என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Tuesday, April 8, 2014

நிறம் வெளுத்துப் போகும் நிஜம்பதிவுலகைப் பற்றி நிறைய கட்டுரைகள் வந்திருக்கின்றன. கவிதையாக எழுதினால் என்ன?அதுவும் குறள் வடிவத்தில் எழுதினால் என்ன?  என்று தோன்றியதன் விளைவே  இந்தப் பதிவு.  எப்போதும் போல் சகித்துக் கொள்ளவும். ஹிஹிஹி 


  1.    கூகுள் வழங்கும்  வசதிகள்- செந்தமிழில்
        வாகாய் பதிவுகள் செய் 

  2.     கற்க  கணினி கசடற- கற்றுப் 
        பதிக தமிழில் பதிவு  


  3.     தொடங்கல் எளிதாம் வலைப்பூ- அரிதாம்
        தொடர்ந்து பதிவு இடல்

  4.     முன்னோட்டம் பார்த்துப் பதிவிடு உன்பதிவை
        பின்னூட்டம் பார்த்துத் திருத்து.
         
  5.     சிலைக்கழகு சேர்க்கும் சிறுநுட்பம் உந்தன்
        வலைக்கழகு சேர்க்கும் வடிவம்

  6.     தரவரிசை ஏற்றுதற்கு தாழ்தல் வேண்டாம்
        நிறம்வெளுத்துப் போகும் நிஜம்

  7.     பிறர்பதி வைகவர்தல் நன்றன்று சிந்திப்பாய்
        உன்பதி வும்களவு போம்

   8.          வயலில் விதைப்பார் விதைகள்       அதுபோல் 
               வலையில் விதைப்பாய் பதிவு 

   9.          எல்லை இலையே எழுதவா!       பதிவுலகம் 
                நல்ல பயிற்சிக் களம்   

  10.    கதவு திறந்து அழைக்கும் இணையம் 
         பதிவு பயனுறச் செய். 

**************படித்து விட்டீர்களா?
48 comments:

 1. ஹா...ஹா...ஹா... எல்லாமே ரசிக்கும்படி உள்ளன.

  ReplyDelete
 2. வலைக் குறளை ரசித்தேன் !
  த ம 1

  ReplyDelete
 3. அட...! அசத்துங்க ஆசிரியரே...!

  ReplyDelete
 4. முரளி,

  அறியாத தகவல்களை பதிவாக்கி அறிய தந்தமைக்கு நன்றீ!

  த.ம.2014!

  ReplyDelete
  Replies
  1. வவ்வாலுக்கு தெரியாத தகவல்களை தந்ததில் மிக்க மகிழ்ச்சி .இப்படி இன்னும் நிறைய சொல்வேன் .ஹிஹி

   Delete
 5. பதிவுகள் பற்றிப் பதிவு சிறப்பே!
  அதிலும் குறட்பா அழகு!

  அருமை முரளி, அதில்ஒன்றே ஒன்று
  பெருமைக் குறைவாய் பிழை!

  “சிலைக்கழகு சேர்க்கும் சிறுநுட்பம் உந்தன்
  வலைக்கழகு சேர்க்கும் வடிவம்“

  ஈற்றசை மட்டும் இடிக்கிறதே அச்சீர்க்கு,
  மாற்றசை தந்தால் மகி்ழ்வு

  இனியேதும் சொற்பிழை இல்லை, முரளி!
  கணினியம்மன் செய்திடுவாள் காப்பு!

  ReplyDelete
  Replies
  1. template என்பதற்கு வேறு பொருத்தமான வார்த்தை எனக்கு தோன்றவில்லை. இன்றைக்குள் மாற்றி விடுகிறேன். இல்லையெனில் குறளையே மாற்றி விடுகிறேன்.

   Delete
  2. வடிவு என்ற சொல்லை பயன்படுத்தினால் பொருந்துமா. சரியா என்பதை தெரிவிக்கவும் ஐயா!

   Delete
  3. பிழையை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஐயா!

   Delete
  4. வடிவு சரியாகவே இருக்கும் என்று தோன்றுகிறது முரளி அய்யா.
   வடிவு என்பது முற்றியலுகரம் அதைக் குறட்பாவின் ஈற்றசையாக்க இயலாது எனினும், “கண்ணாரக் காணக் கதவு“ எனப் பழந்தமிழ்ப் பாவில் பயன்படுத்தி இருக்கிறார்கள் ( பூட்டுவில் பொருள்கோள் உதாரணப் பாட்டாகப் பள்ளியில் படித்த நினைவிருக்கிறதா?) தங்களின் வெளிப்படை கலந்த பெருந்தன்மைக்கு என் வணக்கமும், நன்றியும் அய்யா.

   Delete
 6. நல்ல முயற்சி! (நிலவன் அண்ணா! இப்போ சந்தோசமா இருக்குமே?)
  எனக்கு நாலாவது குறள் ரொம்ப பிடிச்சிருந்தது!

  ReplyDelete
  Replies
  1. ஏன் நாலாவது குறள் பிடிச்சதுன்னு தெரிஞ்சு போச்சு. அதன் படியே நன் நடந்து கொள்கிறேன்.

   Delete
  2. நானும் இப்படி திருத்துபவள் தான். அது எனக்கு எழுதியது போல இருந்தது சொல்லவந்தேன்! உள்க்குத்தெல்லாம் இல்லை பாஸ்!

   Delete
 7. நல்லா இருக்குங்க முரளிதரன்....அதிலும்
  எல்லை இலையே எழுதவா பதிவுலகம்
  நல்ல பயிற்சிக் களம்

  அருமையான குறள்...

  ReplyDelete
 8. மூங்கில்காற்று : நிறம் வெளுத்துப் போகும் நிஜம்
  http://yppubs.blogspot.com/2014/04/blog-post.html
  என்றவாறு எனது தளத்தில்
  தங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன்.

  ReplyDelete
 9. அருமையான வலைக்குறள்கள்! இலக்கணமுடன் எழுதியது இன்னும் மிகச்சிறப்பு! தொடருங்கள்! நன்றி!

  ReplyDelete
 10. ஆஹா வலையுலக வள்ளுவரே குறள் சூப்பர் திருவள்ளுவர் இருந்தால் என்ன சொல்வார் தன் வாரிசு என்று மகிழ்ந்திருப்பரோ!
  தொடர வாழ்த்துக்கள் ...!
  என் வலைதளப்பக்கம் வாருங்கள் புதிய முயற்சி அங்கும் உண்டு.

  ReplyDelete
 11. எனக்கு மூன்றாவது குறள் பிடித்திருக்கிறது. ஏழாவது குறள் எல்லோருடைய அனுபவத்தையும் சொல்லுகிறது.
  அருமையான முயற்சி. தொடருங்கள். 1330 குறள்கள் வரட்டும்! வாழ்த்துகள்!

  ReplyDelete
 12. கற்க கணினி கசடற- அது தேவையா
  வலையில் பதிவெழுத.?

  ReplyDelete
 13. நல்ல முயற்சி. பாராட்டுகள் முரளிதரன்.

  ReplyDelete
 14. அருமையான முயற்சி.பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 15. அருமையான முயற்சி.பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 16. //3. தொடங்கல் எளிதாம் வலைப்பூ- அரிதாம்
  தொடர்ந்து பதிவு இடல்

  4. முன்னோட்டம் பார்த்துப் பதிவிடு உன்பதிவை
  பின்னூட்டம் பார்த்துத் திருத்து.//

  மிகவும் ரஸித்தேன்.

  ReplyDelete
 17. அருமை...
  அருமை ஐயா...

  ReplyDelete

 18. வணக்கம்!

  கணினியை எண்ணிக் கவிபடைத்தீர்! மின்னும்
  அணியினை அள்ளி அளித்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 19. நல்லதொரு முயற்சி! திருவள்ளுவரே இருந்திருந்தால் கூட உங்களை வாழ்த்தி மெச்சியிருப்பார்! ஐயோ என்ன இது எனக்குப் போட்டியாக நிறைய பேர் கிளம்பியிருக்காய்ங்களோ என்று கூட நினைத்திருக்கலாம்!

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 20. ஹா ஹா... அண்ணா எல்லாமே சூப்பரு...

  ReplyDelete
 21. மூங்கில் காற்றாக நவீன குறளிசை !!

  ReplyDelete
 22. அட.... அசத்திட்டீங்க போங்க. எல்லா [நவீன] குறளும் அருமை. இன்று முதல் இளைய வள்ளுவர் என்று எல்லோராலும் அழைக்கப்படுவீராக. நா.முத்துநிலவனின் கருத்து அருமை. 2, 3, 4, 6 ஆகிய குறள்கள் அருமை. என் தளத்தில்: கந்தசாமியும் சுந்தரமும் - 02

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895