என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Tuesday, July 15, 2014

பிச்சை எடுத்தாவது பகலுணவு போடுவேன்-காமராஜர்

 
(இன்று( ஜூலை 15) காமராஜர் பிறந்த நாள். அவரது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடப் படுகிறது.)

   "பிச்சை எடுத்தாவது பகலுணவு போடுவேன்" நினைத்துப் பார்க்க முடியாத வார்த்தைகளை ஏழைக் குழந்தைகளுக்காக அந்தப் பெருந்தகை சொன்னார். பசி இருக்கும்போது மனம் எப்படிப் படிப்பை நினைக்கும் . மாணவன் வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்கும்போது எண்ணம் எப்படி வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை சுழற்சியை அறிய விரும்பும். ஒரு வேளை உணவு அவனை பள்ளிக்கு வரவைக்கும் என்றால் அதை செய்தே ஆக வேண்டும் என்று பல எதிர்ப்புகளையும் மீறி முடிவெடுத்தார் கல்விக்கண் திறந்த காமராசர். இந்த திட்டம் எப்படி உருவானது?. இன்று எளிதாக பல இலவசங்களை அறிவிக்க முடிகிறது. ஆனால் அப்போதைய நிலை என்ன? வாருங்கள் கொஞ்சம் பின்னோக்கிப் போகலாம்

  1957 இல்அப்போதைய கல்வி நிலையை ஆராயவும் தொடக்கக் கல்வியை மேம்படுத்தவும் உருவாக்கப் பட்டது தொடக்கக் கல்விக் குழு . தொடக்கக் கல்வியை  அரசுடையமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது இக் குழு.   இதன் உறுப்பினர்களில் ஒருவரான அப்போதைய பொதுக் கல்வி இயக்குனர் நெ.து சுந்தர வடிவேலு அவர்கள் இதை ஏற்கவில்லை. எனினும் இது தனியார் பள்ளி நடத்துபவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது. தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் இனைந்து ஒரு  மாநாடு நடத்தினர் . அந்த மாநாட்டை தொடங்கி வைக்க முதலமைச்சர் காமராசர் அழைக்கப் பட்டார். 

அவ்விழா மேடையில் அமர்ந்திருந்தபோது நெ.து.சுந்தரவடிவேலு விடம்  பேச்சுக் கொடுத்தார்  காமராசர்.
அப்போது மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு  போடப்பட்டு வந்தது. அதை மனதில் கொண்டு கல்வி இயக்குனர்  நெ.து அவர்களிடம், "முன்பு நீங்கள் சென்னை மாநராட்சியில் பணியாற்றிய போது மதிய உணவு போட்டார்களே அதனால் பலன் இருந்ததா?" என்று கேட்டார்
"பள்ளிகளில் மதிய உணவுபோட்டதால் மாணவர் வருகை அதிகரித்தது ஐயா!" பதில் அளித்தார் நெ.து.சு 
"எப்படி சொல்கிறீர்கள்"
திங்கள் முதல் வெள்ளி வரை மதிய உணவு போடுகிறார்கள். சனிக்கிழமை அரை நாள் என்பதால் உணவு போடுவதில்லை அன்றைக்கு வருகை பாதிக்கும் குறைந்து விடும்"

"செலவு எவ்வளவு ஆனது?"

"சாப்பாடு ஒன்றுக்கு ஒன்றரை அணா செலவானது"

"இது சரியான கணக்குதானா. ஒன்றரை அணா என்பதற்கு அடிப்படை உண்டா? எப்படி சரிபார்த்தீர்கள்" என்றார் சிக்கனத்துக்குப் பெயர்போன காமராசர்."

இதை எதிர்பார்த்திருந்த நெ.து.சு.அவர்கள் "சென்ற சில ஆண்டுகளாக படி அரிசி பத்தணா விற்கிறது ஒரு படி அரிசி சமைத்தால் அந்த வயதுப் பிள்ளைகள் பத்து பேர் வயிராற உண்ணலாம் .ஒருவருக்கு செலவு 1 அணா இதர பொருட்களுக்கு  அரையணா செலவாகும். இது சரிதானா என்பதை இராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம் முதலாளியும் அபோது மாநகராட்சி உறுப்பினருமான ராமநாத ஐயரிடம் விசாரித்து உறுதி செய்து கொண்டேன்" என்றார்.

அரசு பணம்தானே என்று நினைக்காமல் எவ்வளவு யோசித்து செயல் பட்டிருக்கிறார்கள் அதிகாரிகள்!

மேலும் கேள்விகள் எழுப்பிக் கொண்டிருந்தார் கர்ம வீரர் "மாநகராட்சியில் எத்தனை பேருக்கு மதிய உணவு போட்டீர்கள்?. மாகாணம் முழுவதும் போட்டால் எத்தனை பேருக்கு தேவைப்படும் "
"சென்னையில் 15 சதவீதம் பேருக்குத்தான் போட முடிந்தது. இருபது விழுக்காடாக அதிகரித்தால் ஏழை மாணவர்களுக்கு சோறுபோட முடியும் என்று தெரிவித்தார்"

உடனே காமராஜர் " நகரத்தில் 30 விழுக்காடு என்றால் கிராமத்தில் இதைவிட அதிகமாக இருக்குமல்லவா? மூன்றில் ஒரு பங்கு இருந்தால்தால் நிறைவாக இருக்கும், அப்படி எனில் எத்தனை நாளைக்கு போட வேண்டி இருக்கும்" 
  அவரது சிந்தனை எப்படியாவது இத்திட்டத்தை செயல் படுத்திவிட வேண்டும் என்ற நிலையில் பயணித்தது. அதற்காக உடனே மனதில் நினைத்ததை ஆணையாக்கி விடவில்லை . அதில் உள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து உறுதிப் படுத்திக் கொண்ட பின்னதான் செயல்படவேண்டும் எண்ணம் உடையவராக இருந்தார் .அதனால் தன் ஐயங்களை தெளிவு படுத்தும் வண்ணம் நெ.து.சு அவர்களை கேள்வி மேல் கேள்விகளாக கேட்டுக் கொண்டிருந்தார்

நெ.து.சு "ஐயா! ஆண்டுக்கு 210 நாட்களுக்கு போட வேண்டும். தொடக்கப் பள்ளிகளில் பதினாறு இலட்சம் பேர் படிக்கிறார்கள். அவர்களில் ஐந்து இலட்சம் பேர்களுக்கு உணவு கொடுக்க குறைந்த பட்சம் ஒரு கோடி செலவாகும் " என்று அப்போதே கணக்கிட்டு சொன்னார் இயக்குனர். இன்னும் சில ஆண்டுகளில் அந்த செலவு இரண்டு மூன்று மடங்காக உயர்ந்து விடும் என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை.
இதை மனதில் இருத்திக் கொண்ட காமராசர் மாநாட்டில் பேசினார். தொடக்கக் கல்வி நாட்டுடைமை ஆக்கப் பட மாட்டாது என்ற உறுதி அளித்துவிட்டு தொண்டு மனப்பான்மையுடன் கல்வியை வளர்க்க கேட்டுக் கொண்டு தொடர்ந்தார்
  "நமது உடனடி வேலை ஒவ்வொரு ஊரிலும் தொடக்கப் பள்ளிதொடங்குதலே ஆகும். ஆனால் பள்ளி இருக்கிற ஊர்களில் கூட எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கு போவது இல்லை. ஏழைப் பையன்களுக்கும் பெண்களும் வயிற்றுப்பாடு பெரும்பாடாக இருக்கிறது. ஒருவேளை கஞ்சி கிடைத்தாலும் போதுமென்று ஆடு மாடு மேய்க்கப் போய் தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்கிறார்கள் அப்படிப் பட்டவர்களை பள்ளிக்கூடங்களுக்கு வரும்படி செய்வது முக்கியம்
"அதற்கு ஏற்ற வழி மாநகராட்சிப் பள்ளிகளில் போடுவது போல மதியம் பள்ளிகளிலேயே உணவு போடுவதே. அதற்கு எவ்வளவு செலவாகும் என்று இப்போது இயக்குனருடன் கணக்கு போட்டுப் பார்த்தேன். தொடக்கத்தில் ஒரு கோடி இன்னும் சில ஆண்டுகளில் செலவு  பல மடங்காகிவிடும். பரவாயில்லை. நம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு இது பெரிய பணம் அல்ல . தேவைப்பட்டால் அதற்காக தனிவரிகூடப் போடலாம் . இருக்கிற வரியிலோ புது வரியிலோ படிப்பவர்களுக்கு இலவச உணவு கிடைக்க ஏற்பாடு செய்வோம்.இதற்கு எல்லோரும் ஒத்துழைக்கும்படி விடுகிறேன்." என்ற காமராசர் இயக்குனர் பக்கம் திரும்பி இதற்கான திட்டம் ஒன்றை உடனடியாக தீட்டிக்கொண்டு வந்து என்னிடம் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டார்.

 கல்விக்காக செலவிடுவதையும் வரி போடுவதையும் அனைவருக்கும் கல்வி என்பதை பலரும் விரும்பவில்லை.சென்னையில் இருந்து வெளியான ஆங்கில நாளிதழ் இதை குறை கூறி  தலையங்கம் எழுதியதாம்.

அப்படி என்ன எழுதியது"
 (  தொடரும்)
அடுத்த பகுதிக்கு இங்கே க்ளிக் செய்யவும் 

பின்குறிப்பு: மதிய உணவு வரலாற்றை ஒரே பதிவில் முடித்து விட நினைத்தேன், நேரமின்மை காரணமாக நாளை தொடர்கிறேன்.

இதில் சொல்லப் பட்டுள்ள தகவல்கள் முன்னாள் பொதுக் கல்வி இயக்குனராகப் பணிபுரிந்த டாக்டர் நெ.து சுந்தரவடிவேலு அவர்களின் "நினைவலைகள்" என்ற நூலின் அடிப்படையில் அமைந்தது.இந்த நூலைப் படிக்கப் படிக்க பிரமிப்பு ஏற்பட்டது. பள்ளியில் இவரது கட்டுரையை பாடமாக படித்த நினவு இருக்கிறது என்றாலும் இந்த நூலைப் படிக்கும்போது அவர்  மீது தனி மரியாதை உண்டானது. கல்வித் துறைக்கும் மாணவர்க்கும் ஆசிரியர்களுக்கும் சுயநலமின்றி எப்பேர்ப்பட்ட காரியங்கள் எல்லாம் சாதித்திருக்கிறார் என்பதை அறியும்போது வியப்பு ஏற்பட்டது. இவரைப் பற்றி ஒரு தனி கட்டுரை எழுத வேண்டும் எனது விருப்பம். இவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

*********************************************************************

தொடர்புடைய பதிவு 
30 comments:

 1. வணக்கம்
  முரளி(அண்ணா)

  இப்படியான மகான்கானை நினைவுபடுத்தி பதிவாக பதிந்தமைக்கு நன்றிகள் அவர் செய்த சேவை பற்றி இன்னும் அறிய ஆவலாக உள்ளேன் தொடருங்கள் நாளையும் பார்க்கிறேன் பகிர்வுக்கு நன்றி
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பேனாமுனைப்போராளி:

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. வணக்கம்
  த.ம 1வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. அதனால்தான் அவர் கர்ம வீரர் !!

  ReplyDelete
 4. பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றிய நல்லதொரு பதிவு!
  த.ம.2

  ReplyDelete
 5. என்னவொரு சிறப்பான தன்னலமற்ற திட்டமிடல்...!

  ReplyDelete
 6. ஏழைக் குழந்தைகளின் பசி அறிந்த உத்தமத் தலைவர் பற்றிய பதிவு அருமை !
  த ம 3

  ReplyDelete
 7. எடுத்தோம், கவிழ்த்தோம்ன்னு திட்டம் போடாமல் எத்தனை யோசித்து, ஆராய்ந்து, அலசி திட்டம் தீட்டி. அதை வெற்றியும் காண வைத்திருக்கிறார்கள் முன்னாள் ஆட்சியாளர்கள்!!

  ReplyDelete
 8. "பிச்சை எடுத்தாவது பகலுணவு போடுவேன்" நினைத்துப் பார்க்க முடியாத வார்த்தைகளை ஏழைக் குழந்தைகளுக்காக அந்தப் பெருந்தகை சொன்னார்.
  மேற்படி அறிஞரைப் போல இயலக்கூடியவர்கள் செயலாற்ற முன்வரவேண்டும்.
  சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம்

  ReplyDelete
 9. காமராஜர் ஒரு அபூர்வ மனிதர். அவர் பிறந்த நாளை நினைவு கூறும் நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. Excellent.
  I adore Mr. Kamarajar.

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. கர்ம வீரர் காமராஜர் பற்றிய அருமையான பதிவு சகோதரரே!

  அறிந்துகொள்ள ஏதுவாக உங்கள் பதிவும் பகிர்வும்
  இன்று கிடைத்தது மகிழ்வாக உள்ளது!

  நன்றியுடன் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. #(இன்று(15.07.2014) காமராஜர் பிறந்த நாள். அவரது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடப் படுகிறது.)#

  பதிவிட்ட உங்களையும் கொண்டாடலாம்.

  ReplyDelete
 14. மிகச் சிறந்த பதிவு!

  இன்று சிறிய செயலுக்கும் விளம்பரம் தேடும்/விளம்பரம் செய்யும்/ செய்து கொண்டிருக்கும் அரசியல் வாதிகள் இருக்கும் இந்த நாட்டில் எந்தவித விளம்பரமும் தேடாத ஒரு மாமனிதர் வாழ்ந்து நமது தமிழ் நாட்டை ஆண்டிருக்கின்றார் என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கின்றது! கல்விக்காக அந்தக் கர்ம வீரர் என்னவெல்லாம் சிந்தித்திருக்கின்றார்! கல்வியும், உழைப்புமே வறுமையைப் போக்கும் என்றுரைத்த அந்த அபூர்வமான மனிதரைப் போற்றுவோம்!

  பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 15. ஒரு உண்மையான கல்வியை நேசிக்கும் ஆசிரியர் காமராசரை மறுக்கவோ , மறக்கவோ முடியுமா அண்ணா? நெ.து. அய்யாவின் படைப்பு பயனுள்ள படைப்பு!!
  கல்வி வளர்ச்சி நாளை ரிபோர்ட் கொடுப்பதற்காக மட்டும் கொண்டாடாத ஆசிரியர்கள் இன்னும் பலர் வேண்டும்:) அருமையான பதிவு அண்ணா!
  தம ஒன்பது!

  ReplyDelete
 16. தன்னலமில்லாத தலைவர்.

  ReplyDelete
 17. tகாமராஜர் தன்னமில்லாத தலைவர் .. அவர் பிறந்த நாளில் அவரைப் பற்றி அருமையான கட்டுரை.

  நன்றி.

  ReplyDelete
 18. எல்லோருமே காமராசரைப்பற்றிய பதிவு அருமையாக இருக்கிறது...

  ReplyDelete
 19. நல்ல பதிவு......நாளை வரை காத்திருக்கிறேன் அண்ணேன்

  ReplyDelete
  Replies
  1. காமராஜரை சந்தித்த தங்கள் பதிவையும் படித்தேன். ஒருமகத்தான மனிதரை சந்தித்தமைக்கு வாழ்த்துக்கள்.உங்கள் பதிவில் கருத்திட முடியவில்லையே

   Delete
 20. தெளிவாகி திட்டமிட்டு மதிய உணவு திட்டத்தை துவக்கி வெற்றியும் பெற்றார் என்பது புரிகிறது! அறிந்திராத தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 21. தன்னலமில்லாத அந்த கர்ம வீரர் பற்றியும் அவரது செயல்கள் பற்றியும் சொன்ன சிறப்பான பதிவு. தொடர்கிறேன்.

  ReplyDelete
 22. காமராஜரின் கல்வித்தொண்டுதான் அவரைப் பெருந்தலைவர் என்று அழைக்கப்படுவதற்கான அடித்தளமாகும். அவருக்குக் 'காரியம் யாவினும் கைகொடுத்து' மதிய உணவு என்ற இலட்சியத்தைச் செயல்படுத்தியவர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள். இருவரையும் தொட்டுக்காட்டினீர்கள். எனது கல்லூரிப் பருவத்தில் காமராஜ் அவர்களுடன் பழகியிருக்கிறேன். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தவுடன் விரிவான பதிவு எழுதப்போகிறேன்.

  ReplyDelete
 23. அருமையான பதிவு ஐயா
  ஆண்டிகையில் ஓடிருக்கும் அதுவும் உனக்கில்லையே
  என்று காமராசர் பற்றி கண்ணதாசன் எழுதினாரே
  இன்று அதைப் போல் யாரைப் பற்றியாவது எழுத முடியுமா
  காமராசன் நாம் என்றென்றும் நினைவில் வைத்துக் போற்றக் கூடியவர்
  நன்றி ஐயா

  ReplyDelete
 24. அருமையான பகிர்வு...
  வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
 25. அருமையான பகிர்வு ஐயா...
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 26. தன்னலமில்லாத தலைவரைப் பற்றிய பதிவில் மனம் நெகிழ்கின்றது.
  இனிய பதிவு கண்டு மகிழ்ச்சி..

  ReplyDelete
 27. பிச்சை எடுத்தாவது பகலுணவு போடுவேன்-காமராஜர்
  திரு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று அவர்களின் பதிவு.
  எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு டி.என்.முரளிதரன்.

  ReplyDelete
 28. மிக நல்ல கருத்துடை பதிவு.
  இனிய வாழ்த்து
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895