என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 24 ஏப்ரல், 2014

குமுதத்தில் என் சிறுகதை! வலைப் பதிவு எழுதுவதால் பயன் உண்டா?

      செவ்வாய்க் கிழமை காலையில் ஒரு தொலை பேசி அழைப்பு. பேசுவது யாரென்று சொல்லாமல் உங்கள் "என்ன செய்யப் போகிறாய்" கதை குமுதத்தில் வந்திருக்கிறது. இன்னும் படிக்கக் கூட இல்லை. உங்கள் பெயரைப்பார்த்ததும் வாழ்த்து தெரிவிக்க உடனே அழைத்துவிட்டேன். வாழ்த்துக்கள் என்று  இன்ப அதிர்ச்சி தந்துவிட்டு "நான் யாரென்று  அறிந்து கொள்ள முடிகிறதா" என்றார். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரே சொன்னார் "நான் உங்களுக்கு தெரிந்தவன்தான் என்னை சென்னை பித்தன் என்று அழைப்பார்கள் என்று மென்மையாக சொன்னார். ஒரு மூத்த பதிவர், பதிவுலகில் இளைஞர்களுக்கு இணையாக வெற்றிக் கொடி நாட்டியவரின் பண்பு என்னை ஆச்சர்யப் படுத்தியது.
2012 ஜனவரியில் வலைச்சரத்தில் முதன் முதலாக என்னை அறிமுகப்படுத்தியவர் இவரே. அவரே கதை வெளியான முதல் தகவல் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து பலரும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர். இடைவிடாத அலுவலக வேலைகள் காரணமாக அடுத்த நாள்தான் நான் குமுதம் வாங்கிப் படிக்க முடிந்தது. ஏற்கனவே வலையுலக நண்பர்கள் பலருக்கும் மின்னல்வரிகள் பாலகணேஷ் அவர்கள் மூலம் தெரிந்து விட்டதால் இதைப் பற்றி எழுதலாமா வேண்டாமா என்று யோசித்தேன்.  வவ்வால்ஜி 'அறியாதன அறிந்தேன் ' என்று கலாய்த்தல் கம்மென்ட் போடுவார் என்றாலும் இதனை (அவருடனும்) பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்ற முடிவுக்கு வந்தேன். 

30.04.2014 தேதியிட்ட குமுதம் இதழில் கதை வெளிவந்துள்ளது. இந்த இதழ் 22.04.2014 அன்றே வெளிவந்துவிட்டது.

******************************

    பாலகணேஷ் அவர்களின் சரிதாயணம்  கதைகள் வலையுலகில் பிரசித்தமானவை. இயல்பான நகைச்சுவை அவருக்கு கைவந்த கலை. தன்னையே நாயகனாகக் கொண்டு சரிதா என்ற கற்பனை கதாபாத்திரத்துடன் இணைந்து  நகைச்சுவை விருந்து படைத்து வருபவர்  அவர். அந்தப் பாத்திரத்தைக் கொண்டு அதே பாணியில் ஒருகதை எழுத வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு நினைத்திருந்தேன். வேறு ஒரு  கதைக் களத்தைக் கொண்டு கதையும் தொடங்கி விட்டேன். பின்னர் தற்போதைய சூழலில் தேர்தலை வைத்து எழுதினால் நன்றாக இருக்குமே என்று நினைத்து அவசர அவசரமாக எழுதி முடித்து விட்டு அதை பாலகணேஷ் மின்னஞ்சலுக்கு அனுப்பிவிட்டு இரவு 9.30 மணிக்கு போன் செய்து மெயில் அனுப்பியதை தயக்கத்துடன்   சொன்னேன். சிறிது நேரத்திலேயே என்னுடன் தொடர்பு கொண்டு மிக நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். அவருடைய என் பெயரைத் தெரிவிக்காமல் வலைத்தளத்தில் வேண்டிய திருத்தம் செய்து வெளியிடும்படி கேட்டுக் கொண்டேன்.   நான் எழுதியதில் எதுவும் விட்டதாகவும் சேர்த்ததாகவும் தெரியாமல் அற்புதமாக எடிட் செய்துவெளியிட்டார் 

   எனக்கும் நகைச்சுவைக்கும் ரொம்ப தூரம் என்று நினைத்து ஒருவரும் என்பெயரை யூகிக்கவில்லை என்பது ஏமாற்றத்தை தந்தாலும்  கண்டு பிடிக்கமுடியாத அளவுக்கு இருந்தது என்பதில் சற்று மகிழ்ச்சியே! அதற்கு கிடைத்த வரவேற்பு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நான்தான் எழுதினேன் என்று முன்னரே  தெரிந்திருந்தால் வரவேற்பு ஒரு வேளை குறைந்திருக்கக்கூடும். கருத்திட்டு பாராட்டும் தெரிவித்த அனைவருக்கும்  
 வேறு ஒரு ஸ்டைலில் எழுதுவதில் ஒருசவால் இருக்கிறது.
அதுபோல எழுதி "திடம் கொண்டு போராடு" சீனு நடத்திய காதல் கடிதப் போட்டியில் என்னைக் கவுத்திட்டாயே சரோ என்ற கடிதம் எழுதி பரிசு பெற்றதும் ஒரு வித்தியாசமான அனுபவம்.  
நன்றி 


*********************************************************************************
 வலைப் பதிவு எழுதுவதால் பயன் உண்டா?

  கதை கவிதை  கட்டுரை ஆர்வத்துடன் படிப்போர் பலருக்கும் எழுதவேண்டும் என்ற ஆசையும் வரும். சிலர்  அந்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வெற்றி பெறுகிறார்கள். நல்ல திறமை இருந்தும் வேலை, குடும்பம் சூழலில் தனக்கு படைப்பாற்றல் இருப்பதையே மறந்து போனவர் நிறையப் பேர் உண்டு. ஆரம்பத்தில்  பத்திரிகைகளுக்கு தங்கள் ஆக்கங்களை அனுப்பிவிட்டு அடுத்த வாரமே வந்து விடும் என்று ஆர்வக் கோளாறால் வாரா ரம் வாங்கிப் பார்த்து ஏமாற்றம் அடைந்த அனுபவமும் உண்டு. கடைசியில் சீ சீ இந்தப் பழம் புளிக்கும் நிலைதான் .  

   வலை உலகைப் பொறுத்தவரை படிப்போரும் படைப்பளிகளாகவே உள்ளனர்.செய்திகளை படிப்பவர்களை விதி விலக்காகக் கொள்ளலாம் பத்திரிகைகளை படைப்போர் அல்லாதவரும் படிப்பது அதன் கூடுதல் பலம்.
 நம் எழுத்தை அச்சில் ,பத்தரிகைகளில்  பார்க்கும்போது ஏற்படும் பரவசம் ஒரு தனியே. அதுவும் அந்தப் பத்திரிகை பிரபலமானததாக இருந்தால் கூடுதல் மகிழ்ச்சிதான். எல்லா பிரபல பத்திரிகைகளும் வலைப் பதிவுகளை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன. வலையுலகம் இன்று முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. அச்சு ஊடங்களில் பிரபலமாக உள்ள பலரும் தங்களை மேலும் நிலை நிறுத்திக் கொள்ள இணையம் நோக்கி  (முகநூல், திரும்ப வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

    மூன்றாவது படிக்கும்போது கதைப் புத்தகம் வாசிக்கத் தொடங்கிய நான்  9 வது படிக்கும்போது கதை எழுதத் தொடங்கினேன்.அப்போதே அது ஒரு சின்ன பத்திரிகையில் பிரசுரமானது ஆச்சர்யம்தான். ஒரு சில கதைகள் கவிதைகள், துணுக்குகள் அவ்வபோது இதழ்களில்  பிரசுரமானாலும் குறிப்பிடத் தக்கவையாக  அமைந்தது பாக்யாவில் வெளியான படைப்பும், தற்போது குமுதத்தில் வெளியாகி உள்ளது மட்டுமே.

   சினிமாவைப் பற்றி எழுதினால் மட்டுமே அதிக பார்வையாளர்கள் வருவார்கள் என்ற சூழலே இருக்கும் நிலையில் என்னால் ஒரு வருடம் கூட வலையில் தாக்குப் பிடிக்க முடியாது என்றே நினைத்தேன். திரட்டிகளின் சூட்சுமம் புரியாமல் திண்டாடினேன். (இன்னமும் புரியாமல்தான் இருக்கிறது) . எப்படிப்பட்ட பதிவுகள் எழுதுவது என்று ஆரம்பத்தில் குழப்பமாக இருந்தது. இணையத்தைப் பொறுத்தவரை ஒரே வகைப்  பதிவாக  தொடர்ந்து எழுதுவது என்பது என்னை போன்றவர்களுக்கு  ஒத்து வராத  ஒன்றாக இருப்பதை உணர்ந்தேன். எனவே கதை கட்டுரை, கவிதை,சமூகம்,  கணினி அனுபவங்கள்,எளிய அறிவியல் என்பதை என் தகுதிக்கேற்ற வகையில் பல்வகைப் பதிவுகளை  எழுதிவருகிறேன். சிறப்பாக எழுதுவதற்கு முயற்சியும்  செய்து வருகிறேன்.

   உண்மையில் பார்த்தால் வலைப் பதிவு எழுதுவதால் பொருளாதாரப் பயன்கள் ஏதுமில்லை என்பது அனைவரும் அறிந்ததே. பின் ஏன் எழுதிக் கொண்டிருக்கிறோம்.
  1.  நம்மிடம் இருக்கும் சின்ன எழுத்துத் திறமைக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது இணையம். கொஞ்சம் பேராவது நமது படைப்புகளை ரசிக்கிறார்கள். ஒரு அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. 
  2. பல நல்ல நட்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. 
  3. திறமையாளர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 
  4. உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் உள்ளவர்களும் நம்மை அறிந்து கொள்ள வாய்ப்பை அமைத்துக் கொடுத்திருக்கிறது
  5. நமது திறனை வளர்த்துக் கொள்ளும் மேடையாக வலைப்பூக்கள் அமைகின்றன. 
  6. உடனடியாக நமது படைப்பின் கருத்துக்களை அறிந்து கொள்ள முடிகிறது 
  7. எதிர்வினைகளை கையாள கற்றுக் கொடுக்கிறது 
  8. நம்மை புதுப்பித்துக்  கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது
  9. பலரையும் ஊக்கிவிக்க முடிகிறது
  10. நமது எண்ணங்களுக்கு ஒரு வடிகாலாக அமைகிறது.
  11. பத்திரிகையில் எழுதியது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது 
  12. பிரபல பத்திரிகைகளின் பார்வையில் படுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது 
  13. போட்டிகளில் கலந்து கொள்ளவும் வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கிறது.
   வலை உலகம் பல பாடங்களை கற்றுத்தரும் ஆசிரியராக இருக்கிறது. தொடக்கத்தில் எழுதியதற்கும் இப்போது எழுதுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடிகிறது.

  நாம் அறியாமல் நம்மை பிரபலங்கள் உட்பட பலரும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது என் அனுபவத்தின் மூலம் நான் உணர்ந்த பாடம்.   தொடர்ந்து வித்தியாசமாகவும் நல்ல முறையிலும்  எழுதி வந்தால் ஏதேனும் ஒரு வகையில் கவன ஈர்ப்பைப் பெற முடியும்   என்றே நம்புகிறேன். 
ஆதரவு அளித்து வரும் அத்துணை பேருக்கும் என் மனமார்ந்த நன்றி

*********************************************************************************

97 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் .
    மேலும் நிறைய எழுதி நல்ல பெயர் பெற்ற எழுத்தாளராக வர என் best wishes.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    முரளி(அண்ணா)

    குமுதத்தில் தங்களின் சிறுகதை வெளிவந்தமைக்கு எனது வாழ்த்துக்கள்.... அண்ணா....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள்! வலைப்பதிவு குறித்த தங்களது கருத்துக்களை அப்படியே வழிமொழிகிறேன்!
    த.ம - 1

    பதிலளிநீக்கு
  5. அய்யா மிக்க மகிழ்ச்சி. குமுதத்தில் உங்கள் கதையுடன் புகைப்படத்தையும் பார்த்து மகிழந்து, உங்களுடன் மட்டுமல்லாமல் நமது வலை நண்பர்களிடமும் தொலைபேசிக் குறுஞ்செய்தியில் பகிர்ந்துகொண்டு மகழ்ந்தேன். தொலைக்காட்சிப் புகழோடு திரைப் பக்கம்போய் புகழீட்டும் பட்டியல் இப்போது நீண்டு வருவது போல, வலைப்பக்கத்தில் எழுதிய புகழோடு அச்சிதழ்ப் பக்கமும் உங்கள் பெயர் பரவி இன்னும் நல்ல கருத்துகளை இன்னும் இன்னும் நல்லவிதமாகச் சொல்லி இன்னும் இன்னும் இன்னும் புகழ்மிக வேண்டுமென்று இதயபூர்மாக வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. ஏங்க குமுதத்துல கதை எழுதுறவரே! வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. முரளிஜி,

    //வவ்வால்ஜி 'அறியாதன அறிந்தேன் ' என்று கலாய்த்தல் கம்மென்ட் போடுவார் என்றாலும் இதனை (அவருடனும்) பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்ற முடிவுக்கு வந்தேன். //

    என்ன இப்படி சொல்லிட்டிங்க, உங்களுக்கு புடிக்கும்னு சொன்னதால் தானே "பாசிடிவ்" கமென்ட் போட்டோம்.!

    குமுதம் வார இதழில் படைப்பு வெளியானமைக்கு வாழ்த்துக்கள்!

    #// (ஒருவாரம் கழித்து கதையை வலையில் வெளியிடுகிறேன்.)//

    3 இன் 1 கதை என முன்னரே வெளியிட்டிங்களே அந்த கதை இல்லையா இது?

    ஒரு பெரியவர் லக்கேஜ் எடுத்து வரட்டுமா கேட்பார், ஒரு சிறுமி பசியோடு நிற்பதை பார்த்து , சாப்பிட வாங்கித்தரவா எனக்கேட்டதும் தாத்தா திட்டுவார் என்பதாக போகுமே.

    எட்டிப்பார்த்து படித்த குட்டிக்கதையில் வந்ததாக நினைவு, கர்சிப் கீழ விழுந்து விட்டது என சொல்லி தூங்கியவரைக்கூட எழுப்பி படிச்சிங்க :-))

    ஒரே போல நெறைய கதை எழுதுறிங்கனு நினைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான் .அதை தற்போது நிபந்தனைகளின்படி ரிவர்ட் டு டிராப்ட் செய்திருக்கிறேன்... இப்போதைக்கு அதை படிக்க இயலாது என்பதால் மீண்டும் பப்ளிஷ் செய்வேன் என்றே கூறி இருக்கிறேன். .அதில் "மீண்டும்" என்பது விடுபட்டுவிட்டது (காரணத்துடன்தான்)

      நீக்கு
    2. வவ்வால் ,
      நீங்கள் பாசிடிவே கமெண்ட் போடவேண்டும் என்று நான் சொன்னதில்லையே. . நீங்கள் அப்படிப் போட்டால் கலாய்ப்பது போல்தான் இருக்கும்.. பாசிடிவே கம்மென்ட் போடுபவர்களை ஒரேயடியாக குறை கூறத் தேவை இல்லை என்பது என் சொந்தக் கருத்து மட்டுமே.. அவரவர் விருப்பப் படி போடுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.. உங்கள் வழக்கமான பாணியையே பின்பற்றவும்

      நீக்கு
    3. உங்கள் கம்மென்ட் அதில் இல்லை என்பதால் நீங்கள்அதைப் படித்திருக்க மாட்டீர்கள் என்றல்லவா நினைத்தேன்..
      படித்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
    4. //ஒரே போல நெறைய கதை எழுதுறிங்கனு நினைக்கிறேன்!//
      எதை வைத்து சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. சொந்த கதைகள் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் எழுதி இருக்கிறேன்.
      மின்னல் வரிகளில் எம்.பி ஆகிறாள் சரிதா என்ற கதையை படித்தீர்களா.
      நேரம் இருந்தால் படித்துவிட்டு தங்கள் வழக்கமான பாணியில் கருத்திடவும்

      நீக்கு
    5. முரளிஜி,

      //நீங்கள் பாசிடிவே கமெண்ட் போடவேண்டும் என்று நான் சொன்னதில்லையே. .//

      தம்ப்பிர்ரீ பக்கத்து எலைக்கு பாயசம் ஊத்துனு கேட்டா,முதலில் அவங்க எலைக்கு பாயசம் ஊத்திட்டு தான் பக்கத்து எலைக்கே போவோம் , அந்த வழக்கம்லாம் உங்க ஊருல இல்லையோ அவ்வ்!

      #//உங்கள் கம்மென்ட் அதில் இல்லை என்பதால் நீங்கள்அதைப் படித்திருக்க மாட்டீர்கள் என்றல்லவா நினைத்தேன்..
      படித்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி//

      உங்களப்போல நானும் சைலண்டாகப்படிக்க கத்துக்கிட்டேன்ல :-))

      ஹி...ஹி அப்படினுலாம் இல்லை, அதுல எங்கே 3 கதை இருக்குனு கேட்டால் "என்னை ரசமட்டம்னு" சொல்லிடுவீங்களோனு தான் சத்தம் போடாமல் எட்டிப்படிச்ச கதைகள் லிஸ்ட்ல சேர்த்தாச்சு அவ்வ்!

      # //எதை வைத்து சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. சொந்த கதைகள் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் எழுதி இருக்கிறேன்.//

      நான் குமுதம் படிக்கவில்லை, உங்கப்பதிவில் இருக்கும் துவக்கத்தினை வைத்து தான் அந்தக்கதை தானே இது எனக்கேட்டேன், மேலும் யாருமே முன்னமே படிச்ச மாதிரிக்காட்டிக்கவேயில்லையா(எல்லாம் ரொம்ப நல்லவய்ங்களா இருக்காங்களே அவ்வ்), சரி ஒரே மாதிரி எழுதினக்கதையோனு கேட்டு வச்சேன்,ஏன் எனில் வார இதழ்கள் ஏற்கனவே ஏதேனும் ஒரு வகையில் வெளியானவற்றை வெளியிட மாட்டோம்னு கொள்கை வச்சிருப்பவர்கள் ,எனவே கொஞ்சம் கதைய மாத்தி அனுப்பியிருக்கலாம் என்பதால் "ஒரே மாதிரி"யான புனைவோனு சொன்னேன் ,மற்றபடி நீங்க வெரைட்டியா எழுதுவீங்கனு எனக்கு தெரியாதா?

      நாம எதாவது சொல்லிட்டா உடனே விளக்கம் கேட்டுடுறாங்கள்ளே அவ்வ்!

      மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்!

      நீக்கு
    6. நீங்கள் விரும்பினால் உங்கள் ஈமெயில் ID தரும்படி கேட்டுக் கொள்கிறேன். ஒரு மெயில் அனுப்ப விரும்புகிறேன்.

      நீக்கு
    7. முரளிஜி,

      //ஈமெயில் ID தரும்படி கேட்டுக் கொள்கிறேன். ஒரு மெயில் அனுப்ப விரும்புகிறேன்.//

      அண்ணாநகரில் ஒரு கிரவுண்டு என் பேருக்கு எழுதி வைக்கப்போறிங்களா அவ்வ்!

      # நீங்க எழுதுற பதிவை ஒருத்தன்/ஒருத்தி கூட படிக்கிறதேயில்லை போல , ஏன்னா யாருமே நீங்க ,முன்னரே வலைப்பதிவில எழுதின கதை தானே இதுனு சொல்லவேயில்லை, கூடவே இங்கே பின்னூட்டம் போட்ட எவனும் /எவளும் குமுதம் படிக்கிற பழக்கமே இல்லாதவனு/ளுங்க போல :-))

      தீபிகா படுகோன் அட்டைக்காகவே குமுதம் வாங்கினேனாக்கும் :-))

      நீக்கு
    8. //அண்ணாநகரில் ஒரு கிரவுண்டு என் பேருக்கு எழுதி வைக்கப்போறிங்களா அவ்வ்!//
      அடடா! எதற்கும் குதர்க்கம்தான் வவ்வால் என்பதை மறந்து விட்டு இமெயில் அட்ரஸ் கேட்டுவிட்டேன்.

      # நீங்க எழுதுற பதிவை ஒருத்தன்/ஒருத்தி கூட படிக்கிறதேயில்லை போல , ஏன்னா யாருமே நீங்க ,முன்னரே வலைப்பதிவில எழுதின கதை தானே இதுனு சொல்லவேயில்லை, கூடவே இங்கே பின்னூட்டம் போட்ட எவனும் /எவளும் குமுதம் படிக்கிற பழக்கமே இல்லாதவனு/ளுங்க போல :-))//

      யாரும் படிக்கலன்னணு நிரூபிக்க முயற்சி செய்யறதில் என்னா சந்தோஷம்! Enjoy!
      குமுதம் ஆசிரியர் படிச்சிருக்காரே அது போதும் சார்.

      இதை பத்தி இன்னும் விவரமாக சொல்லலாம்னு நினைச்சேன்.அதுக்காகத்தான் ஈமெயில் முகவரி கேட்டேன்.

      //தீபிகா படுகோன் அட்டைக்காகவே குமுதம் வாங்கினேனாக்கும் :-))//
      என் கதைய படிக்கறதுக்குதான் வாங்கிணீங்கன்னா சொல்லப் போறேன்?

      நீக்கு
    9. முரளிஜி,

      தமாஸ் செய்தால் சிரிக்கணும் சார், நீங்க எல்லாத்தையுமே குதர்க்கமா பார்த்தா எப்பூடி?

      #//யாரும் படிக்கலன்னணு நிரூபிக்க முயற்சி செய்யறதில் என்னா சந்தோஷம்! Enjoy!
      குமுதம் ஆசிரியர் படிச்சிருக்காரே அது போதும் சார். //

      மெனக்கெட்டு பதிவு போடுறிங்க அதுக்கு அப்புறம் என்ன தான் மருவாதி?

      நான் இந்த திங்கக்கிழமை தான் புத்தகம் வாங்கினேன், இன்னும் விக்காம ஒரு 10 புத்தகம் கிட்டே இருந்தது, இங்கே கருத்து சொன்னவங்க எல்லாம் சகப்பதிவரின் படைப்பு வந்திருக்கே என வாங்கிப்படிச்சிருந்தா இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமானு தான் சொன்னேன். எல்லாம் உங்க மேல இருக்க அக்கரை சார் அக்கரை!!!

      # //தீபிகா படுகோன் அட்டைக்காகவே குமுதம் வாங்கினேனாக்கும் :-))//
      என் கதைய படிக்கறதுக்குதான் வாங்கிணீங்கன்னா சொல்லப் போறேன்?//

      உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, நான் குமுதம் வாங்குவது மற்றும் வாசிப்பதில்லை என ஒரு கொள்கை முடிவெடுத்து சில ஆண்டுகள் ஆகிடுச்சு,அதுப்பற்றி 2011/12 இல் பதிவு கூட போட்டேன்.

      சரி உங்க படைப்பு வந்திருக்கேனு "கொள்கைய தளர்த்திக்கொண்டு "வாங்கினேன் :-))

      கடையில கேட்டப்போ ,புது குமுதம் இன்னும் வரலையேனு சொன்னார், பழைய குமுதம்னு சொன்னதும், ரெண்டு இஷ்யு காட்டினார், ஒரு வேளை உங்க படைப்பு எதுல வந்திருக்கும்னு டவுட்டாகிடுச்சு , சரி அட்டையில தீபிகா படம் போட்டிருப்பதையே வாங்குவோம் , கதையில்லைனா கூட கொஞ்ச நேரம் "படம் பார்க்கலாம்"னு வாங்கினேன் ஹி...ஹி!

      நீக்கு
  8. அனேகமாக அந்த கதை ஏற்கனவே எந்த ரூபத்திலும் வெளியாகி இருக்கக்கூடாது என்பது குமுதத்தின் நிபந்தனை ,சரியா ஜி ?
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் வலைப் பக்கம் குமுதம் ஆசிரியரின் பார்வையில் பட்டதன் விளைவே இந்தக் கதை வெளியீடு. அனுமதி பெற்று பின்னர் விரிவாகக் கூறுகிறேன்.. இதை குறிப்பிடலாமா கூடாதா என்ற ஐயம் இருந்ததாதல் பதிவில் இதைக் கூறவில்லை.

      நீக்கு
  9. வாழ்த்துக்கள் அண்ணா....
    தொடர்ந்து கலக்குங்க...

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துக்கள் முரளி! மேலும் மேலும் வளர்வதற்கும். வலைபதிவு பற்றிய விபரங்களும் நன்றே மிக்க மகிழ்ச்சி !

    பதிலளிநீக்கு

  11. வணக்கம்!

    என்ன செய்யப் போகிறாய்என்று
    ஈந்த எழுத்துக் கென்வாழ்த்து!
    சின்ன கதைதான் என்றாலும்
    சிறந்த தொடக்கம் தேனுட்டும்!
    சொன்ன சொற்கள் ஒவ்வொன்றும்
    சுடரும் வெண்மை முத்துக்கள்!
    இன்னும் புகழ்சூழ் படைப்புகளை
    டி.என். முரளி தரனே!..தா!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  12. வலைப்பதிவின் பயன்கள் குறித்த
    விரிவான விளக்கம் மனம் கவர்ந்தது
    சிறுகதை குமுதத்தில் வெளியானது மகிழ்வளித்தது
    சாதனைகள் தொடர நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ரமணி சார் / . தொடக்கத்தில் இருந்தே தங்களின் ஆதரவு எனக்கு கிடைத்து வருவதில் மிக்க மகிழ்ச்சியே

      நீக்கு
  13. குமுதம் மட்டுமல்ல எல்லாப் பத்திரிக்கைகளிலும் தாங்கள் நிறைய எழுதி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாத்யாரே...!

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முட்டா நைனாவுக்கு நன்றி . வலை உலகில் நான் அறிந்த அற்புத எழுத்தாற்றல் படைத்தவர்களில் நீங்களும் ஒருவர்.

      நீக்கு
  14. வாழ்த்துக்கள், முரளி!

    உங்கள் மகிழ்ச்சியை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, முரளி.

    வலைபதிவில் எழுதிய கதைகள், வலைபதிவர்களின் பாராட்டுதலை பின்னூட்டங்களில் பெறுவதைவிட, இதுபோல் வெகுஜன பத்திரிக்கையில் பிரசுரமாகும்போதுதான் தங்களைப்போல் இளம் எழுத்தாளர்களை மிகவும் ஊக்குவிக்கும். அப்படி ஊக்குவித்து மேலும் தரமானப் படைப்புகளை உங்களிடமிருந்து எங்களுக்குத் தர உதவும் என்பது என்னுடைய புரிதல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வருண். உண்மைதான் வருண் .குமுதம் போன்ற பத்திரிகைகளின் வீச்சு அதிகம்.நல்ல படைப்புகளை தர முயற்சி செய்வேன். வாழ்த்துக்கு நன்றி

      நீக்கு
  15. குமுதச் சிறுகதைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் முரளி. மென்மேலும் உயர வாழ்த்துகள். மின்னல் வரிகள் தளத்தில் உங்கள் படைப்பையும் மிக ரசித்தேன். வலையில் எழுதுவதன் பயன்களாக நீங்கள் குறிப்பிட்டிருப்பவற்றில் 1,2,6,7,9,10,11,13 ஆகியவை ஆமாம் போட வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  16. வாழ்த்துக்கள்... விரைவில் சந்திப்போம்...!

    பதிலளிநீக்கு
  17. வாழ்த்துக்கள் சார், இந்தக் கதையை குமுதத்துக்கு நீங்கள் அனுப்பினீர்களா அல்லது அவர்களே எடுத்துக்கொண்டார்களா?

    பதிமூணு பாயிண்டும் நச்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைத்தான் இல மறை காயாக //நாம் அறியாமல் நம்மை பிரபலங்கள் உட்பட பலரும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது என் அனுபவத்தின் மூலம் நான் உணர்ந்த பாடம்//. என்று குறிப்பிட்டிருக்கிறேன்.அதை சொல்லலாமா கூடாதா என்ற தயக்கத்தில் இருந்தேன்.

      நீக்கு
  18. எழுத்துலகில் மேலும் பல உச்சங்களைத் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துகள் முரளிதரன்..

    பதிலளிநீக்கு
  20. முரளிக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    புதன் கிழமையே குமுதத்தில் படித்து மகிழ்ந்தேன்.

    புதிய கதை சொல்லும் உத்தியும், நெஞ்சைக் கனக்க வைக்கும் சோகம் இரு கதைகளிலுமே [தனித்தனியே படித்தாலும்] இடம் பெற்றிருப்பதும் குமுதம் தங்கள் கதையை விரும்பி வெளியிடுவதற்கான முக்கிய காரணங்கள் என்று நினைக்கிறேன்.

    ஒரு பிரபல வார இதழ் தங்களைக் கௌரவித்திருக்கிறது.

    இதே இதழ் அடுத்து நீங்கள் அனுப்பும் படைப்பை நிராகரிக்கவும் செய்யலாம். துவண்டுவிடாமல் தொடர்ந்து எழுதுங்கள். சாதிப்பீர்கள்.

    வாழ்த்துகள் முரளி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பக்கக் கதை மற்றும் சிறு கதைகளின் மன்னர் தாங்கள்.தங்களின் வாழ்த்துக்கு மிக்க ந்ன்றி ஐயா. தங்கள் ஆலோசனையை கவனத்தில் கொள்வேன்.

      நீக்கு
  21. குமுதம் இதழில் உங்கள் கதை வெளியானதற்கு பாராட்டுகள், முரளி. மேலும் மேலும் எழுத்துலகில் சாதிக்க மனமார்ந்த வாழ்த்துகள்.
    வலைபதிவு செய்வதன் பலன்கள் எல்லாமே சரி.

    பதிலளிநீக்கு
  22. வாழ்த்துக்கள் முரளி.
    நானும் உங்களின் silent ஆதரவாளன் தான்.

    பதிலளிநீக்கு
  23. முன்னூறு கதை எழுதிய பின்புதான் பிரபல வாரப் பத்திரிகையில் ஒரு கதை பிரசுரமாகும் சாத்தியம் உள்ள நிலையில், எழுதிய உடனேயே நூறு பேராவது படித்து, கருத்து சொல்லும் சாதனமாக வலைப்பூ உள்ளது மகிழ்ச்சிக்குரியது. மேலும், நமது எழுத்துத்திறமையைக் கூர்மைப்படுத்திக்கொள்ளவும் இதுவே நிச்சயமான கருவி. தங்கள் படைப்புகள் அகன்று பரவ வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  24. குமுதத்தில் தங்களின் சிறுகதை வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்...பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  25. வாழ்த்துகள் முரளி சார். நானும் இதுபோல பல முறை எழுதி சலித்திருக்கிறேன். அஞ்சு ரூபாய் ஸ்டாம்ப் பா ஒட்டி நொந்து போய் தான் கஸ்தூரி (என் கணவர்) நீ ஏன் ப்ளாக் ல எழுதக்கூடாது என்று ஐடியா கொடுத்தார். குமுதம் வளரும் படைப்பாளிகளை சிறப்பாக ஊக்குவிக்கிறது! எனது கவிதை கூட முதலில்குமுதத்தில் தான் வந்தது. தங்களுக்கு மென்மேலும் சிறப்பு சேர வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  26. குமுதம் வார இதழில் படைப்பு வெளியானமைக்கு, பற்பல சிறப்புகள் பெறவும், வாழ்த்துக்கள்! :)

    பதிலளிநீக்கு
  27. வாழ்த்துக்கள் நண்பரே! மேலும் பல கதைகள் இதழ்களில் தொடர்ந்து வெளிவர வாழ்த்துக்கள்! வலையில் எழுதுவதால் பொருளாதார நன்மைகள் இல்லைதான். ஆனாலும் பலதரப்பட்ட நண்பர்களும், நமது எழுத்துக்கு கூடுதலான வாசகர்களும் பார்வையும் கிடைப்பது ஒரு திருப்தி அடைய வைக்கிறது. வலையில் எழுதி பழகி வருகிறோம்! இன்னும் சொல்லப்போனால் வலை என்பது எல்லோராலும் படிக்க கூடிய நமது டைரி! என்றும் வைத்துக்கொள்ளலாம்! குமுதத்தில் இன்னும் படிக்க வில்லை! வாங்கி படிக்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  28. குமுதத்தில் தங்களின் சிறுகதை வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்...பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  29. சில பத்திரிக்கைகள் இரண்டு மூன்று இதழ்களுக்குப்பிறகே வெளியாகும் என்று படைப்பாளிக்கு முன்பே தகவல் தரும் என்று நினைத்திருந்தேன். அப்படி இருக்கும்போது உங்கள் படைப்பு வெளியாகி இருப்பதே பிறர் சொல்லக் கேட்டுதான் என்பது ஆச்சரிய மளிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னதுபோலவே மூன்று வாரங்களுக்குப் பிறகு வெளியாகும் என்று சொல்லப்பட்டது உண்மைதான். ஆனால் இரண்டு வாரங்கள்தான் ஆகியுள்ளன, வழக்கமாக குமுதம் புதன் அன்று வெளிவரும் . ஆனால் இந்த வாரம் செவ்வாய் அன்றே வெளிவந்துவிட்டது . மேலும் அலுவலக வேலை காரணமாக இந்த விஷயம் கொஞ்சம் மறந்தும் விட்டது. மேலும் தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும் என்பதால் வெளிவர தாமதமாகும் என்றே நினைத்திருந்ததால் அதில் கவனம் செலுத்த வில்லை

      நீக்கு
  30. மனம் நிறைந்த வாழ்த்துகள் திரு.முரளிதரன். மேன் மேலும் வளர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  31. வாழ்த்துக்கள்! நண்பரே! தங்கள் கதைகள் இன்னும் பல வெளியாக வேண்டும் என்றும் வாழ்த்துகின்றோம்! நாங்களும் பல எழுதி அனுப்பி அதுவும் பல வருடங்களுக்கு முன்....பல எழுதி பல பத்திரிகைகளுக்கு அனுப்பி நொந்து அதை எல்லாம் பரணில் போட்டு இதோ இப்போது மெதுவாக எடுத்து தூசி தட்டி வலைப்பூவில் எழுத முயற்சி செய் கிறோம்! இங்கு பலர் வாசித்து கருத்து சொல்வது மிகவும் மகிழ்சியாகவும், நம்மை வளர உதவும் ஒரு தளமாகவும் வலைப்பூ அமந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதே! நமது எழுத்தை வளப்படுத்தவும் உதவுகிறது என்பதே மிகவும் ஒருசிறப்பான விஷயம்தானே!

    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே! தங்கள் கதை வெளியானதற்கு! மீண்டும் வாழ்த்துகிறோம்!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  32. மனம் நிறைந்த வாழ்த்து திரு.முரளி!. மேன் மேலும் வளர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  33. குமுதம் இதழில் உங்கள் கதை வெளியானதற்கு பாராட்டுகள் , வாழ்த்துக்கள் முரளிதரன்.

    பதிலளிநீக்கு
  34. தங்களின் பட்டியலில் “எதிர்வினைகளை கையாள கற்றுக் கொடுக்கிறது “ என்னும் கருத்து மிகவும் முக்கியமாகப் படுகிறது... நம்மை நாமே மாற்றிக்கொள்ள... சரியான கருத்து. நல்ல பரிசீலனை அ்யயா. தொடர்ந்து எழுதிட வேண்டுகிறேன். நன்றி

    பதிலளிநீக்கு
  35. குமுதத்தில் நீங்கள் எழுதிய கதை வெளியானதற்கு வாழ்த்துகள் முரளிதரன். மேலும் பல சிறப்புகள் உங்களை வந்தடையட்டும்...

    பதிலளிநீக்கு
  36. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மூங்கில் காற்று.

    பதிலளிநீக்கு
  37. குமுதத்தில் தங்களின் படைப்பு வெளியானமைக்கு வாழ்த்துக்கள். இங்கு எழுதுவது குறித்து நீங்கள் கூறியவை அனைத்தும் உண்மைதான். நம் எழுத்துக்களை சீர்படுத்திக் கொள்ளவும் பல்வேறு எழுத்துக்களைப் படிக்கவும் வாய்ப்பாய் அமைகிறது...

    பதிலளிநீக்கு
  38. வாழ்த்துக்கள் சார். நான் குமுதம் வாங்கி பார்த்த போது தான் நீங்கள் எழுதியிருப்பதை கண்டேன். சந்தோசமாக இருந்தது. கதையும் நன்றாக இருந்தது நீங்கள் மேன் மேலும் உயர உற்ற நண்பனாய் வாழ்த்துகிறேன் சார்

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895