என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Sunday, December 1, 2013

நீயா?நானா?மனைவியுடன் வெளிப்படையாக பேசலாமா?

  நீ...........ண்ட நாட்களாயிற்று நீயா நானா பற்றி எழுதி. நீயா நானா சமீப காலங்களில் சுவாரசியம் குறைந்து வருவதை அறிய முடிகிறது. பேசப்படும் தலைப்புகள் ஏற்கனவே பேசிய தலைப்புகளோடு ஒத்து இருப்பதும் ஒரு காரணம். ஒரே நிகழ்ச்சி நீண்ட நாட்களாக நடந்து வந்தால் என்னதான் சுவாரசியமாக கொண்டு சென்றாலும் சலிப்பு ஏற்படவே செய்யும். சூப்பர் சிங்கர், நிகழ்ச்சியும் அதுபோலவே .
  குறிப்பிட்ட நிலையக் கலைஞர்கள் போல சில சிறப்பு விருந்தினர்களே மீண்டும் மீண்டும் கலந்து கொள்வது போரடிக்கத்தான் செய்கிறது. தலைப்பை வைத்தே இன்று யார் சிறப்புவிருந்தினராக இருப்பார்கள் என்பதை ஓரளவிற்கு ஊகித்து விட முடிகிறது. அவர்கள் என்ன கருத்து சொல்வார்கள் என்பதும் ஊகிக்கக் கூடியதே!

    கடந்த ஞாயிறன்று நீயா நானாவில் கணவன்/மனைவி அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்வது பற்றிய விவாதம் நடைபெற்றது. எல்லாவற்றையும் மறைக்காமல் கணவன் மனைவி இடமும் மனைவி கணவனிமும் ஒளிவு மறைவின்றி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஒரு தரப்பினரும் மறைக்கக் கூடாது என்று இன்னொரு தரப்பினரும் பேசியதில் இரண்டு பக்கமும் சில நியாயங்கள் இருக்கத் தான் செய்தன.

    சாலையில் சென்ற அழகான பெண்/ ஆணைப் பார்த்ததையும் ரசித்ததையும் நாங்கள் பகிர்ந்து கொள்வோம். அப்படி பகிர்ந்து கொள்வதுதான் நேர்மை என்று ஒரு சாரர் சொன்னதை உண்மையில் அவர்களே மனமறிந்து ஏற்றுக் கொள்வார்களா என்பது கேள்விக் குறியே! கணவன்  சொல்வதை பெண்கள் வேண்டுமானால் அவ்வளவாக பொருட்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் மனைவி தான் ஒரு ஆணை ரசித்தேன் என்று சொல்வதை கணவன் முழு மனதுடன் ஏற்றுக் கொள்வது என்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவே.

    சிலர்  மனைவிடம் தனது பொருளாதார நிலையை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என தெரிவித்தனர் . தான் வாங்கும் சம்பளத்தைக் கூட சொல்வது கூட அவசியமில்லை என்று கூறினர். காரணமாக பலரும் சொன்னது தன் தாய் தந்தையருக்கு,அண்ணன் தம்பிக்கு, நண்பருக்கு பண உதவி செய்வதை மனைவி தடுத்துவிடுவார் என்பதே அது. ஆனால் அவற்றை சொன்னால் நாங்கள் தடுக்கவா  போகிறோம் என்பது எதிர் தரப்பினர் வாதம் (உண்மையாகவா?) சிந்தித்துப் பார்த்தால்  இப்படி சொல்வதற்கு காரணம் தன் மீது கொண்டுள்ள அவநம்பிக்கையே! மனைவி சொன்னால் அதைக்கேட்டு நாம் உதவும் எண்ணத்தை மாற்றிக் கொள்வோமோ என்ற நம்பிக்கை இன்மையே இப்படி யோசிக்க வைக்கிறது.

  குடும்பத்தின்  நிதி நிலையை கணவன் மட்டுமே கையாள்வது என்பது ஏன் சரியல்ல என்பதை ஒருபெண் அழகாக சொல்லி விட்டார். தன் கணவர் தன் சம்பளம் பற்றியோ வங்கிக் கணக்கு பற்றியோ ATM பாஸ்வோர்ட் போன்றவை தெரியாததல் ஏற்பட்ட இன்னலை விவரித்தார். கணவனுக்கு  தீடீர் விபத்து நேர்ந்தபோது கணவன் சுய நினைவின்றி மருத்துவமனையில் கிடக்க, செலவுக்கு பணம் இன்றி அவதிப் பட்டதை விவரித்தார். தன உறவினர் நண்பர்களின் உதவியோடு சமாளித்து விட்டாலும் கணவன் சுயநினைவுக்கு வந்த பின் வங்கியில் பணம் எடுத்து பிரச்சனையை தீர்த்ததை குறிப்பிட்டார

   உண்மையில் ஆண்களுக்கு  இது ஒரு பாடம். கணவன்  தான் இல்லாத நேரத்தில் எதிர்பாராமல் குடும்பத்திற்கு ஏற்படும் பணத் தேவையை சமாளிக்க இந்த விஷயத்தில் ஒளிவு மறைவு இன்றி நடந்து கொள்ளவேண்டியது அவசியம்தான். மனைவி வங்கிக்கு இது வரை செல்லாதவராகவோ, ATM போன்றவற்றை பயன்படுத்த தெரியாதவராகவோ (எதுக்குங்க வம்பு பெண்கள் ATM பக்கம் போகாமல் இருப்பதே நல்லதுன்னு சொல்லறீங்களா?) இருந்தாலும், ஏன்? அறிந்து கொள்ள ஆர்வம் காட்டாதவராக இருந்தாலும் இவற்றை கட்டாயம் சொல்லிவைக்கவேண்டும் என்பதை நிகழ்ச்சி பார்த்த அனைவரும் உணர்ந்திருப்பார்கள்.
(ஒரு சின்ன சர்வே படிவம் இந்த பதிவோட இறுதியில கொடுத்திருக்கேன். கட்டாயம் அதுல கலந்துக்கோங்க)

  ஆண்கள்  மட்டுமல்ல  வேலைக்கு செல்லும் பெண்கள் சிலரும்  தன் வரவு செலவு முழுவதையும் கணவனிடம் சொல்வதில்லை. அது பற்றி நிகழ்ச்சியில் பேசப்படவில்லை.  அரசு பணியில் உள்ளவர்களுக்கு சம்பளம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் ECS முறை ஏழு எட்டு ஆண்டுகளாகத்தான் நடைமுறையில் உள்ளது. இம்முறை அறிமுகப் படுத்தப் பட்டதை பணிபுரியும் பெண்கள் நிறையப் பேர் விரும்பவில்லை. காரணம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. சிலர் கணவனுக்கு தெரியாமல் பிறந்த வீட்டிற்கு உதவுவது தனக்கு புடவை நகை போன்றவற்றை வாங்கிக் கொள்வது ( புடவை, நகை புதுசா பழசான்ன பெரும்பாலான கணவன்மார்களுக்கு கண்டுபிடிக்க தெரியாதாம்! ) தம்பி தங்கைகளுக்கு அம்மாவுக்கு உதவுவது  வழக்கம். ECS நடைமுறைப் படுத்தப்பட்டபின்  வங்கிக் கணக்கில் ஏற்றப்படும் பணத்தை விருப்பப்படி கையாள முடிவதில்லை. ஏனனில் ATM அட்டை எப்போதும் கணவன் வசம் இருப்பதே! முன்பெல்லாம் DA நிலுவை, சரண்டர், பி.எஃப் கடன் தொகை போன்ற கூடுதல் வரவை வீட்டில் சொல்லாமல் தவிர்க்க முடியும். இப்போது அம்மாதிரி செய்ய முடிவதில்லை என்று ஒருசிலர் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

   வேலைக்கு  போகும் பெண்கள் மட்டுமல்ல வீட்டில் இருக்கும் பெண்களும் கணவனுக்கு தெரியாமல் சீட்டு கட்டுவது,பொருட்கள் வாங்குவது என்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு குடும்பத் தேவையை நிறைவேற்றுவதற்காகவே இருக்கும்.

   அலுவலக ஆண் பெண் நட்பு பற்றி பகிர்ந்து கொள்வது பற்றியும் பேசப்பட்டது. அலுவலகத்தில் இரு பாலரும் சகஜமாக பேசிக் கொள்வதும் கிண்டலடிப்பதும் சகஜம்தான் என்றாலும் அதை அப்படியே வீட்டில் பகிர்ந்து கொள்வது நல்லதல்ல என்பதை ஐ.டி யில் பணிபுரியும் சொன்னது குறிப்பிடத்தக்கது. தனது பாசோ அல்லது சக ஆண் நண்பரோ தன்னை,அழகை உடையை புகழ்ந்து சொன்னதை அப்படியே கணவனிடம் சொன்னால் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் அனேக ஆண்களுக்கு இருக்காது. அதை  பொருட்படுத்தமாட்டோம் என்று சொல்பவர்களும் மேடைக்காக சொல்வார்களே தவிர உள்மனதின் வெளிப்பாடு அல்ல அது. இது பெண்களுக்கும் பொருந்தும். அதனால் எவற்றை சொல்ல வேண்டுமோ அவற்றை சொன்னால் போதும் என்பது அப்பெண்ணின் கருத்தாக இருந்தது.
    உதாரணத்திற்கு  அந்தப் பெண்மணியும் அவர் மகளும் ஒவ்வொரு நீயா நானா நிகழ்ச்சியிலும் கோபிநாத்தின் உடையைப் பற்றி பேசுவார்களாம்.அது தன்கணவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது என்றார்.

      வெளிப்படையாக எதையும் பேசுவேன் என்று சொல்லும் ஆண்கள் கூட, தன் மேலதிகாரி தன்னை அவமானப் படுத்தியதையோ, தான் எப்படியோ ஏமாந்ததையோ,செய்த தவறையோ சொல்ல ஈகோ இடம் கொடுக்குமா என்பது கேள்விக் குறியே!

     கிரஷ் என்று சொல்லக் கூடிய அறியா வயது ஈர்ப்பை பகிர்ந்து கொள்வது ஜாலியானது. என்றனர் ஆனால் அது தேவையற்ற பிரச்சனையைக் கொடுக்கும் என்றனர் எதிர் தரப்பினர். அதுவும் உண்மைதான்.

    இறுதியாக திருமனத்திற்கு முந்தைய காதலை சொன்னதில் பிரச்சனை வந்தது என்றார் மனைவியுடன்  வெளிப்படையாக பேசவேண்டும் என்ற தரப்பில் பேசிய ஒருவர். அதனால் தன் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டார் என்று நா தழுதழுக்க  சொன்னதுதான் நிகழ்ச்சியின் ஹைலைட். அவரது இரண்டாவது மனைவி எதிர் அணியில்  அமர்ந்திருந்தார், அவர் இதை சொல்வதற்கு முன் மனைவியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இது பற்றி தன்னிடம் அவர் மனைவி ஒருபோதும் கேட்டதில்லை என்றார். லேசான புன்னகையுடன் தன் கணவனையே பார்த்துக் கொண்டிருந்த அந்த பெண்ணின் முகத்தில் ஆயிரம் பாவங்கள் தோன்றி மறைந்தது  போல் இருந்தது 

  கடந்த கால  காதலை மறைக்காமல் சொன்னால், மனைவியும் அதுபோல் தன்னுடைய அனுபவங்களை சொல்லக் கூடும். அது என் மனதை பாதிக்கும் அதனால் நான் அவற்றை பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. அந்த அளவுக்கு நான் தாராள மனப்பான்மை கொண்டவன் இல்லை என்று ஒருவர் சொன்னது ஆண்மனதின் யதார்த்த  நிலையை பிரதிபலித்தது.
வெளிப்படையாக பேசுவது நல்லது என்று பேசிய ஒருவரே தன் மனைவிக்கு இந்த நடிகரை பிடிக்கும் என்று சொல்வது எனக்கு பிடிக்காது என்று உண்மையை உடைத்தார்

     மறைக்கக்  கூடாது என்று சொன்ன பலரும் குறிப்பிட்டது பின்னர் அது வேறு யார் மூலமாவது கணவன்/மனைவிக்கு தெரிய வருவதைவிட முன்னரே சொல்லி விடுவது நல்லது என்று கூறினர் ஒருவகையில் அது சரியென்றாலும் இயல்பான பொசசிவ்நெஸ் அதை எப்படி எடுத்துக் கொள்ளும் என்பதை கணிக்க முடியாது

   சிறப்பு விருந்தினர் ஒருவரான அபிலாஷ் சொன்ன கருத்துக்கள் என்னைப் பொருத்தவரை ஏற்புடையதாகவே இருந்தன. கணவன் மனைவி இடையே ஒருமெல்லிய ரகசிய தன்மை இருப்பது வாழ்க்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்றார். அதற்காக எதையும் வெளிப்படையாக பேசக் கூடாது என்ற அர்த்தமல்ல. வெளிப்படையாக பேசுவது,மறைப்பது இரண்டுக்கும் இடைப்பட்ட பாதையில் பயணிப்பது நல்லது என்றார். 

    ஆனால் பொருளாதார விஷயத்தை மனைவியுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.அது பல சிக்கல்களை தவிர்க்கும்.

    எத்தனையோ  ஆண்டுகளாக ஆணாதிக்க சமுதாய சூழலில் வளர்ந்த நாம், சமீப காலமாக கல்வி பொருளாதார சூழல், தொழில்நுட்பம் போன்றவை காரணமாக  சம உரிமை பற்றி அறிவு பூர்வமாக ஏற்றுக் கொண்டாலும் பெண்கள் வெளிப்படையாக பேசுவதையும் செயல்படுவதையும் உணர்வு பூர்வமாக ஏற்றுக் கொள்ள இன்னும் சிறிது காலம் பிடிக்கும் என்பதை நிகழ்ச்சி உணர்த்தியது. 

****************************************************************************************
வந்ததுதான் வந்தீங்க! இந்தக்  கேள்விக்கும் பதில் சொல்லிட்டு போங்க

60 comments:

 1. நண்பர் அபிலாஷ் சொன்னது போல் கொஞ்சம் ரகசியங்கள் வேண்டும்... என்னைப் பொறுத்தவரை வீட்டுக்கு வீடு, மனிதருக்கு மனிதர் கணவன் மனைவிக்கு இடையேயுள்ள புரிதல்களின்படி விஷயங்களை பகிர்தல் / பகிராதிருத்தல் மாறுபடும்....

  சர்வே பார்ம் வேலை செய்யவில்லை.. கவனிக்கவும்... சரியானதும் கலந்துகொள்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. புரிதல் என்பதில்தான் விஷயம் உள்ளது. முழுமையான புரிதலுக்கு சாத்தியம் இல்லை.

   Delete
 2. ரெண்டு மாடும் ஒண்ணா இர்ந்தாதான் வண்டி ஒயுங்கா ஓடும்பா...
  //எத்தனையோ ஆண்டுகளாக ஆணாதிக்க சமுதாய சூழலில் வளர்ந்த நாம், சமீப காலமாக கல்வி பொருளாதார சூழல், தொழில்நுட்பம் போன்றவை காரணமாக சம உரிமை பற்றி அறிவு பூர்வமாக ஏற்றுக் கொண்டாலும் பெண்கள் வெளிப்படையாக பேசுவதையும் செயல்படுவதையும் உணர்வு பூர்வமாக ஏற்றுக் கொள்ள இன்னும் சிறிது காலம் பிடிக்கும் என்பதை நிகழ்ச்சி உணர்த்தியது. //

  அல்லாம் சீக்ரம் சர்யா பூடும்பா...

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு... (த.ம. +1)

  ReplyDelete
  Replies
  1. முட்டா நைனாவுக்கு நன்றி. நானும் வரேன்

   Delete
 3. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதே இல்லை முரளி....

  ReplyDelete
  Replies
  1. கணினி கிடைக்காத நேரத்தில் தொலைக் காட்சி,

   Delete
 4. நான் தவறாமல் -விரும்பிப் பார்க்கும்- நிகழ்ச்சியைப் பார்க்கமுடியாத குறையைப் போக்கி, அதுபற்றி எழுதியதற்காக முதலில் நன்றி நண்பர் முரளி அவர்களே. பிறகு என் ஏடிஎம் கார்டும், என் மனைவியின் ஏடிஎம் கார்டும் என் மனைவியின் பீரோவில்தான் எப்போது வேண்டுமானாலும் இருவரில் யார்வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வதுபோலத்தான் இருக்கும். இருவருக்குமே இருவரின் பாஸ்வேர்டும் தெரியும். எனவே அது தொடர்பாக எங்களுக்குள் பிரச்சினை வந்ததில்லை... இந்த அடிப்படை விஷயத் தீர்வு காரணமாக, பொதுவான சிக்கல்களும் எங்களிடையே குறைவுதான்... உங்களின் சர்வேயிலும் இதைப் பதிவு செய்திருக்கிறேன் நண்பரே. நல்ல பதிவுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. அவ்வாறு இருப்பதே நலம். சிலர் மனைவியிடம் சொல்லவேண்டாம் என்று நினைப்பதில்லை. மனைவியும் அறிந்து கொள்வதில் ஆர்வம காட்டுவதில்லை இது தொடர்பாக பெரும்பாலும் பிரச்சனை வருவதில்லை.எதிர்பாராமல் வந்தால் சமாளிக்க வேண்டும் என்பதே நோக்கம்
   நன்றி ஐயா

   Delete
 5. இங்கு நாமிருக்கும் நாட்டில் இந்த நிகழ்ச்சிகள் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நாமாக சாட்டலைட் அண்டெனா பூட்டி அதிலிருந்துதான் பார்க்கமுடியும். தவிர இப்போது ஆன்லைனிலேயே பதிவுசெய்யப்பட்ட நிகழ்ச்சிகளாகப் பார்க்கும் வசதிகளும் இருக்கின்றன.

  ஆனாலும் நான் இப்படி ஆன்லைனில் பார்ப்பது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மட்டுமே. வேறேதும் பார்ப்பதே இல்லை. உங்கள் பகிர்வு அருமையாக உள்ளது.

  அவரவர் மனத்தினையும் குணத்தினையும் பொறுத்தது கணவன் மனைவியிடையே ஒளிவு மறைவு என்பது.

  எனக்கும் கணவருக்கும் இடையே இந்த ஒளிவு மறைவு என்பதே கிடையவே கிடாயாது. அப்படித்தான் வாழ்ந்தோம். கணவர் சகலதையும் சொல்லித் தந்தும் காட்டியிருந்தும் பாங்க் விடயங்கள் எதிலும் நான் அக்கறை கொள்ளவில்லை. அவரே அனைத்தையும் பார்க்கட்டுமென இருந்தேன்.
  ஆயினும்...
  தேவை வந்து திணறியபோது அதன் பலனை ரொம்பவே அனுபவித்தேன் சகோ...

  அனைவருக்கும் உதவும் நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. நான் முந்தைய கருத்தில் சொல்லியது போல பலர் அறிந்து கொள்ள ஆர்வம காட்டியதில்லை

   Delete
 6. நீயா நானா நிகழ்ச்சியையும் உங்கள் எண்ணங்கள் கருத்துகளையும் கலந்து மிக அருமையான பதிவை இட்டதற்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete

 7. கணவன் மனைவிக்கிடையே சந்தோஷ நேரங்களில் வெளிப்படையாக பேசும் பேச்சுக்கள் சந்தோஷமற்ற நாட்களில் தீயாக வந்து சுட்டு எரித்து வாழ்வை மேலும்தான் பாதிக்கும். நாம் வெளிப்படையாக பேசும் எந்த பேச்சும் நிகழ்காலத்தில் மட்டுமல்ல எதிர்காலத்திலும் எந்த சூழ்நிலை வந்தாலும் பாதிக்காது என்று மிக நன்றாக தெரிந்தால் மட்டுமே பேச வேண்டும். இதை வாழ்க்கை துணையிடத்தில் மட்டுமல்ல நண்பர்கள் உறவினர்கள் எல்லோரிடத்திலும் இதைப் பின்பற்ற வேண்டும்.

  ReplyDelete
 8. என்ன நான் சொல்வது சரிதானே? பூரிக்கட்டை அனுபவத்தால் இதை சொல்லுகிறேன் ஹீ,ஹீ

  ReplyDelete
  Replies
  1. பூரிக்கட்டை சொலும் கதைகள் என்று பொறு தனிப பகுதியே தொடங்கலாம்

   Delete

 9. உங்களின் சர்வேயில் கலந்து கொண்டேன். அதில் எத்தனை முறை வேண்டுமானாலும் கலந்து கொள்ளும்படி இருக்கிறது நானே 3 தடவைக்கு மேல் வாக்களித்து இருக்கிறேன்

  ReplyDelete
 10. Replies
  1. நன்றி.எனது தம.வும் மதுரை தமிழனுக்கு கட்டாயம் உண்டு

   Delete
 11. மிக அருமையான பதிவை இட்டதற்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 12. நான் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை
  ஆயினும் தங்கள் பதிவு பார்த்த திருப்தியை அளித்தது
  அருமையாக பதிவு செய்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. கணவன் மனைவி இடையே ஒருமெல்லிய ரகசிய தன்மை இருப்பது வாழ்க்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்னும் கருத்து ஏற்புடையதாகப் படுகிறது.

  ReplyDelete
 14. Replies
  1. நன்றி எனது தமிழ்மண வாக்கு எப்போதும் உண்டு. உங்கள் வலைக்குவந்த நாள் முதல் இன்றுவரை தவறாது அளித்திருக்கிறேன்.

   Delete
 15. Replies
  1. நம்பள்கிக்கு நம்ப ஒட்டு தப்பாம உண்டு

   Delete
 16. எனது தளத்திலும் நீயா நானா...?

  !!!!

  கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

  ReplyDelete
 17. நல்ல விமர்சனம்.

  ReplyDelete
 18. நன்றாக எழுதி இருந்தீர்கள். உங்களுக்கு இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை எல்லாம், பொறுமையாகப் பார்க்க நேரம் இருப்பது என்பது ஆச்சரியமான விஷயம்தான்.

  ReplyDelete
  Replies
  1. ஒரு பக்கம் கணினி பார்த்துக்கொண்டே தொலைகாட்சியும் பார்ப்பது உண்டு

   Delete
 19. நீயா ,நானா என்ற தலைப்பே சரியில்லை என்பது என் கருத்து! ஏதோ போட்டி ,வீம்பு மனப்பான்மை ,அதில் ஏதிரொலிப்பதாகக் கருதுவதற்கே இடம் தருகிறது! எனவே நான்
  அதைப் பார்ப்பதில்லை!

  ReplyDelete
  Replies
  1. ஆம் ஐயா பலருக்கு நிகழ்ச்சி சலித்துத்தான் விட்டத
   நன்றி

   Delete
 20. கணவன் சொல்வதை பெண்கள் வேண்டுமானால் அவ்வளவாக பொருட்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் மனைவி தான் ஒரு ஆணை ரசித்தேன் என்று சொல்வதை கணவன் முழு மனதுடன் ஏற்றுக் கொள்வது என்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவே.//

  சரியாச் சொல்லிட்டீங்க. எனக்கென்னவோ இந்த நிகிழ்ச்சியில் பேசுபவர்களில் பெரும்பாலோனோர் உண்மைக்குப் புறம்பாக வெறும் பேச்சுக்காக பேசுவது போலவே தோன்றியது. ஆகவே சிறிது நேரத்திற்குப் பிறகு பெட்டியை அணைத்துவிட்டேன்.

  ReplyDelete
 21. ஆண்கள் தம் மனைவியின் பகிர்வுகளை எவ்வளவுதான் வெளிப்படையாக ஏத்துக்கிட்டாலும், முற்போக்கா சிந்திச்சாலும் அவர்களுக்குள் ஒரு சின்ன இழையாவது ஆணாதிக்கம் வெளிப்படாமல் இருக்காது.

  ReplyDelete
  Replies
  1. ஆம் அதைத்தான் நானும் குறிப்பிட்டிருக்கிறேன்.

   Delete
 22. இதிலெல்லாம் எல்லோருக்கும் பொருந்தக் கூடிய தகவல்கள்கிடைப்பது அரிது.காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் நீயும் நானும் வேறல்ல என்பதெல்லாம் ஓரளவுக்குத்தான் சரி.ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொண்ட பிறகும் எல்லா ரகசியங்களையும் பகிர்லாமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ஐயா! அது தேவையற்ற ஒன்று நமக்கு நாமே அமைதியின்மையை அழைப்பதற்கு சமம்

   Delete
 23. ATM பாஸ் வோர்ட் மனைவிக்கு தெரியுமா தெரியாதா என்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆகவே சர்வே கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. மன்னிக்கவும்.

  ReplyDelete
 24. வணக்கம்
  முரளி(அண்ணா)

  நீயா.?..நானா? நிகழ்ச்சிபற்றி மிக அருமையாக எடுத்துரைத்த விதம் நன்று வாழ்த்துக்கள் அண்ணா....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 25. //இறுதியாக திருமனத்திற்கு முந்தைய காதலை சொன்னதில் பிரச்சனை வந்தது என்றார் மனைவியுடன் வெளிப்படையாக பேசவேண்டும் என்ற தரப்பில் பேசிய ஒருவர். அதனால் தன் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டார் என்று நா தழுதழுக்க சொன்னதுதான் நிகழ்ச்சியின் ஹைலைட்.//

  இப்படி ஒரு பொது வெளியில், தன் முதல் மனைவி இறந்ததற்க்கு காரணம் "தன் (இறந்தக்கால) காதலியை மனைவிமுன் உயர்த்தி பேசியதே என்று" தன் இரண்டாம் மனைவி முன் சொல்வது.. எந்த விதத்தில் ஏற்க முடியும்...


  ஒரு பெண் மற்றொரு தகுதியுடைய பெண்ணை பாராட்ட தயங்குவதில்லை, ஆனால் தன் கணவன் இன்னோரு பெண்ணை, தன்னைவிட சிறந்தவள் (நேசத்தில்) என்றால்...!!

  ReplyDelete
  Replies
  1. சண்டைகள் வரும்போது வேறு ஒருவரோடு ஒப்பிட்டுப் பேசுவது கிட்டத்தட்ட எல்லோருக்குமே வழக்கம்தான். அனால் தற்கொலைக்கு அது மட்டும்தான் காரணமா என்று தெரியவில்லை

   Delete
 26. என்னுடைய ATM PIN number என் மனைவிக்கு தெரியும் ஏன் என்றால் அதை அதிகம் பயன்படுத்துவது அவர்கள் தான், அதே நேரத்தில் எனது நிதி நிலைமைபற்றி எந்த விபரமும் தெரியாது. தெரிந்து அதற்க்கு தகுந்த படி நடந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. பலருடைய நிலை இதுதான். சொல்லக் கூடாது என்பது பலரின் நோக்கமல்ல.
   நன்றி

   Delete
 27. நீயா நானா நிகழ்ச்சி இப்பொழுது பார்ப்பது இல்லை! முன்பிருந்த சுவாரஸ்யம் இப்போது இல்லை! ஆனால் நீங்கள் விவரித்த விதம் ஒரு நிகழ்ச்சியை தவறவிட்டுவிட்டோமே என்று வருந்த வைத்தது. நான் ஏடி.எம் வைத்திருந்தும் அவ்வளவாக பயன்படுத்துவது கிடையாது. என் மனைவிக்கு பாஸ் வேர்டு சொன்னதில்லை! இனி சொல்லி வைக்கிறேன்! அருமையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 28. சகோதரருக்கு வணக்கம்..
  நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உண்மையை எதிர்பார்ப்பது சற்று ஏமாற்றத்தைத் தான் தரும் என்பது எனது கருத்து. கணவன் மனைவி இடையே ஒருமெல்லிய ரகசிய தன்மை இருப்பது வாழ்க்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பது தான் உண்மை. நிதி வரவு செலவுகளில் மனைவியோடு இணைந்து மறைக்காமல் மேற்கொள்வதே சிறந்தது. எத்தனை ஆண்கள் ஊதாரிகள் ஆனதற்கும், கடனாளிகள் ஆனதற்கும் மனைவிக்கு தெரியாத வரவு செலவுகளே காரணமாக இருந்துள்ளன. கணவனின் ATM கார்டை மனைவியும் மனைவியின் கார்டை கணவனும் பயன்படுத்துவது கூட ஆரோக்கியமான நிகழ்வாக இருக்குமோ என்று தோன்றுகிறது. பகிர்வுக்கு நன்றிகள் சகோதரரே..

  ReplyDelete
 29. நல்லதொரு அலசல். எதைச் சொல்லவேண்டும் எப்படிச் சொல்லவேண்டும், எப்போது சொல்லவேண்டும், சொல்வதால் என்ன பின்விளைவுகள் உண்டாகும் என்பதைப் பற்றிய தெளிவு இருவருக்குமே தேவை. பகிர்வுக்கு நன்றி முரளிதரன்.

  ReplyDelete
 30. naan tv nikazhchikalai paarkka vaayppu mika kuraivu...
  neengal pakirnthamaikku nantri!

  ReplyDelete
 31. சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம்.
  சிறந்த கருத்துக் கணிப்பு!
  v

  ReplyDelete
 32. நல்ல அலசி ஆராய்தல்.
  மிக நன்று.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 33. ***கணவன் மனைவி இடையே ஒருமெல்லிய ரகசிய தன்மை இருப்பது வாழ்க்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்றார்.***

  இந்த வாக்கியம் நல்லாயிருக்கு. ஆனால்"உயிர்ப்புடன்" வச்சிருக்குமா? இல்லைனா ஒரு சின்ன "இருள்" இருவருக்கும் இடையில் இருக்குமா என்பது தம்பதிகளையும், அவர்கள் மனநிலையையும் பொருத்தது.

  உயர்ந்த மனிதன் படம் பார்த்து இருக்கீங்களா? அந்தப் படத்தில் "அந்த ரகசியம்" எந்த உயிர்ப்பையும் வச்சிருக்காது. மாறாக இருளைத்தான் வைத்திருக்கும். :)

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895