என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Sunday, October 6, 2013

ராஜா ராணி -நான் கதை அமைத்திருந்தால்

    
    இரண்டு  நாட்களுக்கு முன்னர் எதிர்பாரா விதமாக ராஜா ராணி படம் பார்க்க நேரிட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டருக்கு சென்று படம் பார்த்தேன். ஒரு தியேட்டரில் 6 மணிக் காட்சி ஹவுஸ் புல் ஆக, சற்று தூரத்தில் உள்ள திரை அரங்கில் டிக்கட் எளிதாக கிடைத்தது.
இவ்வளவு நாள் கழித்து விமர்சனம் எழுதலாமா வேண்டாமா யோசித்துக் கொண்டிருந்தேன். எவ்வளோ பேர் எழுதுகிறார்கள் நாம் எழுதினால் சகித்துக் கொள்ள மாட்டார்களா என்ன?
    விஜய்  டிவியில் படத்தை பற்றி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் படம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது இயக்குனர் அட்லியை பார்த்தேன். அம்மா உணவகத்தில் அருகில் அமர்ந்து இட்லி சாப்பிடும் சாதாரண இளைஞனைப் போல் காணப்பட்ட அட்லியா இந்த படத்தை இயக்கினார் என்று சற்று ஆச்சர்யம் ஏற்படுத்தத்தான் செய்தது. சத்யராஜ் ஆர்யா, நயன்தாரா போன்ற முன்னணி நட்சத்திரங்களை கையாளக் கூடிய திறமை அவருக்கு இருக்கும் என்று நம்பிய ஏ.ஆர் முருகதாசை அட்லி ஏமாற்றவில்லை.
   காதலில் வெற்றிபெற முடியாமல் போன ஆர்யா- நயன்தாரா வேண்டா வெறுப்புடன் திருமணம் செய்து கொண்டு,  கடைசியில் மனம் மாறி புது வாழ்க்கை தொடங்குவதே படத்தின் கதை.  இளமை சற்று மிஸ் ஆனதாகத் தோன்றினாலும் தனது நடிப்பால் ஸ்கோர் செய்து விடுகிறார்  நயன்.. பெரிதாக நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்றாலும் கொடுத்த வேலையயை சிறப்பாகவே செய்திருக்கிறார் நயன் தாராவின் நட்பான அப்பாவாக நடித்திருக்கும் சத்யராஜ். நயன்தாராவின் இன்னோசண்ட் காதலன் பாத்திரத்திற்கு  ஜெய் எப்போதும் போல் பொருத்தம்.. 
சர்ச்சில் நயன் தாரா ஆர்யா திருமண நிகழ்ச்சியுடன்படம் துவங்குகிறது. தொடக்கம் அந்த ஏழு நாட்கள் படத்தை நினைவு படுத்துகிறது. போகப் போக சிறிது மாற்றத்துடன் மௌன ராகம் கதையாக மாறி விடுகிறது.
    விருப்பமில்லாத் திருமணம் என்றாலும் திருமணம் முடிந்த பின் உண்மையை இருவரும் பகிர்ந்து கொள்ளாமல் ஒருவரை  ஒருவர் வெறுப்பேற்றிக் கொள்வது ஏன் என்று தெரியவில்லை. அடுத்த முடிவு எடுக்கும் வரை மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நடிப்பதாக அமைத்திருக்கலாம். தொடக்கத்தில் பல இடங்களில் நயன்தாராவின் விருப்பமின்மை தான் முதன்மைப் படுத்தப் படுகிறது.
 அப்பாவி இளைஞன் ஜெய்யை  என்னமாய்க் கலாய்க்கிறது நயன்தாராஅண்ட் கோ. ஒவ்வொன்றுக்கும் ஜெய் பயந்து நடுங்குவது சுவாரசியம். இளைய கன்னிகைகள் தோழியரை மச்சி மச்சி, மச்சி என்று அழைப்பது புதிதாக இருக்கிறது. நடைமுறையில் இருக்கிறதா அட்லி?
    புத்தாண்டு அன்று பீர் பாட்டிலுடன் நயன்தாராவை பார்த்திருந்த ஜெய் பின்னர் "ஏங்க!ரொம்ப பீர் குடிக்காதீங்க தொப்பை விழுந்திடும்."என்று சொல்லி விட்டு ஓடும்போது நயன்தாரா கொடுக்கும் எக்ஸ்ப்ரஷனில் காதல் எட்டிப் பார்ப்பது கவிதை.

   திருமணம் செய்துகொள்ள ரிஜிஸ்தர் ஆபீசுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராமல்போனதற்கு அழுத்தமான காரணம் இல்லை .அட்லி இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.
   ஆர்யா நஸ்ரியா காதலில் இந்த அளவுக்கு ஆழமும் அழுத்தம் இல்லை என்ற போதிலும் நஸ்ரியாவின் இளமைத் துள்ளல் ஈர்க்கத்தான் செய்கிறது. (பதிவர் கோவை ஆவி நஸ்ரியாவின் ரசிகராக இருப்பதன் ரகசியம் புரிந்தது)

    நண்பர்களுடன்  தண்ணி அடிக்கும் காட்சிகளும், தந்தை மகன் சேர்ந்து தண்ணி அடிக்கும் காட்சிகளும் தமிழ் படங்களில் பழைய TREND ஆகி விட்டதால்  புதுமையாக யோசித்து  அப்பாவுக்கு மகள் பீர் வாங்கிக் கொடுத்து சந்தோஷப் படுத்துவதுபோல் காட்சி அமைத்திருக்கிறார் இயக்குனர். அடுத்த படத்தில் இன்னும் கொஞ்சம் முன்னேறி தானும் தண்ணி அடித்துக்கொண்டு தாய்க்கும் வாங்கிக் கொடுக்கும் புதுமையை படைப்பாரோ?அப்பா மகள் உறவு அவ்வளவு பிரெண்ட்லியாக இருக்கிறதாம்! ஆஹா! என்னே கற்பனை! 

   ஜெய் உயிருடன் இருப்பதாகக் காட்டிய இயக்குனர் நஸ்ரியாவை மட்டும் பிழைக்க விடாமல் செய்து விட்டாரே!

    சந்தானத்தின் காமெடி படத்திற்கு பலம்தான் என்றாலும் எப்போதும் இரட்டைஅர்த்த வசனங்களையே அதிகமாகப் பேசுகிறார். சந்தானம் என்றால்  நண்பர்களுடன் தண்ணி அடிக்கும் காட்சி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்பது விதி போலும்.விதம் விதமாக பெற்றோரை இழிவாகப் பேசுவது போல் நடிப்பது இவருக்கு அல்வா சாப்பிடுவதுபோல.  குழந்தைகள், இளைஞர்கள், நடுத்தரவயதினர் முதியவர்கள்,பெண்கள் விரும்பும் நகைச்சுவை நடிகராக வடிவேலு இருந்தார். சந்தானம் இளைஞர்களை மட்டுமே கவர்பவராக இறக்கிறார். ஆர்யாவிடம், "குடித்து விட்டு காதலியின் வீட்டு முன்னால் போய் பிரச்சனை செய்" என்று ஐடியா கொடுத்து  இளைஞர்களை கெடுப்பதில் தன் பங்கை சரிவர செய்திருக்கிறார் சந்தானம். 

    தியேட்டரில் படம் பார்க்க வருபவர்கள் பெரும்பாலும் இளவட்டங்கள் என்பதால் அவர் காட்டில் மழை பெய்து கொண்டிருக்கிறது.
   ஒளிப்பதிவு,காட்சி அமைப்புகள், ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. குறிப்பாக கண்ணாடியின் முன்னால் நிற்கும் ஆர்யா நயன்தாரா இருவரும் அவர்கள் மனம் செய்ய  நினைப்பதை கண்ணாடி பிம்பங்களாக காட்டி இருப்பது வித்தியாசம்.  பாடல்கள் மனதை கவரவில்லை. இசையில் ஜி.வி பிரகாஷ் ஏமாற்றமே அளிக்கிறார். 
படத்தை நயன்தாராவின் நடிப்பே படத்தை தூக்கி நிறுத்துகிறது.
எப்படி இருந்தால் என்ன ரசிகர்களுக்கு பிடித்து விட்டது.

முதல்  படம் வெற்றிப் படம் என்பதால் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் ஏதும் இருக்காது அட்லிக்கு. 
  கதை இப்படி அமைத்திருந்தால்
ஆர்யா-நயன்தாரா  இருவருக்குமே  திருமணத்தில் சம்மதம் இல்லை என்றாலும்.அனைவரும்(ஆடியன்ஸ் உட்பட) நம்பும்படி மகிழ்ச்சியோடு வாழ்வதாக  நடிக்கிறார்கள். ஏதோ ஓரிடத்தில் அவர்கள் நடிப்பு அவர்களையும் அறியாமல் வெளிப்பட்டு விடுகிறது. மற்றவர்களுக்கு சந்தேகம் எழ பின்னர் உண்மை தெரிகிறது   மெல்ல மெல்ல மனம் மாறுகிறார்கள்.

*******************************************************************************************29 comments:

 1. நான் கதை அமைத்திருந்தால்...? தலைப்போடு சரியா...? நீங்கள் சொன்ன புதுமைகள் வரக்கூடும்... சமூக சீரழிவு தான்...

  ReplyDelete
 2. அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
  இறுதியாக தாங்கள் சொல்லியுள்ளபடி
  கதை அமைக்கப்பட்டிருந்தால் நிச்சயம்
  இப்போதை விட நன்றாகத்தான் இருந்திருக்கும்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரமணி சார்

   Delete
 3. இன்னும் கொஞ்சம் விரிவாக கதை சொல்லத்தான் நினைத்தேன். யார் படிப்பார்கள் என்பதால் விமர்சனத்தோடு விட்டுவிட்டேன்.

  ReplyDelete
 4. வணக்கம்
  முரளி(அண்ணா)

  விமர்சனம் நன்றாக அமைந்துள்ளது சொல்லாமல் சொல்லிவிட்டிங்கள் அடுத்த கதையாசிரியர் நீங்கள்தான் போல......வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. நாளைய இயக்குநர் நீங்கள்தான் சார்

  ReplyDelete
  Replies
  1. நன்றி கலிய பெருமாள்

   Delete
 6. நீங்கள் எழுதிய கதை அச்சு அசல் மௌன ராகமே..... அட்லி இதையும் யோசித்திருப்பார்....

  ReplyDelete
  Replies
  1. மௌன ராகத்தில் படம் முழுவதும் இறுக்கமாகவே இருப்பார் ரேவதி. மோகன் ரேவதியுடன் வாழவே விரும்பவே செய்வார். ஆனால் நான் கூறிய ஆலோசனை இருவருமே விருப்பம் இல்லாத சூழலில் மற்றவர்களுக்கு மட்டும் எளிதில் அறிந்து கொள்ளாத வகையில் நடிப்பது.இன்னும் பல மாற்றங்களும் உண்டு. சும்மா ஒரு ஐடியாதான்.! எப்படி இருந்தால் என்ன அட்லி வெற்றி பெற்றுவிட்டார் வாழ்த்துவோம்.

   Delete
 7. வணக்கம் அய்யா, சரியான விமர்சகராக ஜொலித்திருக்கிறீர்கள் என்று தான் சொல்ல வேண்டும். படம் பார்க்கும் போது எனக்குள் தோன்றிய அதே கேள்வியை நீங்களும் எழுப்பியது மகிழ்வளிக்கிறது. அப்பாவுக்கு பீர் வாங்கிக் கொடுக்கும் மகள் காட்சி- கண்களுக்கு உருத்தல்... அப்பா மகள் பாசத்தை வேறு விதமாகக் காட்ட முடியாதா? அட்லி முதல் படம் வெற்றி தான். விமர்சகராக மட்டும் இல்லாமல் கதையாசிரியராக மாறியது சிறப்பு. பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

  ReplyDelete
  Replies
  1. நன்றிபண்டியன்

   Delete
  2. அடடா காலை எடுக்கிற வேலையெல்லாம் செய்யுறிங்க... சினிமாக்கு கதை யோசிக்கும் போதே நினைச்சேன்.. யார் கை ,காலையாவது எடுக்காட்டி எப்புடி?... ஹா... ஹா.!

   Delete
 8. நீங்க சொன்ன கதை நல்லாயிருக்கு...
  எனக்குப் பிடிக்காத காமெடியன் சந்தானம்... கேவலமாகவும் இரட்டை அர்த்த வசனங்களாலும் தன்னை முன்னிருத்தப் பார்க்கும் ஒருவர்....

  ReplyDelete
 9. பட விமர்சனமா? உங்களிடம் பஞ்சமா ? நண்பரே

  ReplyDelete
  Replies
  1. ஏன் சார்.நல்ல இல்லையா? எப்பயோ ஒரு சினிமா பாக்கறோம் . எழுதித்தான் பாக்கலாமேன்னு எழுதினேன். ஏற்கனவே ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு கல் கண்ணாடி கவிதையில் விமர்சனம் எழுதினேன். அஹுக்கப்புரம் இதுதான். அடுத்த விமர்சனம் எப்ப சினிமா பாக்கரனோ அப்பதான். அதுக்கு இன்னும் ஒரு வருடம கூட ஆகலாம்.

   Delete
 10. பட விமர்சனம் அருமை.
  மாணவர்களை வழி நடத்தும் ஆசிரியர் அல்லவா!
  நாளைய தலைமுறைகள் நலமாக வளர வேண்டும் என்று நினைக்கும் பொறுப்பு தெரிகிறது.
  படம் எடுப்பவர்கள் சமூக பொறுப்புணர்ச்சியுடன் எடுத்தல் நலம்.

  ReplyDelete
 11. பட விமர்சனமும் , தங்களின் யோசனையும் அருமை. நன்றி ஐயா

  ReplyDelete
 12. மேலை நாட்டு கதைகளை காப்பியடித்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது முந்தைய தமிழ் படங்களின் கதையையே காப்பியடிக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பதற்கு தலைவாவும் இந்த படமும் சான்று. புதுமையாக எதுவுமே இல்லை என்பது இன்னொரு சோகம். உங்களுடைய கதையையே கூட எடுத்திருக்கலாம். சற்று புதுமையாகவாவது இருந்திருக்கும்.

  ReplyDelete
 13. விமர்சனம் நன்றாக இருக்கிறது. இப்போதெல்லாம் நஸ்ரியாவைப் பற்றிப் பேசுபவர்கள் கோவை ஆவியை நினைவில் கொள்ள மறப்பதில்லை. :)))

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. \\இளைய கன்னிகைகள் தோழியரை மச்சி மச்சி, மச்சி என்று அழைப்பது புதிதாக இருக்கிறது. நடைமுறையில் இருக்கிறதா அட்லி?\\ மனிவியின் சகோதரன் மச்சான், அதே போல கணவனின் சகோதரியை மச்சி என அழைப்பார்கள் [இதை எங்கள் அத்தைகள் பயன்படுத்துவதைப் பார்த்திரிக்கிறேன்!!] . இதை எந்த புண்ணியவான் ஆண்களுக்கு மாற்றினாரோ அல்லது மாச்சான் என்பதை சார்ட்டாக மச்சி என ஆக்கினார்களோ தெரியவில்லை, இன்றைக்கு அதன் சரியான அர்த்தத்தில் பயன் படுத்துவதைப் பார்த்து அது தப்போ என நினைக்கும் நிலை. "என்ன கொடுமை சார் இது!!"- தான் நினைவுக்கு வருகிறது!!

  ReplyDelete
 16. படம் பார்க்கவில்லை உங்க விமர்சனம் படத்தை பார்த்தது போல்! ஆமா நஸ்ரியா ஈர்த்ததை உங்க வீட்ல கவனிச்சாங்களா? ம்.. சுட சுட பாப்கார்ன் பொரியறதை பார்க்க மிஸ் பண்ணிட்டோம்!

  ReplyDelete
 17. விமர்சனமும் நன்றாக வருகிறது உங்களுக்கு . நிறை குறைகளை தெளிவாக அலசியுள்ளீர்கள் . ஒருவேளை மௌனராகத்தை காப்பி அடிக்காமல் நீங்கள் சொல்வதுபோல் அமைத்திருந்தால் இன்னும் எதார்த்தமாக அமைந்திருக்கும்

  ReplyDelete
 18. விமர்சனத்தை படித்து விட்டு படம் பார்கிறவர்களுக்கு ? படத்தின் சஸ்பென்ஸை உடைக்காமல் இருக்கவேண்டும் இல்லையா

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895