என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Friday, December 20, 2013

ஒல்லியான ஊசிக்கு பேரு குண்டூசியா?-வைரமுத்து


கவிப்பேரரசு வைரமுத்து (Vairamuthu) தன் ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள் மூலமாக நம் நெஞ்சங்களைக் கவர்ந்தவர். திரைப் பாடலுக்கு புதிய பரிமாணம் தந்தவர். புதுக் கவிதைகளையும் பிரபலப் படுத்தியவர். ஆனால் அவர் எழுதிய முதல் கவிதை நூல் வைகறை மேகங்கள் முழுவதும் மரபுக் கவிதைகளால் ஆனது. அருமையான சொல்லாட்சியும் பொருளழகும் கொண்ட கவிதைகளாக அவை அமைந்திருப்பதைக் காணலாம். இந்நூலுக்கு கண்ணதாசன் அணிந்துரை எழுதியுள்ளார்
        இதில் குண்டூசி என்ற தலைப்பில் கவிஞர் எழுதியுள்ள கவிதை எனக்கு மிகவும் பிடித்த கவிதையாகும். ஒரு சாதாரண  குண்டூசியைப் பார்த்த வைரமுத்துவின கவிச்சிறகு எப்படி பறக்கிறது பாருங்கள்? இதோ அந்தக் கவிதை .  அறுசீர் விருத்தத்தில் எழுதப் பட்ட இந்தக் கவிதையை மடக்கி எழுதினால் புதுக்கவிதையாகவும் கொள்ள முடியும் . 
 
குண்டூசி
       என்னைப்போல் இளைத்துப் போனாய்
           இணைப்புக்குத் தேவை யானாய்
       திண்ணைப் போர் புரிந்துகொண்டே
           சேல்களை ஆட்டும் பெண்ணின்
       கண்ணைப் போல் கூர்மையான
           கழுத்திலாத் தொப்பிக்காரன்
       மின்னல்போல் மறைந்து துன்பம்
           விளைக்கும் நீ இரும்புக் குச்சி


       குண்டூசி என்ற பேரைக் 
            கொடுத்தது சரியா? காமம்  
       கொண்டாடும் நடிகை வீட்டை         
            கண்ணகி இல்லம் என்று
       சொன்னாலும் சொலலாம் ஆனால்
            சுருங்கிய ஊசி உன்னை
       குண்டூசி என்றே இங்கே
            கூறுதல் தவறே? ஆமாம்!       கருப்பாணி பெற்ற பிள்ளை
            காகிதக் களத்துக் கத்தி
       ஒருசிலர் பல் வீட்டிற்கே
             ஒட்டடை போக்கும் குச்சி
       செருப்பாணி போல தைத்துச்
             சிறுதாளை எல்லாம் ஒன்றாய்
       உருவாக்கும் உன்னை தூய
             ஒற்றுமைச் சின்னம் என்பேன்


        விடையிலாக் கேள்வியாக்கி
              விலையிலாச்  சரக்காய் என்னைப்
        படைத்தவன் பாவி; உன்னைப்
               படைத்தவன் ஞானி; இங்கே
        உடையினை அணிந்துகொண்ட
               உயிர்ப்பிண மனிதர்க் கென்றும்
        எடையிலே குறைந்து போனாய்
               இயல்பிலே உயர்ந்து போனாய்


        வெறுப்பினால் உன்னை தூர
               வீசுவார் ஆமாம்! அந்தக்
        கிறுக்கற்குத் தேடும் போது
             கிடைக்காமல் ஆட வைப்பாய்!
        உறுதியாய் உரைப்பேன் இங்கே
              உனக்குள தன் மானத்தில்
        அறுபதில்  ஒரு பங்கேனும்      
                ஆமிந்த  மனிதர்க் கில்லை 

**********************************************************

42 comments:

 1. வணக்கம்
  முரளி(அண்ணா)

  வைரமுத்து பற்றிய பதிவு சிறப்பாக உள்ளது கவிதையும் சிறப்பு வாழ்த்துக்கள்.அண்ணா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. வணக்கம்
  முரளி(அண்ணா)

  த.ம1வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. சிறப்பானதோர் எண் சீர் விருத்தத்தைத் தேர்வு செய்து
  மனத்தைக் கவருமப்டடியாக பதிவிட்டுள்ளீர்கள் .
  வாழ்த்துக்கள் சகோதரா மென்மேலும் தொடரட்டும் தங்கள்
  பகிர்வுகள் .

  ReplyDelete
 4. அழகான அறுசீர் விருத்தங்கள். ரசிதது ரசித்து ரசிக்க எழுதியுள்ளீர்கள்.
  இரண்டாவது விருத்ததில் “சொல்லலாம்“ என்று வந்திருப்பதில் ஓசை இடிக்கிறது. கவிஞர் தவறுசெய்திருக்க மாட்டார். இன்னொரு முறை எடுத்துப் பாருங்கள்... உங்களின் ரசனைக்கு என் வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. ஆம் ஐயா! அநேகமாக சொலலாம் என்று இருக்கக் கூடும் என்றுநினைக்கிறேன். நினைவில் கொண்டதை வைத்து எழுதியது. புத்தகத்தை பார்த்து சரிபார்க்கிறேன். நன்றி ஐயா!

   Delete
  2. ஆமாம் முரளி அய்யா. எனக்கும் கவிதை படித்த நினைவுள்ளதே அன்றி சரியான வரிகள் நினைவில் இல்லை. “சொலலாம்“ என்பதே சரியாக இருக்கக் கூடும். எதற்கும் ஒரு முறை எடுத்துப் பாருங்கள். தங்களின் பொறுப்பான பதிலுக்கும் திருத்தம் செய்த அன்பிற்கும் மீண்டும் நன்றி.

   Delete
 5. அற்புதமான கவிதை
  தங்களை மிகக் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை
  வசன கவிதையின் பொருள் நெருக்கத்தையும்
  மரபின் அழகையும் ஒன்று சேரக் கொடுத்துள்ள
  கவிதையை பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்த்துக்கள்

  ReplyDelete
 6. வாயப்பயத்துல ஊசி குத்துனாமாறி சொல்லிக்கினார்பா கவிஞ்சரு... என்னா கவுஜ...! என்னா கவுஜ...!

  ஏதோ என்க்கு தெர்ஞ்ச சீர்ல சொல்லிக்கினேம்பா... பொயவர் பெருமக்க மெர்சலாவாதீங்கபா...

  ReplyDelete
 7. நல்லதொரு பகிர்வு.

  ReplyDelete
 8. Replies

  1. வணக்கம்!

   தமிழ்மணம் 5

   வட்டக் குண்டைத் தன்தலையில்
   வைத்துக் கொண்ட வன்மையினால்
   இட்ட பெயரே குண்டூசி!
   இனிக்கும் தமிழின் சொல்மாட்சி!
   கட்டக் கட்டக் கட்டடமாம்!
   கட்டும் இடமோ கட்டிடமாம்!
   நட்ட கல்லே நடுகல்லாம்!
   நம்மின் மொழியைச் சுவைத்திடுவோம்!

   கவிஞா் கி. பாரதிதாசன்
   தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

   Delete
 9. #அறுபதில் ஒரு பங்கேனும்
  ஆமிந்த மனிதர்க் கில்லை #
  குண்டூசி குத்து அருமை !
  +1
  அவர் குண்டூசியை பார்த்து எழுதினார் ,நான் காக்கையை பார்த்து எழுதியது இதோ ...
  http://jokkaali.blogspot.com/2013/12/blog-post_20.html

  ReplyDelete
 10. உங்க பதிவில்தான் இம்மாதிரியான சிறப்பான விமர்சனம் இருக்கிறது.எனக்கும் இதுபோல் ஒருநாள் கிடைக்கும் வரை இன்னும் சிறப்பாக எழுத முயற்சிப்பேன்

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் சிறப்பாகத் தான் எழுதிக் கொண்டிருகிரீர்கள்.அதனால்தான் தமிழ் மணத்தில் முன் வரிச்யில் இடப் பிடித்திருக்கிறீர்கள்

   Delete
 11. ரசிக்க வைக்கும் வரிகள்... நன்றி...

  ReplyDelete
 12. நானும் இந்த கவிதையை ரசித்து படித்திருக்கிறேன்... நன்றி

  ReplyDelete
 13. வைரமென வார்த்தைகளை வாரி வழங்கும் வள்ளலின்
  கவிதைப் பகிர்வு அருமை!
  அருமையான கவிதை!

  நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோ!

  ReplyDelete
 14. நல்ல கவிதை.. ரசித்தேன்

  ReplyDelete
 15. வைரமுத்து வைர முத்துதான்
  த.ம.11

  ReplyDelete
 16. ரசிக்க வைத்த வரிகள் . பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 17. திரைப்பாடல்களில் அவர் ஜெயித்துக்கொண்டிருந்த காலங்களில் அவருடைய கவிராஜன் கதை,,,,,,,,,,,போன்ற நூல்கள் அவருக்கு தனி அடையாளம் கொடுத்தது எனச்சொல்லலாம்.ஒரே நேரத்தில் இரண்டு குதிரையில் பயணம் செய்த லாவகம் அவருக்கு வாய்க்கப்பெற்றிருந்ததாலும் அவர் கவிப்பேரரசு ஆகிறார்.அவருடை திரைப்பாடலின் வரிகள் இன்றும் மறக்க இயலாதவை.

  ReplyDelete
 18. குண்டூசி பற்றிய கவிதை ஜாடையாக தெரியும். ஆனால் விபரமாக இன்று தான் அறிந்தேன். வரிகள் ஒவ்வொன்றும் ரசித்தேன்.
  மிக்க நன்றி....! தொடர வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
 19. உங்கள் பதிவின் மூலம், கவிஞர் வைரமுத்துவின் ஒரு கவிதையைப் படித்திட வாய்ப்பு. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 20. அருமையான கவிதையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி முரளி.

  ReplyDelete
 21. வைரமுத்துவின் அருமையான கவிதையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி முரளி.

  ReplyDelete
 22. அன்பு சகோதரருக்கு வணக்கம்
  குண்டீசிக்கு கவிதை கண்டு ரசித்தேன். மிக அழகான கவிதையை ரசித்து கண்ணதாசன் அவர்கள் முன்னுரை எழுதிய விதமும் ரசிக்க வைத்தது. கவிதைக் காண தந்தமைக்கு அன்பான நன்றிகள்..

  ReplyDelete
 23. வைரமுத்து பற்றிய சகலஆராதனையுடன் கூடிய பதிவாக வந்திருக்கு தோழர்.

  ReplyDelete
 24. வைரமுத்துவின் அழகான கவிதை அண்ணா... ரசிக்கும்படி உள்ளது...

  ReplyDelete
 25. அவரிடம் அனுமதி பெற்று வெளியிட்டீர்களா என்று கவலையாக இருக்கிறது. அவர் பண விஷயத்தில் கறார் பேர்வழி. உங்களிடம் வீட்டை எழுதிவாங்கிவிடப் போகிறார்! உடனே ஆவான் செய்யுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. 'ஆவான் செய்யுங்கள்' அல்ல, ஆவன செய்யுங்கள் என்று படிக்கவும்.

   Delete
 26. லூசுத்தனமான கவிதை. வைரமுத்து சில நல்ல கவிதைகளை எழுதியிருக்கிறார் என்பது வேறு விஷயம். ஊசிதான் இளைத்திருக்கும். குண்டூசி தலையிலே ஒரு குண்டை வைத்திருக்கிறது. இந்தக் காரணம்கூடத் தெரியாதவரெல்லாம் கவிப்பேரரசு என்று பிதற்றுவது சங்கக் கவிஞர்களுக்கு அவமானம்.
  வெறுப்பினால் உன்னை தூர
  வீசுவார் ஆமாம்! அந்தக்
  கிறுக்கற்குத் ----------இன்னொரு ஆளை கிறுக்கனென்று வெறுப்பினால் திட்டும் இவர் கிறுக்கரா இல்லையா?
  கடைசி பத்தியில் தன்மானம் எப்படி திடீரென வந்தது.
  இந்தாளெல்லாம் ஒரு கவிஞன், அவனுக்குச் சாமரம் வீச உங்களை மாதிரி நாலு கூஜாத்தூக்கிகள். உருப்படும் தமிழ்க்கவிதை.

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895