என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Monday, September 9, 2013

நடைபாதை நாயகன்


அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். விநாயகர் சதுர்த்தி நாம் கொண்டாடும் முக்கிய பண்டிகைளில் ஒன்றாக விளங்குகிறது. இப்பண்டிகையை பற்றி பலரும் எழுதி விட்டதால் அதையே எழுத விரும்பவில்லை.
   பிள்ளையார் பலருக்கும் பிடித்துப் போனதற்கு காரணம் அவரது எளிமை. அழகும் ஆடம்பரமும் மிக்க கோவில்தான் வேண்டும் என்று அவர் அடம் பிடிப்பதில்லை. அரச மரத்தடியோ, தெரு மூலையோ, மதிற்சுவரோ, குளக்கரையோ அவருக்கு போதுமானது.

 வீட்டில் பண்டிகை கொண்டாடியதும் அவரை பற்றி ஏதாவது எழுத நினைத்தபோது என்மனதில் தோன்றியது இந்த வெண்பாக்கள்

 

உடைகூட ஒர்முழமே! சோறும் ஒருபிடியே!
நடைபாதை வாசியுடன் வாழ்ந்திடும் நாயகனே!
வேலனுக்கு  முன்னவனே! உன்னை வணங்காது  
வேலை  தொடங்குவார் யார்?


தொப்பை நாயகனே தொந்தரவு செய்துநான்
குப்பை மனதோடு கும்பிட வந்தாலும்
தப்பாது உன்னருளைத் தந்திடுவாய்- என்மனதை
இப்போதே தூய்மைப்  படுத்து

உன்முன் உடைத்திட்ட  தேங்காய் சிதறல்கள்
கண்முன் உணவாகும் ஓர்சிலர்க்கு. -மண்ணில்
நல்லார்க் கருள்புரிவாய்! பொல்லாரை மாற்றிடுவாய்!
எல்லோரும் போற்றும் படி

கற்பனை  வேண்டாம் கல்வியும்  வேண்டாம்
சிற்பியும் வேண்டாம் சிலையாக்க உன்வடிவை
மஞ்சளே போதும்; பிடித்துவை-பொற்சிலையை
விஞ்சுமே என்றும் அது 

******************************************************** 
எச்சரிக்கை: இலக்கணம் எல்லாம் ஸ்ட்ரிக்ட்டா பாக்கப் படாது.


 கடந்த ஆண்டு இதே நாளில்
 பிள்ளையார் படைக்கும் கலைஞர்.

மீண்டும் திருவிளையாடல்  
https://onedrive.live.com/redir?page=survey&resid=4DB38AB46A45D8EE!123&authkey=!ACn9GX6kOcmMsfo&ithint=file%2cxlsx

24 comments:

 1. இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அண்ணா... அவர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்...

  ReplyDelete
 3. வெண்பாக்கள் மிக அருமை பாராட்டுக்கள்

  ReplyDelete
 4. இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ஐயா...

  கவிதை நல்லாருக்கு...

  ReplyDelete
 5. உன்முன் உடைத்திட்ட தேங்காய் சிதறல்கள்
  கண்முன் உணவாகும் ஓர்சிலர்க்கு.//

  உண்மை, உண்மை அழகாய் சொன்னீர்கள்.
  கவிதை அருமை.

  ReplyDelete
 6. அருமை எளிமை.
  விநாயகர் சதர்த்தி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. விநாயகர் சதர்த்தி வாழ்த்துக்கள் அருமையான கவிதை

  ReplyDelete
 8. பக்திப்பா நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 9. அருமையாக இருக்கிறது முரளிதரன். வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. வெண்பாக்கள் அருமை... இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 11. நல்லா இருக்குங்க முரளி..

  ReplyDelete
 12. இலக்கணப்பிழை எல்லாம் எதுக்கு, அருமையான பாட்டு ஒண்ணு தந்திருக்கீங்களே... சூப்பர்...

  ReplyDelete
 13. இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. பாடல்கள் அனைத்தும் அருமை முரளி! விநாயகர் அருள் கிடைக்கும்!

  ReplyDelete
 15. சொற்பதம் சேர்த்துத் தொடுத்தபா மாலையால்
  நற்துணை ஆவான் நெகிழ்ந்து!

  அருமையான பாக்கள்! ஆனைமுகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!

  வாழ்த்துக்கள் முரளிதரன்!

  ReplyDelete
 16. அருமையான வெண்பா. படித்து ரசித்தேன்

  ReplyDelete
 17. விநாயகர் சதுர்த்தி கவிதை சிறப்பு! வாழ்த்துக்கள்! எளிமை நாயகனை புகழும் எளிமையான வார்த்தைகளுக்கு இலக்கணம் எதற்கு? அருமை!

  ReplyDelete
 18. சிறப்பான நாளில் சிறப்பான கவிதைக்கு நன்றி அய்யா. வரிகள் அனைத்தும் அருமை. வினைகள் தீர்க்கும் யானை முகத்தானை தினமும் தொழுதுடுவோம். தங்களுக்கும் வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அய்யா. நன்றி.

  ReplyDelete
 19. சிறப்புப் பதிவு
  வெண்பாவில் வெகு வெகு சிறப்பு
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. இலக்கணம் எல்லாம் எனக்குத் தெரியாது!
  வெண்பா நல்லாருக்கு

  ReplyDelete
 21. இலக்கணம் எங்களுக்கும் தெரியாது வாத்யாரே., எனினும் உரைநடை கவி அழகு! :-)

  ReplyDelete
 22. இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
  Vetha.Elaaangathilakam.

  ReplyDelete
 23. அன்பின் முரளிதரன் - அருமையான கவிதை - முருகப் பெருமானின் மூத்தவனைப் பற்றிய கவிதை -அருமை - வினாயகச் சதுர்த்தி அன்று பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895