என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Monday, April 28, 2014

தேர்தல் கமிஷனுக்கு சபாஷ்+வாக்கு சதவீதம் குறைவு ஏன்?இந்தப் பதிவுக்கு முன்னால் இரண்டு சின்ன கேள்விகள்
1)  ஒருவேட்பாளருக்கு தேர்தலில் எவ்வளவு ஒட்டு கிடைத்தால் செலுத்திய டெப்பாசிட் தொகை திரும்பக் கிடைக்கும்.
2) ஒரு தொகுதியில் போட்டியிட்ட அதிக வேட்பாளர் எண்ணிக்கை என்ன/
விடை கடைசியில்
**************************************************************************************************************
    
       தமிழகத்தில் தேர்தல் முடிந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. அடுத்த கட்ட தேர்தல்கள் இருப்பதால் முடிவு தெரிந்து கொள்ள காத்திருக்க வேண்டி இருக்கிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல் நடத்தி முடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை.
   தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை முதன் முதலாக அறியச் செய்தவர் டி.என்.சேஷன் என்று கூறலாம். ஆனால் அவரும் பணியில் இருந்து  ஓய்வுபெற்ற பின் பின்னர் ஒரு கட்சியில் சேர்ந்து தன் நடுநிலையை கேள்விக் குறி ஆக்கிவிட்டார். பொதுவாக தேர்தல் கமிஷன் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் என்ற கருத்து எப்போதும் உண்டு. ஏனெனில் தேர்தல் பணிக்கு பயன்பபடுத்தப்படும் உயர் நிலை அலுவலர்கள் ஊழியர்கள் பணியாளர்கள் அனைவரும் அரசுப் பணியாளர்களே என்பதால் சந்தேகக் கண் கொண்டே பார்க்கப் படுகிறது.

   முன்பெல்லாம்  விளம்பரம், பிரச்சாரம் , ஏகப்பட்ட பணம் செலவுசெய்தல் போன்றவற்றிக்கு கடுமையான கட்டுப் பாடுகள் இல்லை. தேர்தல் காலம் வந்துவிட்டாலே வீட்டு சுவர்களில்  உரிமையாளரின்  அனுமதி கேட்காமல் விளம்பரங்கள் செய்து சுவரை பாழடித்து விடுவார்கள். இதில் எந்தக் கட்சிகளும் விதி விலக்கல்ல. வேட்பாளர் தேர்வுக்கு முன்னதாகவே ஒவ்வொரு கட்சியும் சுவரை வெள்ளை அடித்து ரிசர்வ்  செய்து விடும். இதில் அவர்களுக்குள் தகராறு வேறு நடக்கும். ஆனால் சமீப தேர்தல்களில் விளம்பரங்கள் ஏதுமில்லை. கொடி தோரணங்கள் அதிகம் காணப்படவில்லை. ஒலி பெருக்கிகள் காதை கிழிக்கவில்லை. இவையெல்லாம் செலவு கணக்கில் சேர்ந்து விடும் என்பதால் ஓரளவிற்கு அடக்கியே வாசித்தனர்.

  அதற்கு முன்னர்தேர்தல் நடைபெறம் சமயங்களில் மட்டுமே வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படும் நரேஷ்குப்தா தேர்தல் ஆணையாளராக இருந்த காலத்தில்  வாக்காளர் பட்டியல் சேர்க்கையை  ஆண்டு முழுவதும் முடுக்கிவிட்டார். அரசு தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை BLO  என்று அழைக்கப் படும் BOOTH LEVEL OFFICERS களாக நிரந்தரமாக நிர்ணயம் செய்து இவர்கள் மூலமாக  ஆண்டுக்கு மூன்று முறைக்கு மேல் வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கம், திருத்தம் இவை செய்யப்பட்டன. ஆசிரியரால் ஆசிரியப் பணியை விட இந்தப் பணியையே பள்ளியில் செய்ய வேண்டி இருந்தது. இப்போதும் இந்நிலைதான் உள்ளது.    கல்வி உரிமை சட்டத்தில்  ஆசிரியருக்கு வேறு பணிகள் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு தேர்தல் பணியும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியும் விதி விலக்குகள். ஆனால் அதிகப்படியான பணி தேர்தல் பணிமட்டுமே. 

  கிராமப் புறங்களில் இப்பணி எளிதானது   ஆனால் நகர்ப் பகுதிகளில் குறிப்பாக சென்னை புறநகர்ப் பகுதிகளில் இப்பணி கடினமானது. நிறையப் பேர் வாடகைதாரர்கள் என்பதால் அடிக்கடி வீடு மாறி சென்று விடுவார்கள். குடிபெயர்ந்து செல்லும் ஒருவர் இங்கு வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துவிட்டு   வேறு ஒரு இடத்திற்கு இடம் மாறி விடுவார். அவர் அங்கும் போய் விண்ணப்பித்து விடுவார். அவர்கள் பெயர் இரண்டு பட்டியல்களிலும் இடம் பெற்றிருக்கும். சேர்க்கைக்கு விண்ணப்பிப்பார்களே தவிர நீக்குதலுக்கு இதுவரை விண்ணப்பித்ததை நான் பார்த்ததில்லை. மிகச் சிலர் செய்யக் கூடும்.
  நிறையப் பேரின் பெயர்கள் இடம்பெறாமைக்குக் காரணம் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியும் ஒரு காரணம் இந்தத் தேதியில் பட்டியலை அறிவித்து  விடுவோம் என்று சொல்லி விடுவார்கள். ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்த நிலையில் ஊழியர் பற்றாக்குறை ( இதற்கென தனி ஊழியர்கள் இல்லை. ஆசிரியர்களும், வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களும் அவர்கள் பணிகளையும் செய்து கொண்டு இதையும் செய்ய வேண்டி இருக்கிறது) காரணமாக அவசர அவசரமாக பரிசீலனை செய்து பட்டியலை வெளியிட்டு விடுவார்கள்.
நகர்ப் பகுதிகளில் சொந்த வீடு வைத்திருப்போரும் தங்கள் சொந்த ஊரிலும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பார்கள். 
சென்னையில் வாக்களிப்பு சதவீதம் குறைவு என்று கூறப்படுவதற்கு மேற் சொன்ன காரணங்கள் முக்கியமானவை. என்னை பொறுத்தவரை வாக்களிக்காதவர் சதவீதம் 10 க்குள்தான் இருக்கும் என்பது என் கருத்து.இதில் அரசு ஊழியர்கள் பெரும்பாலும் நடைமுறை சிக்கல் காரணமாக  வாக்களிப்பதில்லை 

   மேலும் உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்களிப்போர் எண்ணிக்கை எப்போதும் அதிகமாக இருக்கும். போட்டியிடுவோர் அனைத்து வாக்காளர்களையும் சந்தித்து வாக்கு சாவடிக்கு வரவழைத்து விடுவர்.
சட்டமன்றத் தேர்தலில் வாக்கு சதவீதம் இதை விட சற்று குறைவாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலில்தான் வாக்கு சதவீதம் மிகக் குறைவாக இருக்கும். அந்தந்தக் கட்சியைத் சேர்ந்தவர்கள் கூட முந்தைய மற்ற தேர்தலில்  காட்டிய ஆர்வத்தை காட்ட மாட்டார்கள்.
முன்பெல்லாம் பூத் ஸ்லிப்புகளை கட்சிக்காரர்கள்தான் வழங்குவார்கள் இப்போது BLO க்கள் மூலம் சில நாட்களுக்கு முன்னதாகவே வீட்டுக்கே வந்து சேர்ந்துவிட்டது. புதிதாக சேர்ந்தவர்களுக்கு பெயர் சேர்க்கப் பட்டது என்ற கடிதமும் அனுப்பபிய தேர்தல் கமிஷனின் சுறுசுறுப்பு ஆச்சர்யமாக இருந்தது. இணையத்தின் மூலம் வேட்பாளர் பெயர்களை சரிபார்த்துக் கொள்ளச்செய்தது, SMS மூலம்வாக்குச்சாவடிகளை எளிதாக அடையாளம்காண வசதி ஏற்படுத்திக் கொடுத்தது போன்றவை தேர்தல் கமிஷனுக்கு சபாஷ் போட வைத்தது.

   வேட்பாளர்களின் செலவுத் தொகை அலுவலர்களால்  கண்காணிக்கப் படுகிறது. இவ்வளவு கெடுபிடிகளையும் ஏமாற்றி பலவித விதி மீறல்களை அனைத்துக் கட்சிகளுமே செய்து வருகின்றன. எவ்வித சீர்த்திருத்தங்களாக இருந்தாலும் மக்கள் ஒத்துழைப்பின்றி  செயல்படுத்த முடியாது 

   திருவிழா முடிந்து விட்டது. திருவிழாவில் காணாமல் போகப் போகிறார்கள் யார்? தோற்பவர் மட்டும்தானா? ஜெயிப்பவர்களும்தான் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொகுதி பக்கம் எங்கே தலை காட்டப்போகிறார்கள்?

*****************************************************

அதிக பட்ச ஜனநாயகக் கடமைகளை ஆற்றிய தொகுதிகளை அறிந்து கொள்ள கீழுள்ள  இணைப்பை கிளிக் செய்யுங்கள் 

*****************************************************************************************************************
முதலில் கேட்ட கேள்விகளுக்கு விடை
 1.  பதிவான வோட்டுகளில் 6 இல் 1 பங்கு ஓட்டுக்கள் பெற்றால் செலுத்திய  டெப்பாசிட் திரும்பக் கிடைக்கும்.
 2.  1996 இல் நடை பெற்ற தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிகமில்லை ஜென்டில்மென் 1033 பேர்தான்.
****************************************
31 comments:

 1. முன்பை விட இந்த தேர்தல் எவ்வளவோ எவ்வளவோ பரவாயில்லை...

  1033 பேர்... யம்மாடி....!

  ReplyDelete
  Replies
  1. நல்ல மாற்றங்கள் மெதுவாகத் தான் நடக்கும் நன்றி

   Delete
 2. நீதித் துறையே அரசின் கையில் அலங்கோலப் படுகிறது ,தேர்தல் கமிசன் என்ன செய்யும் ?
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. தேர்தளுக்குப்பின்பழிவாங்க வாங்க வாய்ப்பு இருப்பதால் நடு நிலையுடன் நடந்து கொள்ள அஞ்சுகிறார்கள்

   Delete
 3. அருமையான அலசல்
  இரண்டாவது தகவல் ஆச்சரியமளித்தது
  பதிவிற்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. வணக்கம்
  அண்ணா
  தகவல் அசத்தல் ......
  அம்மாடி...... 1033 நம்மட ஊரில் 2கிராமத்தை சேர்ந்த சனத்தொகை போல உள்ளது எண்ணிக்கை.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. //SMS மூலம்வாக்குச்சாவடிகளை எளிதாக அடையாளம்காண வசதி ஏற்படுத்திக் கொடுத்தது போன்றவை தேர்தல் கமிஷனுக்கு சபாஷ் போட வைத்தது.// எலெக்சன் தினத்தில அந்த வசதி சரியா இயங்கவில்லை என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஒரே நாள்ல எல்லாரும் அக்செஸ் பண்ணா எப்படி ஒர்க் பண்ணும். ஒரு வாரம் முன்னடியே நீங்கள் அனுப்பி விவரத்தை தெரிந்து கொண்டிருக்கலாம்.
   அதை என் பதிவில் கூட எழுதி இருந்தேன்.

   Delete
 6. மும்பைல 2 லட்சம் வாக்காளர்கள் பெயர் இல்லை தேர்தல் ஆணையம் மன்னிப்பு கேட்டதாகவும் ஒரு செய்தி படித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நான் எழுதி இருப்பது தமிழக தேர்தல் கமிஷணின் செயல்பாடுகளின் அடிப்படையில்.

   Delete
 7. டெபாசிட் மற்று 1033 தகவல் இப்பதான் அறிந்துக்கொண்டேன்.

  ReplyDelete
 8. தமிழக தேர்தல் அதிகாரியின் செயல்பாடு திருப்தியில்லை! தேவையற்ற 144 தடை உத்தரவு! பணப் பட்டுவடா செய்யவே பயன்பட்டது!

  ReplyDelete
 9. இந்தமுறை தேர்தலில் ஒரு 'பெப்' பே இல்லை! தேர்தல் நடந்ததா என்று கேட்குமளவு இருந்தது. :)))

  ReplyDelete
  Replies
  1. இப்படிச் சொல்ற அளவுக்கு அரசியல் கட்சிகள் அடிக்கிற கூத்துக்கு நாம பழகிட்டோம் இல்ல ஸ்ரீ..?

   Delete
  2. :)))))))))))))))))))))))))))))))))))))))))

   Delete
 10. தேர்தலில் கணக்கு வழக்கு என்று ஏதோ சப்பை கட்டுகிறார்கள். மோடியின் வேட்புமனு தாக்கலுக்கு ஊர்வலமாகச் சென்றவர்கள் அனைவரும் அனுதாபிகளாய் இருக்க முடியாதுவேட்பு மனு தாக்கல் செய்யவே ஆறு கோடி ரூபாய் செலவாயிற்று என்று கேள்வி. இவருக்காகச் செலவு செய்தவர்கள் ஃபிலாந்திராஃபிஸ்டுகள் கிடையாது. பிசினெஸ் புள்ளிகள். போட்ட பணம் பெற என்னவும் செய்வார்கள். இதைக் கட்டுக்குள் கொண்டுவர தேர்தல்கமிஷன் என்ன செய்ய முடியும். தேர்தல் விஷயத்தில் இன்னும் எவ்வளவோ முன்னேற்றங்கள் வரவேண்டும்

  ReplyDelete
 11. விரிவான அலசல்! முன்பை விட இப்போது தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் சிறப்பாகத்தான் இருக்கின்றன. என்னதான் சாக்கு சொன்னாலும் கிராமத்து மக்களுக்கு இருக்கும் தேர்தல் ஆர்வம் வாக்களிக்கும் ஆர்வம் நகர மக்களுக்கு இல்லை என்பதே என் கருத்து. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 12. நல்ல தகவல்கள்.....

  தேர்தல் இப்போதெல்லாம் ஏதோ நடக்கிறது என்று சொல்லும் அளவிற்குத் தான்... தமிழகத்தில் இருக்கும் அளவிற்கு கூட தில்லியில் தேர்தல் நேர பரபரப்பு இருப்பதில்லை....

  ReplyDelete
 13. வலையுலகில் இளைய பிதாமகராக வந்து தகவல்களை அள்ளித்தரும் முரளிதரனுக்கு பாராட்டுக்கள்

  ReplyDelete
 14. வாக்குப் பதிவு சதவிகிதம் ஒன்றும் குறைவல்ல ஐயா. அதிகம்தான்.
  தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விளம்பரங்கள் செய்கிறார்களே தவிர, தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் வாக்களிக்க போதிய ஏற்பாடுகளைச் செய்ய மறுக்கிறார்கள். காரணம் புரிய வில்லை ஐயா.
  கடந்த பத்து ஆண்டுகளாக நான் ஓட்டுப் போட்டதே இல்லை ஐயா.
  தேர்தல் பணிக்குச் செல்வதால் ஓட்டுப் போடவே முடிவதில்லை.
  எத்தனை முறை விண்ணப்பங்களை நிரப்பிக் கொடுத்தாலும், அஞ்சல் வாக்குச் சீட்டோ, தேர்தல் பணிச் சான்றிதழோ கிடைப்பதே இல்லை.
  இத் தேர்தலில் வாக்குச் சாவடி முதன்மை அலுவலராகப் பணியாற்றினேன். நாள் முழுதும் வாக்குச் சாவடிக்கு உள்ளேயே இருந்தும், என்னால் ஓட்டுப் போட முடியவில்லை.

  ReplyDelete
 15. \\அதிகமில்லை ஜென்டில்மென் 1033 பேர்தான்.\\அத்தனை பேருக்கும் சின்னம் என்னென்னவெல்லாம் குடுத்திருப்பாங்க [பள்ளி, ஈ,கொசு இதெல்லாம் கூட இருந்திருக்கலாம்!!], வாக்கு சீட்டு எவ்வளவு பெரிசா இருந்திருக்கும்??!! தலை சுத்துது.........

  ReplyDelete
 16. மொடக்குறிச்சியில் அதிருப்தியில் இருந்த விவசாயிகள் ஒன்றுசேர்ந்து அரசுமற்றும் மக்கள் கவனத்தைக் கவரச் செய்த வேலை அது..அப்ப பரபரப்பா பேசப்பட்டதோடு சரி. இந்த மக்களவைத் தேர்தலில் அண்ணன் மோடி போட்டியிடும் வாரணாசியில் யாரும் வாபஸ் வாங்காவிட்டால் அதிகவேட்பாளர் பதிவில் இடம்பெறும் எண்ணிக்கை 96! அதனால் வாக்குப்பெட்டிதான் வைக்கமுடியுமாம் (60பேருக்குமேல் வாக்குப்பதிவு எந்திரம் ஏற்காதாமே!) தங்கள் பதிவு அரிய பல தகவல்களைத் தந்தது. இந்த முறை பெரும்பாலான தொகுதிகளில் 5முனைப் போட்டி என்பதால் நீங்கள் சொன்னபடி நாடாளுமன்றத் தேர்தலில் இது அதிகபட்ச வாக்குப் பதிவுதான். எனினும் தேர்தல ஆணைய முயற்சியைப் பாராட்டலாம். சில இடங்களில் பழம்தின்று கொட்டை போட்டவர்கள் ஆணையத்தை மதிக்கவே இல்லை!

  ReplyDelete
 17. நம் நாட்டு நிலையை அறிந்தேன் மூங்கில் காற்று. நன்றி.

  ReplyDelete
 18. வாக்காளர் பட்டியலும் ஆசிரியர் படும்பாடும் குறித்து நன்கு சொன்னீர்கள். நீங்கள் குறிப்பிடுவது போல், இந்த தேர்தலில் வாக்கு பதிவு சதவீதம் குறைவாக இருப்பதாகத் தெரியவில்லை. அதிகரித்து உள்ளது. 1996 இல் மொடக்குறிச்சியில் ஏதோ ஒரு கோரிக்கையை முன் வைத்து இத்தனை பேர் போட்டியிட்டதாக நினைவு.(முத்துநிலவன் சார் பதில் சொல்லி விட்டார்)

  தேர்தல் முடிந்தாலும் தங்கள் அலசல் நிற்கவில்லை. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 19. இதே இடமாறுதல் பிரச்னையால லிஸ்ட்ல பேர் இல்லாததால நிறையப் பேரு வாக்களிக்க முடியாமப் போகுது. எனக்கென்னமோ... சுவர்ல எழுதறது மைக் வெச்சு அலர்றது. பிஸியான ட்ராபிக் இருக்கற ரோட்டை மறிச்சு பொதுக்கூட்டம் போடறதுன்னு அமர்க்களங்கள் இல்லாம நடந்த இந்தத் தேர்தல் பிடிச்சிருக்கு. இதுவே தொடரணும்ங்கறது விருப்பம்.

  ReplyDelete
 20. இந்தத் தடவை நடந்த தேர்தல் கொஞ்சம் வித்தியாசமானத் தேர்தல் எனலாம். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களும் வீட்டிற்கு வரவில்லை! வாக்கு லிஸ்டுடன்...அதற்குப் பதில் தேர்தல் அலுவலகர்கள் வந்தார்கள்! சத்தமில்லை....பொதுக்கூட்ட மேடைகள அவ்வளவாக இல்லை...இருந்தவையும் அவ்வளவாகப் பொது மக்களைப் பாதிக்கவில்லை! இது போன்ற தேர்தல்கள்தான் மக்கள் விரும்புகின்றார்கள்! ம்ம்ம்ம் ஒரு சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்தது...பேர் இல்லாமல் போனது போன்றவை.....அதற்கும் கூட அந்தந்த ஏரியா போலீஸ்டேஷனில் லிஸ்டுகள் இருந்ததாகவும் அவர்கள் 15 நாட்களாக அறிவிப்பு செய்ததாகவும் சொல்லப்பட்டது. மொத்தத்தில் தேர்தல் ஒரு நல்ல முறையில் நடந்தது எனலாம்.....

  ReplyDelete
 21. முரளி,

  //சென்னையில் வாக்களிப்பு சதவீதம் குறைவு என்று கூறப்படுவதற்கு மேற் சொன்ன காரணங்கள் முக்கியமானவை. என்னை பொறுத்தவரை வாக்களிக்காதவர் சதவீதம் 10 க்குள்தான் இருக்கும் என்பது என் கருத்து.இதில் அரசு ஊழியர்கள் பெரும்பாலும் நடைமுறை சிக்கல் காரணமாக வாக்களிப்பதில்லை //

  தேர்தலை சரியாக கவனிக்கலையோ?

  தமிழ்நாட்டில் 2009,2014 ஆண்டுகளில் வாக்குப்பதிவு விகிதம் கிட்டத்தட்ட ஒரே அளவு தான், 0.86 பெர்செண்ட் தான் வித்தியாசம்.

  இம்முறை வாக்களித்தவர்களின் "எண்ணிக்கை" மிக அதிகம், ஆனால் சதவீதத்தில் சரியாக தெரியாது, ஏன் எனில் 2011 சட்டமன்றத்தேர்தலின் போது மொத்த வாக்களர்கள் எண்ணிக்கை 4.65(78% சட்டமன்ற வாக்குப்பதிவு) கோடிகள், இப்போ அது 5.5 கோடிகள். சுமார் ஒரு கோடி புதிய வாக்களர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  எனவே 2009 இல் குறைவான வாக்களர்களில் 72.98 % இப்போ அதிக வாக்களர்களில் 73.67% எனவே எண்ணிக்கை அதிகம் தானே. ஆனால் இதில் ஒரு கோல்மால் நடந்து இருக்கு ,அதை பிறகு சொல்கிறேன்.

  # மொத்தத்தில் பார்த்தால் "ஈயம் பூசினா மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும்" என தேர்தல் ஆணையம் வேலை பார்த்துள்ளது அவ்வ்!

  ReplyDelete
 22. வணக்கம் நண்பர்களே

  உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

  ReplyDelete
 23. வலையுலகில் இளைய பிதாமகராக வந்து தகவல்களை அள்ளித்தரும் முரளிதரனுக்கு பாராட்டுக்கள்

  இந்த பதிவுக்கு சரியான விமர்சனம்

  ReplyDelete
 24. தங்கள் சிறந்த பதிவை வரவேற்கிறேன்

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895