என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Wednesday, August 28, 2013

பதிவர் சந்திப்பு அவசியமா?


   
  என்னதான் கோப்பெரும் சோழன் பிசிராந்தையார் போல முகம்பாரா நட்பை பதிவர்களுக்கிடையே தகவல் தொடர்பு சாதனங்கள் ஏற்படுத்தித் தந்திருந்தாலும் நேரில் பார்த்து பேசி மகிழ்வது போல் ஆகுமா? அதனால் பதிவர் சந்திப்பு அவசியம் என்பது நாள் சொல்லித்தானா தெரிய வேண்டும்? அத்தகைய வாய்ப்பை வழங்குகிறது, தமிழ் வலைப்பதிவர் திருவிழா. 01.09.2013 அன்று சென்னை வடபழனி திரை இசைக் கலைஞர்கள் சங்க அரங்கில் கோலாகலமாக நடக்க இருக்கும் இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

  சிறப்பாக எழுதி பதிவுலகைக் கலக்கி கொண்டிருக்கும் பதிவர்கள் பலரைக் காணப் போகிறோம் என்று நினைக்கும்போதே மனம் மகிழ்ச்சியில் துள்ளத்தான் செய்கிறது. நான் பதிவெழுதத் தொடங்கி ஓராண்டு  கூட நிறைவடையாத நிலையில் கடந்த பதிவர் திருவிழாவில் கலந்து கொண்டேன். அதற்கு முன்னர் நான் அறிந்த மற்றும் அறிந்திராத பல பதிவர்களை நேரில் காண அற்புத வாய்ப்பாக அமைந்தது. அதே போல  இந்த சந்திப்பும் ஒரு மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் என்றே நம்புகிறேன்.  கருத்துகளில் எண்ண ஓட்டங்களில் வேறுபாடுகள் இருந்தாலும், அனவைரும் தமிழ்ப் பதிவர் என்ற நிலையில் ஒன்றுபடுவதே இத் திருவிழாவின் முக்கிய நோக்கம் எனலாம்.

    இது போன்ற விழாவை நடத்துவது என்பது எளிதல்ல. ஆரூர் மூனா செந்தில், மதுமதி, சீனு,அரசன், ஜெயக்குமார் போன்றவர்கள் நேரம் காலம் கருதாது, விழா வெற்றி பெறவேண்டும் என்பதே குறிக்கோளாக ஏற்பாடுகளை முழு மூச்சாக செய்துவருகிறார்கள்.  புலவர் இராமானுசம் ஐயா அவர்கள் தக்க ஆலோசனைகளை வழங்குவதோடு,  இந்தப் பதிவர் சந்திப்பை ஏதோ கூடினோம் பேசினோம் மகிழ்ந்தோம், கலைந்தோம் என்றில்லாமல், ஒரு நல்ல முறையான பதிவு செய்யப்பட்ட அமைப்பாக மாற்றவேண்டும் என்பதை அவ்வப்போது வலியுறுத்தி வந்திருக்கிறார்.  அதற்கான காலம் கைகூடி வருவதாகவே தெரிகிறது.

   இந்த விழாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்று பதிவர்கள் நூல் வெளியிடுவது. பெரும்பாலும் பதிவர்கள் நூல் வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு பதிவிடுவதில்லை. தம் பதிவுகளில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து பின்னர் சில திருத்தங்கள் செய்தோ செய்யாமலோ அதை புத்தகமாக்குகிறார்கள். பதிவர்களுக்கெல்லாம கிடைக்கக் கூடிய நன்மை என்னவெனில் பதிவெழுதும்போதே பின்னூட்டங்களில் அதற்கு கிடைக்கும் விமர்சனம் மற்றும் வரவேற்பே, பதிவுகள்  நூல் வடிவம் பெற  தூண்டு கோலாக அமையும்.. மேலும் தவறுகளையும் கவனிக்கப்படாத கருத்துப் பிழைகளையும் புத்தக ஆக்கத்திற்கு முன்னர சரி செய்து விடமுடியும். வலையில் பதிவாக வெளியிடப்படாத கருத்தை கொண்டதாக நூல் இருந்தாலும் முன்னரே வலையுலகில் பரிச்சயமாகி இருப்பது  நூலாசிரியருக்கும் நூலுக்கும் கூடுதல் வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

   அந்த வகையில் முன்னிலைப் பதிவரான நண்பர் வீடுதிரும்பல் மோகன் குமாரின் வெற்றிக் கோடு புத்தகம் வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படுவதில் மிக்க மகிழ்ச்சி.இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளவற்றில் முதல் 10 அத்தியாயங்கள் மட்டுமே வலையில் விளைந்தவை. இன்னும் சில அத்தியாயங்கள் சேர்க்கப் பட்டு வெளியிடப்படவுள்ளதாக மோகன் குமார் தெரிவித்திருக்கிறார். இதன் முதல் பகுதியை மட்டும் வலையில் பின்னோக்கி சென்று படித்தேன். சிறப்பாகவும் சுவாரசியமாகவும் தொடங்கி இருக்கிறார்.  
பொழுது போக்கு அம்சங்கள், நல்ல தகவல்கள்,பயணக் கட்டுரைகள், பேட்டிகள் இவற்றோடு மேலும்   பத்திரிகைக்குரிய பல அம்சங்களுடன் அமைந்துள்ள இவரது "வீடு திரும்பல்" ஏராளமானவர்களை கவர்ந்தது  போலவே  முதல் நூல் வெற்றிக் கோடு நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும். வாழ்த்துக்கள்!

   கடந்த பதிவர் சந்திப்பின் போதுதான் சேட்டைக்காரன் அவர்களை  முதன் முறையாக பார்த்தேன். அவரது வலைப் பக்கத்தையும் நான் அறிந்ததில்லை. தனது சுய அறிமுகத்தின்போது நான் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வருகிறேன். என்றார். அனைவரும்  ஆச்சர்யத்துடன் பார்க்க  பின் சொன்னார். ஆம் நான் கவிதைகள் எழுதுவதில்லை. கவிதை என்று எதையும் எழுதாமலிருப்பதே தொண்டல்லவா என்று பஞ்ச் அடிக்க அரங்கம் அதிர்ந்தது. பின்னர்தான் தெரிந்தது அவர் சிறந்த நகைச்சுவை பதிவர் என்பது. அவரது "மொட்டைத் தலையும் முழங்காலும்" என்ற நூலும் விழாவின்போது வெளியிடப்படுவது  மகிழ்ச்சிக்குரியது.
வாழ்த்துக்கள்! 

   பதிவர் சங்கவி அவர்களின் "இதழில் எழுதிய கவிதைகள்" என்ற நூலும் வெளிவர உள்ளதற்கு பாராட்டுக்கள். சமீபகாலமாகத்தான் அவரது வலைப்பக்கம் செல்கிறேன். சிறப்பாக எழுதுகிறார்.  வாழ்த்துக்கள்

   எனக்கு புதியவரான யாமிதாஷா என்பவரின் "அவன் ஆண் தேவதை" என்ற வித்தியாசமான தலைப்பைக் கொண்ட நூலும் வெளியிடத் தயாராக உள்ளது. அவருக்கும் வாழ்த்துக்கள்.
  இனிவரும் காலங்களில் பதிப்புலகம் தமிழ்ப்பதிவுலகையும் உற்றுநோக்கி நல்ல படைப்புகளை புத்தகமாக வெளியிடும் என்றும் நம்பலாம். 
 அடுத்தடுத்த பதிவர் திருவிழாக்களில்  இன்னும் பல பதிவர்களின்  புத்த வெளியீடுகள் நடைபெறுவதற்கு இது நிச்சயம் முன் முன்னுதாரணமாகத் திகழும் என்று எதிர்பார்க்கலாம்
  (அப்புறம் நம் தமிழ்ப்பதிவர்கள் எதைக் கண்டும் அஞ்சாதவர்கள் என்பதால் சில  பதிவர்கள் தங்கள் தனிப்பட்ட  திறமைகளை வேறு வெளிக்காட்டப்போகிறார்களாம். பயந்த சுபாவம் கொண்டவர்கள் துணையுடன் வரவும். ஹிஹிஹி )

******************************************************************************** 

அனைவரும்  வருக! வருக!

47 comments:

 1. என்னதான் கோப்பெரும் சோழன் பிசிராந்தையார் போல முகம்பாரா நட்பை பதிவர்களுக்கிடையே தகவல் தொடர்பு சாதனங்கள் ஏற்படுத்தித் தந்திருந்தாலும் நேரில் பார்த்து பேசி மகிழ்வது போல் ஆகுமா? ......ஆரம்பமே அதிரடியாக இருக்கு
  சந்திப்போம்

  ReplyDelete
  Replies
  1. வாங்க வாங்க! சந்திக்க ஆவல்

   Delete
 2. தலைப்பில் துவங்கிய சுவாரஸ்யம்
  பதிவின் கடைசி வரையும்....
  கவுண்ட் டவுன் வாட்ச் அருமை
  சந்திப்பில் சந்திப்போம்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. கடந்த ஆண்டு தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தங்களுடன் மீண்டும் அளவளாவ ஆவலாக இருக்கிறேன்.

   Delete


 3. //பதிவர் சந்திப்பு அவசியமா? //

  என்ன பாஸ் இப்படி கேட்டுடீங்க...வெளிநாட்ல இருக்கிற நாங்க எல்லாம் இப்படியொரு சிறப்பான நிகழ்வில் பங்கெடுக்க முடியலையேன்னு ஏக்கத்தில இருக்கோம்...

  ReplyDelete
 4. இப்படி ஒரு விழா நடத்துவதில் எவ்வளவு உழைப்பு இருக்க வேண்டும் என்று எனக்கு புரிகிறது. நான் ஐம்பது பேரை திரட்டி விழா நடத்துவதற்கே ஒரு வாரம் தூக்கம் தொலைத்திருக்கிறேன்... ! குழுவின் உழைப்பும், முயற்சியும் பாராட்டத்தக்கது. பால கணேஷ் ஸார் எனக்கு அழைப்பு விடுத்தார்.. தனபால் ஸார் நீங்க கண்டிப்பா வர்றிங்க என்றார்.. எனக்கும் உங்க எல்லோரையும் சந்திக்கனும்னு ரொம்ப ரொம்ப ஆவல்.. நானும் எதாவது நிகழ்ச்சிகள் கொடுத்து அசத்தனும்னு(?) நினைப்பு உண்டு.. அன்றைக்கு வர இயலாத சூழலில் இருக்கிறேன் என்பது வருத்தம்தான்.. என்றாவது சந்திப்பு நிகழும். அதுவரை உங்கள் மகிழ்ச்சியில் நானும் பங்கேற்று கொள்கிறேன். அனைவர்க்கும் என் வாழ்த்துக்கள்! அடுத்த ஆண்டு முரளிதரன் ஸார் புத்தகம் வெளியீடுவார் என்று நம்புகிறேன்.  ReplyDelete
  Replies
  1. விழாவிற்கு வருகை தராதது ஏமாற்றமே!
   //அடுத்த ஆண்டு முரளிதரன் ஸார் புத்தகம் வெளியீடுவார் என்று நம்புகிறேன்.//
   இப்படி உசுப்பேற்றினால் புத்தகம் வெளியிட்டு விடுவேன். ஜாக்கிரதை.

   Delete
 5. சந்திப்போம் சார் !!

  // பயந்த சுபாவம் கொண்டவர்கள் துணையுடன் வரவும். ஹிஹிஹி//

  நீங்க எதுவும் தனித்திறமை காட்டுரீங்களா சார் :)

  ReplyDelete
  Replies
  1. பய்ப்பாடாதே விஜயன். அப்படி எதுவும் ஐடியா இல்லை.

   Delete
 6. தேவையான நேரம்! தேவையான பதிவு! நன்றி முரளி!

  ReplyDelete
 7. ஆரம்பமே அமர்க்களம் ஐயா. பதிவர் சந்திப்பு அவசியம் தேவையான ஒன்றுதான்.
  இம்முறை வரஇயலாத சூழலில உள்ளேன் ஐயா. மன்னிக்க வேண்டும். எப்படியும் அடுத்த முறை அவசியம் வருகின்றேன். தங்களை நேரில் காண வேண்டும் என்பது எனது வெகு நாளைய ஆவல். விரைவில் நிறைவேறும் என நம்புகின்றேன்.
  பதிவர் திருவிழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜெயகுமார்

   Delete
 8. அருமையாக சொன்னீர்கள் நேரில் சந்திப்பது போல் வலை சந்திப்புக்கள் இருப்பதில்லைதான்! இந்த முறையும் என்னால் வர முடியுமா என்று தெரியவில்லை! பார்ப்போம்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. முடிந்த அளவுக்கு வருவதற்கு முயற்சி செய்யுங்கள். ஏதாவது ஒரு நேரத்தில் வந்து விட்டு கூட செல்லலாம்.

   Delete
 9. வணக்கம்
  முரளி(அண்ணா)
  இந்தியாவில் இருக்கிற தமிழ்ப்பதிவர்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் எங்களுக்கு கவலை வெளிநாட்டில் இருக்கிறோம் கலந்து கொள்ளமுடியாது என்ற மனவேதனை என்னதான் செய்வது.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கவலை வேண்டாம் ரூபன் சந்தர்ப்பம் வாய்க்கும்போது சந்திக்கலாம்.
   நன்றி

   Delete
 10. சரியான நேரத்தில் விமர்சனம் செய்துள்ளது உங்களுக்கும் நூலாசிரியர்களுக்கும் பாராட்டுக்குரியது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கண்ணதாசன் சார்.

   Delete
 11. பதிவர்கள் அனைவரும் ஒன்று கூடி நடத்தும் அமர்க்களமான இந்த விழாவில் கலந்து கொள்ள‌ மிக‌ ஆவலாக இருந்தாலும் வர இயலாத தொலைவில் இருப்பதை நினைத்து வருத்தம் தான்! இருப்பினும் இங்கிருந்தே உளம் மகிழ வாழ்த்துக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி மேடம் லைவ் ரிலே இருக்கிறது முடிந்தால் பாருங்கள்

   Delete
 12. கவுண்ட் டவுனை துவக்கி எதிர்பார்ப்பை எகிர வைத்து விட்டீர்கள். நூல்கள் வெளியிடும் தகவலைத் திரட்டி வெளியிட்ட தங்களுக்கும், நூலகள் வெளியிடும் பதிவர்களுக்கும், விழா ஏற்பாட்டாளர்களுக்கும் வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள். என்னையும் ஒரு நல்ல பதிவராக பதிவுலகம் ஏற்றுக் கொண்டால் அடுத்த வருடம் நானும் கலந்து கொள்கிறேன், நன்றி அய்யா.

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் ஒரு நல்ல பதிவர்தான் இந்த விழாவில் கூட நீங்கள் தாராளமாகக் கலந்து கொள்ளலாம். முடிந்தால் வருகை தாருங்கள்

   Delete
 13. பதிவர் விழாத் தகவல்களிற்கு மிக்க நன்றி.
  சிறப்புற நடந்தேற இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 14. விழா வெற்றி பெறவேண்டும் என்பதே குறிக்கோளாக ஏற்பாடுகளை முழு மூச்சாக செய்துவருகிறார்கள். //

  விழா வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.
  பதிவு வெகு அருமை.

  ReplyDelete
 15. விழா சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. கடந்த ஆண்டு சந்தித்தோம். மிக்க மகிழ்ச்சி இவ்வாண்டு வரவில்லையா?

   Delete
 16. நம் புத்தகம் பற்றிய நல்வார்த்தைகளுக்கு மிக்க நன்றி முரளி

  ReplyDelete
  Replies
  1. புத்தகம் படிக்க நானும் ஆவலாக இருக்கிறேன்.

   Delete
 17. நாம் சந்திக்க விழா அவசியமே... வாருங்கள்... சந்திப்போம்..

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி சந்திப்போம்

   Delete
 18. பதிவர் சந்திப்பு அன்று நான் வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால், சென்ற ஆண்டைப்போல் இந்த ஆண்டும் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் உண்டு. விழா சிறப்புடன் நடைபெற எனது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார். லைவ் ரிலே பாருங்கள்

   Delete
 19. எல்லோரையும் பார்க்க மிக ஆவலுடன் இருக்கிறேன்.சென்ற ஆண்டு என் கணவரின் அண்ணா பெண் திருமணம் என்பதால் கலந்து கொள்ள முடியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வருக வருக சந்திப்போம்

   Delete
 20. நம்முடைய சக பதிவர்கள் எழுதும் நூல் வெளியீடு என்பது ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வு. அதுவும் ஒரே மேடையில் நான்கு புத்தகங்கள் வெளியீடு! நான்கு மடங்கு மகிழ்ச்சி. ஆனால் இரண்டு மணி நேரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டிய நிர்பந்தம் வேறு. விழா சிறப்புற நடக்க வாழ்த்துக்கள். சென்னையிலேயெ இருப்பதால் பங்கு கொள்வது எளிதாகிவிட்டது. கடந்த ஆண்டு வெளியூரில் இருந்ததால் வர இயலவில்லை. இந்த ஆண்டும் ஒரு திருமணம் இருப்பதால் காலை கூட்டத்தில் மட்டுமே பங்குகொள்ள முடியும் என்று நினைக்கிறேன்... ஆகவே புத்தக வெளியீட்டு விழாவில் பங்குகொள்ள முடியாமல் போனாலும் போகலாம்.

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லை. குறைந்த பட்சம் வந்துவிட்டுப்போனாலும் மகிழ்ச்சியே

   Delete
 21. பதிவர்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாக உள்ளேன் !!

  ReplyDelete
  Replies
  1. வருக ராகவாச்சாரி

   Delete
 22. திரும்பும் திசை எங்கணும் பதிவர் சந்திப்பு பற்றிய போஸ்டுகளால், பதிவுலகமே களைகட்டுகிறது. இது பதிவுலக தீபாவளி என்றே சொல்லவேண்டும்!!

  ReplyDelete
 23. அழகான கடிகாரம் ... ஆவலுடன் காத்திருக்கிறேன்

  ReplyDelete
 24. நானும் அந்த கடிகாரத்தை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.. புதிய விசயங்களை தேடி கொணர்வதில் நம்மவர்களுக்கு எவ்வளவு ஆர்வம்.. உற்சாகமான பதிவு சார்...

  ReplyDelete
 25. #அடுத்தடுத்த பதிவர் திருவிழாக்களில் இன்னும் பல பதிவர்களின் புத்த வெளியீடுகள் நடைபெறுவதற்கு இது நிச்சயம் முன் முன்னுதாரணமாகத் திகழும் என்று எதிர்பார்க்கலாம்#
  TNM உங்கள் எண்ணம்.. பதிவுகளை நூலாக காணும்படி தீ பிடிக்க வைக்கிறதே!

  ReplyDelete
 26. பதிவர் சந்திப்பு அவசியமா?
  ஆம்!
  ஏன் காணும்?
  பதிவுகள் பேசிக்கொண்டாலும் பதிவர்கள் சந்தித்துப் பேசிக்கொள்வதால், சிறந்த பதிவுகள் வலைப்பூக்களில் உலாவர இடமிருக்கே!

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895