என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Tuesday, March 26, 2013

நிலா அது வானத்து மேலே!


வானப்பெண் 
இரவில் சூடிய 
சந்தனப்பொட்டு 

விண்வெளி வீதியில் 
உலா வரும் 
ஒளிக்கதிர் 

நட்சத்திரத் தொண்டர்கள் 
புடைசூழ 
இரவு மைதானத்தில் 
பேரணி நடத்தும் 
பெருந்தலைவர் 

கறுப்புத் தட்டில் 
கணக்கற்ற  நட்சத்திரக் 
கற்கண்டுகள் நடுவே 
வைக்கப்பட்ட லட்டு 

இருட்டைப் போக்கும் 
ஒளியை 
இரவல்  வாங்கியேனும் 
இப்பூமிக்கு 
ஈந்தளிக்கும் வள்ளல் 

வானத்து  மேல் அமர்ந்து
பூமியை புன்னகையுடன் 
பார்த்துக் கொண்டிருக்கும் 
பூமிக் காதலி 

நட்சத்திரங்கள்  
நட்புடன்  விளையாடும் 
பூப்பந்து

எத்தனை  முறை
 தேய்ந்து போனாலும் 
ஓய்ந்து  போகாது 
வளர்ந்து  காட்டும் 
தன்னம்பிக்கை  சின்னம்

வள்ளுவன் முதல் 
வைரமுத்து வரை 
கவிஞர் பலருக்கு 
சேதிகள் பல சொன்ன 
போதிமரம் 

வான ஏட்டில் 
இயற்கை  எழுதிய 
இணையிலா  கவிதை

***********************
39 comments:

 1. ஆகா... என்னவொரு ரசனை...!

  ஓஹோ... நாளைக்கு தான் பௌர்ணமியோ...?

  மிகவும் பிடித்த வரிகள் :

  நட்சத்திரங்கள்
  நட்புடன் விளையாடும்
  பூப்பந்து

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்!

   Delete
 2. ரசனைமிக்க வரிகள் பாஸ்

  ReplyDelete
 3. nilaa mattum alla ikkavithhaiyum iNaiyillaathathe aazhamaana sinthanai Manam thotta kavithai thodara vaazhththukkal

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார்

   Delete
 4. எத்தனை முறை
  தேய்ந்து போனாலும்
  ஓய்ந்து போகாது
  வளர்ந்து காட்டும்
  தன்னம்பிக்கை சின்னம்//

  கவிதைக்கு உயிர் கொடுத்துடீங்க அருமை வாழ்த்துகள் உங்கள் சிந்தனகள் மேலும் மெருகேற

  ReplyDelete
 5. கவிதைக்கு தீனி போட நிலா குறையே வைப்பதில்லை! குழந்தைகளுக்கு நிலா காட்டி சோறூட்டும் பெண்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது. முன்பெல்லாம் இயற்கையை சுட்டி காட்டிதான் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவார்கள். "அங்க பாரு நிலா" இங்க பாரு குருவி... அது பாரு காக்கான்னு இப்பல்லாம் நாமளே நிலாவை என்னிக்காவது ஒரு நிமிஷம் நிமிர்ந்து பார்க்கிறோமா என்று நினைக்குமளவு வேகமாக போயிட்டிருக்கு வாழ்க்கை. உங்க கவிதை மூலமா நிலவை ரசிச்சி பார்க்க முடிந்தது. // கறுப்புத் தட்டில்
  கணக்கற்ற நட்சத்திரக்
  கற்கண்டுகள் நடுவே
  வைக்கப்பட்ட லட்டு // சோறூட்டும் அன்னைக்கு நிலவையே லட்டாக்கியது வித்தியாசம்..! வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 6. இருட்டைப் போக்கும்
  ஒளியை
  இரவல் வாங்கியேனும்
  இப்பூமிக்கு
  ஈந்தளிக்கும் வள்ளல்

  உண்மை! நல்ல கவிதை ! தொடரட்டும்!

  ReplyDelete
 7. அழகிய கவிதை. சிறப்பான சிந்தனை. இனிய வாழ்த்துக்கள்!

  மனவானில் நிலவின் உதயம்
  இருள்நீங்க இனித்திடும்வேதம்
  முரளி மூங்கில் இசைதரும்கீதம்
  அழகென்று உரைத்திடத்தீரும்...

  ReplyDelete
 8. அழகான கவிதை மூங்கில் காற்று.
  கவிதையையும் தொடருங்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணா

   Delete
 9. எத்தனை முறை
  தேய்ந்து போனாலும்
  ஓய்ந்து போகாது
  வளர்ந்து காட்டும்
  தன்னம்பிக்கை சின்னம்//

  அருமையான வரிகள்.
  கவிதை நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கோமதி மேடம்

   Delete
 10. Replies
  1. முதல் வருகை என்று நினைக்கிறேன்.மிக்க மகிழ்ச்சி. நன்றி.

   Delete
 11. நல்ல கற்பனை சார் !! இயற்கையை ரசிக்கும் போதெல்லாம் கவிதை பரிசை நமக்கு அது தருகிறது :)

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் விஜயன்

   Delete
 12. தூத்துக்குடி: தூத்துக்குடியில் சில இடங்களில் நச்சு வாயு பரவிய விவகாரம் குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு ஸ்டெர்லைட் ஆலைக்கு அம் மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு ஏற்படுவதால் இழுத்து மூட வலியுறுத்தி போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

  திண்டுக்கல்
  பாலன் தலைமையில் பலர் ஒரு நாள் பின்னூட்டம் இட மறுக்கும் போரட்டத்தைக் கையில் எடுத்துள்ளார்கள். அதைப் பார்த்த பல பிரபல பதிவர்கள் அதிர்ச்சிக்குள்ளானதுடன் பாலனுக்கு அது சாத்தியமா என்று ஆச்சரியப்படவும் செய்தார்கள்.


  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டங்களால் பல பதிவர்களை நம்பிக்கை கொள்ளச் செய்பவர் தனபாலன்

   Delete
 13. ஆம் அய்யா.வானம் ஒரு போதிமரம் தான். நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜெயகுமார் சார்

   Delete
 14. நட்சத்திரங்கள்
  நட்புடன் விளையாடும்
  பூப்பந்து

  அழகு நிலவில் அற்புத கவிதை ..!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ராஜேஸ்வரி

   Delete
 15. நிலவு என்றுமே அழகு. அது தரும் கற்பனைகள் எண்ணிலடங்கா...

  நல்ல கவிதை முரளி.

  ReplyDelete
 16. நன்றி நாகராஜ் சார்

  ReplyDelete
 17. பொய், அறியாமை இருந்தாத்தான் கவிதைகளை இரசிக்க முடியுது!!

  \\நட்சத்திரத் தொண்டர்கள்
  புடைசூழ
  இரவு மைதானத்தில்
  பேரணி நடத்தும்
  பெருந்தலைவர்
  கறுப்புத் தட்டில்
  கணக்கற்ற நட்சத்திரக்
  கற்கண்டுகள் நடுவே
  வைக்கப்பட்ட லட்டு \\

  உண்மையில் விண்மீன்கள் நமது சூரியனைவிட பல மடங்கு பெரியவை என்ற உண்மையை மறந்தால் இதை இரசிக்கலாம்!!

  ReplyDelete
  Replies
  1. பொய் அறியாமை என்று சொல்வதை விட கற்பனை என்று சொன்னால் மகிழ்வேன். இருட்டைப் போக்கும்
   //ஒளியை
   இரவல் வாங்கியேனும்
   இப்பூமிக்கு
   ஈந்தளிக்கும் வள்ளல்//
   இதில் உண்மையும் உண்டு. இயற்கையாக நடப்பதை ஒரு பொருளின் மேல் ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி அதை இதில் பயன்படுத்தி இருக்கிறேன்.
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 18. அரும அரும அரும அரும அரும

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாலசுப்ரமணியன்

   Delete
 19. “தேய்ந்து போனாலும் ஓய்ந்து போகாது” என்ற சொற்றொடர் அருமை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி செல்லப்பா

   Delete
 20. அருமை.. பலகோண சிந்தனை கவிதைகள்........... த.ம. 9

  ReplyDelete
 21. //வான ஏட்டில்
  இயற்கை எழுதிய
  இணையிலா கவிதை//

  அனைத்து வர்ணனைகளிலும் இந்த வரிகள் தான் மிக அழகு!!

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895