என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 26 ஜூலை, 2013

என் முதல் கணினி அனுபவம்

எனது மொக்கைகளின் பிறப்பிடம்
   என்னோட கணினி அனுபவத்தை நீங்கள் எல்லோரும் கேக்கனும்னு தலயில எழுதி இருந்தா சாரி கணிணியில எழுதி இருந்தா அதை யாரால தடுக்க முடியும்.?

   இதுக்கெல்லாம் காரணம் மதுரை தமிழன்தான். போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் மதுரை தமிழனுக்கே! 

   எல்லோர் வீட்லயும் கம்ப்யூட்டர் ஒரு ஆளா வந்து ஒக்காந்துகிட்டு இருக்கு. இது நல்லது பன்னுதா கேட்டது பன்னுதா கெட்டது பண்ணுதான்னு குழப்பமாத்தான் இருக்கு, .இருந்தாலும் அது இல்லாம இருக்க முடியல.

  கொஞ்சம் கொஞ்சமா பள்ளிகள் அலுவலகங்களை கணினி ஆக்ரமித்திருந்த நேரம். நாமளும் கத்துகிட்டு கொஞ்சம் பந்தா காட்டலாமே ன்னு ஒரு ஆசை. CSC இல  Exam எழுதி சலுகை விலையில படிங்கன்னு விளம்பரம் வேற தூண்ட, ஒரு கணினி  யோக கணினி  தினத்தில தேர்வு  எழுதி ரிசல்ட் வந்து உனக்கு 60% சலுகைன்னு சொல்லி 900 ரூபா கட்டி சந்தோஷமா சேர்ந்தேன்.அப்பறம்தான் தெரிஞ்சுது எல்லாரக்குமே 60 % சலுகைன்னு.

   முதல்  நாள் Introduction கிளாஸ். பைனரி நம்பர்,முதல் தலைமுறை ரெண்டாம் தலைமுறைன்னு சார்லஸ் பாபேஜ்.ன்னு எதை எதையோ சொல்லி பே பே ன்னு முழிக்க வைக்க அடுத்த நாள் வரலாமா வேணாமான்னு யோசனை பண்ண வச்சுட்டாங்க!. நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா.... அடிக்கடி அதைமாத்திக்குவேன். நாம வேலைக்கு போறதுக்கா படிக்கிறோம். சும்மாதான. என்ன ஆனாலும் ஆகட்டும்னு கிளாசுக்கு போக ஆரம்பிச்சிட்டேன். முதல்ல மௌஸ் புடிக்க கத்துக்கணும்னு சொல்லி பெயிண்ட் அப்ளிகேஷன திறந்து குடுத்து  இஷ்டத்துக்கு வரைய சொன்னாங்க. மௌஸை புடிச்சிக்கிட்டு கன்னாபின்னான்னு கிறுக்கினேன். ஸ்க்ரீன்ல அந்த தெரிய ரொம்ப சந்தோஷமா இருந்தது. அந்த கிறுக்கலை கிளியர் எரேசர் டூலை எடுத்து பேப்பர்ல  அழிக்க மாதிரி அழிக்க ஆரம்பிச்சேன். நிறைய கிறுக்கி இருந்ததால சீக்கிரம் அழிக்க முடியல . வேகமா மௌஸ நகத்தி அழிச்சேன் அழிச்சேன் அழிச்சு கிட்டே இருந்தேன். சத்தம் கேடு ஓடி வந்தார் ஒருத்தர். மௌச தேச்சிடுவீங்க போலஇருக்கேன்னு கதறினார்.(ஓனருக்கு சொந்தக்காரரா இருப்பாரோ?) எப்படி கிளியர் பண்றதுன்னு கத்து கொடுத்தார்.

   அப்புறம் அப்படியே ஒரு வாரம் பெயின்ட்ல தேசியக் கோடி, மயில் னு கொஞ்சம் சுவாரசியமா போச்சு. ஆனா நானோ எக்சல் வோர்ட், பவர் பாயின்ட் கத்துக்க வந்தேன். கத்துக் குடுத்தவங்கலாம் அங்கேயே இது மாதிரி கோர்ஸ் படிச்சவங்கதான். எல்லாம் அரட்டை அடிக்கறதுலதான் அதிக கவனம் செலுத்தினாங்க. அங்க எப்படி கத்து கொடுப்பங்கன்னா ஒரு கம்ப்யூடர்ல ஒருத்தர் ஒக்காந்துகிட்டு  இப்படி அப்படின்னு சொல்லி வேகமா சொல்லிகிட்டே போவார். சுத்தி பத்து பேர் நின்னு அதை கத்துக்கணும். ஒண்ணுமே புரியாது. அதுதான் Demonstration கிளாசாம். எல்லார்க்கும் ஒரு சிஸ்டத்தை குடுத்து சொல்லி கொடுத்த மாதிரி ஒர்க் பண்ணுங்க சொல்வாங்க. அவங்க சொல்லி கொடுத்தது MS Dos. அதுல கம்மேண்ட்ஸ் அது இதுன்னு குழப்ப இத கத்துகிட்டு என்ன பண்றது புரியல. நாம சின்சியரா தடுமாறி ஸ்டார்ட் பண்ணற நேரத்தில Instructor  வந்து எழுப்பி இன்னொரு சிஸ்டத்துக்கு அனுப்பிடுவார்.திரும்பி முதல்ல இருந்து ஆரம்பிக்கறதுக்குள்ள கிளாஸ் முடிஞ்சிடும். 
  
    கோர்ஸ் முடியற நேரத்தில வோர்ட் எக்சல் ஏதோ அரை குறையா சொல்லி கொடுக்க, ஒண்ணுமே புரியாமலேயே கோர்ஸ் முடிஞ்சிபோச்சு. அப்புறம் எக்ஸாம் எழுதனும்னு வேற சொன்னாங்க. எக்ஸாம் பாஸ் பண்ணா Certificate தருவாங்கலாம். ஒண்ணுமே தெரியாம என்னத்த எக்ஸாம் எழுத? அதோட CSC க்கு டாடா காட்டிட்டு வந்துட்டேன்.

    கொஞ்ச நாளைக்கு கம்ப்யூட்டர் ஆசைய மூட்டை கட்டி வச்சிட்டேன். திடீர்னு நான்  வேல செஞ்ச ஸ்கூலுக்கு பழைய கம்ப்யுயூட்டர் ஒண்ணு ஓசியில வந்தது. ஒண்ணும் தெரியலன்னாலும் அங்க இங்க படிச்சத வச்சு கம்ப்யூட்டர் பத்தி அப்பப்ப பேசுவேன். அதை பாத்து கம்ப்யூட்டர்ல நான் ஒரு அப்பாடக்கர்னு தப்பா நினச்சிட்டாங்க.அதுவரை கம்ப்யூட்டர் இல்லாததால நம்ம வண்டவாளம் தண்டவாளம் ஏறாம இருந்தது. இப்போ கம்ப்யூட்டர் வந்ததுக்கு அப்புறம் எல்லோம் ஒண்ணுகூடி கம்ப்யூட்டர்ல எதாச்சும் செய்து காட்ட சொல்லி நச்சரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்பாடக்கர் இமேஜ் டப்பா டக்கர் ஆகிடுமேன்னு கவலையாயிடுச்சு. என்ன பண்றதுன்னு தெரியாம முழுச்சிகிட்டிருந்தேன் .நல்ல காலம் பவர் கார்டு ரூபத்தில பகவன் ஹெல்ப் பண்ணார். அதாவது பவர் கார்டோட பின் ஒடஞ்சு போயிடுச்சு. அதை மாத்தினாத்தான் கம்ப்யுட்டர் வேலை செய்யும். அதை வாங்கனும்னு சொல்லி ஒரு பத்து நாள் ஓட்டினேன். அப்புறம் எர்த் சரியில்லன்னு சொல்லை கொஞ்ச நாள் தள்ளினேன். எக்சாம்லாம் முடியட்டும்னு ஒரு சாக்கு சொன்னேன். இப்படி சாக்கு போக்கு சொல்லி ஒருமாதத்துக்கு மேல ஆயிடுச்சு. 

    இதுக்குள்ள சனி ஞாயிறு, விடுமுறை வேற வேலை இருக்குன்னு சொல்லி ஸ்கூலுக்கு படை எடுத்து நாள் முழுதும் நான் மட்டுமே ஒக்காந்து  தட்டுத் தடுமாறி டெஸ்க் டாப் பிக்சர் மாத்தறது, விதம் விதமா ஸ்க்ரீன் சேவேர் செட் பண்றது வோர்ட்ல ஏதாவது  டைப் அடிச்சு சேவ் பண்றதுன்னு கத்துக்கிட்டேன். அப்பப்பா. இமேஜ் மெயின்டைன் பண்றது எவ்வளோ கஷ்டம்!
.
      ஒரு நாள் திங்கக் கிழமை முதல்ல போய் கம்ப்யூட்டரை ஆன்பண்ணி Welcome ஸ்க்ரீன் சேவரை ஓட விட்டேன். எல்லாரும் பாத்து சந்தோஷமாயிட்டாங்க. அப்புறம் என்ன?  அப்படியே கொஞ்ச நாள் ஓட, இதுல தமிழ்வர்ற மாதிரி பண்ணுங்கன்னு ஆர்டர் போட்டுட்டாட்டாங்க. அப்பா தமிழ் ஃபான்ட்  பத்தி எல்லாம் தெரியாது. அந்த கம்ப்யூடர்ல பிளாப்பி டிரைவ் மட்டுமே இருந்தது.(ஓசியில குடுத்தவங்க சிடி டிரைவ்  கழட்டிகிட்டு குடுத்தாங்க போல இருக்கு )
அப்ப நெய்வேலியில் இருந்த எங்க அண்ணன் கம்ப்யூட்டர் வச்சிருந்தார். 'குறள்' Software Install பண்ணா தமிழ்ல டைப் அடிக்கலாம்னார் மென்பொருளோட சைஸ்  1.5 MB க்கும் மேல அதனோட சைஸ் இருந்ததால Floppyயில காப்பி பண்ண முடியல. ஏதோ ஒரு பைல் ஸ்பிளிட்டரை யூஸ் பண்ணி மூணு Floppy ல ஸ்பிளிட்டிங் சாப்ட்வேரையும் காபி எடுத்து கொடுத்தார். அதைக் கொண்டு போய் கணினியில் இன்ஸ்டால் செய்து தனித் தனி பைல ஒண்ணா சேக்க படாத பாடு பட்டேன். எப்படி பண்ணியும் வரல. ஒரு பிரவுசிங் சென்டருக்கு போய் எப்படி பண்றதுன்னு கேட்டேன். அவன் பண்ணிட்டான். ஆனா எப்படி பண்றதுன்னு சொல்லத் தெரியல. எப்படியோ பலமுறை முயற்சி செஞ்சு "குறள்" மென்பொருளை இன்ஸ்டால் செஞ்சுட்டேன். அப்புறந்தான் தெரிஞ்சுது ஈசியான தமிழ் எழுத்துருக்கள் நிறைய  இருக்குன்னு. பாமினி,சன் fonts ஒரு இன்டர்நெட் சென்டர்ல காப்பி பண்ணி கொடுக்க வோர்ட் எக்சல்லில் தமிழ் பயன்படுத்தவும் கொஞ்சம் கொஞ்சமா கத்துகிட்டேன்.அப்புறம் பவர் பாயிண்டல  பிரசண்டேஷன் அனிமேஷனோட பண்ணவும் நானே தெரிஞ்சிக்கிட்டேன்.
  ஆர்வம்  மேலும் அதிகமாக ஆரம்பிச்சது.தினமலர்ல கம்ப்யூட்டர் மலர் வரும் அதை தவறாம படிப்பேன், அப்புறம் கம்ப்யூட்டர் உலகம்னு ஒரு பத்திரிக்கை சிடியோட விப்பாங்க. அந்த சிடிக்காகவே வாங்கினேன். இன்னொரு கணினி பத்திரிக்கை தமிழ் கம்ப்யுட்டரும் எனக்கு அறிமுகம் ஆச்சு. தமிழ் கம்ப்யூட்டர் கணினி கத்துக்கறவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும். அதன் மூலம் , மென்பொருளை, வன்பொருட்கள்,இணையம்  ஏரளமான விஷயங்களை தெரிஞ்சுக்க முடிஞ்சுது. இப்பவும் இந்த புத்தகத்தை வாங்கிட்டுதான் இருக்கேன்.

   இதை எல்லாம் டெஸ்ட் பண்ணி பாக்க கம்ப்யூட்டர் ஒண்ணு சொந்தமா இருந்தா நல்லா இருக்கும்னு நினச்சு ஒருபழைய கம்ப்யுடரை 5000 ரூபா கொடுத்து வாங்கினேன். அப்புறந்தான் தெரிஞ்சுது, அதனோட ஒரத் 3000 கூட இல்லன்னு. அதுல பல ஸ்பேர்களை வாங்கி இனைச்சேன். 

  கொஞ்சம் தெரிஞ்சிக்கறதுக்கும் நிறைய பந்தா காட்டறதுக்கும் COMPUTER ACTIVE, DIGIT,PC FRIEND போன்ற ஆங்கில இதழ்கள் உதவி செஞ்சுது. நான் CPU வை பெரும்பாலும் ஒப்பன் பண்ணியே வச்சிருப்பேன். இதனால உள்ள இருக்கிற பாகங்களை பத்தி தெரிஞ்சுக்க முடிஞ்சது. பார்ட்சை கழட்டறதும் மாற்றதுமா  எங்கிட்ட படாத பட்டுது. அப்பப்ப ரிப்பேர் ஆக ஒவ்வொரு முறையும் சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட 200, 300 ன்னு செலவானதால முடிஞ்சவரை அதையெல்லாம் நானே செய்யறதுன்னு முடிவு பண்ணிட்டேன். 

    ஹார்ட்  டிஸ்க், சி,டி டிரைவ்  O,S இதனால வர சின்ன சின்ன சிக்கல்களை என்னால தட்டுத் தடுமாறி சரிசெஞ்சுக்க முடிஞ்சுது
போட்டோ  ஷாப்,விசுவல் பேசிக்,HTML, ஜாவா, சி இதெல்லாம் கத்துக்கணும்னு ஆசை. இதெல்லாம் நான் செய்கிற பணிக்கு நேரிடையா உதவப் போறதில்லங்கறதால அதையெல்லாம் விட்டுட்டேன்.

    இன்டர்நெட் வசதி இல்லாததாலே பிரவுசிங் சென்டருக்கு போய் பிரவுஸ் பண்ணி நிறைய விஷயங்கள் கத்துக்க முடிஞ்சுது, ஆனா அதிகமா செலவு ஆச்சு. அதனால நெட் Connection வாங்க முடிவு செஞ்சேன்.
    பி.எஸ்.என்.எல் ACCOUNT LESS INTERNET CONNECTION, ஹாத்வே  கனெக்சன்  கடைசியா இப்ப பி.எஸ்.என்.எல் பிராண்ட் பேன்ட் இணைப்பு கொடுத்திருக்கேன்.ஆரம்பத்தில limited பிளான் ல தான் இருந்தேன். சமீபத்தில்தான் Unlimited க்கு மாறினேன். தொடங்கற[ப்ப இணைய இணைப்பை அரசாணைகள் பாக்கறதுக்கு மட்டும்தான் பயன்பபடுத்தினேன். போகப் போக Net banking, EB Bill payment, Train Ticket resaervation ன்னு விரிவடஞ்சிகிட்டே போச்சு.

   தமிழ் வலைப் பக்கங்கள் நிறைய இருக்கும்னு நான் நினச்சிக் கூட பாக்கல. நானும் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சேன். மூணு பதிவு போட்டேன். யாரும் படிக்காததால அதை அப்படியே விட்டுட்டேன். அப்புறம் . ஒரு வருஷம் கழிச்சி 2011 அக்டோபர்ல திரும்பவும் எழுத ஆரம்பிச்சேன். திரட்டிகள்ள பதிவை இணைக்க படாத பட்டேன்.
  நண்பர்களுடைய  வலைப் பதிவுகள்ல  இருந்து நிறைய விஷயங்களை கத்துக்க முடிஞ்சுது. எப்படியோ சமாளிச்சு இன்னைக்கு வர ஓட்டிக்கிட்டு இருக்கேன். அதுக்கெல்லாம் காரணம் எப்படி எழுதினாலும் ஆதரவளிக்கிற உங்களோட பெரிய மனசுதான் 

   கணினியைப் பாக்கும்போதேல்லாம் 'கற்றது கடுகளவு, இன்னும் இருப்பது கணினி அளவு' ன்னு அது சொல்ற மாதிரியே இருக்கு.

******************************************************************************************
கொசுறு: நண்பர் சுரேஷ் கூட கணினி அனுபவத்துக்கு பரிந்துரை செய்திருக்கிறார். அவருக்கு எனது நன்றி.
நானும்  அஞ்சு பேரை கணினி அனுபவம் பற்றி எழுத பரிந்துரைக்கலாம்னு தேடிக்கிட்டிருக்கேன். ஏற்கனவே எனக்கு தெரிஞ்ச நிறையப் பேர் புக் ஆயிட்டாங்க. யாராவது சிக்கமலா போயிடுவாங்க!

ரெண்டு பேர் சிக்கிட்டாங்க 
உங்கள் முதல் கணினி அனுபவங்களை எழுதும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

1. பரிதி முத்துராசன்
2. கரந்தை S.ஜெயகுமார்


45 கருத்துகள்:

  1. முதலில் சலுகையிலிருந்து 5000 ரூபா கணினி வரை பிரகாசமான பல்பு...? ஹிஹி... பெயிண்ட், ஸ்க்ரீன் சேவர் என 'சிரமப்'பட்டாலும் ஆர்வத்துடன் 'hard'ware கத்துக் கொண்டுள்ளீர்கள்... கல்லாதது கணினி அளவு உண்மை... சுவாரஸ்யமான அனுபவம்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. கணினியைப் பாக்கும்போதேல்லாம் 'கற்றது கடுகளவு, இன்னும் இருப்பது கணினி அளவு' ன்னு அது சொல்ற மாதிரியே இருக்கு.

    அருமையான பகிர்வுகள் .பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  3. அருமை...தெளிவான சொல்லியிருக்கீங்க..என்ன ஒரு அனுபவம்.. என்ன ஒரு நம்பிக்கை.. என்ன ஒரு முன்னேற்றம்!!! உண்மையிலேயே நீங்க சூப்பர் சார்.. !!!

    பதிலளிநீக்கு
  4. முதல் ஒரு தடவை முடிவு எடுத்ததை மாத்திக்கிற பழக்கமில்லாதவரா இருந்தால் இத்தனை வேலைகளும் செய்திருக்க மாட்டீங்க.. நல்ல பழக்கம் சார்...!!! இப்படிதான் இருக்கணும்.. அப்பப்போ காலத்துக்கு, தகுந்த மாதிரி சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாறிக்கணும்...!! அனுபவத்தை ரசிக்கும்படியா சொல்லியிருக்கீங்க..நன்றி..வாழ்த்துகள்..!!

    பதிலளிநீக்கு
  5. நல்ல அனுபவம்... இன்னும் சிக்கலீங்களா அந்த 5 பேரும்...

    பதிலளிநீக்கு
  6. கம்ப்யூட்டர் உலகிலும் உள்ளே போய் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறீர்கள். அதனால்தான் சளைக்காமல் பதிவுகளை எழுதுகிறீர்கள் போலிருக்கிறது. வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  7. கம்ப்யூட்டர் கத்துக்கறதுக்கு இன்ஸ்டியூட்டுக்கு போனா இப்படித்தான் லோல் படணும். சில இடங்கள்ல கத்துக்குடுக்கறவரே கத்துக்குட்டியா இருப்பார். நாமளே வாங்கி தட்டுத்டுமாறி கத்துக்கறதுல இருக்கற அனுபவமே வேற. அதத்தான் நீங்களும் அனுபவிச்சிருக்கீங்க!

    பதிலளிநீக்கு
  8. நல்ல சுவராசியமான பதிவு
    நானும் எழுத விருப்பம்...எனக்கு அலுவல ககணினிதான் அறிமுகம்
    என்னால்தான் எங்கள் நிறுவனத்தில் இன்று அனைத்து வேலைகளும் அறிமுகமானத் ஆகையால் அதில் என் சுயதம்பட்டம் அதிகமாக இருக்கும் அதனால் கொஞ்சம் தயக்கம்
    நன்றி

    பதிலளிநீக்கு
  9. ரொம்ப இலகுவான எழுத்து நடையில எழுதி இருக்கீங்க.. முதல் அனுபவத்தில் கிட்டத்தட்ட பலர் பல்ப் தான் வாங்கி இருப்போம் போல..

    பதிலளிநீக்கு
  10. நல்ல விரிவா சொல்லி இருக்கிங்க. ஆனா கடைசியா சொன்னிங்க பாருங்க ஒரு உண்மைய ///எப்படி எழுதினாலும் ஆதரவளிக்கிற உங்களோட பெரிய மனசுதான் ////
    இப்படி சொல்ல யாருக்குங்க மனசு இருக்கும்.

    பதிலளிநீக்கு
  11. விரிவா விவரமா சொல்லியிருக்கீங்க... வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு

  12. //CSC இல Exam எழுதி சலுகை விலையில படங்கன்னு விளம்பரம் வேற தூண்ட, ஒரு கணினி யோக கணினி தினத்தில தேர்வு எழுதி ரிசல்ட் வந்து உனக்கு 60% சலுகைன்னு சொல்லி 900 ரூபா கட்டி சந்தோஷமா சேர்ந்தேன்.அப்பறம்தான் தெரிஞ்சுது எல்லாரக்குமே 60 % சலுகைன்னு.//

    ஆமா... எனக்கு ஸ்காலர் ஷிப்ல படிக்க csc ல இடம் கிடைச்சிருக்குனு பெருமை பீத்திகிட்ட ஆளுக எல்லாம் நிறைய இருக்கு... என் பிரண்ட்ஸ் நிறைய பேர் இப்படித்தான் திரிஞ்சாங்க..

    நல்ல சுவாரஸ்யமா இருக்கு

    பதிலளிநீக்கு
  13. சொந்தமா முயற்சி செய்து நிறைய கத்துக்கிட்டிருக்கீங்க! உங்க பதிவுல நிறைய டிப்ஸும் கிடைச்சது! நல்ல பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  14. தங்கள் அனுபவம் சுவையானது!

    பதிலளிநீக்கு
  15. மிகவும் நகைச்சுவையோடு கணினி அனுபவத்தை அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள். தன்னடக்கம் மிளிரும் பதிவு. பாராட்டுகள் முரளிதரன்.

    பதிலளிநீக்கு
  16. நல்ல அனுபவங்கள்.... சுவையாக இருந்தன உங்கள் அனுபவங்கள்.....

    என்னையும் அழைத்திருக்கிறார்கள் - ஸ்ரீராமும் தமிழ் இளங்கோ அவர்களும்.....

    தமிழ் வலையுலகமே எழுதி முடித்த பிறகு தான் நான் எழுதப் போறேன் போல! :)

    பதிலளிநீக்கு
  17. நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறீர்கள்.... அருமை....

    பதிலளிநீக்கு
  18. ஸ்கூல்ல ஸ்க்ரீன் சேவர் காட்டி ஸீன் போட்டிருக்கிங்க.. ஹா..ஹா..! ஆனாலும் கம்ப்யூட்டர்ல கோடு போட்டு கொடுத்தா ரோடே போடற ஆள் நீங்க... சொந்த ஆர்வத்துல நிறைய கத்துக்கிடறதும், அதை சுலபமா மத்தவங்களுக்கு சொல்லி தர்றதிலும் எக்ஸ்பர்ட் ஆச்சே!

    ஆமாம் BSNL எல்லாம் ஒழுங்கா வேலை செய்யுதுங்களா? எங்க வீட்லயும் BSNL பிராண்ட் பேன்ட் தான் தண்டத்துக்கு பில்லை கட்டிட்டு இருக்கோம்... இணைப்பு ஒழுங்கா வர்றதேயில்லை... கம்ப்ளெயிண்ட் பண்ணி சரி செய்தாலும் அதே கதைதான்.. அப்பப்ப கட் ஆகிடுது. இருந்தாலும் விட்டு தொலைய முடியலை அதுலதான் 20% டிஸ்கவுண்ட்! ஹி..ஹி...!

    பதிலளிநீக்கு
  19. எல்லோர் வீட்லயும் கம்ப்யூட்டர் ஒரு ஆளா வந்து ஒக்காந்துகிட்டு இருக்கு. //இதைப் பத்தி நான் யோசிக்கவில்லையே

    பதிலளிநீக்கு
  20. என்னைய மாதிரி உருப்படி இல்லாதவன் சொல்லி தந்த இடத்தில் நீங்கள் படித்தாலும் இப்ப ரொம்ப திறமையான ஆள மாறீட்டீங்க. பாராட்டுக்கள் முரளி

    பதிலளிநீக்கு
  21. நகைச்சுவையோடு தங்களின் கணினி அனுபவம் அருமை.
    தங்களின் வார்த்தைகளுக்கு இணங்க நானும் அவசியம் எழுதுகின்றேன்அய்யா

    பதிலளிநீக்கு
  22. சுவையான அனுபவம், நானும் திரட்டிகளில் இணைப்பதற்கு பெரும் பாடு பட்டுருக்கேன், நேரம் இருந்ததால சுலபமாக கத்துக்க முடிஞ்சுது.

    பதிலளிநீக்கு
  23. //நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா.... அடிக்கடி அதை மாத்திக்குவேன்..//

    ஹா..ஹா..ஹா..

    கம்பியூட்டர் உலகம் சிடிக்கள் நானும் நிறைய வாங்கியிருக்கேன். அப்புறம் ஒரு விஷயம்... தினமலர், தினமணியில் வந்த கம்பியூட்டர் பக்கங்கள்+புத்தகங்கள் சேர்த்து வைத்திருந்தேன். அவற்றை இதோ இன்றுதான் குப்பை என்று தூக்கிப் போடா எடுத்து வைத்திருக்கிறேன்.

    சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  24. எல்லாவற்றையும் நீங்களாகவே விழுந்து எழுந்து கற்றுக் கொண்டதுதான் சுவாரஸ்யம். கணனியில் மட்டும் எத்தனை கற்றாலும் இன்னும் இத்தனை என்று எத்தனை எத்தனையோ இருக்கிறது!
    கணணி அனுபவங்களை வேடிக்கையாகப் பகிர்ந்திருக்கிறீர்கள். மேலும் மேலும் இனிய கணணி நேரங்கள் கிடைக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  25. அனுபவம் ரசனை.

    'கற்றது கடுகளவு, இன்னும் இருப்பது கணினி அளவு" சரியாக சொல்லிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  26. குருவே இல்லாத பயிற்சி.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    பதிலளிநீக்கு
  27. கம்யூட்டர் கற்றது சுவையான அனுபவம்தான். ஆனால் அது சென்ற நூற்றாண்டின் அனுபவம் போல் உள்ளது. தற்போது குழந்தைகள் கிளுகிளுப்பை போல் படிக்கும் போதே கம்யூட்டர் கைக்கு வந்து விடுகின்றதே!

    பதிலளிநீக்கு
  28. வருக ஐயா! ஒரு 90 களில் நடுத்தர வர்க்கத்தினருக்கு. ஒரு அதிசயப் பொருளாகவே கம்ப்யூட்டர் இருந்தது.விலையும் அதிகம். உயர் பதவியில் இருப்பவர்கள் பெரிய நிறுவங்கள் ,பணக்கார்கள் மட்டுமே இதை பயன் படுத்தமுடின்தது. பெரும்பாலும் வங்கி அதிகாரிகளுக்கே கணினி அனுபவம் கடந்த நூற்றாண்டில் கிடைத்திருக்கிறது. 2000ல இல்தான் கணினி அதிகமாக புழக்கத்திற்கு வந்தது. இன்று கணினி இல்லாத வீடுகளே இல்லை எனலாம். இந்தக் காலக் கட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறக்கும்போதே கணினி அனுபவம் வாய்த்திருக்கிறது.
    உண்மையில் நான் கணினியை தொட்டுப் பார்த்தது. 2002 இல்தான்.

    பதிலளிநீக்கு
  29. உங்க கணினி அனுபவத்த ரொம்ப விளக்கமா சொல்லிட்டீங்க சார், ரொம்ப கஷ்டப்பட்டு கணினி கற்றுள்ளீர்கள் ! You are really great sir, அப்புறம் அந்த மவுஸினை எரேசர் ஆக்கிய மேட்டர் டாப்பு டக்கர் :) ஸ்கூல் பையன் என்னை கணினி அனுபவம் தொடர் பதிவெழுத அழைத்துள்ளார் !! இனிமே தான் எழுதனும் ...:)

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895