என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Monday, November 4, 2013

பிரபலமா இருந்தாலும் இவ்வளவுதான்!பிரபல பத்திரிக்கை நடத்திய பரிசோதனை.


        2007 ஜனவரி 12 ஆம் தேதி. காலை 9 மணி வாஷிங்டன் நகர மெட்ரோ ரயில் நிலையம். மக்கள் வெள்ளம். எங்கும்  பரபரப்பு. எங்கோ எதற்கோ  மக்கள் போய்க்கொண்டிருந்தார்கள். கால்களில் சக்கரம் கட்டி இருப்பார்களோ? 

   அந்த  சுறுசுறுப்பான நேரத்தில் ஜீன்சும் முழுக்கை டி ஷர்ட்டும்  அணிந்த 39 வயது மனிதர்  மெதுவாக நடந்து வந்தார்.அவரது தலையில் அமெரிக்க தேசிய பேஸ் பால் விளயாட்டுக்காரர்கள் அணியும் தொப்பி. ஒரு குப்பை தொட்டிக்கு அருகில் போய் நின்றார். தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்து நிதானமாக வயலினை எடுத்தார்.சுவற்றில் வாகாக சாய்ந்து கொண்டு வயலினை இசைக்க ஆரம்பித்தார். அவரது வயலினில் இருந்து  இசை மழை பொழிய ஆரம்பித்தது. அது பொங்கி வழிந்து காற்றில் நிரம்பியது. காதுகளில் தேனாக பாயத்தொடங்கியது.

    ஏராளாமானோர் அந்த இடத்தை  வழியே சென்றபடி இருந்தனர். அவர்கள் வேலைக்கு செல்பவர்கள் போலும். அந்தப் பரபரப்பில் ஒரு மனிதர் அற்புதமாக வயலின் வசிப்பதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. ஆனாலும் இசைப்பதை நிறுத்தவில்லை அந்த மனிதர். சில நிமிடங்கள் கடந்தன. அப்போது அங்கு வேகமாக வந்த ஒருவர் இசையை கேட்டு தனது வேகத்தை  குறைத்துக் கொண்டு இசை வந்த திசை நோக்கி திரும்பி சில வினாடிகள் இசையை ரசித்து விட்டு பழைய வேகத்தில் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். 
   இன்னும் சிறிது நேரம் கடந்தது. அந்தப் பக்கமாக வந்த பெண்மணி வயலின் காரரைப் பார்த்து பையில் இருந்து சில நாணயங்களை அவரை நோக்கி வீசி எறிந்து விட்டு  நடையைக் கட்டினார். வயலின் காரருக்கு கிடைத்த முதல் டிப்ஸ் அதுதான். 

    மேலும் சில நிமிடங்கள் கரைந்தன. வயலின் இசை  பெரியவர் ஒருவரை கவர்ந்தது. சிறிது நேரம் நின்று  தலையை ஆட்டி இசையை ரசிக்க ஆரம்பித்தார். திடீரென்று நினைவு வந்தவராக கடிகாரத்தைப் பார்த்தார். அவ்வளவுதான். உடனே அந்த இடத்தை காலி செய்தார். 

    காலம் இன்னும் சிலநிமிடங்கள் தன்னை இழந்தது. ஒரு பெண் தனது மகனுடன் ரயில் பிடிக்க விரைந்து வந்து கொண்டிருந்தார். அந்தப் பையனுக்கு மூன்று வயது இருக்கலாம். வயலின் இசை அவனை ஈர்த்தது.அவனுக்கு அந்த இடத்தை விட்டு அகல மனம் வரவில்லை.ஆனால் அந்தப் பெண் அவனை தரதரவென்று இழுத்து சென்றுவிட்டார்.போகும்போது அவன் வயலின் இசைப்பதை திருப்பிப் பார்த்துக் கொண்டே சென்றான். நிறைய சிறுவர்கள் இசையை ரசித்தனர். ஆனால் அவர்களின் பெற்றோர்கள் அவர்களை ரசிக்க விடவில்லை என்பதை பார்க்க முடிந்தது. 

    அந்த இசை கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் இசைக்கப் பட்டது.  இந்த நேரத்தில் 1097 பேர் அந்த இடத்தை கடந்து சென்றிருந்தனர். அவர்களில் ஆறு பேர் மட்டுமே இசையை நின்ற ரசித்தனர். 28 பேர் காசு போட்டுவிட்டு சென்றனர். இந்த இசை நிகழ்ச்சியை முடித்ததும் அந்த கலைஞனை கைதட்டி பாராட்டக் கூட ஒருவரும் இல்லை, ஒரு நிகழ்ச்சி நடந்தது அது இப்போது முடிந்து விட்டது என்பதைக் கூட ஒருவரும் கவனிக்கவில்லை. அந்த இனிய இசையை இசைக்கும் கலைஞன் யார் என்று அறிந்து கொள்ளக் கூட யாருக்கும் தோன்றவில்லை.

     

  இதில் என்ன இருக்கிறது. அவர் அவருக்கு அவரவர் வேலைதான் முக்கியம். பிளாட்பாரத்தில் நின்று தெருவில் யாரோ இசைக்கும் இசையை நின்று  ரசிக்கவா நேரம் இருக்கிறது? என்கிறீர்களா? இந்த நிகழ்வில் ஒரு சுவாரசியம் இருக்கிறது

  உண்மையில்  அற்புதமான இசையை ரயில் நிலையத்தில் நின்று கொண்டு வழங்கிய அந்த இசைக் கலைஞர் ஜோஷ்வா பெல் என்ற புகழ் பெற்ற வயலினிஸ்ட். உலகின் முன்னணி வயலின் கலைஞர்களில் ஒருவர். அவர் ரயில் நிலையத்தில் வாசித்த ஆறு இசைக் கோவைகள் உலகின் மிக சிறந்த இசைக் கோவைகளில் இடம் பெற்றவை. இவர் இந்த இசையை வசிப்பதற்கு பயன் படுத்திய வயலினின் விலை மட்டுமே 35 லட்சம்  டாலர்கள். அவரது இசைக் கச்சேரிகளுக்கு டிக்கட் கிடைப்பதே கடினம். டிக்கெட்டின் குறைந்த பட்ச விலையே 100 டாலர்கள்.

   அவர்  ஏன் இப்படி ரயில் நிலைய சப்வேயில் நின்று வசிக்க வேண்டும்? அதற்கு காரணம் அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட். அந்தப் பத்திரிகைதான் ஜோஷ்வா பெல்லை அழைத்து இப்படி ஒரு பரிசோதனை செய்ய வேண்டுகோள் விடுத்தது. அந்த பிரபல இசைக் கலைஞரும் அதற்கு சம்மதித்தார். அதன்  விளைவாக நடந்ததே  ரயில் நிலையத்தில் நடந்த இந்த இசைக் கச்சேரி. அதை கட்டுரையாக வெளியிட்டது வாஷிங்டன் டன் போஸ்ட்.
அந்தக் கட்டுரை இந்த நிகழ்வை விவரித்து விட்டு  இப்படிஒரு கேள்வியை எழுப்பியதாம்.

"உலகின் முன்னணி இசைக் கலைஞர்களில் ஒருவர் மிக உன்னதமான வயலினைக் கொண்டு உலகின்மிக சிறந்த இசையை வாசிப்பதைக் கூட    கவனிக்க நமக்கு நேரம் இல்லை. 
வாழ்க்கையில் இது போன்ற மென்மையான விஷயங்களை ரசிக்க முடியாமல் போகிறது.?
ஆம்! நாம் எல்லோரும் ஒவ்வளவு ஓட்டமாக ஓடுவதற்கு என்ன காரணம்? எதை நோக்கி ஓடுகிறோம்?"

    இதே  நிகழ்ச்சியை "ரயில் நிலையத்தில் ஜோஷுவா பெல் லின் இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. டிக்கெட் விலை இவ்வளவு விலை.." என்று விளம்பரம் செய்திருந்தால் ஒரே நாளில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்திருக்கும். 
இந்த சோதனை இரண்டு விஷயங்களை நமக்கு சொல்கிறது.
 1. வாழ்க்கை பரபரப்பில் கலைகளை ஓரளவிற்கு மேல் ரசிக்க நேரமில்லை 
 2. எல்லாவற்றிற்கும் ஒரு இடம் பொருள் ஏவல் உண்டு. இளையராஜா, A.R. ரகுமானாக இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் வாசலில் சொல்லாமல் கொள்ளாமல் இசைத்தால் எவ்வளவு சிறப்பாகவே அது இருந்தாலும் குறைவான கவனத்தையே ஈர்க்கும். 
   இந் நிகழ்வை கட்டுரையாக வாஷிங்டன் போஸ்டில் எழுதிய ஜெனீ வெயிங்கார்ட்டன் என்பவர் 2008 இல் இதற்காக புலிட்சர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

************************************************

61 comments:

 1. எதை நோக்கி ஓடுகிறோம் என்பது தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மை தான்.... ஒருத்தர் கூட அவர் ஜோஷுவா பெல் தான் என்று கண்டுபிடிக்காதது வியப்பு தான்... ஒரு வேளை அவரின் இசையை மட்டும் ரசித்து இருப்பார்களோ...?

  ReplyDelete
  Replies
  1. அவர் ஏன் இங்கே வாசிக்கப் போகிறார் என்ற எண்ணம்தான் காரணமா இருக்கும்

   Delete
 2. ரசிப்பதற்கென்று நேரம் ஒதுக்கிப் பழக்கப்பட்டவர்களுக்கு வழிபோக்கனின் இசையை எப்படி ரசிக்க முடியும் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்ஹ்டுக்கும் நன்றி கண்ணதாசன்

   Delete
 3. ஒரு சின்ன திருத்தம். நம் நாட்டை பொறுத்தவரை இளையராஜாவும் ரகுமானும் எங்கு எப்போது நின்று வாசித்தாலும் அடுத்த ஐந்து நிமிடங்களில் கூட்டம் அலைமோதும். ஏனெனில் நாம் இன்னும் மேலை நாடுகள் அளவுக்கு இயந்திரங்களாக மாறிவிடவில்லை. நல்லவற்றை நின்று ரசித்து பாராட்டும் அளவுக்கு நமக்கு இன்னும் நேரம் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நம்ம ஊரு ஜனங்களுக்கு நேரம் முக்கியமல்ல அதனால தெருவுல குரங்கை வைச்சு ஆடு நைனா ஆடு என்று ஆட்டம் போட்டாலும் நின்று பார்த்து விட்டு முடியும் நேரம் காசுப் போடாம போவாங்க ஆனா அமெரிக்கன் அப்படி இல்லை ரசிக்க நேரம் ஒதுக்கி அதை மிக அருமையாக ரசிப்பார்கள் & பாராட்டுவார்கள்

   Delete
 4. ரசிப்பதற்கு நேரமோ மனதோ இல்லை போல!

  நல்ல பகிர்வு....

  ReplyDelete
 5. மக்கள் அவர் யாரென்றே தெரியாமல் சென்றார்களா அல்லது தெரிய்தே சென்றார்களா என்பதுதான் முக்கியமான கேள்வி...மிகவும் பிரபலமான கலைஞனாக இருந்தால் நம் நாட்டில் நிச்சயம் நின்று பார்ப்பார்கள்..மனித வாழ்க்கை பரபரப்பானதாக மாறிவிட்டதை நானும் ஒப்புக்கொள்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தெரியாமல்தான் சென்றார்கள்.ஏனென்றால் அவர் சற்று ஓரமாக தெருக கலைஞர் தோற்றத்துடன் இருந்தாராம்

   Delete
 6. அருமையான செய்தி
  கொடுப்பது எது என்பதைவிட
  கொடுக்கப்படும்விதம் மற்றும் இடம் குறித்தே
  உலகு அதிகக் கவனம் கொள்கிறது என்பது நிஜமே
  சிந்திக்கத் தூண்டிச் செல்லும் அருமையான பதிவு
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. அவங்கவங்களுக்கு அவங்க வேலை பத்திதான் கவலை.... எந்திர வாழ்க்கையில் ரசிப்பு தன்மை மட்டுமல்ல பொறுமை கூட குறைஞ்சி போச்சு... கல்யாண மண்டபத்துல கெட்டி மேளம் சத்தம் கேட்டப்பறம்தான் அட்சதை தூவி வாழ்த்திவிட்டுதான்.. சாப்பிட போவாங்க.. இப்பல்லாம் ஒரு பக்கம் விருந்து ஸ்டார்ட் ஆயிடுது ... கல்யாணத்துக்கு வந்தோமா கிப்ட்டை கொடுத்தமா... சாப்பிட்டுட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்ங்கிற மாதிரி ஆயிடுச்சி.... யாருக்கும் மணமக்களை மனப்பூர்வமா வாழ்த்தற அளவுக்கு கூட பொறுமை இல்லை. வருகை பதிவேட்டில் அட்டெண்டஸ் கொடுக்கிற மாதிரிதான் விசேஷங்களும் இருக்கு...! நீங்க சொல்லியிருந்த இரண்டு விஷயங்களும் சரிதான்...

  ReplyDelete
  Replies
  1. கல்யாண வீடுகளில் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. உள்ளே நுழையும்போது சாப்பாட்டுக்கு சென்றுவிட்டு பின்னர்தான் ரிசப்ஷன் ஹாலுக்கு வந்து கிப்ட் கொடுத்துவிட்டு போட்டோவுக்கும் போஸ் கொடுத்துவிட்டு போய் விடுகிறார்கள்

   Delete
 8. அந்தோ கொடுமை...!

  இதுதான் எதார்த்தம்...!!!

  ReplyDelete
 9. Wrong to say ARR, IR, etc wont get noticed!. May be the violinist was popular, but his face was not familiar to the common public. Had that been a popstar/hollywood star, think what would have happened then.

  ReplyDelete
  Replies
  1. அவர் சாதாரண தோற்றத்துடன் காட்சி அளித்ததே அதற்கு காரணம். அவர் ஜோஷுவாக இருக்க முடியாது என்றே நினைத்திருப்பார்

   Delete
 10. ///ஆம்! நாம் எல்லோரும் ஒவ்வளவு ஓட்டமாக ஓடுவதற்கு என்ன காரணம்? எதை நோக்கி ஓடுகிறோம்?///
  எங்க ஓடுறோம்னு தெரியாமத்தானே இவ்ளோ வேகமா ஓடுறோம்...!

  ReplyDelete
  Replies
  1. அது இந்தியாவுக்கும் பரவிக் கொண்டிருகிறது

   Delete
 11. பரபரப்பான உலகில் ரசிப்பதற்கு நேரம் இல்லைதான்! ஆனால் நம் நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் இது போன்று நிகழ்வு ஏற்பட்டால் நிலைமை வேறுவிதம்தான்! கழைக்கூத்தாடிகளின் நிகழ்ச்சிகளை கூட கண்டு ரசித்து பாராட்டுபவர்களாக்கும் நாம்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அந்த அளவுக்கு இல்லை என்றாலும் நிலை மாற்றித்தான் வருகிறது

   Delete
 12. முரளி சார்,

  வெளிநாட்டில பெரும்பாலும் பிரபலம்னு தெரிஞ்சாக்கூட கண்டுக்க மாட்டாங்க, ஏன்னா அவங்க ரசிக்கிறப்போ காசு கொடுத்து ரசிக்கிறாங்க, அவங்க தேவை முடிஞ்சப்பிறகும் சும்மா ஏன் அவங்கள புடிச்சு தொங்கனும்னு விட்ருவாங்க.

  நம்ம ஆட்கள் டிவி நடிக,/நடிகயரை கூட விடாம தொறத்துவோம்.

  மை நேம் இஸ் கான் படத்த வெளிநாட்டில எடுத்த அனுபவம் பத்தி கரண் ஜோகர் பேட்டி கிடைச்சா படிச்சி பாருங்க தெரியும்,நம்ம ஆட்களுக்கும்,வெளிநாட்டினருக்கும் உள்ள வித்தியாசம், டாம் குருஸ் ஷூட்டிங்க் நடந்த போ கூட டிராபிக் ஜாம் ஆகலையாம்,ஷாருக்கான் ரோட்டில நடக்கிறது எடுத்ததும் டிராபிக் ஜாம் ஆகிடுச்சாம், கூடுன கூட்டம் அம்புட்டும் இந்தியருங்க அவ்வ்!

  நம்மாட்கள் தான் ஆளுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க, இப்போ நீங்களே இதே பதிவ வேற ஒரு பிலாக்ல ,வேற ஒரு பேருல எழுதி இருந்தா இங்கே வந்த கூட்டத்துல பாதி பேரு கூட வந்திருக்க மாட்டாங்க (ஹி...ஹி நானும் தான்,ஆனால் நான் ரேன்டமா படிக்கிற பழக்கமும் வச்சிருக்கேன்)

  ReplyDelete
  Replies
  1. என்ன வவ்வால் சார் முரளியோடு "சார்" சேர்த்து விட்டீர்கள். முரளி என்றே அழைக்கலாம்.
   எனக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்கும்னு தோணல.என் பேரை பாத்து ஒடறவங்களும் இருப்பாங்க .

   Delete
 13. சரியான கேள்வி நண்பரே...
  ஆயினும் அதற்கான விடையைத் தேடி ஓடினால்
  இன்னுமின்னும் இயந்திரமாகிப் போவோம்...
  இன்றைய இன்னல்களுக்கு இடையில் இதுபோன்ற
  சில சம்பவங்கள் நடப்பதும் உண்டு.. அவை கண்டுகொள்ளாமல்
  விடப்படுவதும் உண்டு..
  அவசர காலத்தை உணர்த்தும் நல்ல கட்டுரை...

  ReplyDelete
 14. வாழ்க்கையின் ஓட்டம்.

  ReplyDelete
 15. இந்த சோதனை நமக்கு உணர்த்திய இரு பாடங்களும் சரியானது என்றுதான் தோன்றுகிறது ஐயா.
  டி.ஆர்.ஜோசப் ஐயா அவர்கள் சொன்ன கருத்து அவ்வளவு பொருத்தமில்லையோ என்று தோன்றுகின்றது ஐயா. திரு வெவ்வால் அவர்கள் சொல்வதுதான் சரி என்று எண்ணுகின்றேன்.
  நாம் நடிப்பை விட, இசையை விட, அதைத் தருகின்றவர்களையே, அதிகம் ரசித்துப் பழகிவிட்டோம். ஒரு சினிமா நடிகரையோ, அல்லது நடிகையையோ கண்டால் ஈ போல் மொய்த்துக் கொள்கிறோமே, நாம் வந்த வேலையைக் கூட மறந்துவிடுகிறோமே. இது சரியா?

  ReplyDelete
  Replies
  1. இப்போது அது குறைந்து வருகிறது என்று நினைக்கிறேன்

   Delete
 16. நடு மண்டையில நச்சுன்னு பதிய வச்ச மாதிரியான பதிவு

  ஆனால் ஓட்டத்தை குறைக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு கன பொழுதையும் ரசிக்க வேண்டும் என்றும் சொல்பவர்களால் கூட கடைபிடிக்க முடியாது என்பதே உண்மை,

  இங்கு ஜோஷுவா பெல் மட்டும் அல்ல, நம்ம கண்ணதாசன் அவர்களுக்கும் இது போல் ஒரு சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

  // திரு HD KarthicK பதிவிலிருந்து
  http://www.iamhoneydrop.com/2013/01/world-does-not-care-about-content-truth.html?showComment=1383566772065#!/2013/01/world-does-not-care-about-content-truth.html

  கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்து கொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.
  அவர் கவிதை வாசிக்கும் போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது.
  கைதட்டல்கள் முடிந்ததும், கண்ணதாசன் சொன்னார், ''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல." உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எழுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார். அது மிக நன்றாக இருந்தது.
  எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லி விட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன். என் கவிதையை அவர் வாசிக்கும் போது எந்த வித ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்த போது பலத்த வரவேற்பு.
  ஆக சொல்பவன் யார் என்பதைத் தான் உலகம் பார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பது தான் உண்மை என்று புரிகிறது.//

  நான் புரிந்து கொண்டது என்னன்னா... இடத்தையும், சொல்பவனையும் வைத்தே எந்த ஒரு விசயமும் மதிக்கபடுகிறதே அன்றி உண்மையான கலைக்காக அல்ல..


  ReplyDelete
  Replies
  1. ஆளைப பார்த்தும் இடத்தைப் பார்த்தும் ரசிக்கும் மனோபாவம் நமக்கு உண்டு

   Delete
  2. //சொல்பவன் யார் என்பதைத் தான் உலகம் பார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பது தான் உண்மை என்று புரிகிறது.//
   :(

   Delete
 17. நம் ஊரில் ஒரு சிறு கலைஞரை வெளியில் பார்த்தாலே கூட்டம் கூடிவிடும்... ஆனால் வெளிநாடுகளில் கலைஞர்களுக்கு மதிப்ப்பளிபார்களே தவிர தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட மாட்டார்கள். இதை எங்கேயோ படித்த ஞாபகம். பகிர்தலுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்.இங்கும் அது குறைந்து வருவதாகவே தோன்றுகிறது.

   Delete
 18. வணக்கம் மூங்கில் காற்று.

  ஜோஷ்வா பெல் மிகச்சிறந்த கலைஞர் தான். ஆனால் அவர் தன் திறமையைக் காட்டிய இடம் தான் தவறு. எந்தக் கலையையும் இரசிக்க வேண்டும் என்றால் அதற்கான மனநிலை மக்களின் மனத்தில் வரவேண்டும். இங்கே வேலைக்குப் போகும் பொழுது மக்களின் மனநிலை வேலையில் தான் கவனம் இருந்தாக வேண்டும். அவர் இசையை ரசித்துவிட்டு வந்ததால் ஏற்படும் இழப்பை அவர் வந்து சரி செய்ய முடியாது என்று மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. இது முழுக்க முழுக்க ஜோஷ்வா பெல் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையின் குற்றமே தவிர மக்களின் குற்றமுமில்லை. ஜோஸ்வாவின் கலையிலேயும் குற்றமில்லை.

  ஆனால் நம்மவர்கள் அப்படியில்லை.
  ஒரு படத்தில் ஒரு நாய் (நான் உண்மையான நாயைத்தான் சொல்கிறேன்) நடித்திருந்தாலும் அது வெளியில் வந்தால், வேலையை விட்டு விட்டு அதை வேடிக்கைப் பார்க்கக் கூட்டம் கூடிவிடும். அந்த நாயைப் பார்த்ததைக் கூட நம்மவர்கள் பெருமையாகப் பேசுவார்கள்.

  நிழலுக்கும் நிஜத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நம்மவர்கள் என்று தான் புரிந்து கொள்ளப் போகிறார்களோ...

  ReplyDelete
  Replies
  1. இது சோதனைக்காக ஒரு பத்திரிக்கை ஏற்பாடு செய்த நிகழ்வு.நம்மூரிலும் அந்த மாற்றம் தெரிவதாகவே படுகிறது அருணா. வருகைக்கு நன்றி

   Delete
 19. இந்தச் செய்தியை நான் ஏற்கனவே படித்த நினைவு. ஒன்று தெரிகிறது. இலவசமாகக் கிடைப்பதற்கு மதிப்பு இல்லை. இரண்டாவது மேலை நாடுகளில்செயலை கவனிக்கிறார்கள் செய்பவனை அல்ல.

  ReplyDelete
 20. ஏற்கெனவே படித்த நிகழ்வுதான்...முடிவுகளும் சரிதான்

  ReplyDelete
 21. //அவ்வளவு ஓட்டமாக ஓடுவதற்கு என்ன காரணம்? எதை நோக்கி ஓடுகிறோம்?"//
  ஓட்டத்திற்கு காரணம் பணம். எதை நோக்கி? ஒரு முட்டு சுவற்றை நோக்கி.. அவசர உலகில் அவசியமானவைகள் எல்லாம் இன்று அனாவசியமாகிட்டது. ரசிப்பு என்பது இல்லாதவன் வாழ்க்கை ரணம் தான். அருமையான பரிசோதனை, கட்டுரை. பகிர்வுக்கு நன்றீங்க அய்யா..

  ReplyDelete
 22. அவசர உலகமிது...
  இங்கு எதையும் நின்று நிதானித்து ரசிக்க நேரமில்லை.

  ReplyDelete
 23. இதை முன்னரே எங்கோ படித்திருக்கிறேன். இன்னார் வாசிக்கிறார் என்று முன்னரே சொல்லி வாசித்திருந்தால் கூட்டம் நின்றிருக்கும். பெயருக்கும், புகழுக்கும்தான் மதிப்பு.

  ReplyDelete
 24. // இளையராஜா, A.R. ரகுமானாக இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் வாசலில் சொல்லாமல் கொள்ளாமல் இசைத்தால் எவ்வளவு சிறப்பாகவே அது இருந்தாலும் குறைவான கவனத்தையே ஈர்க்கும். //

  நம்ம ஆளுங்கலை இங்க சேர்க்காதிங்க. இளையராஜா, எ.ஆர். ரகுமான் வாசிக்கவே தேவையிலை. சும்மாவே கூடும் கூட்டம்.

  டேவிட் கேரட் (பிராத் ஆப் கரிபியன் படத்திற்கு வாசித்தவர்) கூட இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளார்.

  ReplyDelete
 25. This comment has been removed by the author.

  ReplyDelete
 26. உண்மைதான் மக்கள் எதை நோக்கி ஓடுகிறோம் என்று அறியாமலே ஓடிக்கொண்டுள்ளனர்.நன்று

  ReplyDelete
 27. ஆய்வும் அதை நீங்கள் எடுத்துரைத்தவிதமும் நன்று.

  ReplyDelete
 28. இனி தமிழ் பதிவாளர்களும் (Tamil Bloggers), ஆங்கில பதிவாளர்களுக்கு (English Bloggers) இணையாக வருமானம் பெற முடியும்.

  தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in ல் பதிவுசெய்து, Ad30days Network விளம்பரங்களை தங்கள் தலத்தில் காண்பிப்பதன் மூலம் மாதம் நிரந்திர வருமாணம் பெற முடியும்.

  தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே உங்கள் தமிழ் தளத்தை பதிவு செய்யுங்கள்
  http://publisher.ad30days.in/publishers_account.php .

  பதிவுசெய்துவது முற்றிலும் இலவசம் .

  வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம். ( Bank Transfer, Paypal)

  ReplyDelete
 29. அவசரயுகத்தில் யார் நின்று கவனிப்பது ஓட்டம்தான் என்றநிலையில்!

  ReplyDelete
 30. அவசர உலகம் சார் !! இந்த கட்டுரைய எழுதி ஒருத்தர் விருது வாங்கிடாரே அதுதான் எனக்கு ஆச்சரிய்மா இருக்கு !!...

  ReplyDelete
 31. நம்மவர்கள் என்னதான் வேக ஓட்டமாக ஓடிக் கொண்டிருந்தாலும் ரோட்டில் ரெண்டு பேர் சண்டை போட்டாலோ... ஏதாவது விபத்து நடந்து போலீஸ் சுற்றி இருந்தாலோ... போகிற வேகத்தை மறந்துவிட்டு சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். வேலை வெட்டியை விட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பது நமது தேசிய குணம். அதனால் அந்தப் பத்திரிகையின் சோதனை முயற்சி இங்கே வேலைக்காகாது! இத்தனை இருந்தும்கூட... வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க பரபரப்பாக ஓடி பல நுண்கலைகளை ரசிக்கும் ரசனையைத் தொலைத்துக் கொண்டுதானே இருக்கிறோம் என்ற நினைப்பு எழத்தான் செய்கிறது!

  ReplyDelete
 32. I agree with Bala Ganesh...............

  ReplyDelete
 33. நம்மவர்களுக்கு அடுத்தவர்களுக்கு பிரச்சினை என்றால் வேடிக்கை பார்ப்போம். நாமும் தினசரி ரயிலில் புல்லாங்குழல் அருமையாக வாசிக்கும் ஆளைப் பார்ப்போம். என்ன செய்வோம், மீறிப் போனால், ஒரு ரூபாய் போடுவோம். அது மட்டுமின்றி இளையராஜா ரஹ்மானை நாம் சொல்லக்கூடாது. எந்த ஊராக இருந்தாலும், சினிமா இசையமைப்பாளர்கள் வேறு, இசைக் கலைஞர்கள் வேறு. நம்மூரிலும், L. சுப்பிரமணியன் சாலையில் நின்று வாசித்தாலும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஏனெனில் நமக்கு தெரிந்த ஆட்கள் அப்படி.

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895