என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Sunday, December 29, 2013

Excel தப்பா கணக்கு போடுமா? பகுதி 2

   
நான் நினைத்தது போலவே போதுமான அளவு வரவேற்பு கிடைத்த பதிவாக "எக்ஸ்பர்ட்டா நீங்கள்?சொல்லுங்கள்!எக்சல் தப்பா கணக்கு போடுமா?" அமைந்ததில் மகிழ்ச்சி. பலரும் நான் குறிப்பிட்டிருந்த எக்சல் சிக்கலுக்கு காரணத்தை சொல்லி விட்டனர். பாலாஜி, பொன்சந்தர் இருவரும் ஆர்வம் காரணமாக அதை எப்படி சரி செய்வது என்பதையும் சொல்லிவிட்டனர். அனைவருக்கும் நன்றி. உஷா அன்பரசு சொன்னது போல Excel பற்றி தேடுபவர்களுக்கு இதுபோன்றவை பயனளிக்கக் கூடும். அப்படி முந்தைய பதிவுகள் அவ்வப்போது சிலரால் தேடிப் பயன் பெறுவதை  அறிய முடிந்தது .

  இது மிக எளிமையானது பலரும் அறிந்தது என்பதில் ஐயமில்லை. கூடுதலாக ஒரே ஒரு விஷயத்தை சொல்லவே  இந்தப் பதிவை எழுதினேன். அதற்கு முன்னர் விடை தவறாக வருவதற்கான காரணத்தை  பார்க்கலாம்

படம் 1

எக்சல் தவறு செய்யாது என்பது உண்மை.எக்சல் கணக்கீடுகள் செய்யும்போது  மறைந்துள்ள தசம இலக்கங்களையும் சேர்த்துக் கொள்கிறது.இது அதன் இயல்பு நிலையில் அமைந்துள்ளது. கணக்கிடுவதற்காக எடுத்துக் கொள்ளப்படும் செல்களில் முழுமையக்கப் பட்டதை எடுத்துக் கொள்ளாமல் தசம இலக்கங்களையும் சேர்த்துக் கூட்டி பின் கூடுதலை முழுமையாக்குகிறது. 

மேலுள்ள உதாரணத்தில் DA மற்றும் Total காலத்தில் உள்ள செல்களின் தசம இலக்கங்கள் என்ன என்று பார்ப்போம்.செல்லில் எத்தனை தசம இலக்கங்கள் தெரிய வேண்டும் என நாம் முடிவு செய்துகொள்ளலாம்.

படம் 2

சிவப்பு வட்டமிடப்பட்ட பட்டனைக் கொண்டு தேர்ந்தெடுக்கப் பட்ட செல்களில் உள்ள எண்களின் தசம இலக்கங்களின் எண்ணிக்கையை கூட்டவோ குறைத்துக் கொள்ளவோ செய்யலாம்.இடப்புறம் உள்ளது தசம இலக்கங்களை அதிகமாக்கும். வலப்புறம் உள்ளவை குறைத்துக் காட்டும். அந்த செல்களில் உள்ள எண் பார்முலா மூலம் கணக்கிடப் பட்டிருந்தால் கணக்கீடுகளில் அடிபடையில் தசம இலக்கங்கள் அமையும். மேலுள்ள எடுத்துக்காட்டில் இரண்டு தசம் இடங்கள் திருத்தமாக DA மற்றும் Total காலங்கள் அமைந்துள்ளது.  படம் 1 இல் தசம இலக்கங்கள் காட்டப் படாமல் மறைக்கப்பட்டிருந்தாலும் அவற்றையும் சேர்த்துக் கூடுதல் கணக்கிட்டுள்ளது EXCEL. 14232.40 ஐ முழுமையாக்கும்போது 0.40 விடப்பட்டு கணித வழக்கப் படி 14232 ஆக மாற்றப் படுகிறது.அதே போல கீழ் செல்லில் .10 ஐ விடுத்து 20666 ஆக முழுமைப் படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இவை இரண்டும் கூட்டப்டும் D4 செல்லில் முந்தைய செல்களின் தசம இலக்கங்களான .40 மற்றும் .10 கூட்டப்பட்டு .50 ஆக எடுத்துக் கொள்ளபடுகிறது. .50 அல்லது அதற்கு மேற்பட்டு இருந்தால் அது 1 ஆக எடுத்துக் கொண்டு ஒன்றுத்தான இலக்கத்துடன் சேர்க்கப் பட்டுவிடுகிறது.  இதனால் 34898.50 என்பது 34899 ஆக கணக்கிடப்படுகிறது. 

இதை எப்படி சரி செய்வது. பின்னூட்டத்தில் சொன்னது போல round function ஐ பயன்படுத்துவது ஒருமுறை. பெரும்பாலும் நடைமுறைக் கணக்குகளில் சதவீதம் கணக்கிடப்படும்போதும்வகுத்தல் கணக்கீடுகளின்போதும் தசம பின்னம்தவிர்க்க இயலாததாகி விடுகிறது. அவ்வாறு செய்யும்போது  முழு எண்களாக்க increase decimal, decrease decimal பட்டனை பயன்படுத்தாமல் round function உபயோகப் படுத்தலாம். C2 செல்லில் உள்ள எண்ணுக்கு  DA கணக்கிட D2 செல்லில்  =ROUND(C2*91%,0) , என்ற forumula வை உள்ளீடு செய்யவேண்டும். இப்போதும் 14232 தான் காட்சி அளிக்கும் ஆனால் தசம இலக்கங்கள் மறைந்து இருக்காது. அதை drag செய்து அடுத்துள்ளதையும் சதவீதம் கண்டு ரவுண்டு செய்து விடும்.

இன்னொரு  முறை :

Round function ஐ பயன்படுத்தாமல் செய்ய ஏதேனும் வழி உள்ளதா என்று ஆராய்ந்ததில் உண்டு என்று சொன்னது எச்சல் . அது என்ன? set precision as displayed என்று ஒரு Option உள்ளது. மறைந்துள்ள தசம எண்களை கணக்கில் கொள்ளாமல் சாதரணமாக  செல்லில் கண்களுக்கு தெரியும்  எண்களை மட்டும் எடுத்துக் கொண்டு கணக்கீடு செய்யும் . இதனால் நாம் கண்ட இந்தப் பிழை ஏற்படாது.

இந்தப் படத்தில் பாருங்கள் முதல் படத்தில் உள்ள அதே தரவுகளைத்தான் பயன்படுத்தி இருக்கிறேன். round Function ஐ பயன்படுத்தவில்லை ஆனால் விடை சரியாக வருவதை காணலாம்

 இது எப்படி? எக்சல்லின் இடது ஓரத்தில் ஆபீஸ் பட்டனை கிளிக் செய்யவும்.கீழ்கண்ட வாறு கிடைக்கும் மெனுவில் Options ஐ கிளிக்கவும்.

பின்னர் கிடைக்கும் டயலாக் பாக்சில் Advanced ஐ தேர்ந்தெடுத்து பிறகு வலது புறத்தில் set precision as displayed என்பதற்கு முன் உள்ள செக் பாக்சை டிக் செய்யவும். தன்னியல்பாக இவை டிக் செய்யப்பட்டிருக்காது

தேவை இல்லை என நினைத்தால் டிக் மார்க்கை  நீக்கி விடலாம். பழைய நிலைக்கு வந்து விடும். 

இதில் இன்னும் சில விஷயங்கள் உள்ளன. அவற்றை இன்னொரு நேரத்தில் சொல்கிறேன்.

எக்சல் எனும் பிரம்மாண்டத்தில் அதிகம் பயன்படுத்தப் படாத பயனுள்ள வசதிகள் இருப்பதை நினைத்து  ஆச்சரியம் ஏற்படுகிறது. எக்சல் பயன்பாட்டில் நான் Expert அல்ல. ஆனால் நான் என் அனுபவத்தின் மூலம் பெற்ற பயனை, எளிமையாக இருந்தாலும் தெரியாத யாருக்கேனும் பயன்படும் என்ற நோக்கத்திலும்  நான் எழுதியதில் தவறுகள் இருப்பின் அறிந்தவர்கள் சுட்டிக் காட்டும்போது அதையும் திருத்திக் கொள்ள முடியம் என்பதாலும் எழுதப் பட்டதே இந்தப் பதிவு.

நான் பாசாயிட்டனா?

குறிப்பு: மேற்கண்டவை அனைத்தும் EXCEL 2007 ஐ அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது 

******************************************************************

படித்து விட்டீர்களா
எக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் இணைக்க முடியுமா   

காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா? 

EXCEL இல் எண்களில் உள்ள ரூபாயை எழுத்துக்களாக மாற்ற 

  கற்றுக்குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortccut

34 comments:

 1. எக்சல் பற்றிய தங்களின் அலசல் அருமை ஐயா
  கணினியில் தட்டச்சு செய்கின்றேனே தவிர
  எக்சல் பக்கம் சென்றதேயில்லை.
  தங்களின் கணினி ஞானம் வியக்க வைக்கின்றது ஐயா
  நன்றி
  த.ம.2

  ReplyDelete
 2. முன்பு -Lotus 123-ல் இது போல் Advanced Option எல்லாம் இல்லை... Quattro Pro என்றொரு -Spread Sheet Software-ல் சிலது மட்டும் தான் இருந்தது...

  நல்ல விளக்கம்... பலருக்கும் பயன் தரும்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. xL பற்றிய உங்களின் கணினி ஞானம் XLNC !
  +1

  ReplyDelete
 4. அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 5. தனபாலன் சொன்னது போல, LOTUS, QUATTRO PRO போன்ற சில மென்பொருட்களையும் முன்பு பயன்படுத்தி இருக்கிறேன். எக்ஸல்-ல் நிறைய வசதிகள் உண்டு. பெரும்பாலான வசதிகளை பயன்படுத்துவோர் மிகக் குறைவு தான்....

  ReplyDelete
 6. பயனுள்ள பதிவை சுவைபட தந்துள்ளீர்கள்.
  எக்செல் பயன்படுத்துவோருக்கு பயன்படும்.

  ReplyDelete
 7. அண்ணேன்...இதைவிட ரொம்ப ஸ்பீடாவும் எளிதாகவும் இருக்கும் MS Access கற்றுக்கொண்டால்.....Excel-இது சைக்கிள் ஓட்டுவது போன்றது Access -அது பைக் ஓட்டுவது போன்றது

  ReplyDelete
 8. பயனுள்ள பகிர்வு
  விரிவான தெளிவான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. கணினி விரிவுரையாளர் போன்று விளக்கம் தருகின்ற பதிவிது. பயன்தரும் தகவல் இது.

  ReplyDelete
 10. வணக்கம்
  முரளி(அண்ணா)

  அனைவருக்கும் பயன்னுள்ள பகுதி பற்றி சிறப்பான விளக்கம் வாழ்த்துக்கள்
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 11. வணக்கம்

  த.ம 9வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 12. நல்ல பகிர்வு... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. உங்கள் அனுபவங்களால் எங்களுக்கும் பயன் ஏற்படுகிறது. நன்றி.

  ReplyDelete
 14. Murali,

  Now no tamil ,will come back soon!

  ReplyDelete
 15. நண்பர் முரளி அவர்களே, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்னும் தங்களின் பரந்த பண்பிற்கு என் வணக்கம். நம்மோடு ஒத்த கருத்துடைய நண்பர் முனைவர் வா.நேரு அவர்களின் இந்தப்படைப்பைப் பார்ப்பதுடன், நம் ஆசிரிய நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன் -நன்றி. http://vaanehru.blogspot.in/2013/12/blog-post_29.html

  ReplyDelete
 16. சகோதரருக்கு வணக்கம்
  அனைவரும் பயன்படும் வகையில் தங்களுக்கு தெரிந்த விடயத்தைப் பகிர்ந்து கொள்ளும் தங்களது உயர் குணத்திற்கு நன்றிகள். தொடருங்கள் நிச்சயம் என்னைப் போன்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள உதவும் பதிவு. நன்றி..

  ReplyDelete
 17. மிகவும் மெனக்கெட்டு எழுதுகிறீர்கள். இது பலருக்கும் பயனளிக்கும் என்று நம்புகிறேன். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

  ReplyDelete

 19. வணக்கம்!

  புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
  நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
  சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
  தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  01.01.2014

  ReplyDelete
 20. சகோதரருக்கு நன்றி! வலையுலகில் தங்களது சேவை தொடரட்டும்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 21. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 22. மிக அருமை
  என் கணவரை இருத்தி இதை வாசித்துப் பார்க்கச் சொல்வேன்.
  இனிய நன்றி.
  தங்களிற்கு புதிய ஆண்டு மேலும் சிறக்கட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 23. Libreoffice calc போன்ற இலவச மென்பொருள் களிலும் தன்னைதானே புதுப்பிக்கும் வசதிகளும் இருக்கும் மென்பொருள்களை பயன்படுத்தவும் அனைவருக்கும் பரிந்துரைக்கலாமே.போன்ற இலவச மென்பொருள் களிலும் தன்னைதானே புதுப்பிக்கும் வசதிகளும் இருக்கும் மென்பொருள்களை பயன்படுத்தவும் அனைவருக்கும் பரிந்துரைக்கலாமே.

  ReplyDelete
 24. சாதாரணமாவே கணக்குனா பிணக்கு சார்.. இதுல மென்பொருள் தப்பு செய்யுமானு கேட்டு பயமுறுத்துறீங்களே.. :)
  பயனுள்ள பதிவு.. புதிதாகக் கொஞ்சம் கத்துக்கிட்டேன். நன்றி.

  புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. சகோதரருக்கு வணக்கம்
  தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும், நண்பர்களுக்கும் எனது இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 26. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

  ReplyDelete

 27. வணக்கம்!

  இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
  தங்கத் தமிழ்போல் தழைத்து!

  பொங்கல் திருநாள் புகுத்தட்டும் பன்னலங்கள்
  திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!

  பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்னழகாய்
  உங்கள் இதயம் ஒளிர்ந்து!

  பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
  எங்கும் இனிமை இசைத்து!

  பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
  சங்கத் தமிழைச் சமைத்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 28. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 29. முரளி,

  தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 30. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து

  ReplyDelete
 31. Excel explanation is very good. Thanks By Venkataraman.Thimiri- cell_ 9150435201

  ReplyDelete
 32. அனைவருக்கும் பயன்னுள்ள பகுதி

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895