என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Wednesday, May 1, 2013

பதிவர் மூன்று! செய்திகள் மூன்று!

 செய்தி ஒன்று
ஏப்ரல் 26. -மே 2 பாக்யா இதழில் கவிஞரும் பதிவருமான மதுமதி அவர்களின் பேட்டியை அவரது வலைப் பக்கத்தில் படித்திருப்பீர்கள். கடந்த ஓராண்டாக அவரை நன்கு அறிந்த போதும் அவருடைய கல்லூரி வாழ்க்கை பற்றியும் தெளிவான காதல் வாழ்வு பற்றியும் தெரிந்து கொண்டதற்கு மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ்ப் பதிவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்பதில் ஆர்வமுடைய இவரின் பேட்டியில் ஒரே ஒரு சிறு குறை என்னவெனில் தான் ஒரு முன்னணி பதிவர் என்பதை சொல்லாததே! அவரது அனைத்து லட்சியங்களும் கனவுகளும் நிறைவேறி உயர்ந்த இடத்தை அடைய வாழ்த்துக்கள்.

செய்தி இரண்டு

  . சமீபத்தில் மாநகராட்சி பள்ளி ஒன்றிற்கு  சென்றிருந்தபோது பெரிய அளவில் உணவு பழக்கம் சம்பந்தமான படத்தை மாணவர்கள் படிக்கும் வண்ணம் மாட்டி வைத்திருந்தார்கள்.அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரை கேட்டபோது இணையத்தில் இருந்து அந்தப் படத்தை எடுத்ததாகக் சொன்னார். உற்றுப் பார்த்தபோது
http://avargal-unmaigal.blogspot.com  என்று வலைதள முகவரி இருந்தது.அட நம்ம பிரபல பதிவர்  அவர்கள் உண்மைகள்-மதுரைத் தமிழனின் வலைப்பதிவில் இருந்து எடுக்கப் பட்ட படம். மகிழ்ச்சியாக இருந்தது.
அவர்கள் உண்மைகள் வலைப் பதிவில்  வித்தியாசமான செய்திகள்,நகைச்சுவை, படங்கள் என்று கலக்கிக் கொண்டிருக்கும் இந்த மதுரைத் தமிழன் பொழுதுபோக்குக்காக பதிவு எழுதுவதாக கூறினாலும் இவரது பல பதிவுகள் பயனுள்ளவையாக அமைந்திருக்கின்றன என்பதற்கு இது ஒர் உதாரணம்.

  அவரது சிறப்பு  படங்களை அதிக கவனம் எடுத்துக் கொண்டு படங்களை உருவாக்குவது . போட்டோ ஷாப் உள்ளிட்ட DTP கலை நன்கு அறிந்தவர் என்பதை அவரது தளத்தில் வெளியிடப்படும் தனித்தன்மை கொண்ட படங்கள் உணர்த்துகின்றன. இவ்வகையில் அவரது படம் பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தற்கு அவரை தாராளமாக பாராட்டலாம். வாழ்த்தலாம். தொப்பி தூக்கலாம் (Hats Off என்பதன் தமிழாக்கம்தாங்க! ஹிஹிஹி )

(இவர் 650க்கும் மேற்பட்ட  பதிவுகள் எழுதி  இருப்பதால்  எதில் இருந்து இந்தப் படம் எடுக்கப் பட்டது என்பதை அறிந்துகொள்ள இயலவில்லை.
இவரது பதிவுகளில் தேடிக் கொண்டிருக்கிறேன்.)

இன்னொரு மொக்கைசெய்தி: கவிஞர் மதுமதி பேட்டி வெளியான பாக்யா இதழில் எனது கீழே உள்ள நான்கு துளிக்கவிதைகளில்  ஒன்று வெளியாகி இருந்தது. ஏற்கனவே  கடந்த ஆண்டு மின்வெட்டுக் கவிதைகள் என்று இவற்றை பதிவாக வெளியிட்டிருந்தேன். இவற்றில் கடைசியாக உள்ளது மட்டும் பாக்கியாவில் பிரசுரமாகி இருந்தது. இதனை பத்திரிகைக்கு நான் அனுப்பவில்லை. நமது பதிவு சகோதரி திருமதி உஷா அன்பரசு அவர்கள் எனக்கு தெரியாமல் பாக்கியாவிற்கு அனுப்பிவிட்டார். அவர் சொன்ன பிறகே எனக்கும் தெரிந்தது. உஷா  அன்பரசு அவர்களுக்கு நன்றிகள். 

சாப்பிட உட்கார்ந்தேன்!
கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டவில்லை.
கரண்ட் கட்.
****************

மின்சாரம் இல்லாமல்
ஒரு
ஷாக் ட்ரீட்மென்ட்.
மின்வெட்டு.
******************

கல்யாணத்தில்
பந்தியின்போது
கரெக்டாக ஆனது 
கரண்ட் கட்டு.
என் கைக்கு வந்தது
பக்கத்து இலை லட்டு
******************

கைத்தான் ஃபேன்
வாங்குங்க!
டி.வி. யில் 
விளம்பரம்!
அட போங்கப்பா!
இனிமே 
கைதானே  ஃபேன்!

*******************************************************************************
உழைப்பாளர்  தின வாழ்த்துக்கள்!
கடந்த ஆண்டு இதே நாளில் பதிவிடப்பட்ட உழைப்பாளர் தினக் கவிதை 
இன்றாவது  நினைத்துப் பார்!
http://tnmurali.blogspot.com/2012/05/blog-post.html
********************************************************************************************************************
 

57 comments:

 1. கவிஞர் மதுமதி அவர்களுக்கும், மதுரைத் தமிழன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

  உங்களின் கவிதைக்கு வாழ்த்துக்கள்...

  கைக்கு வந்த லட்டும் (!) கையே ஃபேனும் கலக்கல்...

  சகோதரி உஷா அன்பரசு அவர்களுக்கும் நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மனமார்ந்த நன்றி

   Delete
 2. தமிழ்மணம் (+1) இணைத்தாயிற்று... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நான் இணைப்பதற்குள் வேகமாக வந்து இணைத்துவிட்டீர்கள் நன்றி தனபாலன் சார்.எக்ஸ்ப்ரஸ் வேகம் உங்களுடையது.

   Delete
 3. கலக்குங்க உஷா...........!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ஜெயதேவ்

   Delete
 4. அவர்கள் உண்மைகள் மதுரை தமிழன் பதிவுலகில் ஒரு தனித்துவம் மிக்க பதிவர் தான்.. வித்தியாசமாக பதிவை யோசித்து வெளியிடும் ஆற்றல் அவருக்கு ஜாஸ்தியாவே இருக்கு

  ReplyDelete
  Replies
  1. //யோசித்து வெளியிடும் ஆற்றல் அவருக்கு ஜாஸ்தியாவே இருக்கு//
   இப்படியெல்லாம் கிண்டல் பண்ணாதிங்க ...ஹாரி சார் திட்டனும்னா நேராவே திட்டுங்க
   மனமார்ந்த நன்றி

   Delete
  2. வருக ஹாரி! ரொம்ப நாளாச்சு நன்றி

   Delete
 5. கவிஞர் மதுமதி மதுரைத் தமிழன் உஷா அன்பரசு அவர்களோடு உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies

  1. மனமார்ந்த நன்றி

   Delete
 6. மதுமதி பதிவில் நானும் படித்தேன், இருந்தும் கூர்ந்து படித்து உள்ளீர்கள்..
  அவர்கள் உண்மைகள் அட போடா வைக்கிறார்

  மின்வெட்டிக் கவிதைகள் புத்தகத்தில் வந்தமைக்கும் சிரத்தை எடுத்து அனுப்பிய உஷா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. //அவர்கள் உண்மைகள் அட போடா வைக்கிறார்//

   சீனு அ.உண்மைகள் அட என ஆச்சிரியபட வைக்கிறாரா அல்லது அட போடான்னு சொல்ல வைக்கிறாரா?

   Delete
 7. ***இன்னொரு மொக்கைசெய்தி: கவிஞர் மதுமதி பேட்டி வெளியான பாக்யா இதழில் எனது கீழே உள்ள நான்கு துளிக்கவிதைகளில் ஒன்று வெளியாகி இருந்தது.

  கைத்தான் ஃபேன்
  வாங்குங்க!
  டி.வி. யில்
  விளம்பரம்!

  அட போங்கப்பா!
  இனிமே
  கைதானே ஃபேன்!***

  எல்லாம் சரி, முரளி, இதை ஏன் மொக்கை செய்தினு சொல்றீங்க? நல்ல கவிதை என்பதால்தானே உங்க கவிதையை பிரசுரிச்சு இருக்காங்க?

  தன்னடக்கத்தை காட்டணும் என்பதற்காக் இப்படியா ஒரு நல்ல செய்தியை "மொக்கை" செய்தி என்பது?

  என்னவோ போங்க! :)

  Congratulations, murali, for the great news and for your excellent contribution! :)

  ReplyDelete
  Replies
  1. என்ன சார் பண்றது யாராவது சொல்றதுக்கு முன்னாடி நாமளே சொல்லிடலாம் இல்ல. எல்லாம் ஒரு தற்காப்பு உத்திதான்.
   நன்றி வருண்.

   Delete
 8. Replies
  1. நன்றி கந்தசாமி சார்

   Delete
 9. மூன்று செய்திகளும்
  முத்தான செய்திகள்
  மூங்கில் காற்று.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அருணா செல்வம்

   Delete

 10. வணக்கம்!

  மூன்று கருத்துகளும் முக்கனிச் சாறாக
  ஈன்று கொடுத்தீா் இனித்து

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 11. மதுமதி அவர்களுக்கும், அவர்கள் உண்மைகள் அவர்களுக்கும் 'எங்கள்' பாராட்டுகள். உங்களுக்கும்! 'கைக்கு வந்த லட்டு' பிரமாதம்!

  ReplyDelete
  Replies

  1. மனமார்ந்த நன்றி

   Delete
 12. கவிஞர் மதுமதி அவர்களுக்கும்...
  உண்மைத்தமிழன் அவர்களுக்கும்
  மனமார்ந்த வாழ்த்துக்கள்....
  ==
  உங்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்...
  இன்னும் நிறைய கவிதைகள் எழுதுங்கள்
  நாங்கள் ரசித்து ருசித்திட....

  ReplyDelete
  Replies
  1. மகேந்திரன் உண்மைத்தமிழன் மிக பிரபலமானவர். நான் மதுரைத்த்மிழன் பிரபலம் இல்லாதவர். இரண்டு பேரும் வேறுவேறு

   Delete
  2. நன்றி மகேந்திரன்

   Delete
 13. நண்பர் கவிஞர் மதுமதிக்கும், மதுரைத் தமிழனுக்கும் மற்றும் உங்களுக்கும் என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்! அசத்துங்க மக்காஸ்!

  ReplyDelete
  Replies
  1. மனமார்ந்த நன்றி

   Delete
 14. என்னை அறிமுகப்படுத்தி பதிவாக வெளியிட்ட உங்களுக்கு நன்றி முரளிதரன். நீங்கள் சொன்னதில் ஒரு சிறு திருத்தம் நான் பிரபலபதிவாளன் அல்ல தினசரி மொக்கைபோடும் பதிவாளந்தான் நான். ஏதோ அடக்கம் கருதி நான் இப்படி சொல்லவில்லை ஆனால் அதுதான் உண்மை...


  நம்மை போல பதிவாளர்கள் எழுதும் பதிவுகள் பல வகைகளில் சமுகத்தை சென்று அடைகிறது என்பது உண்மை .அப்படிதான் நான் போட்ட படமும் எங்கோ ஒரு மூலையில் உள்ள பள்ளியை சென்று அடைந்தது மட்டுமல்லாமல் அது ஒரு சக பதிவாளரான உங்கள் கண்ணிலும் பட்டு இருக்கிறது.

  நான் பதிவுகள் எழுத அதிகம் சிரத்தை எடுத்து கொள்வதில்லை. தினமும் வேலையில் இருந்து வந்ததும் நமது இந்திய தினசரிகளை இதழ்களைப் படிப்பேன் அது போல சகபதிவாளர்களின் பதிவுகளையும் படிப்பேன் அந்த சமயத்தில் ஏதாவது ஒரு வாக்கியம் சட்டென மனத்தில் க்ளிக் என பதியும் அதை வைத்து அப்போது என் மனதில் என்ன தோன்ருகிறதோ அதை அப்படியே எழுதி பதிவாக இடுவேன். ஆழ்ந்து சிந்தித்து எழுதும் பழக்கமில்லை அது போல நீங்கள் சொல்லியபடி போட்டோ ஷாப் மற்றும் DTP யில் எனக்கு அனுபவம் ஏதும் கிடையாது... எனது இயற்கையான ஆர்வத்தில் மைக்ரோசாப்ட்டின் மென்பொருள் கொண்டு படங்களை உருவாக்கி வெளியிடுகிறேன் அவ்வளவுதான்

  அந்த படம் நான் எழுதிய மதுவினால் ஏற்படும் நன்மைகள் தீமைகள் என்ற பதிவிற்கு இடப்பட்டது.
  http://avargal-unmaigal.blogspot.com/2012/11/the-nutrition-source-alcohol-balancing.html

  நமது நாட்டில் குடிகாரர்கள் என்றாலே அவர்கள் மீது ஒரு மோசமான அபிராயம் உண்டு காரணம் சில அறிவிலிகள் அளவிற்கு மீறி குடித்துவிட்டு வாழ்க்கையை சிரழிப்பதால் குடிப்பது என்பது ஏதோ ஒரு பாவஸ் செயல் போல வர்ணித்தும் குடிப்பதால் தீமைகள் அதிகம் என்ற பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். அப்படி இல்லை என்பதை விளக்கவே அந்த பதிவு .என்னை பொருத்தவரை எதுவும் அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சே என்பதை சொல்ல அந்த பதிவு இட்டேன். அந்த பள்ளி ஆசிரியருக்கு நான் சொல்லிய அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சே என்ற என் படத்தின் கருத்து பிடித்து போனதால் அதை அவர் வெளியிட்டு இருக்கிறார் போல.

  கவிஞர் மதுமதி அவர்களுக்கும், கவி உலகில் அடி எடுத்து வைக்கும் முரளிதரனாகிய உங்களுக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவுகள் நிறையப் பேரால் படிக்கப்படுகிறது என்பது புள்ளி விவரங்கள் மூலம் அறிய முடிகிறது. நீங்கள் பிரபலம் என்பதில் சந்தேகம் இல்லை.
   நன்றி!

   Delete
 15. கவிஞர் மதுமதி மதுரைத் தமிழன் உஷா அன்பரசு அவர்களோடு உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜெய குமார் சார்

   Delete
 16. உங்கள் பதிவுகள் நிறையப் பேரால் படிக்கப்படுகிறது என்பது புள்ளி விவரங்கள் மூலம் அறிய முடிகிறது. நீங்கள் பிரபலம் என்பதில் சந்தேகம் இல்லை.
  நன்றி!

  ReplyDelete
 17. மிகவும் அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள். !!! :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி இக்பால் செல்வன்.

   Delete
 18. பாக்யாவில் உங்கள் கவிதை.... வாழ்த்துகள் முரளி.....

  ReplyDelete
  Replies
  1. நன்றி நாகராஜ் சார்

   Delete
 19. வலைப்பக்கம் பற்றி தேடும்போது முதன் முதலில் என் கண்ணில் பட்டது முரளி தரன் அவர்கள் வலைப்பக்கம். அடுத்ததாக 'அவர்கள் உண்மைகள்' வலைப்பக்கத்தை பார்த்தும் வியந்திருக்கிறேன். அவர்கள் உண்மைகள் படங்களின் சிறப்பிற்காகவே அவரது எந்த பதிவையும் மிஸ் பண்ணாமல் படிப்பதுண்டு.

  என்னங்க இது மொக்கை செய்தின்னு போட்டுட்டிங்க? மிக நேர்த்தியான எழுத்துக்களுக்கு சொந்தக்காரரான நீங்கள் பத்திரிக்கை உலகில் ஒரு சுற்று வரவேண்டியவர். நல்ல எழுத்துக்கள் எப்படியாவது வெளியில் வந்துவிடும் சகோ!

  உழைப்பாளர் தினத்திற்காக கடந்த ஆண்டு நீங்கள் சிறப்பாக எழுதிய அந்த கவிதை மறக்காமல் இருந்ததால் நீங்கள் இங்கு குறிப்பிடுமுன்னரே மே தின முன் நாள் அந்த கவிதையை மீண்டும் வாசித்து மகிழ்ந்தேன்.அருமை!


  ReplyDelete
  Replies
  1. என் வலைப் பதிவு உங்கள் கண்ணில் பட்டதற்கு மிக்க நன்றி. உங்கள் உள்ளமும் பண்புகளும் உயர்ந்தவை.நன்றி

   Delete
 20. த.ம-7. ( ரொம்ப நாளாகவே எனக்கு தமிழ் மண ஓட்டு பற்றியெல்லாம் தெரியாது. சமீபத்தில் தான் தெரிந்து கொண்டதால் அனைவர்க்கும் தொடர்கிறேன் )

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் ரசித்த பதிவுக்கு வாக்களிக்கலாம் அப்பை அளிக்கும் வாக்கு அந்தப் பதிவு நிறையப் பேரை சென்றடடைய உதவும் என்பதை உங்களுக்கு சொல்ல நினைத்தேன். ஆனால் அது மறைமுகமாக எனக்கும் ஒட்டு போடுங்கள் என்பதாக ஆகிவிடுமோ என்பதற்காக நான் சொல்லவில்லை.
   மேலும் நான் படித்த உங்களுடைய அனைத்துப் பதிவுகளுக்கும் உங்களுக்கு ஒட்டு போட்டிருக்கிறேன். நன்றி.

   Delete
 21. முரளி,

  மதுமதிக்கும் உங்களுக்கும் உஷா அன்பரசுக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி முனைவர் ஐயா!

   Delete

 22. கவிஞர் மதுமதி அவர்களுக்கும்...
  உண்மைத்தமிழன் அவர்களுக்கும்
  மனமார்ந்த வாழ்த்துக்கள்....

  உங்களுக்க ம் சிறப்பு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா

   Delete
 23. கவிஞர் மதுமதி அவர்களின் அனைத்து லட்சியங்களும் கனவுகளும் நிறைவேறி உயர்ந்த இடத்தை அடைய வாழ்த்துக்கள்.

  அவர்கள் உணமைகள் மதுரை தமிழன் அவர்காளுக்கு வாழ்த்துக்கள்.
  உங்கள் கவிதையை பாக்யா பத்திரிக்கைக்கு அனுப்பிய உஷா அன்பராசு அவர்களுக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. பாக்யா இதழில் வெளியான மின் வெட்டு கவிதை சிறப்பு! எழுத்தாளரும் பதிவருமான மதுமதியின் பேட்டி பற்றிய பகிர்வு மதுரை தமிழனை பற்றிய செய்திக்கும் நன்றி! நீங்கள் மூவருமே பிரபல பதிவர்கள் என்பதில் எனக்கொன்றும் சந்தேகம் இல்லை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 25. அட பரவாயில்லையே இணையம் பள்ளி கூடங்களிலும் சென்றுவிட்டதா...!

  மதுமதி மற்றும் மதுரைத் தமிழன் மற்றும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 26. மின் வெட்டுக் கவிதை எல்லாம் அரதப் பழசான ஜோக் ஆக எப்போவோ வந்திடுத்தே ! அதைப்போய் கவிதைன்னு எழுதினீங்களா மூங்கில் சார். என் கவிதை சாம்பிளுக்கு கீழே

  அதிகாலை வேளையில்
  சிட்டுக்குருவியின் சிருங்காரக் குரல்கள்
  எழுப்பிய காலம் போய்
  இன்று செல்போன் குரல்கள்
  நமை எழுப்புகின்றன..!
  நகரம் நரகமாகிப் போய்விட்டதே
  என்று கிராமத்தை
  நோக்கிப் பறந்தால் - அங்கும்
  அலைபேசி கோபுரங்கள்
  அகோரப்பசியுடன்
  கூறு போடக் காத்திருக்கின்றன
  வானம்பாடியாய்த் திரிந்து
  கானம் பாடிய
  குருவிகளைக் காணோம்..?

  தன் குலம் வாழ
  குருவிகளைக் கொன்று
  லேகியம் தின்றதொரு கூட்டம்
  செயற்கை உரங்களையிட்டு
  குருவிகளின் உணவுச்சங்கிலியை
  அறுத்ததொரு கூட்டம்
  உலகெங்கும் அளவளாவதற்கு
  அலைக் கதிர்களைக் கொண்டு
  குருவிகளை மலடாக்கியதொரு கூட்டம்
  ஓங்கியுயர் மரங்களை அழித்து
  குருவிகளின் வீடுகளை
  உருத்தெரியாமல் அழித்ததொரு கூட்டம்
  எதிர்காலச் சந்ததிக்கு
  இனியில்லை இப்படியொரு
  குருவிக் கூட்டம்!

  ReplyDelete
 27. அய்யா!,
  அனானிமஸ் உங்கள் கவிதை நன்று இப்படி கருத்துப் பெட்டியில் எழுதுவதை விட
  தனி வலைப் பதிவு தொடங்கி எழுதுங்கள்
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. நம்ம கவிதைப் பக்கம் ஏற்கனவே கல்லா கட்டிட்டு தான் இருக்கு. நல்ல தரமான சைட்டில் மட்டுமே எம் பெயரில் எழுதுவோம். மற்றபடி அனானி தான் அன்பரே.

   Delete
  2. எங்களுக்கு ஏதோ தெரிஞ்சத எழுதி காலத்த ஒட்டிகிட்டு இருக்கோம்.உங்கள் தரமான சைட் எதுன்னு சொன்னா என்னைப் போல் உள்ளவர்கள் எல்லாம் ஏதோ கத்துக்குவோம் இல்ல.அந்த தரமான சைட் எதுன்னு தெரிஞ்சுக்க ஆவலாத்தான் இருக்கோம்.

   Delete
 28. ஆக இந்த அனானியையும் சேர்த்து பதிவர் நாலாயிடுச்சு இப்போ! :)))

  அனானி:

  உங்க புலமையைப் பெருமை பீத்த இந்தக் கருத்துப்பெட்டிதான் கெடச்சதா? முரளிக்கு ரொம்ப பெரிய மனசுதான், உம்மைமாரி கொஞ்சம்கூட நாகரிகம் தெரியாத ஜந்துக்களுக்குக் கூட நாகரிகமாகவும் ,மரியாதையுடனும் பதில் சொல்லுறார், பாவம்!

  பாவம் குருவிகள். உம் கவிதையில் மாட்டிக்கிட்டு முழிக்கிதுகள். விட்டுடும்யா அவைகளை! அடுத்த முறை உம்மை மாரி அனானியாக வரும் ஈனத்தமிழனுக பத்தி ஒரு கவிதை எழுதி அனானியாகவே பிரசுரிச்சுடும். அப்போவாவது உம்மை மாரி ஈன சென்மஎல்லாம் திருந்துதா பார்ப்போம்!

  வர்ரது அனானியா? இதுல என்னை பாரு என் கவிதையப் பாருனு வந்து நிக்கிதுக.

  ReplyDelete
 29. விடுங்க. வருண். ஏன் இப்படி பண்ணறாங்கன்னு தெரியல. உங்களைப் போல் ஒரு சிலருக்கு மட்டும்தான் தன்னோட கருத்தை நேரடியா சொல்ற தைரியம் இருக்கு. அதுதான் உங்க கிட்ட எனக்கு பிடிச்ச குணமும் கூட.
  நன்றி வருண்

  ReplyDelete
  Replies
  1. வாஸ்து வருண்,

   உங்க நாகரிகத்தை நாங்க வால்பையன் காலத்திலிருந்தே பார்த்துகிட்டு தானே இருக்கோம். நாங்கதான் நாதரிங்கன்னு நெத்தியில எழுதிகிட்டு திரியிறோம். எப்படி வேண்டுமானாலும் எழுதுவோம். நீ தான் நாகரீக உலகின் சாக்ரடீஸ் ஆச்சே! என் கவிதைக்கு என்னா நாகரீகத்துடன் பதில் எழுதியிருக்கே! அடாடா அப்படியே முதிர்ச்சி தாண்டவமல்லவா ஆடுது. சின்னப் பையன் மாதிரி தர்க்கம் பன்னுவே அய்யோ கிரகம் நம்மள விட்டா சரின்னு எல்லோரும் ஒதுங்கிடுவா அதை வச்சு நம்ம சாக்ரடீஸ் தான் நினைச்சுகிடுறதா ?

   இது எனக்கும் மூங்கில் சாருக்கும் உள்ள விஷயம் இதில் நீயேன் ஏம்பா வந்து......

   பை த வே என் கவிதைய படிச்சதுக்கு நன்னி. எழுதறதோட சரி அந்தக் கருமத்தை நானே கூட இரண்டாவது தடவை படிக்க மாட்டேன்.

   Delete
 30. மின்வெட்டுக் கவிதைகள் --

  பாக்யா வெளியீட்டுக்கு வாழ்த்துகள்... பாராட்டுக்கள்..

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895