என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Friday, March 22, 2013

உண்மையில் நீங்கள் சமூக அக்கறை உள்ளவரா?


  சினிமாவைப் போலவே ஒரு பதிவு ஹிட்டாகுமா ஹிட்டாகாதா என்று கணிக்க முடிவதில்லை. ஒரு சினிமா ஹிட்டாகா  விட்டால் நஷ்டம் ஏற்படும். பதிவு ஹிட்டாகாவிட்டால் நஷ்டம் ஏற்படாது  என்றாலும் கொஞ்சம் மனக் கஷ்டம் ஏற்படுவதுண்டு.  நாம் நம்பிக்கையுடன் எழுதும் சில பதிவுகள் அதிகம் பேரின் கவனத்தைக் கவர்வதில்லை. அல்லது கவரும் விதத்தில் அப்பதிவு எழுதப் படவில்லை. அப்படிப்பட்ட பதிவில் ஒன்றுதான் கடந்தவாரம் நுகர்வோர் உரிமை நாளில்(15.03.213) நான் எழுதிய "நுகர்வு வெறி" என்ற பதிவு. வழக்கத்தை விட மிகக் குறைவானவர்களே பார்த்தபோதும் எப்படியோ தட்டுத் தடுமாறி எட்டு ஓட்டுக்கள் வாங்கி விட்டது.(தற்போதெல்லாம் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்தாலும் தமிழ்மண வாக்குகள் மிகக் குறைவாகவே கிடைக்கிறது.) அப்பதிவின்  தொடர்ச்சியை எழுதுவதை  கைவிட்டுவிடலாம் என்று நினைத்தேன். ஆனாலும் பதிவுலகில் இதெல்லாம் சகஜம் என்பதை உணர்ந்து  தொடர முடிவு செய்து விட்டேன். 
முந்தைய பதிவு :நுகர்வு வெறி

   நாம் வாங்கும் பொருள்களை பயன்படுத்தப் போவது நாம்தான் என்றாலும் அதன் பயன் பயன்பாடு மற்றவர்களையும் பாதிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.நமது நுகர்வில் எப்போதும் ஒரு சமூக அக்கறை இருப்பது நல்லது. நீங்கள் சமூத்தின்மீதும் நாட்டின்மீதும் அக்கறை கொண்டவரா என்பதை  கீழே கொடுக்கப் பட்டவற்றோடு  ஒப்பிட்டுப் பார்த்து மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்
நீங்கள் கடைக்கு சென்று பொருள் வாங்கும்போது இவற்றை எல்லாம் செய்கிறீர்களா?
 1. பணத்திற்கேற்ற மதிப்புள்ள பொருளைப் பெறுவதற்காக பல கடைகளுக்கு சென்று விசாரித்து வாங்குவேன்.
 2.  கெட்டுப் போகக் கூடிய பொருள்களை வாங்கும் முன்பு அவை காலாவதியாகும் நாள் கழிந்து போகாமல் இருக்கிறதா என்று பார்த்து வாங்குவேன்.
 3.  பொருளை வாங்குவதற்கு முன்பே அதற்கு இடப்பட்டுள்ள உறையை பின்னர் அப்புறப்படுத்த ஏற்ற முறையை சிந்திப்பேன்.
 4. வாங்கிய பொருளில் ஏதாவது குறை இருந்தால் திரும்பவும் கடைக்கு சென்று பதிலுக்கு வேறு பொருளை அல்லது அதற்கு கொடுத்த விலையை திருப்பித் தருமாறு கேட்டு வாங்குவேன்.
 5.   பொருளின் பெயர் சீட்டில் அல்லது உரையின் மீது எழுதப் பட்டுள்ள பாதுகாப்புக் குறிப்புகளை வாங்குவதற்கு முன்பே படித்து தெரிந்து கொள்வேன்.
 6. இறக்குமதி செய்யாப்பட்ட பொருள்களை வாங்குவதற்கு முன்பு அவற்றுக்கு மாற்றாக உள்ளூரில் தயாரிக்கப் பட்டவை இருக்கின்றனவா என்று பார்ப்பேன்.
 7.  சந்தையில் பார்த்த குறையுள்ள பொருள் அல்லது சேவை பற்றி மற்றவர்களுக்கு தெரிவிப்பேன்.
 8. எதையும் வாங்குவதற்கு முன்பாக பொருள்கள் அல்லது சேவையைப் பற்றி கேள்விகள் கேட்பேன்.
 9. சந்தையில் பாதுகாப்பு வெளிப்படைத் தன்மை நேர்மை ஆகியவற்றை மேம்படுத்தும் செயல்களில் நானும் சேர்ந்து செயல்படுவேன்,
 10.  நான் என்னை ஒரு கற்றறிந்த உணர்வுள்ள நுகர்வோராக கருதி செயல் படுவேன்.
 11. நுகர்வோர் உரிமை பற்றி அறியாதவர்களுக்கும், படிப்பறிவில்லா தவர்களுக்கும், ஏழை மக்களுக்கும்  உதவுவேன்.
 12. எல்லாவற்றிற்கும் மேலாக பொருள் வாங்குவதற்கு முன் அப்பொருள் அவசியம் வாங்கத்தான்  வேண்டுமா என்பதை நன்கு ஆலோசித்த பின்பே  வாங்கவேண்டும். தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பது குப்பைகளை சேர்ப்பதற்கு ஒப்பாகும்.
   இப்படி நம்மை நாம் சுயமதிப்பீடு செய்துகொள்வோம்.

(மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு அமைப்புகளின் முகவரிகள் அடுத்த வாரம்)
                                                              (தொடரும்)  


************************************************************

44 comments:

 1. ****சினிமாவைப் போலவே ஒரு பதிவு ஹிட்டாகுமா ஹிட்டாகாதா என்று கணிக்க முடிவதில்லை. ஒரு சினிமா ஹிட்டாகா விட்டால் நஷ்டம் ஏற்படும். பதிவு ஹிட்டாகாவிட்டால் நஷ்டம் ஏற்படாது என்றாலும் கொஞ்சம் மனக் கஷ்டம் ஏற்படுவதுண்டு. நாம் நம்பிக்கையுடன் எழுதும் சில பதிவுகள் அதிகம் பேரின் கவனத்தைக் கவர்வதில்லை. ****

  இங்கதான் ஒரு பதிவர் மிக நிதானமாக இருக்கணும். ஒருவர் தன்னம்பிக்கையை மற்றவர்கள் (சந்தர்ப்ப சூழ்நிலை) உடைத்து விடலாம். அது அவர்களை தரத்தை குறைக்க செய்துவிடும். It is a challenge every blogger faces now and then!

  Can you win being yourself no matter how the response is?!

  :-))))

  ReplyDelete
  Replies
  1. //It is a challenge every blogger faces now and then!//
   நீங்கள் சொல்வது உண்மைதான்.நிறையப் பேருக்கு இப்படி ஏற்பட்டிருக்கக் கூடும்.
   உங்கள் ஆலோசனையை ஏற்கிறேன் வருண்!.

   Delete
  2. ற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்பதிவர் அனு அந்நோய்க்கு எதிராக போராடிய நிலையிலும் மனம் தளராமல் மற்றவர்களுக்கும் இந்த நோய் பற்றிய தகவகளை எழுதியிருக்கிறார் (இப்போது அவர் உயிருடன் இல்லை ) அந்த பதிவுகள் நம் மனதை கணக்கசெய்கிறது. படிப்பவர்களுக்கு நோயை எதிர்த்து போராடும் மனம் அவசியம் என்பதை இன்னும் இந்த பதிவுகள் உணர்த்தி வருகிறது.

   http://anuratha.blogspot.fr/2007_07_01_archive.html

   Delete
  3. ஹிட் என்பதை விடவும் அதிகம் பேருக்கு நம் எண்ணங்கள் மற்றும் பதிவின் பயன் போய் சேர வேண்டும் என்பதை எதிர்பார்பது இயல்பு. ஆனால் நல்ல பதிவுகள் என்றும் பேசப்படும்.

   Delete
  4. அந்தப் பதிவுகளை படித்தேன் மனம் கனத்துப் போனது.

   Delete
 2. தேவைக்கு அதிகமாக நுகர்வை தவிர்ப்பதும்,பொருட்களை முறையாக பயன் படுத்துவது நமக்கும் சேமிப்பு, வீணாவதையும் தடுக்கலாம்.சுய மதீப்பிடு அருமை! நீங்கள் குறிப்பிட்டதில் பெரும்பாலும் நாங்கள் பார்ப்பதுண்டு.

  ( என்னங்க நீங்களும் ஹிட்டு, ஓட்டுன்னு யோசிக்கிறிங்க..? நாம எழுதர நல்ல சிந்தனைகளை அதை புரிஞ்சிகிட்டவங்க நாலு பேர் படிச்சாக்கூட அதுதான் மதிப்பு.. என்னை பொறுத்தவரை நான் எதிர்பார்க்கும் லிஸ்ட்டில் உள்ளவர்கள் என் பதிவை படித்து விட்டால் அதுவே மகிழ்ச்சியாகி விடும். ஓட்டில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை . )

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உஷா அன்பரசு.

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. நுகர்வோருக்கான நல்ல ‘வழிகாட்டி’ இப்பதிவு.

  நம்பிக்கையுடன் மட்டுமல்ல, நீண்ட காலம் சிந்தித்து எழுதும் பதிவுகள், சீந்துவாரற்ற நிலைக்கு ஆளாகும்போது ஏற்படும் மனக்கஷ்டம் கொஞ்சமல்ல; ரொம்ப...ரொம்ப முரளி.

  ReplyDelete
 5. நுகர்வோர் சட்டத்தை அரசாங்கமே நடைமுறைபடுத்த வேண்டும்.நல்ல தகவலுக்கு

  ReplyDelete
  Replies
  1. நன்றி கண்ணதாசன்

   Delete
 6. நீங்கள் காண்பித்த எல்லா முறைகளும் செய்கிறேன் கடைசி பாய்ண்ட் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய ஒன்று நல்ல பகிர்வு நன்றி (வருத்தம் விடுங்கள் )

  ReplyDelete
 7. பதிவின் ஏற்றத் தாழ்வு வருவதுண்டு, சினிமா மாதிரி இல்ல, இப்போ எழுதின பதிவு இணையத்தில் பல் ஆண்டு கழித்தும் சிலரால் வாசிக்கப்பட்டு பயன்படும், பலரால் வாசிக்கப்படும் என்றெண்ணியா திருக்குறளை எழுதினார், அன்று அவர் எழுதிய குறள் சில ஆயிரம் பேரைக் கூட அடையாது இருந்து, இன்று கோடிக்கணக்கானோர் வாசிக்கின்றனர் .. அதே போல நல்ல தரமான பதிவுகள் வீணாவதில்லை, எல்லோரும் சிறு அங்கீகாரத்தை எதிர் பார்ப்போம், அது கிட்டாத போது மனம் சோர்ந்து போய்விடுவர், வடகரை வேலன் போல நல்ல பதிவர் இன்று எங்கே என தெரியவில்லை .. தொடர்ந்து எழுதுங்கள் நல்ல எழுத்து வீணாய் போவதில்லை.. தமிழ் மண கணக்கை எல்லாம் கண்டுக்க வேண்டாம், உங்களுக்கான வாசகர் வட்டம், பாணி உருவாகும் . :)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இக்பால் செல்வன்

   Delete
 8. சுயமதிப்பீடு அருமை... இது போல் தொடர வாழ்த்துக்கள்...

  குறிப்பிட்ட மற்ற அனைத்தும் மாயை... என்பதை உண்மையான சுய மதிப்பீடு மூலம் அறியலாம்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்க்கு நன்றி

   Delete
 9. வாங்கிய பொருளில் ஏதாவது குறை இருந்தால் திரும்பவும் கடைக்கு சென்று பதிலுக்கு வேறு பொருளை அல்லது அதற்கு கொடுத்த விலையை திருப்பித் தருமாறு கேட்டு வாங்குவேன்.//

  எனக்கு இரண்டு நாட்களுக்கு முன் இந்த அனுபவம் ஏற்பட்டது.
  என் கணவர் வீட்டுக்கு அருகில் புதிதாக இருக்கும் பலகாரகடையில் இனிப்பு வாங்கி வந்தார்கள், வீட்டில் வந்து இருக்கும் நண்பர்களுக்கு என்று. நான் இனிப்புகளை எடுத்து வைக்கலாம் என்று அட்டைபெட்டியைபிரித்த போது அதிர்ச்சி ஆகி விட்டது அட்டைப்பெட்டியில் அத்தனை சிலந்தி பூச்சிகள். என் கணவரை அழைத்து அதை திருப்பிக் கொடுத்துவிடுங்கள் கடையில் என்றால் மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள். நான் சென்று அதைக்காட்டி புதிதாக ஆரம்பித்த்க்கடை அதனால் திரும்ப பணத்தை வாங்காமல் பிஸ்கட்கள் வாங்கி வந்து விட்டென் அவர்களை கவனமாய் இருக்கச் சொல்லிவிட்டு. (இனிப்பின் விலை 54 ரூபாய். )

  திரும்ப இது மாதிரி தப்புகள் நடக்காமல் அவர்களும் உணர்ந்து கொள்வார்கள்.

  சமூக அக்கறை உள்ளதால் தான் இனி அந்த மாதிரி தப்பு நடக்காமல் பார்த்துக் கொள்ள சொல்லி வந்தேன். அட்டைபெட்டிகள் சுத்தமாக துடைத்து அல்லவா இனிப்புகளை அடுக்க வேண்டும். இது மாதிரி கவனக்குறைவுடன் செயல்பட்டால் திரும்ப அந்தக்கடைக்கு யார் வாங்க வருவார்கள்.

  நல்லதை தொடர்ந்து எழுதுங்கள். தொடர்கிறோம்.  ReplyDelete
  Replies
  1. நீங்கள் செய்தது மிகச் சரியே

   Delete
 10. நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.நுகர்வுக்கலாச்சாரம் அதிகமாகிவிட்ட நாட்டில் இது போல் ஒரு பதிவு அவசியமே/

  ReplyDelete
 11. நல்லதொரு பதிவு! நுகர்வோர் பின்பற்றவேண்டிய குறிப்புக்களை சிறப்பாக தொகுத்து தந்துள்ளீர்கள்! நன்றி! ஹிட் பற்றிய தங்கள் கருத்தும் உண்மைதான்! அதைவிட நம்மை தொடர்ந்து வாசித்து கருத்திடும் ஒருவர் திடீரென காணாமல் போனால் ஒரு சலிப்பு வந்துவிடுகிறது! ஆனால் டி.டி சொல்வது போல எல்லாம் மாயை! ஒரு அனுபவம்தேன்!

  ReplyDelete
 12. கவலைப் படாமல் தொடருங்கள்;எல்லாப்பதிவர்களுக்கும் வரும் சோதனைதான் இது!

  ReplyDelete
 13. enaku oru kavalai busil yen manithargal yen ipidi nadanthu kolkirarkal endruoru naal naan mount roadil irunthu en veetirku busil vanthu kondirunthen thidir yendru oru vayathan oru nabar enai paarthu konde yerinar avar seitha visyam ennai bayamuruthiyathu enanvendral avar college manavigal nirkum idathiruku sendru asingamana kariyathai seithu kondu irunthar break adikum pothellam urasuvathu ithey valakam vaithu kondaar enaku athai paarkum pothu adikalam endru kai thuruthiyathu ipidiyum manithar irukirarkala endru varutha patten

  ReplyDelete
  Replies
  1. வக்கிர எண்ணம் கொண்ட சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இதனால் பாதிக்கப் படுபவர்கள் தைரியமாக எதிர்க்க வேண்டும்.

   Delete
 14. குதம்பை,
  குயில்,
  குரவை,
  குறத்தி,
  கூடல்,
  கொச்சகச் சார்த்து,
  கோத்தும்பி,
  கோழிப் பாட்டு,
  சங்கு,
  சாயல் வரி,
  சார்த்து வரி,
  சாழல்,
  செம்போத்து,
  தச்சராண்டு,
  தச்சாண்டி,
  தாலாட்டு,
  திணைநிலைவரி,
  திருவங்கமாலை,
  திருவந்திக் காப்பு,
  தெள்ளேணம்,
  தோணோக்கம்,
  நிலைவரி,
  நையாண்டி,
  பகவதி,
  படைப்பு வரி,
  பந்து,
  பல்லாண்டு,
  பல்லி,
  பள்ளியெழுச்சி,
  பாம்பாட்டி, பிடாரன்,
  பொற்சுண்ணம்,
  மயங்குதிணை
  நிலைவரி,
  முகச்சார்த்து,
  முகமில் வரி,
  முகவரி,
  மூரிச் சார்த்து,
  வள்ளைப்பாட்டு முதலியன. இவையன்றிச் சித்தர் பாடல்களில் வழங்கும் பலவகை இசைப் பாட்டுக்களும் நொண்டிச் சிந்து, சிந்து முதலியவைகளும் கும்மி கோலாட்டம் முதலியவைகளும் பல வகையான கண்ணிகளும் ஆனந்தக்களிப்பு, கீர்த்தனங்கள் முதலிய பலவும் இசைப்பாட்டுக்களைச் சேர்ந்தனவே.புல்லாங்குழலை புரபைலில் வைத்திருக்கும் நீங்கள் ஏன் இந்தப் பாடல்கள் பற்றிப் ஒரு நாளைக்கு ஒரு பதிவு என்றூ எழுதக் கூடாது.

  விக்ரம்வர்மா
  தலைவர், இளங்கோ அடிகள் பேரவை,இத்தாலி

  ReplyDelete
 15. ஆலோசனைக்கு நன்றி. இவற்றைப் பற்றி நன்கு அறிந்துகொண்டு முயற்சிசெய்கிறேன்.

  ReplyDelete
 16. Nethilika kajuli

  Ingredients

  Dry Fish (Nethili) - 100gms
  2> Chilli Powder - 2 spoons
  3> No Salt
  4> Oil - 4 spoons


  Method

  Step 1
  Clean Nethili with running water.
  Marinate Nethili with Chilli powder and then keep aside for 15 minutes

  Step 2
  Pour oil in pan and fry nethili.
  பின்னூட்டம் படிப்பவர்கள் பயன்பாட்டிற்காக.......

  ReplyDelete
  Replies
  1. சார் நீங்க ஒரு ப்ளாக் தொடங்கலாம். உதவி தேவைப்பட்டால் செய்கிறேன்.

   Delete
 17. எப்படியோ உங்களுடைய முந்தைய பதிவான ‘நுகர்வு வெறி’ படிக்கத் தவறிவிட்டேன். இன்றுதான் படித்தேன்.மிக அருமை தேவையான பதிவு. ஒரு பொருளை வாங்கும்போது சுய மதிப்பீடு செய்வது பற்றி விரிவாக எழுதியமைக்கு நன்றி. ஆனால் இந்த அவசர உலகில் நம்மில் பலருக்கு இப்படி சுய மதிப்பீடு செய்ய நேரமிருக்குமா என்பது ஐயமே. இதைத்தான் சந்தைப்படுத்துவோர் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கிறார்கள் என நினைக்கிறேன். அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 18. நுகர்வோருக்கு ஒரு அருமையான வழிகாட்டி தங்களின் பதிவு

  ReplyDelete
 19. //கெட்டுப் போகக் கூடிய பொருள்களை வாங்கும் முன்பு அவை காலாவதியாகும் நாள் கழிந்து போகாமல் இருக்கிறதா என்று பார்த்து வாங்குவேன்.//

  இதுதான் முக்கியமான விஷயம்.இதையாரும் நம்ம ஊரில் பின்பற்றுவதில்லை...அல்லது அலட்சியப்படுத்துகிறார்கள்.

  ReplyDelete
 20. //சினிமாவைப் போலவே ஒரு பதிவு ஹிட்டாகுமா ஹிட்டாகாதா என்று கணிக்க முடிவதில்லை. ஒரு சினிமா ஹிட்டாகா விட்டால் நஷ்டம் ஏற்படும். பதிவு ஹிட்டாகாவிட்டால் நஷ்டம் ஏற்படாது என்றாலும் கொஞ்சம் மனக் கஷ்டம் ஏற்படுவதுண்டு. நாம் நம்பிக்கையுடன் எழுதும் சில பதிவுகள் அதிகம் பேரின் கவனத்தைக் கவர்வதில்லை. அல்லது கவரும் விதத்தில் அப்பதிவு எழுதப் படவில்லை. //

  ஹா..ஹா...இது பதிவெழுதும் எல்லோருக்கும் இருக்கிற பிரச்சனை.'மேல்மாடி'-க்கு வேலை தரும் விசயங்களை யாரும் இங்கே ரசிப்பதில்லை. நான் கூட MASTERCAM -தமிழில் என்று எழுதினேன்.சரியான ரெஸ்பான்ஸ் இல்லாததால் தொடரமுடியாமல் விட்டுவிட்டேன். உங்களுக்காவது பரவாயில்லை...தமிழ்மண ஒட்டு ஓரளவு கிடைக்கிறது.

  ReplyDelete
 21. தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.

  ReplyDelete
 22. வணக்கம்
  டி,என் முரளிதரன்(அண்ணா)

  பதிவு மிக அருமையாக உள்ளது நல்ல பயனுள்ள கருத்து அனைவரும் வாசிக்க வேண்டிய கருத்தை பதிவிட்ட உங்களுக்கு மிக்க நன்றியண்ணா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 23. //எல்லாவற்றிற்கும் மேலாக பொருள் வாங்குவதற்கு முன் அப்பொருள் அவசியம் வாங்கத்தான் வேண்டுமா என்பதை நன்கு ஆலோசித்த பின்பே வாங்கவேண்டும்.//

  இதுதாங்க ரொம்ப முக்கியம்.

  ReplyDelete
 24. பயனுள்ள பதிவு தொடருங்கள் ........... எல்லாவற்றிற்கும் மேலாக பொருள் வாங்குவதற்கு முன் அப்பொருள் அவசியம் வாங்கத்தான் வேண்டுமா என்பதை நன்கு ஆலோசித்த பின்பே வாங்கவேண்டும் உண்மைதான் இது ரொம்பவும் முக்கியமானது.. பலர் அடுத்தவர்கள் வாங்கும் பொருட்களை தனக்கு தேவை இல்லாமல் இருந்தும் வாங்கும் போட்டி மனப்பாங்குடன் வாங்குவதை பார்த்திருக்கிறேன்.. வெளிநாடுகளில் குளிர் நாடுகளில் போடும் கோட்டு சூட்டு இங்கு அதைக் வெக்கை இருந்தும் போட்டி போட்டு பயன் படுத்த ஒரு கூட்டம் காத்திருப்பதை போல.......... த.ம 9

  ReplyDelete
 25. தமிழ் நாட்டில் செயல்பட்டு வரும் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்களின் முகவரிகள்

  மிகவும் பயன் மிக்க பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 26. அன்புடையீர்,

  உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.

  http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_7.html

  தங்கள் தகவலுக்காக!

  நட்புடன்
  ஆதி வெங்கட்
  திருவரங்கம்

  ReplyDelete
 27. வணக்கம்
  இன்று தங்ளின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_7.html?showComment=1389055275351#c7234559865850481387

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895