என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Thursday, March 7, 2013

காதலை சொல்வது எப்படி?நீயா? நானா? சொல்லிக் கொடுத்தது

      பள்ளிச்  சிறுவன் முதல் பல்லு போன தாத்தா வரை  காதல் அனைவரையும்  ஆட்டிப் படைக்கும் வல்லமை பெற்றுள்ளதாகத் திகழ்கிறது.     அந்தக் காதல் ஒரு மந்திர வார்த்தை. சமீபத்தில் தந்திரமாக அதைக் கையில் எடுத்துக்கொண்டது விஜய் டிவி. நீயா? நானா? நிகழ்ச்சி. எதிர் பாலின ஈர்ப்பை காதல் என்று நினைத்துக் கொள்ளும் டீன் ஏஜ்  மாணவர்களுக்கு காதலை சொல்வது எப்படி என்று ட்யுஷன் எடுத்தது போலிருந்தது  நிகழ்ச்சி. டீன் ஏஜினரைக் கவர இன்னொரு உத்தியாகத்தான் இதை பார்க்க முடிந்தது. அதற்கு வெற்றி கிடைத்தது என்று கூட சொல்லலாம்.
 
        நிகழ்ச்சியின் விளம்பர இடைவேளையின்போது வெளியே வந்து பார்த்தால் மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் இதைப் பற்றி பேசுவதை உணரமுடிந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள் நம் வீட்டிலும் நிகழ்ச்சியைப் பார்ப்பார்களே என்ற அச்சமும்  தயக்கமும் இல்லாமல் காதல் பற்றி பேசினர். பாவம் பையன்கள்தான் தயங்கித் தயங்கித் பேசியதாகத் தோன்றியது.
    ஏற்கனவே விதம் விதமாக காதலை சொல்ல சினிமா போதாதென்று இப்படியெல்லாம் நிகழ்ச்சி தேவையா? என்ற எண்ணம் ஏற்பட்டாலும் சுவாரசியமாகத்தான் இருந்தது. இதில் கலந்து கொண்டவர்கள்(அனைவருமே மாணவர்கள்தான் என்று நினைக்கிறேன்) முகத்தில் ஒரு வித பரவச உணர்வு தெரிந்தது. கட்டாயம் காதலித்தே ஆக வேண்டும் என்று  பையன்களும் , நிச்சயமாக காதலிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று பெண்ணும் விரும்புவதை உணர முடிந்தது.  காதலை ஏற்றுக் கொள்வது அல்லது மறுப்பது என்ற முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாகவே பெண்கள் கருதிக் கொண்டதாகத் தெரிகிறது. பையன்களின் எண்ணமும் அதுவாகவே இருக்கிறது.. காதலை சொல்ல முடியாததையும் காதல் ஏற்கப் படாததையும் வாழ்வின் மிகப் பெரிய துயரமாகக் கருதினர் இந்த இளைஞர்கள்.

     காதலை சொல்லும்போது லேசான மழை இருக்கணும். இருட்டா இருக்கணும் மெழுகுவத்தி வெளிச்சத்துல காதலை சொல்லணும்,யாரும் இல்லாத சாலையா இருக்கணும்,கடற்கையா இருக்கணும்  போன்ற சினிமாத்தனங்களை இளைஞிகள்  விரும்புவது புரிந்தது. காதலுக்காக  எதை எழுதினாலும் அதை கவிதை என்று ஏற்க இந்த அம்மணிகள்  தயாராக இருந்தனர்.

      தான் சொல்வதை தனது அம்மா பார்த்துக் கொண்டிருப்பார் என்று லேசான குற்ற உணர்வோடு "அம்மா சாரி" என்று சொல்லிக்கொண்டே தான காதல் தவிப்பை, தன் உணர்வுகளை ஒரு பையன்  அழகாகச் சொன்னது   டீன்ஏஜ் பருவத்தினரின் உள்ளங்களை படம் பிடித்துக் காட்டியது 

  முன்பெல்லாம் காதலை சொல்ல கடிதம் ஒரு கருவியாய் அமைந்ததாக கோபிநாத் குறிப்பிட்டார்..அதை அப்போதைய  பெண்கள் விரும்பவும் செய்தனர். காதல் நிறைவேறா விட்டாலும் கடிதங்களை இன்றும் பத்திரமாக பாதுகாத்து எப்போதாவது எடுத்துப் பார்த்து மகிழ்கிறவர்களும் உண்டு. ஆனால்  கடிதத்தின் மூலம் காதலை வெளிப்படுத்துவது என்று ஒன்று இருப்பதாகவே இரு தரப்பினரும் நினைத்துப் பார்க்கவில்லை போலிருக்கிறது. கடிதங்கள் சுருங்கி குறுஞ்செய்தி ஆனதன் விளைவாக இருக்கலாம் 

  காதல் இயல்பானது;.சுவாரசியமானது; கடிதம் எழுதத் தெரியாதவனையும் கவிதை  எழுதவைக்கும் இந்தக் காதல் படிப்பிலும் வாழ்க்கையிலும் எந்தவித நல்ல/எதிர்  விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது விவாதிக்கப் படவில்லை. பதின்ம வயதினருக்கு, அட! இப்படிக் காதலை சொல்லிப் பார்க்கலாம் என்றும், அதைத் தாண்டியவருக்கு நாம் காதலித்தபோது இப்படியும் நம் காதலை சொல்லி இருக்கலாமோ என்றும் நமக்கு  இப்படி வாய்க்கவில்லையே என்று ஒரு சிலரையும் இந்நிகழ்ச்சி நினைக்க  வைத்திருக்கக் கூடும்.

   சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ரேடியோ ஜாக்கி ராஜவேலு  "இந்தப் பெண்கள், காதல்ல எனக்கு சர்ப்ரைஸ் வேணும்; கேர் வேணும்; அட்டேன்ஷன் வேணும்னு கேட்டாங்க  ஏன் எனக்கு ரெஸ்பெக்ட் வேணும்னு யாருமே கேக்கல?" என்று  கேட்டது கொஞ்சம்  சிந்திக்க வைத்தது.

     அறிவுபூர்வமாக  காதலை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதே காதலின் சிறப்பாகவும் இருக்கிறது. அதுவே குறைபாடாகவும் இருக்கிறது.  தான் காதலிக்கும் பெண் வேறு ஒருவனை காதலிப்பதை அறிந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு அவனை அடிக்கத் தோணும் என்றும் அவளோட எதிர்காலம் நன்றாக இருக்கக் கூடாது என்று நினைக்கவும் தோன்றும் என்று  ஒருவன் கூறியது சற்று பயத்தை விளைவித்தது. கோபிநாத், காதலை அவ்வளவு சீரியாசாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கண்டித்தாலும்  விடலைக் காதலை தூண்டுவதாகவே நிகழ்ச்சி அமைந்திருந்தது.  

  காதல் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் அமிலவீச்சு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் காதல் பற்றிய புரிதலை இந்நிகழ்ச்சி உணர்த்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.  

********************************************************************************
மகளிர்தின வாழ்த்துக்கள்
இதையும்  படிச்சுப் பாருங்க!
என் மனைவிக்கு எதுவும் தெரியாது.(கடந்த ஆண்டு மகளிர்தினபதிவு)

நல்ல ஆலோசனைகளும் ஆசிகளும் வழங்கும்  பெரியவர் ஒருவரைத் சந்தித்து தன் மனைவியைப் பற்றி சொல்லி ஆலோசனை கேட்டுக்கொண்டிருந்தார் ஒருவர்.
   "அய்யா! என் மனைவிக்கு எதுவுமே தெரியவில்லை. நாட்டு நடப்பு எதுவும் தெரியாது. முதல்வர் யார்?பிரதம மந்திரி யார் என்று கூட தெரியாது. அரசியல் பற்றி இம்மியும் தெரியாது. இலக்கியங்கள் கவிதைகள் பற்றி தெரியாது. புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கிடையாது. நாளிதழ்கள் கூட வாசிப்பதில்லை. அனைவரும் தெரிந்து வைத்திருக்கக் கூடிய சினிமா நடிக நடிகயைரின் பெயர்களும் தெரியாது. என் நண்பர்களின் மனைவிகள்  அரசியல், கணினி, விளையாட்டு, பங்கு வர்த்தகம்,கலைகள், இலக்கியங்கள், கவிதைகள், என்று வெளுத்துக்கட்டுகிறார்கள். இவளுக்கோ celphone operate பண்ணக்கூட தெரியாது. எவ்வளவுதான்  சொன்னாலும் இவற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்படவில்லை.அவற்றை தெரிந்துகொள்ளவும் முயற்சி செய்வதில்லை. இவளை எப்படித் திருத்துவது என்று நீங்கள்தான் ஐயா ஆலோசனை கூறவேண்டும்."54 comments:

 1. நீயா நானா பற்றி அடிக்கடி நீங்கள் நல்ல செய்தியாய் சொல்வது என்னை பார்க்கத் தூண்டுகிறது.நானும் நேரம் கிடைக்குபோது பார்ப்பேன் ரசிப்பேன் யோசிப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கண்ணதாசன்.

   Delete
 2. அடடா.... இப்பொழுதெல்லாம் டீவியில்
  காதலிக்கக் கூடக் கற்று தருகிறார்களா...?

  நான் டீன் ஏஜ்ஜியாக இருந்த போது
  அந்த பாக்கியம் எல்லாம் எ(ந)மக்கு
  கிடைக்கவே இல்லை. ம் ம் ம்...

  ReplyDelete
  Replies
  1. அதான் கவிதைகள் நல்ல எழுதறீங்களோ?

   Delete
 3. //காதல் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் அமிலவீச்சு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் காதல் பற்றிய புரிதலை இந்நிகழ்ச்சி உணர்த்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். //
  உணர்த்தவில்லை என்பதே என் கவலையும்.
  மேலும் பல அமில வீச்சுக்களை எதிர்பார்க்கலாம் என்பதை நிகழ்ச்சி தெளிவாக்கியது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோகன்

   Delete
 4. எப்படியோ உங்களையும் இழுத்து விட்டது நிகழ்ச்சி...

  ReplyDelete
  Replies
  1. இந்த மாதிரி நிகழ்ச்சிகளை பார்க்கும்போது அந்த விவாதத்தில் பதில் சொல்லனும்னு தோணும்.அது முடியாததால பதிவா போடறேன்.
   நன்றி DD

   Delete
 5. மீடியாகளின் முதலீடே இன்று டீன் ஏஜ் தானே

  ReplyDelete
  Replies
  1. டிவியில் மாணவர்களை கிரிக்கெட் மேட்ச்சை தவிர வேற நிகழ்ச்சிகளுக்கு ஈர்ப்பது கடினம்.அதுக்கு காதல்தான் சரியான டாபிக்

   Delete
 6. ஆ...! ஆ...! காதல் என்னைக் காதலிக்கவில்லை... அவ்வ்வ்வ்! இனி நான் இந்த நிகழ்ச்சியப் பாத்தும், பதிவப் படிச்சும் என்னா பிரயோஓஓஜனம்! மீ எஸ்கேப்!

  ReplyDelete
  Replies
  1. கருத்து சொல்லி இருக்கீங்க! ஒட்டு போட்டிருப்பீங்க அது எனக்கு ப்ரயோஜோனம்தானே . ஹிஹிஹி

   Delete
 7. ****கடிதம் எழுதத் தெரியாதவனையும் கவிதை எழுதவைக்கும்****

  I dont think so, murali! :-))))

  ReplyDelete
  Replies
  1. அது முதல்ல கவிதையா இருக்குமாங்கறது சந்தேகம்தான். ஆனா ஏதோ ஒன்னு மொக்கையா எழுதவாவது ட்ரை பன்னராங்கன்னுதன் நினைக்கிறேன். .கவிதை எழுத முயற்சிக்க வைக்கும்னு சொல்லி இருந்தா சரியா இருக்கும்னு நினைக்கறேன்.

   Delete
 8. நீயா நானா சூப்பர் ஹிட்டோ இல்லையோ... ஆனா நீயா நானா பற்றிய உங்க விமர்சனம்தான் சூப்பர் சுவாரஸ்யம். அழகான தொகுப்பு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 9. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ரேடியோ ஜாக்கி ராஜவேலு "இந்தப் பெண்கள், காதல்ல எனக்கு சர்ப்ரைஸ் வேணும்; கேர் வேணும்; அட்டேன்ஷன் வேணும்னு கேட்டாங்க ஏன் எனக்கு ரெஸ்பெக்ட் வேணும்னு யாருமே கேக்கல?" என்று கேட்டது கொஞ்சம் சிந்திக்க வைத்தது. //

  சிந்திக்க வேண்டிய விஷயம் தான்.

  ReplyDelete
  Replies
  1. என்னத்தை சொல்றது எனக்கு டீ (Tea இல்லை) போட்டு காதலை சொல்லனும்னு ஒரு பொண்ணு சொன்னது.

   Delete
 10. ## சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ரேடியோ ஜாக்கி ராஜவேலு "இந்தப் பெண்கள், காதல்ல எனக்கு சர்ப்ரைஸ் வேணும்; கேர் வேணும்; அட்டேன்ஷன் வேணும்னு கேட்டாங்க ஏன் எனக்கு ரெஸ்பெக்ட் வேணும்னு யாருமே கேக்கல?" என்று கேட்டது கொஞ்சம் சிந்திக்க வைத்தது.##
  அவர்கள் பேசியது காதல் அல்ல விவரமறியா infactuation எனத் தோன்றுகிறது ...


  ##காதல் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் அமிலவீச்சு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் காதல் பற்றிய புரிதலை இந்நிகழ்ச்சி உணர்த்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ....##

  அங்கு பேசிய இளைஞர்களின் அன்பின் மீதான கோபத்தை உணர்த்தும் விதமான எந்த சிறப்பு விருந்தினர்களும் அழைக்கப்படவில்லை என்பது வருத்தமே...
  முழுவதுமாக பார்க்கவில்லை நான்... உங்கள் பதிவு முழுமையாக்கிவிட்டது நன்றி

  ReplyDelete
  Replies
  1. \\நிகழ்ச்சியின் விளம்பர இடைவேளையின்போது வெளியே வந்து பார்த்தால் மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் இதைப் பற்றி பேசுவதை உணரமுடிந்தது.\\ புரியலையே ........!! நீங்க எங்கே பார்த்தீங்க? நிகழ்ச்சியில் கலந்துகிட்டீங்களா?

   பதிவுக்கு நன்றி நான் இதைப் பார்க்கவில்லை உங்க பதிவைப் படிச்சதால் பார்க்க இருக்கிறேன்!!

   Delete
  2. உண்மைதான். பொருத்தமான சிறப்பு விருந்தினர் இந்த நிகழ்ச்சிக்கு தேவை இல்ல்லைன்னு முடிவு பண்ணிட்டாங்கோ போல இருக்கு.

   Delete
  3. நன்றி ஜெயதேவ் சார்!

   Delete
 11. Infactuation சொல்ல முடியாது Infatuation என்றால், ஒரு நபரின் மீது ஏதாவது ஒன்று அல்ல பல காரணங்களுக்காக ஏற்படும் அதீதிய பற்று. அது வயதொத்த பெண்ணொ அல்லது ஆணாகவோ இருக்கும்போது அன்னாரின் அன்புக்கு பாத்திரமாகவேண்டும்; அவ்வன்பு தமக்கு நிரந்தரமாக்கிடைக்க வேண்டும் என்ற ஏக்கம்.
  அப்படியில்லாமல் பிறரென்றால் அன்னார் செய்வதை மிகமிக விரும்பிக்கொண்டேயிருத்தல். அதைப்போல தாமும் செய்ய நினைத்தல். இவைதான் .

  சினிமா நடிகர் மீது வருவது இப்படி., crush என்றும் சொல்வதுண்டு. சிறிய வயதில் தொடங்கி, வாலிபப்பருவம் வரை தொடரும் உணர்விது.
  நீயா நானா நிகழ்ச்சியில் அவர்கள் பேசிக்கொண்டதை இனக்கவர்ச்சி என்று மட்டுமே சொல்ல்லாம். பதின்மவயதில் தொடங்கும். அதை காதலாகப் பாவிப்பதற்கு காரணம் நம் திரைப்படங்கள், இலக்கியங்கள் அப்படிப்பாவித்து படைப்பதால். கண்டதே காட்சி; கொண்டதே கோலம்.

  இன்று பேசியவர்கள் சிலவருடங்கள் கழித்து தாங்கள் பேசியதை மீண்டும் பார்க்கும்போது வியப்படைவார்கள். காரணம் சில வருடங்களுக்குப்பிறகு, காதலுக்கு இனக்கவர்ச்சி அடிப்படைகளில் ஒன்றாயினும், அக்கவர்ச்சி காதலாக மலர்வதற்கு பலபல அந்நிய காரணங்கள் உண்டு. அவை எல்லாருக்கும் நிகழா. எனவே காதலெனப்படுவது ஒரு சிலருக்கே நிகழ்வது. எப்படி எல்லாரும் டென்னிஸ் வீர்ராகவோ, வீராங்கனையோ ஆகமுடியாது. ஆனால் விளையாடத் தெரியும் இரசிக்க முடியும் அப்படி. எனவே இனக்கவர்ச்சியே தாம் உணர்ந்தது என நினைப்பார்கள். வாழ்க்கை ஓடும் கண்டிப்பாக.

  A phase in the development and growth of early manhood and womanhood is what we witnessed in then program. That is what we have witnessed in the program. It should be pointed out to these young people only by responsible elders who these youngsters take seriously. If not, they will confuse this evanescent (temporaray) sexual attraction with an everlasting ‘do or die’ affairs. In cases of disappointments acid attacks will occur.

  ReplyDelete
  Replies
  1. ***Infactuation சொல்ல முடியாது Infatuation என்றால்***

   There is no word spelled as "infactuation" in English, it is only infatuation!

   Delete
  2. ***எனவே காதலெனப்படுவது ஒரு சிலருக்கே நிகழ்வது.***

   You can not pick few cases and say, these are "real love" and others are not. The problem with this is, the people who claim today that as "love" would later (in future) say that "it was not love" what they had. Then you will be in real trouble for saying that as "love"

   Because YOU dont know what is real love. Neither the couple who think as love knows that! it is complicated.

   Delete
 12. ஜாக்கி ராஜவேலு கருத்து ஏற்க முடியாதது. ரெஸ்பெக்ட் என்பது ஒரு தகுதிக்குக் கொடுப்பது. ஒருவரிடம் தான் எதிர்பார்க்கும் தகுதி இருப்பின், அல்லது பொதுவாக எதிர்பார்க்கப்படும் தகுதி/தகுதிகள் இருப்பின், ரெஸ்பெக்ட் வரும். தன்னாலேயே வரும்.
  ஒரு பெரிய வயதானவர் வரும் போது நாம் எழுகிறோம். காரணம், அவர் வயது. அவர் எவ்வளவோ அனுபவசாலி. அதன்மூலம் அவருக்குக் நமக்குத்தெரியா பல தெரியும் என்ற உணர்வு.
  ஒரு ஊருக்கு உழைத்த / உழைக்கும் நபர் வரும்போது அதே. நாம் எதிர்ப்பாத்த நற்குணங்கள் அவரிடம் இருக்க்கண்டு அவர்மீது எழும் உணர்வே ரெஸ்பெகட்.
  ஆனால் நான் ஒரு இளைஞன். அவள் ஒரு இளைஞி. அவள் என்ன ரெஸ்பெக்ட், நான் அவளை ரெஸ்பெகட் பண்ண என்னென்ன தகுதிகள்? அவளுக்குத் தெரியுமா இல்லை எனக்குத் தெரியுமா?
  ஜாக்கி ராஜவேலு, முதலில் சொற்களின் உட்பொருளை அறிய வேண்டும்.
  காதல் ரெஸ்பெக்ட்டின் அடிப்படையில் அமைவதன்று. அது தோழமையிலே அமைவது. இங்கு நாம் கொடுக்கவேண்டியது, மற்றவருக்கு எம்பதியே. அது தன்னாலேயே காதலாக மலரும்.
  பயப்பட வேண்டாம். தாழ்வு மனப்பான்மையும் காதலாக மலரும். ஆனால் பெண்ணைப் பொருத்த்மட்டிலுமே.

  ‘நான் வெறும் செவிலிப்பெண். ஆனால் நீங்களோ ஒரு புகழ் பெற்ற மருத்துவர்”
  இவ்வசனம் தமிழ்நாடு முழுக்க கேட்டிருக்குமே?

  ஆணிடம் சிலசமயம் நிகழும்: ஒரு உடலூணமுடைய என்னிடம் வாஞ்சையா? சாத்தியமா?

  இந்த வசனத்தையும் கேட்டிருப்பீர்கள். இரண்டுமே தாழ்வுமனப்ப்பானமை காதலாக மலருவது.

  ReplyDelete
 13. But beware of any one treating you respectfully if that person is of your age.

  Today is International Women Day and the following must be said today.

  What a young woman needs from a young man is not respect. Because to respect is to treat you low, not as his equal. To respect is to patronise you.

  An young man and an young man are sailing in the same boat; and they take driver or sailor's seat alternatively. No one is a leader.

  Thus, disrespect respect. Then what is to be needed?

  Dignity is your right. It should not be asked for. It should be given by the man on his own. That will sometimes blossom into love.

  If someone treats you with dignity, it is not patronising. You do so to him. Equals treat one another with dignity.

  Respect kills love. Rajavelu is therefore wrong.

  ReplyDelete
 14. All of you should read Pride and Prejudice by Jane Austen. Elizebeth Bennet is the heroine of the novel.

  Her character is the ideal one for all woman in love.

  Pride in herself. So rejected respect and patronising. When the man who loved her, began to give her dignity, she told him: I love you too.

  You should also read Jane Eyre. A poor and bland woman. She would have said like Saroja Devi in Paalum Palamum and went behind a man. But she said: So what if I am not beautiful. I deserve my dignity of being a woman. You may be the Richie rich. But don't come near me with patrnosing attitude. Dignity is important for me. If you give, chances are you may be accepted by me.

  Tamil women should learn these lessons on dignity. Never go down to a man. Let him come upto your expectations.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குலசேகரன்.

   Delete
 15. ”காதல் என்பது எதுவரை?
  கல்யாணம் ஆகும் அதுவரை” என்ற பழைய சினிமா பாட்டு நினைவுக்கு வருகிறது.

  காதல் உண்மையோ பொய்யோ,உங்களின் இந்தப் பதிவைச் சலிப்பில்லாமல் படிக்க முடிகிறது.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நட்ன்ரி பரமசிவம் சார்

   Delete
 16. நீயா நானா பற்றிய உங்கள் அலசல் மிக சுவாரஸ்யம்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மனோ மேடம்

   Delete
 17. என்னைய பொறுத்த வரைக்கும் போன வார நீயா நானா ஒரு மொக்க ...! முழுக்க முழுக்க, எதார்த்தங்களை பேசாத ஒரு எபிசோடு . சிறப்பு விருந்தினர்கள் ...? உச்சபட்ச கொடுமை .

  போன வார எபிசோடு, முழுக்க முழுக்க விடலை பருவங்களை குறிவைத்து எடுக்கப்பட்ட ஒரு சீப்பான வியாபார உத்தி . விஜய் டிவிக்கு கண்டனம் .

  ReplyDelete
  Replies
  1. விஜய் டிவி மட்டும் இல்ல எந்த டிவிக்கும் வியாபார நோக்கம்தான் முக்கியம்.

   Delete
 18. நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை;சிறப்பாக அலசியிருக்கிறீர்கள்.காதல் ஒரு மென்மையான உணர்வு என்பதைப் பலர் புரிந்து கொள்வதில்லை

  ReplyDelete
  Replies
  1. நன்றி சென்னை பித்தன் ஐயா!

   Delete
 19. இப்படியொரு நிகழ்ச்சி தேவையில்லாதது! இந்த நிகழ்ச்சி முதலில் சுவாரஸ்யமாக இருந்தாலும் இப்போதெல்லாம் ஓவர் மொக்கையாகிவிட்டது! தலைப்புக்களும் ஆரோக்கியமாக இல்லை! உதாரணத்துக்கு நீங்கள் சொன்ன நிகழ்ச்சியையே எடுத்துக் கொள்ளலாம்! நல்ல பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மற்ற நிகழ்ச்சிகள் இதை விட மோசமாக இருக்கிறது. சுரேஷ்

   Delete
 20. நீயா நானா மட்டுமல்ல, வேறெந்த நிகழ்ச்சிகளும் அவ்வளவாக பார்ப்பதில்லை..... :)

  நல்ல பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நல்ல பழக்கம் தொடர்க!

   Delete
 21. மொக்கை என்று இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைத் தள்ள முடியாது.

  பொது ஜனத்தின் இன்றைய சிந்தனை எப்படி போகிறது? அது நம்மை எச்சரிக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொள்ள உதவுவதே இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் முதல் நன்மை.

  எடுத்தக்காட்டாக, இருவாரங்களுக்கு முன் நிகழ்ந்த நீயா நானாவில் கல்லூரி மாணவர்களின் சிந்தனை எப்படி? அவர்கள் எப்படி இன்றைய சமூக அவலங்களை அணுகுகிறார்கள் என்று தெரியவந்தததில் நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை கிடைத்தது. அதாவது, அவர்கள் தான் என்று மிகச்சிறிய வட்டத்துக்குள் அப்பால் நகரவேயில்லை என்பதுதான்.

  அதைப்போல இன்றை டீன் ஏஜர்கள் காதலைப்பற்றி என்ன அணுகுமுறைய விரும்புகிறார்கள் என்பதைத்தான் போனவாரம் நிகழ்ச்சி காட்டியது. அதுவும் ஒரு எச்சரிக்கையைத்தந்தது. அது அமில வீச்சு தொடரும் என்பதைத்தான். அதாவது தனக்குக் கிடைக்காத பெண் இருந்தென்ன என்ற நோக்குதான்.

  இப்போது சொல்லுங்கள்: இப்படிப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மொக்கைகளா?

  ஆமென்றால் நிகழ்ச்சிக்கு நடுவில் ஒரு குத்துப்பாட்டு வைத்தால் சரியாகிவிடும்.

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி

   Delete
 22. சிறப்பான நிகழ்ச்சி தான் அவ்வப்போது நானும் பார்ப்பதுண்டு .
  சில சமையம் மொக்கை :)

  ReplyDelete
  Replies
  1. பல சமயங்களில் அப்படித்தான் இருக்கிறது.
   வருகைக்கு நன்றி அம்பாளடியாள்

   Delete
 23. நான் பார்க்கவில்லை. இதுபோன்ற அவசரக் காதல்கள் இன்ஸ்டன்ட் விவாகரத்துக்கும் வழி வகுக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. பின் விளைவுகளை விவாதித்திருக்கலாம்.

   Delete
 24. சிறப்பான சிந்திக்கவைக்கும் பகிர்வுகள்...பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜேஸ்வரி

   Delete
 25. ஆனா இந்த நிகழ்சியில கோபிநாத் கொஞ்சம் ஓவரா பெசற மாதிரியே இருக்கு.. எனக்குமட்டும்தானா?

  ReplyDelete
  Replies
  1. நிஜம்தான்.மொத்த பங்கேற்பாளர்கள் பேசியதையும் கோபி பேசியதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் கோபிநாத் பேசுவது அதிகமாகத் தான் இருக்கும்.

   Delete
 26. நிகழ்ச்சி பற்றிய அலசல் அற்புதம்.

  ReplyDelete
 27. நானும் பார்க்கவில்வை.
  தங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
  மிக்க நன்றி முரளி.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895