 2. மிக்சி க்ரைண்டருக்கு பதிலா... - அம்மாவிற்கு நல்லதொரு யோசனை...

  ReplyDelete
  Replies
  1. எதிர்காலம் அப்படி ஆகாம இருக்கணும்

   Delete
 3. மிகவும் அநியாயம் தான். சைக்கோ மனிதர் தான் இப்படி நடப்பவர்கள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. அவனை திருமணம் செய்து கொண்டிருந்தாலும் அமிலச் சோதனைதான்.
   நன்றி மேடம்

   Delete
 4. வித்யாவுக்கு பிரவுசிங்க் சென்டர்ல என்ன வேலை?

  ReplyDelete
  Replies
  1. வித்யா அந்த இன்டர்நெட் செண்டரில்தான் வேலை பார்க்கிறார்.

   Delete
 5. அமிலம் வீசுவது அறியாமையின் உச்சகட்டம். நைட்ரிக் அமிலம், ஹைட்ரோக் க்ளோரிக் அமிலம், கந்தக அமிலம் எல்லாம் ஆய்வகத்தில் பயன்படுத்துறவங்க ஒருபோதும் அதுபோல் செய்யமாட்டாங்க. ஏன் என்றால் ஆக்ஸிடெண்டாலாக அவைகள் உடலிலோ கண்ணிலோ பட்டாளே எவ்வளவு வலி இருக்கும் என்று தெரியும். அந்த அமிலங்கள் பற்றி படிப்பறிவு இல்லாதவங்கதான் இப்படியெல்லாம் செய்றாங்க. ஒருவர்மேல் அமிலத்தை எரிவது என்பது என்னால் நினைத்தே பார்க்க முடியாத ஒன்று. அது பெண்ணயிருக்கட்டும் ஆணா இருக்கட்டும்!

  ஆய்வகத்தில் எனக்கு ஒருமுறை கந்தக அமிலம் விபத்து நடந்து இருக்கு. அதாவது பென்ஸீன் என்கிற ஒரு சால்வெண்ட்ல தயோஃபீன் என்கிற இன்னொரு வேதிப்பொருள் ஓரளவு கலந்து இருக்கும்.ஃப்ரீராடிக்கல் ரியாக்ஷன்களை பென்ஸீன் என்கிற சால்வெண்டை பயன்படுத்தி செயல்படுத்தும்போது பென்ஸீனில் உள்ள அந்த தயோஃபீன் (இம்ப்யூரிட்டி) என்கிற இன்னொரு வேதிப் பொருள் ஃப்ரீராடிக்கல் களை "க்வண்ச்" செய்து அந்த ரியாக்சனை நடக்கவிடாது. அதனால், அதுபோல் ஃப்ரீராடிகல் ரியாக்சனுக்கு தயோபீன் இல்லாத பென்ஸீன் தேவைப்படும்.

  அதை எப்படி தயாரிக்கிறதுனா. த்யோபீன் பென்ஸீனை விட வேகமாக கந்தக அமிலந்துடன் ரியாக்ட் செய்யும். அதனால் கமர்சியல் பென்சீனை கந்தக அமிலத்துடன் ரியாக்ட் செய்தால், அதிலுள்ள தயோஃபீன் பென்ஸீர் ரியாக்ட் ச்ய்யும் முன்பே ரியாக்ட் செய்துவிடும். ரியாக்ட் செய்து உருவாகும் தயோஃபீன் சல்ஃபானிக் ஆசிட், கந்தக அமித்துடன் கலந்துவிடும். So, if you stir the commercial benzene with H2SO4, you can sulfonate the more reactive thiophene to thiophene-sulfonic acid and remove that easily from benzene as it will go to the aqueous phase. After such a treatment, the left over benzene will be thiophene-free and good for free-radical reactions which I wanted to carry out.

  In order to make thiophene-free benzene, அதுபோல் பெண்ஸீனுடன் கந்தக அமிலத்தை சேர்த்து ஒரு பீக்கரில் ஸ்டிர் பண்னிக்கொண்டு இருக்கும்போது பீக்கர் உடைந்து (என் கவனக்குறைவால் :) ) என் உடம்பெல்லாம் பென்ஸீனும் கந்தக அமிலமும் பட்டுவிட்டது. ட்ரெஸ் எல்லாத்தையும் கந்தக அமிலம் சாப்பிட்டு உடலிலும் (கால் தொடைப்பகுதி) போன்ற இடங்களில் பட்டுவிட்டது. அப்போ பெரிய விபத்து மாதிரி தெரியவில்லை. ஆனால் இப்போக்கூட அதனால் ஏற்பட்ட தழும்புகள் பெருசு பெருசா இருக்கு!

  Benzene is known to cause cancer and it is a well-known carcinogen is another information for you guys! I have taken a bath in it! LOL

  Sorry for too much chemistry, guys! :)

  ReplyDelete
  Replies
  1. இந்த மாதிரி உடம்புக்குள்ள எந்த புரியாத ரியாக்ஷன் நடந்ததோ. இப்படி பண்ணிட்டானே!

   Delete
 6. இந்த மாதிரி ஆசிட் வீசும் ஆண்களை பிடித்து அவர்களது ஆண்மை உறுப்பில் ஆசிட் ஊற்றிவிட வேண்டும் அதன் பின் அவன் பிழைத்தால் வாழ்ந்துவிட்டு போகட்டும்...அவனை ஜெயிலில் போட்டாலும் அவன் வந்த பின் பெண்ணின் குடும்பத்தார் இதனை கண்டிப்பாக செய்ய வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. இவர்களைப் போன்றவர்களை திருத்த முடியாது. ஆண்மை போச்சே என்று அதற்கும் பழி வாங்க தயங்கமாட்டார்கள்

   Delete
 7. ஆண் என்பவனை பார்த்து எப்போதும் பயந்து நடுங்க வேண்டும் என்றும் பெண் என்பவள் வாய் திறக்காத அப்பி ரானியாய் திரும்பவும் கூட்டுகுள் அடைபடவேண்டும் என்று எண்ணம் எழுந்துவிட்டதோ என்னவோ ஆண் என்பவன் என்றும் நம்பிக்கை கொடுக்க முடியாதவன் என்ற கூற்றை திரும்பவும் வலியுறுத்த நிகழ்வுகளின் தொடர்
  ஒரு கதையை போல் சம்பவத்தை சொல்லும் உங்கள் திறன் மிக அருமை புஷ்பாமாமியின் ஆதங்கம் அருமை இதே போல் பதிவுகள் அதிகம் கொடுத்து இன்றைய இளைஞ்சர் களின் எண்ண போக்கை மாற்றுங்கள் இல்லாவிட்டால் இந்நிலை திரும்பவும் வரும் இதோ
  http://poovizi.blogspot.in/2013/02/blog-post_14.html

  ReplyDelete
  Replies
  1. இந்த செயல்கள் ஆண் இனத்தின் மீதே நம்பிக்கை இழக்கச் செய்யும்.
   நன்றி மலர் பாலன்

   Delete
 8. தொலைக்காட்சியில் திரும்ப திரும்ப காட்டுவது நாமும் செய்தால் என்ன என்ற எண்ணத்தை தூண்டி விடுகிறதோ என்று நினைக்க வைக்கிறது.

  வருண் சொல்வது போல் சிறு துளி பட்டாலே உடம்பு எப்படி எரியும் ! தரையில் வைத்து முகத்தை தேய்ப்பது என்பது கொடூரம்.
  உண்மையான காதலில் அன்புதான் இருக்கும் அன்பு இப்படி பட்ட வன்முறையில் ஈடுபடாது.

  குழந்தைகளை அன்பும், கருணையும் நிரம்பியவர்களாய் வளர்க்க வேண்டும். அது ஒன்றே இது மாதிரி நடக்காமல் இருக்கும் வழி. இளகிய மனம், அடுத்தவர் துயர் கண்டு இரங்குதல் போன்ற குணம் குழந்தைகளுக்கு வேண்டும்.


  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் மேடம். வளர்ப்பில் கவனம் அதிகம் தேவை.

   Delete
 9. இப்படிப்பட்ட பிள்ளைகள் வளர்வதற்கு காரணம் 90% அவர்கள் பெற்றோர்களின் வளர்ப்பில் குறைபாடும் இருக்கிறது. இந்த விஷயங்களில் பெண்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. இது போன்ற சைக்கோக்கள் உருவாக பெற்றோர், குடும்ப சூழ் நிலைகள்தான் 90% காரணமாகிறது என்பது என் பார்வையில் அதிகமாய் பட்டிருக்கிறது.

   * பெற்றோர்கள் சரியில்லாத குடும்பத்தில் பிறந்த குழந்தைகள்

   * சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அன்பு கொட்டுகிறோம் என்று நினைத்து சிறு வயதிலேயே கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து அவர்கள் போக்கிலேயே வளர விடும் போது ஏமாற்றங்களை தாங்கி கொள்ளும் பக்குவம் வருவதே இல்லை. அவர்கள் எண்ணம் முழுதும் நினைத்தது நடக்க வேண்டும் ...அதற்காக என்ன செய்கிறோம்.. அதன் விளைவு என்ன என்பது யோசிக்கும் திறன் அறவே இருக்காது.

   இன்னொன்று பெண்கள் சுதந்திரம் என்பதை தவறாக கையாள்வது.. ஒரு சில பெண்களை கவனித்திருக்கிறேன். நாலைந்து ஆண்களிடம் ப்ரெண்ட்லியாக பேசுவது என்று சொல்லி கொண்டு காதல் உணர்வுகளை தூண்டும்படி பேசிக்கொள்வதை. தன் அழகால் நாலு பேர் தன் பின்னால் அலைந்து அல்லாட வேண்டும் என்று நினைப்பதை பெருமையாக நினைக்கும் சில பெண்களையும் பார்க்க முடிகிறது.

   ஒரு சில பெண்களின் ஆடை கலாச்சாரங்களும் மோசமாக இருக்கிறது. ஜீன்ஸ் , தொப்புள் தெரியும் படி டாப்ஸ் அதுவும் ட்ரான்ஸ்ப்ரண்ட் டைப். அந்த ட்ரான்ஸ்ப்ரண்ட்டிற்கு opp.கலர் உள்ளாடை. ஒரு கவர்ச்சி நடிகை போல் அணியும் உடை. அந்த உடை பார்ப்பவர்களை நிச்சயம் தவறான எண்ணத்திற்கு தூண்டும். எப்படி இது போன்று உடை அணியும் கலாச்சாரத்தை பெற்றோர்கள் எப்படி அனுமதிக்கிறார்கள் என்று புரியவில்லை. அழகு தெரிய அணிவதற்கும், ஆபாசமாய் தெரிய அணிவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நிறைய பெண்கள் அப்படிதான் இருக்கிறார்கள்.

   எனக்கு தெரிந்த ஒரு பெண் திருமண வயதிலிருப்பவர்.. தனக்கு வந்த ராங்க் காலிடம் வன்முறையை தூண்டும்படி பேசி கொண்டிருந்தாள். அது தவறான அழைப்பு எனும் போது எதற்காக பேசி கொண்டிருக்க வேண்டும்.. அழைப்பை துண்டித்து ரெஸ்பான்ஸ் கொடுக்காமல் இருந்தாலே பிரச்சினை அப்படியே போய்விடும்.

   ஊடகங்களும் மறைமுகமாய் வன்முறையை சொல்லி கொடுத்து கொண்டிருக்கிறது...

   இன்னும் நிறைய கோணங்கள் இருக்கிறது. விரிவாக அலசுங்கள்...

   எப்படி இருந்தாலும் வன்முறையின் வலி வேதனைக்குரிய விஷயம். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பெண்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

   நன்றி!

   Delete
  2. விரிவான கருத்துக்கு நன்றி. இக் கொடுமைகளுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.உளவியல் சார்ந்தும் ஆராயப் படவேண்டிய விஷயம் இது. பெண்களின் மாறிவரும் கண்ணோட்டம் ஆண்களின் சகிப்பின்மை, பெண்ணால் என்ன செய்து விடமுடியும் என்ற மனோபாவம், போன்ற பல காரணமாக இருக்கலாம்.

   Delete
 10. உலகளவில் ஆண்டுக்கு பதிவாகும் 1500 அமில வீச்சுகளில் 80 விழுக்காடு பெண்களுக்கு எதிரானவை என்று லண்டனை மையமாக வைத்து செயல்படும் 'Acid Survivors Trust International' - என்ற அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது மிகவம் குறைந்தளவிலான தகவல்கள் குறித்த புள்ளிவிவரங்களாகும். பாதிக்கப்பட்டோர் இதை வெளியில் சொல்ல பயப்படுவதாக அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

  வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் குடியேற்றம் தொடர்பான குற்றங்களில் விசா மோசடிகளில் ஈடுபட்டால் அதன் பிறகு அந்த நாட்டுக்குள் நுழைய முடியாதபடி தடை செய்யப்படுவார்கள். அதுபோல் ஈவ் டீசிங் கேஸில் குற்ரம் நிரூபிக்க பட்டவுடன் அவனுக்கு வாழ்நாள் முழுதும் திருமணம் செய்ய தடை விதிதிடலாம்.

  ஈவ் டீசிங் வழக்கில் தண்டனை பெறுபவர்களை பெண்கள் கல்லூரி வளாகத்தில் கழுத்தில் இவன் குற்றவாளி என்ற அட்டையுடன் சுகாதர ஊழிய பணிகளை செய்யவைக்கனும் அப்கோர்ஸ் கண்ணை கட்டிட்டு தான். அந்த மாதிரி வேலை செய்கிற போது ஒரு வேளை உணவு மட்டும் கொடுக்கனும் அப்பதான் வலி சோர்வுன்னா என்னான்னு தெரியும் கழுதைகளுக்கு. இவனுக்கு 50 ரூபாய்க்கு அமிலம் வித்த பண்ணாடைய கூடை தூக்கி கொண்டு (கண்ணைக் கட்டாமல்) இவன் பின்னால் வர வைக்கலாம்

  பஸ் ஸ்டாண்ட் கழிப்பறைகளை கழுவ சொல்லலாம். இவனுகளை சும்மா அடைச்சுவச்சு சோறு போடுறதாலே என்னா உபயோகம்.

  இராத்திரி ஒரு மணி வரை தூங்க விடாமல், இனையத்தில் வெளியாகும் படாவதி கவிஞர்கள் கவிதைகளை கொடுத்து படி படின்னு படிக்க வச்சு டார்சர் செய்யலாம். அப்ப தான் மன உளைச்சல் என்றால் என்னா என்று அந்த கண்ணறாவிப் பயலுகளுக்கு புரியும். ஒரு கவிதைக்கு 1 கிலோ மன உளைச்சல் உறுதி.  ReplyDelete
  Replies
  1. ஆஹா! வித்தியாசமான தண்டனைதான். வேணும்னா என் கவிதைகள் கூட இருக்கு,

   Delete
  2. ஆ.. இது சரியான தீர்ப்பு. ரொம்ப நன்றி முரளி சார்..!

   Delete
  3. சம்பவங்க நடக்கறதைப் பாத்தா நான் எழுதறது பத்தாது போல இருக்கு.இன்னும் முயற்சி பண்ணறேன். பத்தலன்னா கடன் குடுக்கணும் சொல்லிட்டேன். ஹிஹி

   Delete
 11. மிகவும் சரியான ஆலோசனை கூறும் பதிவு பாராட்டுகள் பயனுள்ள செய்திகள் ....

  ReplyDelete
  Replies
  1. நன்றி மாலதி மேடம்.

   Delete

 12. வணக்கம்!

  வாட்டி வதைக்கின்ற நாட்டு நிலைமையினை
  ஓட்டி அழித்தல் உயா்வு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி ஐயா!

   Delete
 13. இது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணம் எதுவாயினும்,வளர்ந்து வரும் வன் முறையின்,பெண்களுக்கு எதிரான கொடுமையின் ஒரு கூறுதான் இவை.தண்டிக்கலாம்;ஆனால் நிறுத்துவதற்கு என்ன செய்வது !

  ReplyDelete
  Replies
  1. அதே கேள்விதான் எல்லோர் நெஞ்சிலும். நன்றி குட்டன்.

   Delete
 14. செய்தித் தாள்களிலும், ஊடகங்களிலும் வரும் இந்தச் செய்திகளே பல பாவிகளுக்கு யோசனை தருவதாக அமைந்து விடுகிறதோ என்ற ஐயம்...

  ReplyDelete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete
 16. சைக்கோ மனிதர் தான் இப்படி நடப்பவர்கள்.

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895