என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Tuesday, August 13, 2013

யாருமே படிக்காத முதல் பதிவு

எனது முதல் பதிவு அனுபவம்.

     ஏற்கனவே வலைசரம் தமிழ்மணம்  போன்றவற்றில் இதைப் பற்றி எழுதி விட்டாலும் அம்பாளடியாள்  தொடர் பதிவில் இணைத்து விட்டதால் மீண்டும் இதை எழுத வேண்டியதாகி விட்டது. 
     முதல் என்ற சொல்லுக்கு தனி ஈர்ப்பு  உண்டு. முதல் பிறந்தநாள், பள்ளிக்கு போன முதல் நாள்,முதல் ரேங்க் வாங்கிய நாள் ,முதலில் பேசிய மேடை(அதற்கப்புறம் அது தொடரவில்லை என்றாலும்)முதல் திருமண நாள் என்றுபட்டியல் நீண்டு கொண்டே போகும்.
இணைய இணைப்பு பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையிலும் யார் வேண்டுமானும் வலைப்பதிவு தொடங்க முடியும் என்று நினைத்துப் பார்த்ததில்லை. மற்றவர்களின் வலைப பதிவைப் பார்த்து வலையில் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 
   கவிதைகள் மீது கொஞ்சம் ஆர்வம் உண்டு.ஏற்கனவே சும்மா பொழுதுபோக்காக எழுதிய கவிதைகள்(?)கிட்டத்த நூறு இருந்தது. அவை பல்வேறு சூழல்களில் பள்ளியில் படிக்கும்போதில் இருந்து தொடங்கி அவ்வப்போது எழுதி வைத்தது. அவற்றை ஒரே நோட்டில் எழுதி வைக்க முடிவு செய்தேன். அப்படி எழுதும்போது ஏற்கனவே எழுதியவற்றில் எதை முதலில் எழுதுவது என்பthil எதை முதலில் எழுதுவது என்பர் குழப்பம் ஏற்பட்டது. 
   பள்ளியில் படிக்கும்போது  தமிழ் பாடப் புத்தகத்தில் இடம்பெறும் கடவுள் வாழ்த்துப் பாடல் மிகவும். பிடிக்கும். அவை ஓசை நயம மிக்கதாக அமைந்திருக்கும். மேலும் அவை குறிப்பிட்ட மதக் கடவுளைக் குறிக்காமல்  பொதுவானதாக இருக்கும். அதனால் கடவுள் வாழ்த்தை முதல் பக்கத்தில் எழுதலாம் என்று முடிவு செய்தேன்.

   கடவுள்  வாழ்த்து வெண்பாவில் எழுதவேண்டும் என்ற விபரீத ஆசை துளிர் விட்டது.  காரணம் வெண்பா வடிவத்தின் மீது ஒரு  சிறு வயதில் இருந்தே ஒரு ஒரு ஈர்ப்பு இருந்தது .

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை 
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் -கோலம்செய் 
துங்கக் கரிமுகத்து தூமணியே நீஎனக்கு 
சங்கத்தமிழ் மூன்றும் தா 

    என்ற அவ்வையின் பாடல் சிருவயதில் எனக்கு மிகவும் பிடிக்கும் துவக்க வகுப்புகளில் படித்த வெண்பாக்கள் நெஞ்சில் நிலைத்து நிற்க, பள்ளியில் சொல்லிக் கொடுத்ததை வைத்து துணிந்து கடவுள் வாழ்த்தை எழுதிவிட்டேன்.இவை எல்லாம் நோட்டுப் புத்தகத்தில் இருந்ததே தவிர ஒன்றிரண்டு பேரைத் தவிர வேறு யாரும் அறிந்ததில்லை. வலைப்பூ  தொடங்கியதும் முதல் பதிவாக இதையே பதிந்தேன்.இப்பதிவை ஆரம்பத்தில் யாரும் படிக்கவில்லை என்றாலும் பின்னர் அவ்வப்போது யாரேனும் தெரிந்தோ தெரியாமலோ படிக்கத்தான் செய்தார்கள். சில நூறு பெரியாவது இந்த பதிவு எட்டியதில் மகிழ்ச்சியே

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை 
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் -கோலம்செய் 
துங்கக் கரிமுகத்து தூமணியே நீஎனக்கு 
சங்கத்தமிழ் மூன்றும் தா 

என்ற அவ்வையின் பாடல் சிருவயதில் எனக்கு மிகவும் பிடிக்கும் 

      கற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- கற்றுநான்
      பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும்
      உற்றதுணை நீயென்று நானுரைப்பேன். பேரிறைவா!
     
பற்றியெனைத் தூக்கி விடு. 


     எந்தக் கடவுளையும் குறிப்பிடாமல் பொதுவாக பேரிறைவா என்று விளித்ததில் எனக்கு கொஞ்சம் திருப்தி.முதல்  பதிவின் இணைப்பு
   அப்படியே, சிவன், திருமால், சரஸ்வதி,மழை,தாய், தந்தை,பசு, நிலா, தமிழ், தலைப்புகளில் தட்டுத்தடுமாறி எழுதி வைத்திருந்தேன்.
வலைப்பூ ஆரம்பித்ததும் இவை அனைத்தையும் சேர்த்து முதல் பதிவாக வெளியிட வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் நல்ல காலம் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன் .பொதுவான  ஒன்றை மட்டும்  இறைவாழ்த்து என்ற தலைப்பில் பதிவிட்டேன். கொஞ்ச நாளைக்கு அதை நான் மட்டுமே பார்த்தேன். படித்தேன். 

   பின்னர் எது கவிதை , இசை வேந்தன் ஏ.ஆர்.ரகுமான்  என்று பதிவுகள் எழுதினேன். முதல் இரண்டு பதிவுகளுக்கு நீண்ட நாட்கள்  யாரும் கருத்திட வில்லை, பின்னர் முதன்முறையாக ஈழன் என்பவர் இசை வேந்தன் ஏ.ஆர்.ரகுமான்  பதிவிற்கு கருத்திட்டார். அந்தக் கருத்து கொஞ்சம் நம்பிக்கை அளித்தது. இருந்தபோதும் பார்வையாளர் எண்ணிக்கை உயரவில்லை. உயர்த்துவதற்கான வழிமுறைகளையும் அப்போது அறிந்திருக்கவில்லை.


    பின்னர் பதிவிடுவதை நிறுத்திவிட்டு. "எழுத்து" தளத்தில் ஒன்றிரண்டு கவிதைகள் எழுதி வந்தேன். இதற்குள் சில வலைப் பக்கங்கள் அறிமுகமாக , ஓராண்டுக்குப் பிறகு  பதிவெழுதும் ஆசை மீண்டும் துளிர்விட  தொடர்ந்தேன். அடுத்தடுத்து  பதிவுகள் எழுதிய போதும் பார்வையாளர்களை ஈர்க்க முடியவில்லை. தமிழ்மணம்,தமிழ்10 இன்டலி உள்ளிட்ட திரட்டிகளில் இணைத்த பின்பு முன்னேற்றம் ஏற்பட்டது. முன்னணி பதிவர்கள் பலர் என் வலைப் பக்கத்திற்கு வருகை தந்ததோடு கருத்திட்டும் ஆதரவு அளித்தனர். ஆனால் ஒரு சுவாரசியம்  79 வது  பதிவில்தான் ரமணி சாரின் முதல் கருத்து கிடைத்தது பின்னூட்டப் புயல் திண்டுக்கல் தனபாலன் அவர்களை எனது 80 வது பதிவுதான் சந்தித்தது.  அதன் பின்னர் பலரின் தவறாது தொடர்ந்து  ஆதரவு கிடைக்க ஓரளவிற்கு மற்ற பதிவர்களால் அடையாளம் கண்டு கொள்ளப் பட்டேன்.  


    277 பதிவுகள் இதுவரை எழுதி இருக்கிறேன். இந்தப் பதிவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நினைத்து எழுதிய பதிவுகளுக்கு பல்பு வாங்குவதும், சுமாரான பதிவுகள் என்று நினைப்பவை எதிர்பாராமல் ஹிட்(என் லெவலுக்கு) ஆவதும் இன்று வரை தொடர்கிறது.


    குழந்தை தன் முதல் கிறுக்கலை பார்த்து எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடையுமோ அந்த அளவுக்கு மகிழ்ச்சியை வலைப் பதிவில் பதிவு செய்யப்பட எனது அந்த சுமாரான முதல் பதிவு, இன்று வரை கொடுத்தது  என்றால் மிகையாகாது.


*******************************************************************************

இந்த  பதிவை எழுதுமாறு கேட்டுக் கொண்ட அம்பாளடியாள் அவர்களுக்கு என் நன்றிகள் 
இதுவரை  முதல் பதிவைப் பற்றி  எழுதாத அனைவரையும்  எழுதும்படி அழைக்கிறேன்.


****************************************************************************
  

52 comments:

 1. எழுத்துக்களின் அளவுகளில் வித்தியாசம் இருப்பதை பொறுத்துக் கொள்ளவும். முதல் பகுதி word இல் எழுதி பின்னர் காப்பி செய்தேன். இன்னொரு பகுதியை ப்ளாக்கரில் நேரடியாக டைப் செய்ததேன். அதனால் இந்த பிழை ஏற்பட்டுள்ளது. மாலையில் வந்து சரி செய்கிறேன்.

  ReplyDelete
 2. பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
  நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலம்செய்
  துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
  சங்கத்தமிழ் மூன்றும் தா

  என்ற அவ்வையின் பாடல் என் நெஞ்சில் சிறுவயதில் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

  அருமையான பாடல் அனைத்துக்குழந்தைகளுக்கும் விருப்பமான பாடல் ..

  முதல் பதிவுபற்றி சிறப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி வாழ்த்துக்கள்

   Delete
 3. ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தி
  சிறப்பித்தற்கு மனம் நிறைந்த
  இனிய அன்பு நன்றிகள்..!

  ReplyDelete
  Replies
  1. 1000கடந்த அபூர்வ பதிவர் நீங்கள் வாழ்த்துக்கள்

   Delete
 4. //குழந்தை தன் முதல் கிறுக்கலை பார்த்து எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடையுமோ அந்த அளவுக்கு மகிழ்ச்சியை வலைப் பதிவில் பதிவு செய்யப்பட்ட எனது அந்த சுமாரான பதிவு, இன்று வரை கொடுத்து வருகிறது என்றால் மிகையாகாது.//

  பொதுவாக எல்லோருக்குமே எல்லாப்பதிவுகளுமே இதே மகிழ்ச்சியைத்தான் தருகின்றன.

  பதிவினை வெளியிட்டவுடன் எல்லோருமே ஓர் குழந்தை போலவே ஆகிவிடுகிறோம்.

  தங்களின் இந்தப்பதிவு நல்லாயிருக்கு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வை.கோ சார்

   Delete
 5. பதிவு மனம் கவர்ந்தது
  குறிப்பாக தலைப்பு மிக மிக அருமை
  ஏனெனில் பெரும்பாலான பதிவர்களின்
  நிலைமை அப்படித்தான் இருந்திருக்கும்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார்

   Delete
 6. சிறப்பான அனுபவப் பகிர்வு... ஆனா எனக்கு ஒரு டவுட்டு சார் முதல் பிறந்தநாள்ன்னு குறிபிட்டது உங்க பிறந்தநாளையா..அப்படி என்றால் எப்படி? (தமாசான கேள்வி தான்.. சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்

  ReplyDelete
  Replies
  1. முதாலாண்டு நிறைந்தவுடன் நிறைந்த வரும் பிறந்த நாளை இரண்டாவது பிறந்த நாள் என்று கூறுவது இல்லை என்றே நினைக்கிறேன்.

   Delete
 7. முதல் பதிவு முத்தானது.

  ReplyDelete
 8. முதல் பதிவிலேயே பிரபலமானவங்க யாருமே இருக்க வாய்ப்பில்லை. அதனால யாருமே படிக்கலைன்னாலும் நாம முதல் தடவையா எழுதி அச்சில (அதாவது பிளாகுல) பாக்கறப்போ அதுல கிடைக்கற மகிழ்ச்சி ரொம்பவே அலாதியானதுங்க.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜோசப்

   Delete
 9. எழுத ஆரம்பிக்கும்போது கமெண்ட்ஸ் கிடைச்சா ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்.. ! வெவ்வெறு இடங்களில் இருக்கும் தமிழர்களுக்கெல்லாம் நம் எழுத்தும், எண்ணங்களும் போய் சேர்வது சந்தோஷமான விஷயம்தான்..!
  அழகான தலைப்பும், நேர்த்தியான எழுத்துக்களும் உங்கள் ஸ்பெஷல்..!

  ReplyDelete
 10. ' யாருமே படிக்காத முதல் பதிவு' இந்த அனுபவத்தில் சிக்காத ஆளே கிடையாது. ஆனால் உங்கள் முதல் பதிவிற்கு நீங்கள் எழுதிய வெண்பா அற்புதமாக இருக்கிறது.... நல்ல சுவாரஸ்யமாக இருந்தது

  ReplyDelete
 11. தரமான எழுத்து, குதற்கமான பின்னூட்டங்களையும் நிதானமாக எடுத்துக்கிற பக்குவம், இவைகள்தான் உங்க ஷ்பெஷல். திறமையுள்ள பலர் பாதியில் போயிடுறாங்க. தொடர்ந்து எழுதுங்கள்! :)

  ReplyDelete
 12. முதல் பதிவு பற்றி உங்கள் பகிர்வு அருமை...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. அனுபவத்தை அழகாக சொல்லியுள்ளீர்கள்.

  ReplyDelete
 14. நீங்கள் சொல்லியுள்ள பேரிறைவா என்ற வார்த்தையை கேள்விப்பட்டதில்லை.நீங்கள் சொன்னது சரிதான்

  ReplyDelete
 15. முதல் பதிவின் அனுபவத்தினை சிறப்பாக சொல்லி இருக்கீங்க முரளி....

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. முதல் பதிவின் அனுபவம் அருமை.
  கற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- கற்றுநான்
  பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும்
  உற்றதுணை நீயென்று நானுரைப்பேன். பேரிறைவா!
  பற்றியெனைத் தூக்கி விடு.


  நீங்கள் எழுதிய கவிதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கோமதி மேடம்

   Delete
 17. தங்களின் வெண்பா அருமை ஐயா.நீங்கள் தொடர்ந்து எழுதலாம் என்றே நினைக்கின்றேன். வெண்பா எழுதுவது மிகவும் கடினம் என்று கூறக் கேள்விப் பட்டிருக்கின்றேன். ஆனால் தங்களின் வெண்பா எளிமையாகவும் இனிமையாகவும் உள்ளது. வாய்ப்பு கிடைக்கும் பொழுது தொடருங்கள் ஐயா. நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 18. முதல் பதிவு அனுபவங்கள் சுவாரஸ்யம்.. வெண்பா நன்று.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம்

   Delete
 19. ///இந்தப் பதிவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நினைத்து எழுதிய பதிவுகளுக்கு பல்பு வாங்குவதும், சுமாரான பதிவுகள் என்று நினைப்பவை எதிர்பாராமல் ஹிட்(என் லெவலுக்கு) ஆவதும் இன்று வரை தொடர்கிறது.///

  இது மிக மிக மிக உண்மை இதே அனுபவம் எனக்கும் உண்டு அதனாலதான் இப்ப எல்லாம் சுமாரான பதிவுகளையே எழுதி வருகிறேன். மக்களும் எஞ்சாய் பண்ணுறாங்க

  ReplyDelete
  Replies
  1. மதுரை தமிழனுக்கு நன்றி

   Delete
 20. உற்றதுணை நீயென்று நானுரைப்பேன். பேரிறைவா!பற்றியெனைத் தூக்கி விடு. அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி முருகேஷ்

   Delete
 21. அன்பின் முரளீதரன் - அருமையான பதிவு - முதல் என்பதனை மறக்க இயலாது - அது எச்செயலின் முதலாக இருப்பினும் சரி - பாலும் தெளிதேனும் ...... சிறு வயதில் தொடக்கப் பள்ளி செல்லும் முன்பே இப்பாடலை தாத்தா சொல்லிக் கொடுத்து மனனம் செய்து தினந்தினம் காலையில் பிள்ளையார் முன்பு படித்தது நினைவிற்கு வருகிறது. இப்பொழுதில் பேரன் பேத்திகளூக்குச் சொல்லிக் கொடுத்து அவர்கள் கூறுவதைப் பார்த்து மகிழ்கிறோம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 22. அனுபவத்தை அழகாக சொல்லியுள்ளீர்கள்.

  ReplyDelete
 23. இப்போது படித்து விட்டேன்

  ReplyDelete
  Replies
  1. இத இத இதத்தான் எதிர் பார்த்தேன்.

   Delete
 24. உங்கள் 'முதல்' லிஸ்டில் 'முதல் காதல்' இல்லையே!(சரோ, குமாரு அப்போது உருவாகவில்லையோ?)

  முதல் பதிவுகளை நிறைய பேர் படித்திருக்க மாட்டார்கள் என்பது எல்லோருடைய அனுபவம்.

  முதலில் கருத்துரை இட்டவரை நினைவு கூர்ந்தது, ரமணி ஸார், திண்டுக்கல் அண்ணாச்சி இவர்கள் எத்தனையாவது பதிவிற்கு பின்னூட்டம் இட்டார்கள் என்று சரியாக புள்ளி விவரம் கொடுத்திருப்பது எல்லாம் பாராட்டத்தக்கது.

  தொடரட்டும் உங்கள் வலைபதிவு பயணம் இனிமையாக!

  ReplyDelete
  Replies
  1. உண்மையில் காதலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். வெறும் ஏட்டு சுரைக்காய் மட்டுமே.

   Delete
 25. மிக்க மகிழ்ச்சி சகோதரா .என் அழைப்பினை ஏற்றுக்கொண்டு தாங்கள்
  எழுதிய ஆக்கத்தினூடாக மகிழ்ச்சியான தகவல்களை மிகவும் எளிமையாக
  வழங்கியுள்ளீர்கள் .வாழ்த்துக்கள் .மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு .

  ReplyDelete
  Replies
  1. நன்றி நன்றி நன்றி

   Delete
 26. இன்று நம் எழுத்து பலரைச் சென்று அடைந்தாலும்...
  முதல் குழந்தை போல பிரசவித்து பதிவேற்றிய
  அந்த முதல் பதிவு என்றும் ஒளிநிறைந்த முத்துதான்
  நமக்கு...
  அந்த வகையில் முதல் பதிவு முத்தான பதிவு .நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. நன்றி மகேந்திரன்

   Delete
 27. வணக்கம் அய்யா, என்ன இது தற்போதைய நிலவரப்படி 247 வாசகர்களை (பதிவை எழுதி முடிப்பதற்குள் எண்ணிக்கை அதிகரிக்கலாம்)தன்பால் ஈர்த்து கட்டிப்போட்டிருக்கும் உங்களின் முதல் பதிவை யாரும் படிக்கவில்லையா! வலைப்பதிவு பற்றிய விழிப்புணர்வு இல்லாத காலம், ஆதலால் அத்தகைய நிலை. ஆனால் இன்று தங்களின் பதிவுக்கு தவம் கிடக்கும் வாசகர்கள் ஏராளம். அதில் நானும் அடக்கம் என்பதை பெருமையாக பதிகிறேன். முதல் பதிவை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. தாய்க்கு முதல் குழந்தை மீது ஒரு தனிக்கவனம் இருக்கத் தானே செய்யும்.

  ReplyDelete
 28. முதல் பதிவு முழுத் திருப்தியை அளித்திருக்கும் இப்போ என்பதில் மகிழ்ச்சி இறை வெண்பாக் கண்டு ஆச்சரியப்பட்டேன் ஆரம்பமே அழகாக இருந்தது. மேலும் வளர வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895