என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Thursday, June 27, 2013

ஒண்ணுமே புரியல ! ராஜ்யசபா தேர்தல் வாக்கு கணக்கிடும் முறை

   .

   இன்னைக்கு பரபரப்பான சூழ்நிலையில் ராஜ்யசபா தேர்தல் நடந்துக்கிட்டு இருக்கு.
. ராஜ்ய சபா எம்.பி க்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களுக்கான தேர்தல் ரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடக்குதாம், அவர்களோட பதவிக் காலம்  ஆறு ஆண்டுகள்  ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு வெளிஆகும். அப்போதெல்லாம் பரபரப்பாக ஏதோதோ நடக்கும். என்னன்னா ராஜ்யசபா எம்பிக்களை அந்தந்த மாநில எம்.எல் ஏக்கள்தான் தேர்ந்தேடுக்கணுமாம். ஒரு மாநிலத்துக்கு எவ்வளவு ராஜ்யசபா எம்பிங்கறதை அந்த மாநில மக்கள் தொகையைப் பொறுத்து நிர்ணயம் செய்வாங்களாம். நம்ம தமிழ் நாட்டுக்கு ஆறு எம்பி சீட்டு. 1996 க்கு அப்புறம் வாக்குப் பதிவு இப்பதான் நடக்கப் போவுதாம்.. . 6 பேருக்கு 7 பேர் போட்டி போடறதால  ஓட்டுப் பதிவு நடத்தித்தான்  ஆகணுமாம்.
     இதுல வோட்டு எப்படி போடறது ஒட்டு எண்ணிக்கை எப்படின்னு சமீபத்தில பேப்பர்ல போட்டிருந்தத படிச்சேன். கொஞ்சம் தலைய சுத்தி பாதி புரிஞ்சும் பாதி புரியாமையும் இருந்தது. ஒரு சுவாரசியம் ஏற்பட்டு இந்த வாக்கு பதிவையும் ஒட்டுமதிப்பு கணக்கிடும் நடைமுறையும் தேடிப படிச்சேன். இன்னும் வேகமா தலைய சுத்த, நான் பெற்ற தலை சுற்றல் பெறுக இவ்வையகம்னு உங்க தலைகளையும் சுத்த வச்சுட்டு ரெண்டு நாள் தலை மறைவாயிடலாம்னு இருக்கேன்.

இது   தேர்தல்ல ஒட்டு போடறது   மாதிரி இல்ல. வாக்கு சீட்டில வேட்பாளர்களோட பேரும் பக்கத்தில ஒரு கட்டமும் இருக்கும். தனக்கு புடிச்ச வேட்பாளருக்கு நேரா 1 ன்னு போடணும் இன்னொரு வேட்பாளருக்கும் அடுத்த இடம் கொடுத்து ரெண்டுன்னு ரெண்டாவது முன்னுரிமை போடலாம். விருப்பட்ப்படி முதல் இடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம்னு ஒட்டு போடலாம். இப்படி எல்லாம் பெரும்பாலும் நடக்கிறது இல்ல. இருந்தாலும் அப்படி நடந்தா ஒட்டு எண்ணிக்கை எப்படி கணக்கிடுவாங்க. (நமக்கு இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பு இல்லன்னாலும் ஒரு ஆர்வம் காரணமா இந்த பதிவ போட்டுட்டேன். மன்னிச்சுக்கோங்க பாஸ்)

ஒரு எடுத்துக் காட்டு பாக்கலாமா?
பொதுவா அரசியல் கட்சிகள் இரண்டாவது முன்னுரிமை ஓட்டுக்களை போடுவதில்லை. ஒன்றை மட்டும் போட்டுவிட்டு மற்றவற்றை காலியாக விட்டு விடுவார்கள்.
உதாரணத்திற்கு 54  வாக்காளர்கள் (எம்.எல்.ஏக்கள்) இருக்கிறார்கள். ஏழு எம்.பி க்கள் தேர்ந்தடுக்கப்  படவேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.வேட்பாளர்கள் 16 பேர்  போட்டி போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
சிலர் ஒரு வோட்தோடு நிறுத்திக் கொள்ளாமல் ரெண்டாவது முன்னுரிமை ஓட்டும் போடுவதாக கருதிக் கொள்வோம்.
வாக்குப் பதிவு முடிந்துவிட்டது.
16 வேட்பாளர்கள் கீழ்க்கண்டவாறு ஒட்டு பெற்றிருக்கிறார்கள்.வேட்பாளர்களை A,B,C என்று பெயர்வைத்துக் கொள்ளலாம்.


CANDITATE VOTES CANDITATE VOTES CANDITATE VOTES CANDITATE VOTES
A
2
E
11
I
4
M
2
B
9
F
3
J
3
N
2
C
3
G
5
K
2
O
2
D
1
H
2
L
2
P
1
மொத்த வோட்டுக்கள் 54


  ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைத்த முதல் முன்னுரிமை அடிப்படையில் வாக்கு சீட்டுக்களை தனித்தனி கட்டுக்களாக கட்டி வைக்கவேண்டும்.
உதாரணத்திற்கு A பெற்ற ரெண்டு வாக்கால் கொண்ட வாக்கு சீட்டுகள் ஒரு கட்டு.
ஒவ்வொரு வாக்கு சீட்டுக்கும் மதிப்பு 100 கொடுக்கப் படும். வேட்பாளர் பெற்ற ஓட்டுகளின் மதிப்பை பெற அவர்கள் பெற்ற வாக்குகளுடன் 100 ஐ பெருக்க வேண்டும். அதாவது A-200  B- 900 .......
அனைத்து வாக்கு சீட்டுக்களின் மொத்தமதிப்பு 5400
எட்டு வேட்பாளர்கள் இருப்பதால் (5400/8)= 675
இதனுடன்  1 சேர்த்துக் கொள்ள வேண்டும் 676
ஒரு வேட்பாளர் 676 புள்ளிகள் பெற்றுவிட்டால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் படுவார்.
மேற்கூறிய எடுத்தாக்காட்டில் B யும்  E ம் 676 க்கு மேல் பெற்று விட்டதால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப் படும்.
இரண்டு பேர் மட்டுமே தகுதியான வாக்கு மதிப்புகள் பெற்றிருக்கிறார்கள் மற்றவர்கள்  பெற வில்லை.இன்னும் 5 பேர் தேர்ந்துக்கப் பட வேண்டும். அவர்கள் பெற்றுள்ள வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்டுக்க முடியாது. இங்குதான் சிக்கல் ஆரம்பிக்கிறது . என்ன செய்வது? இப்போது வாக்காளர்கள் அளித்த இரண்டாவது முன்னுரிமையை பரிசீலனை செய்ய வேண்டும். அதைதகுதியுள்ள வேட்பாளருக்கு மாற்றத்த தக்க ஓட்டுகளாக செய்ய வேண்டும்.
நிறைய பேர் ரெண்டாவது முன்னுரிமை வாக்குகளை அளித்திர்க்கக் கூடும் யாருடைய ரெண்டாவது முன்னுரிமைய முதலில் எடுத்துக் கொள்வது?
ஏற்கனவே அதிக வாக்குகள் பெற்ற E ன்(11வாக்குகள் வாக்கு மதிப்புகள் 1100) கூடுதல் வாக்கு மதிப்புகளைபிற வேட்பாளருக்கு மாற்றவேண்டும்
E இன் வாக்கு மதிப்பு           1100
தேர்ந்தெடுக்க போதுமானது      676
கூடுதலாக உள்ளது              424

இந்த 424 ஐ யாருக்கு பகிர்ந்தளிப்பது
E க்கு வாக்களித்தவர் 11 பேர் இந்த 11 பேர் ரெண்டாவது முன்னுரிமையாக யாருக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதை கணக்கில் எடுத்தக் கொள்ளவேண்டும். . 11 பேரில் 5 பேர் G க்கும் 3 பேர் H க்கும் 2 பேர் L க்கும் அடுத்த முன்னுரிம வாக்குகள் போட்டிருப்பதாகக் கொள்வோம். ஒருவர் இரண்டாவது முன்னுரிமை யாருக்கும் அளிக்கவில்லை (இவர்கள் அனைவரும் முதல் முன்னுரிமையாக E க்கு வாக்களித்தவர்கள்)இந்த 424 ஐ 10 வாக்குசீட்டுகளுக்கு பகிர்ந்தளிக்க ஒரு வாக்கு சீட்டின் மதிப்பு  424/10 =42.4. அதாவது 42 (11 பேரில் ஒருவர் இரண்டாவது முன்னுரிமை வாக்கு குறிப்பிட வில்லை.)
G க்கு கிடைக்கும் கூடுதல் மதிப்பு 42 x 5 = 210
H க்கு கிடைக்கும் கூடுதல் மதிப்பு 42 x 3 = 126
L க்கு கிடைக்கும் கூடுதல் மதிப்பு  42 x 2 = 84

ஏற்கனவே G பெற்ற முதல் விருப்ப ஒட்டுகள் 500
2 வது முன்னுரிமைப்படி கூடுதல் ஒட்டு மதிப்பு= 210
இப்பொது G இன் ஒட்டு மதிப்பு 500+210=710
குறைந்த பட்ச தேவை 676. G பெற்றிருப்பதோ 710. எனவே மூன்றாவது வெற்றி பெற்ற வேட்பாளராக G  அறிவிக்கப் படுவார்.
இத்தோடு இது முடியவில்லை .இதே போல B  அதிக முதல் விருப்ப (பார்க்க பட்டியல்) ஒட்டுக்களை பெற்று  இரண்டாம் இடத்தில் உள்ளவர் யின் கூடுதல் மதிப்பை கணக்கிட்டு E இன் கூடுதல் மதிப்புகளை கணக்கிட்டு பகிர்ந்தளித்த வ்ழி முறையை பின் ப்ற்ற வேண்டும்
இதில் இன்னொரு விஷயமும் உண்டு.  G கூடுதலாக பெற்றுள்ள மதிப்பு 710-676 =34 . இந்த 34 ஐ Gக்கு முதலிடம் கொடுத்து வாக்களித்தவர்களின் வாக்கு சீட்டுக் கட்டில் இருந்து இரண்டாவது முன்னுரிமை தந்தவர்களுக்கு இந்த 34 மாற்றத் தக்க ஒட்டுகளாக. அமையும்.
  மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி அடுத்த நான்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். 

தலை சுத்துதா? ஒ.கே.ஓ.கே.

தெளிவா குழப்ப என்னால மட்டும்தான் முடியும். ஹிஹி ஏதோ என்னால முடிஞ்சுது.

இன்னும் தெளிவா இருக்கவங்க மற்ற வேட்பாளர்கள் எப்படி செலக்ட் பண்ணும்னு தெரிஞ்சுக்க கீழே இருக்க இணைப்பை கிளிக் பண்ணுங்க 

http://tnmurali.blogspot.com/p/blog-page_27.html 
 ராஜ்ய சபா தேர்தல் -வோட்டு கணக்கிடும் முறை 
VOTING AND COUNTING METHOD FOR RAJYASABA ELECTION -MODEL
 

***********************************************************************************************

34 comments:

 1. முழுவதும் படிக்க முடியவில்லை! இருக்கிற ரெண்டு முடியை காப்பாத்திக்க எஸ்கேப்!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா நினச்ச மாதிரியே நடந்துடுச்சே!

   Delete
 2. தலை சுத்தலை... கொஞ்சமா வலிக்கிற மாதிரி இருக்கு... வரட்டுமா...!

  சூடா... ஒரு காஃபி... சாப்பிடணும்...!

  ReplyDelete
  Replies
  1. ஒ.கே DD சார். காபி சாப்பிட்டுட்டு வாங்க

   Delete
 3. ரொம்பவும் படிச்சவங்க இப்படித்தான் ஓட்டு போடுவாங்க. அப்போதானே "விஞ்ஞான"பூர்வமா ஏதாவது நாட்டுக்கு பண்ணமுடியும்?

  ReplyDelete
  Replies
  1. என்ன செய்யறது பாஸ்

   Delete
 4. படிக்கிற எங்களுக்கே தலை சுத்துகிற மாதிரி இருக்கிறது. பொறுமையாய் எழுதி,பதிவிட்டுள்ளீர்களே அவசியம் பாராட்டத்தான் வேண்டும்.நன்றி அய்யா

  ReplyDelete
  Replies
  1. நன்றி நன்றி சார்

   Delete
 5. முழுவதும் படிக்க முடியவில்லை! இருக்கிற ரெண்டு முடியை காப்பாத்திக்க எஸ்கேப்!\\ same blood. sorry boss.

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லை தப்பிச்சி ஒடுங்க. நல்ல காலம் மீதி பதிவு கொஞ்சம் இருக்கு பாஸ். பாதியில நிறுத்திட்டேன்

   Delete
 6. முரளி: கணக்கை புரிந்துகொள்ள ஆசைதான். நம்ம வாழ்நாள் ஒரு 30,000 நாட்கள்தான். அந்த குறைந்த காலத்தில் இந்தக் கணக்கை புரிஞ்சுக்க ஒரு ஒரு மணி நேரம் செலவழிப்பது "வொர்த்" தானு நீங்கதான் சொல்லணும்! :)

  ReplyDelete
  Replies
  1. என்ன வருண்? அப்படி சொலலிட்டீங்க. ஒரு நாள் முழுக்க படிச்சி புரிஞ்சிக்கிட்டு எழுதி இருக்கேன் . ஓகே.

   Delete
 7. ஏதோ ஒரு கணிதப்புதிர் மாதிரி இருக்கிறது. நமது ஆட்கள் புரிந்து கொண்டுதான் வாக்களிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. இது போல வாக்காளர்கள் வாக்களித்தால் நம்ம ஆட்கள் புரிந்து கொள்வது கஷ்டம்தான், ஆனால் செயல் விளக்கம் தந்தாள் நிச்சயம் புரியும்

   Delete
 8. :)


  இப்படி கஷ்டப்பட்டு படிச்சு என்னத்தை சொல்ல.... அரசியலே ஒரு வியாபாரம் - இந்த முறைகள் எல்லாம் வேஸ்ட்!

  ReplyDelete
  Replies
  1. இப்படி ஒண்ணு இருக்குன்னு தெரிஞ்சுகிட்டதுதான் லாபம்

   Delete
 9. நமக்கு எதற்கு இந்தக் கணக்கெல்லாம்.... எல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்? நமக்கென்ன வந்தது இதில்! நமக்கா சேவை செய்யப் போகிறார்கள் இவர்கள்?

  ReplyDelete
  Replies
  1. சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

   Delete
 10. நான் அதி வேகமாக ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணி படித்த பதிவு இதுதான் நண்பா

  ReplyDelete
 11. அரசியல் கணக்கு யாருக்குத்தெரியும் எப்படிபுரியும் நண்பரே. த.ம. 7

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கண்ணதாசன் சார்

   Delete
 12. கொள்ள கணக்கா இருக்கே ! விடை காண அரசியல் சதுரங்கம், ராச தந்திரம் இதுல விளையாடறவங்களால தான் தீர்க்க முடியுமோ?

  ReplyDelete
  Replies
  1. அரசியல்வாதிகள் ஈசியா புரிஞ்ச்சிக்குவாங்கன்னு நினைக்கிறேன்.

   Delete
 13. நானும் புதியதலைமுறை டிவியில் இந்த முறைபற்றி பார்த்தேன் .ஆனால் இன்னமும் புரியவில்லை..முடியல..

  ReplyDelete
  Replies
  1. நான் பலமுறை படித்துத்தான் புரிந்து கொண்டேன்

   Delete
 14. நல்ல பதிவு!

  கிட்டத்தட்ட இதே மாதிரிதான் குடியரசுத் தலைவர் தேர்தலிலும். அதில் மாநில மக்கள் தொகையை ஒட்டி உறுப்பினர்களின் ஓட்டின் மதிப்பு இருக்கும். அப்பொழுதே இந்தக் கணக்கை பதிவிடலாம் என்று நினைத்தேன். சோம்பேறித் தனத்தால் விட்டுவிட்டேன்.

  ஆனால், என்னால் இந்த அளவு தெளிவாக எழுதியிருக்க முடியும் என்றுத் தோன்றவில்லை.

  நன்றிகள் முரளி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீநிவாசன்.

   Delete
 15. புரிந்த,புரியாத நிலைதான்

  ReplyDelete
 16. ஐயா எல்லாமே சுத்துது....

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895