என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Thursday, November 20, 2014

ஒரு ரூபாய் ஊழியர்-தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்


தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள் 


ஒரு ரூபாய் ஊழியர் 

திருவாரூரிலே ஒரு தாசில்தார் இருந்தார். ஒரு நாள் காலையில், வீட்டில் உட்கார்ந்து கொண்டு  எதையோ படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே சிலர் ஓடி வந்து, 
“ஐயா, ஐயா, எங்கள் கிராமத்துக்குப் பக்கத்தில் இருந்ததே அணை. அதை வெள்ளம் அடித்துக்கொண்டு போய் விட்டது! உடனே வந்து கவனிக்க ஏற்பாடு செய்ய வேணும்” என்று வேண்டினர்.
    இதைக் கேட்டதும் தாசில்தார் ஒரு சேவகனை அழைத்து, “நீ உடனே போய்,அலுவலகத்தில் யாராவது குமாஸ்தா இருந்தால் கையோடு கூட்டிக் கொண்டு வா. உம். சீக்கிரம்” என்று உத்தரவிட்டார்.
      சேவகன் நேராகத் தாசில்தாருடைய அலுவலகத்திற்குச் சென்றான். அப்போது அங்கு முத்துசாமி என்ற ஒரு சிறுவன் மட்டுமே இருந்தான். வேறு யாரும் இல்லை. சேவகன் அவனிடம் செய்தியைச் சொன்னான். சொல்லிவிட்டு, “பெரியவர்கள் யாரும் வரவில்லையா?” என்று கேட்டான்.
     “இல்லை. அதனால் என்ன? நான் வருகிறேன். வா. போகலாம்” என்று கூறித் துணிச்சலோடு தாசில்தாரிடம் வந்தான் முத்துசாமி.

   தாசில்தார் முத்துசாமியை ஏற இறங்க ஒரு முறை பார்த்தார். பிறகு, சேவகனை நோக்கி,

“என்னடா இது, இந்தப் பொடியனை அழைத்து வந்திருக்கிறாயே! வேறு யாரும் இல்லையா?...” என்று சலிப்போடு கூறிவிட்டு, முத்துசாமியைப் பார்த்து, “சரி. சரி. ஏனப்பா,உனக்கு அந்த உடைப்பைப் பற்றி ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார்.

     “நீங்கள் உத்தரவு கொடுத்தால், உடனேயே நான் அங்கே போய், விவரம் அறிந்து வருகிறேன்” என்றான் முத்துசாமி.

     “சரி, போய் வா” என்று அரை மனத்துடன் அவனை அனுப்பி வைத்தார் தாசில்தார்.

     முத்துசாமி உடைப்பு எடுத்த இடத்திற்குச் சென்று பார்த்துவிட்டுத் திரும்பி வந்தான். வந்தவன் கையில் ஒரு தாள் இருந்தது. அதைத் தாசில்தாரிடம் கொடுத்தான். அதை அவர் உற்றுப் பார்த்தார் 
  அதில், எவ்வளவு தூரம் அணை உடைந்திருக்கிறது. அணையைத் திரும்பக்  கட்டுவதற்கு  என்னென்ன  சாமான்கள்  வேண்டும்.   அந்தச் சாமான்கள் எங்கெங்கே கிடைக்கும். எவ்வளவு நாட்களாகும், எவ்வளவு ரூபாய் செலவாகும் என்ற விவரங்களெல்லாம் இருந்தன.
     தாசில்தார் அதைப் பார்த்து வியப்படைந்தார். ஆனாலும், உடனே அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. தலைமைக் குமாஸ்தாவிடம் அந்தத் தாளைக் கொடுத்து, “இந்தப்பையன் என்னென்னவோ இதில் எழுதிக் கொடுத்திருக்கிறான். நேராகப் போய்ப் பார்த்தால்தான் தெரியும். உடனே நீர் புறப்பட்டுச் சென்று, விவரம் அறிந்து வாரும்”என்றார்.

     தலைமைக் குமாஸ்தா உடைப்பு எடுத்த இடத்திற்குச் சென்றார். நிலைமையை நேரில்அறிந்தார். சிறுவன் முத்துசாமி எழுதிய விவரங்கள் நூற்றுக்கு நூறு சரி என்பதைஉணர்ந்தார். அப்படியே தாசில்தாரிடம் போய்ச் சொன்னார். அதைக் கேட்டு தாசில்தார் ஆச்சர்யம் அடைந்தார். முத்துசாமியை மிகவும் பாராட்டினார்.

     அதே முத்துசாமி தாசில்தாரை மற்றொரு முறை வியப்பிலே ஆழ்த்தினான்.
       ஒருநாள், பெரிய மிராசுதார் ஒருவர் தாசில்தாரிடம் வந்தார். “என்னுடைய நிலங்களுக்கு நான் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? தொகையைச் சொன்னால், உடனே கட்டிவிடுகிறேன்” என்றார்.
     அந்த மிராசுதாருக்கு அந்தத் தாலுகாவில் பல இடங்களில் நிலம் இருந்தது. சுமார் இருபது கிராமங்களில் அவருக்கு நிலம் இருந்ததால் கணக்குகளைப் பார்த்துத்தான் சொல்ல வேண்டும்.
     குமாஸ்தாக்களில் ஒருவரைக் கூப்பிட்டுக் கணக்கைப் பார்க்கச் சொல்லலாம் என்று தாசில்தார் நினைத்தார். அப்போது, அருகிலே சிறுவன் முத்துசாமி நின்று கொண்டிருந்தான்.
 அவனிடம், அந்த மிராசுதாரின் பெயரைச் சொல்லி, “இவருடைய வரிப் பாக்கி எவ்வளவு  என்று கேட்டுவா” என்றார் தாசில்தார்.

     ஆனால், முத்துசாமி யாரிடமும் போய்க் கேட்கவுமில்லை; கணக்குப் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கவுமில்லை. நின்ற இடத்தில் நின்று கொண்டே, ‘இவர் இவ்வளவு கொடுக்கவேண்டும்’ என்று ஏதோ ஒரு தொகையைச் சொன்னான். அதைக் கேட்ட தாசில்தார்,

“என்னடா இது! வாயில் வந்த ஒரு தொகையைச் சொல்கிறாயே! சம்பந்தப்பட்ட கணக்குப் பிள்ளைகளைக் கூப்பிடு. கணக்கைச் சரியாகப் பார்த்துச் சொல்ல வேண்டும்” என்றார்.

     தாசில்தார் விருப்பப்படியே கணக்குப் பிள்ளைகளை அழைத்து வந்தான் முத்துசாமி.அவர்கள் கணக்குப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து, ஒரு காகிதத்தில்  தொகையைக் குறித்துக் கொண்டார்கள். 
பிறகு எல்லாவற்றையும் கூட்டிப் போட்டு, மொத்தத் தொகையைச் சொன்னார்கள். அவர்கள்சொன்ன தொகையும், முத்துசாமி சொன்ன தொகையும், ஒன்றாகவே இருந்தன. தம்படிகூடவித்தியாசமில்லை! இதைக் கண்டு தாசில்தார் மிகுந்த வியப்படைந்தார். அவர் மட்டும் தானா?  மிராசுதாரர், கணக்குப் பிள்ளைகள் எல்லாருமே அளவில்லாத 

ஆச்சரியமடைந்தார்கள்.
     முத்துசாமியிடம் இப்படிப்பட்ட திறமையும், ஞாபக சக்தியும் இருப்பதைக் கண்ட தாசில்தார் வியப்படைந்ததோடு நிற்கவில்லை. அன்றே முத்துசாமியை அழைத்து, 
“முத்துசாமி, இன்று முதல் உன் சம்பளத்தை மூன்று மடங்கு ஆக்கி விட்டேன்” என்று கூறினார்.

மூன்று மடங்கு! என்றால் பிரமித்துப் போய் விடாதீரிகள்  
அந்த மூன்று மடங்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா.மூன்று ரூபாய்தான் .
ஆம் அப்படியானால் அவர் வாங்கிக் கொண்டிருந்த மாத சம்பளம் ஒரு ரூபாய்.
     அன்று ஒரு ரூபாய் சம்பளத்தில் கணக்குப் பிள்ளைக்கு உதவி ஆளாக இருந்த அந்த ஒரு ரூபாய் ஊழியர் யார் தெரியுமா?  பிற்காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே வகித்து வந்த நீதிபதி  பதவியை பெற்ற முதல் இந்தியர் சர். டி. முத்துசாமி அய்யர்தான் அந்த ஒரு ரூபாய் ஊழியர். 
    

நன்றி: குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் பெரியோர் வாழ்விலே  என்ற நூலில் இருந்து 

***********************************************************************

43 comments:

 1. அன்பின் முரளி:
  நீங்கள் நன்கு படித்தவர். Education Dept-ல் வேலை செய்கிறீர்கள். இது மாதிரி கதைகளை எழுதும் போது [தயவு செய்து] நாம் இதெல்லாம் முடியுமா? முடியும் என்றால் எப்படி என்று யோசிக்கவேண்டும்.

  அழ. வள்ளியப்பா எழுதினால் அது உண்மையாக ஆகி விடுமா?

  [[ஆனால், முத்துசாமி யாரிடமும் போய்க் கேட்கவுமில்லை; கணக்குப் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கவுமில்லை. நின்ற இடத்தில் நின்று கொண்டே, ‘இவர் இவ்வளவு கொடுக்கவேண்டும்’ என்று ஏதோ ஒரு தொகையைச் சொன்னான். அதைக் கேட்ட தாசில்தார்,]]

  இவருக்கு என்ன ஜீபூம்பா துணையோ? எத்தனை வருடம் எவ்வளவு வரி ஒரு ஏக்கருக்கு என்று தெரியாமல் கணக்கு சொல்ல...;

  சரித்திரத்தை மாற்றி எழுத--பொய் புளுக--அவர்கள் அதிகாரம் அப்போ!
  இப்படி புளுகி புளுகி--எதோ அவர்களுக்கு உடம்பெலாம் மூளை மாதிரி ஒரு பிரமையை உண்டு பண்ணி--சூத்திரர்கள் என்றென்றும் அவர்களை அண்ணாந்து பார்க்கும்படி வைத்துள்ளார்கள்...

  ஏன், எப்படி என்று கேள்வி கேளுங்கள்...அழ. வள்ளியப்பா அலறிக் கொண்டு ஓடியிருப்பார்.

  முத்து சாமி நீதிபதியானவுடன்..அவர் அதை செய்தார் இதை செய்தார் என்று அவுத்து விடுவார்கள்...

  ஏன், எப்படி என்று கேள்வி கேளுங்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்று நம்பள்கி.
   குழந்தைகளுக்கான புத்தகத்தில் இப்படி ஆதாரமற்ற துக்கடாக்களை அவிழ்த்து விடுவது அசிங்கம்.

   Delete
 2. பத்திரிக்கைகளில் வந்தாலோ யாரோ பிரபலம் சொன்னாலோ நம்பும் குணம் நம் ரத்தத்தில் ஊறி இருக்கிறது. எனக்கு என்னவோ ஒரு ரூபாய் ஊழியத்தில் பணி ஆற்றிய முதலமைச்சர்தான் நினைவுக்கு வந்தார். என் எண்ணப் பகிர்வுகள் எனும் பதிவினைப் பாருங்கள். இது வேறு கோணம்.

  ReplyDelete
 3. நம்பள்கி.... உங்கள்கி.... வம்பில்கி.... மாட்டி விட்டுட்டார்.....

  ReplyDelete
 4. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ReplyDelete
 5. வியப்பான செய்தியாக இருக்கிறது! அணைக்கட்டு புள்ளிவிவரம்கூட ஓரளவிற்கு கணக்கிட்டிருக்க முடியும். வரிபாக்கியை எப்படி சரியாகச்சொன்னார் என்பதே ஆச்சர்யம்! விந்தை மனிதரின் விந்தையான வரலாறு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று கருதுகிறேன்.தற்போது கூட இது போன்ற அலுலகங்களில் பணி புரியும் அலுலவக உதவியாளர்கள்கூட தங்கள் அலுவலகத்தில் உள்ள பிரபலங்களின் ஆவணங்களைப் பற்றி நன்குதெரிந்து வைத்திருப்பார்கள் அது போலவே இதனையும் முன்னரே தெரிந்து வைத்திருப்ப்பார். அவர் எப்போதிலிருந்து வரி கட்டவில்லை என்பதை எல்லாம் ஒரு ஆர்வத்தின் காரணமாக அறிந்து வைத்திருக்க வாய்ப்பு உண்டு.மிக சரியாக சொன்னார் என்பது மிகைப் படுத்தப் பட்டதாக இருக்கலாம். ஆனால் ஒரளவிற்கு சரியாகவே சொல்ல முடியும்.

   Delete
  2. [[[சேவகன் நேராகத் தாசில்தாருடைய அலுவலகத்திற்குச் சென்றான். அப்போது அங்கு முத்துசாமி என்ற ஒரு சிறுவன் மட்டுமே இருந்தான்.}}

   சிறுவனுக்கு அங்கு என்ன வேலை? அப்போ வெள்ளைக்காரன் காலம்; இப்போ மாதிரி ஊழல் இல்லை..கண்ட இடத்தில் சுற்ற முடியாது! மறுபடியும் படியுங்கள்...எவ்வளவு முரண்பாடுகள்.

   வெள்ளைக் காரன் காலத்தில் கண்டவர்கள் ஆபிசில் நுழைய முடியாது. அவனோ சிறுவன்--நீதிபதி ஆன சிறுவன் பள்ளியில் இருந்து இருப்பானா? இல்லை ஆபீசில் உலாத்தும் சிறுவனாக இருந்து இருப்பானா?

   கட்டாயம் முத்துசாமி பள்ளியில் தான் இருந்து இருப்பார்---முதல் நீதிபதி ஆயிற்றே..படிக்காமல் கண்ட இடத்தில் ஊர் சுற்றி எப்படி நீதிபதி ஆகமுடியும் அவர் கட்டாயம் டீ காப்பி வாங்கிக் கொடுக்கும் வேலையை செய்து இருக்கமாட்டார்.

   வள்ளியப்பா கதை எழுதவில்லை--கதை வீட்டு இருக்கிறார்.

   Delete
  3. சிறுவன் என்றால் பத்து பன்னிரண்டு வயது அல்ல. பள்ளிப் படிப்பை முடித்தபின்தான் சிறிது காலம் தாசிதால்தார் முத்துசாமி நாயக்கர் என்பவருக்கு உதவியாக இருந்தார் என்று விக்கிபீடியா கூறுகிறது. தந்தைய இல்லாததாலும் அதுவும் ஏழ்மை காரணமாகவே தற்காலிக வேலை செய்ததாக தெரிகிறது.
   //அப்போ வெள்ளைக்காரன் காலம்; இப்போ மாதிரி ஊழல் இல்லை..கண்ட இடத்தில் சுற்ற முடியாது!வெள்ளைக்காரன் காலத்தில் ஆபீசில் நுழைய முடியாது
   என்பதெல்லாம் உங்கள் கூற்றின் படியே வெள்ளைக்காரர்களை அண்ணாந்து பார்க்கும் மனநிலையாகவே தெரிகிறது.//
   இது போன்ற வட்டார அலுவலகங்களில் வெள்ளைக் காரர்கள் யாரும் பணியாற்றியதாகத் தெரியவில்லை .
   முத்துசாமி இளமையிலேயே புத்திசாலியாக இருந்தார் என்பதற்காக சொல்லப்பட்டதாக இருக்கக் கூடும். கதை, சினிமாக்களில் மிகைத் தன்மை என்பது இயல்பானது.

   அய்யர் என்று இருப்பதே தங்கள் கோபத்திற்கு காரணம் என்று நினைக்கிறேன். பிராமணர் அல்லாத பிரபலங்களுக்கும் அவர்களது சிறப்பை விளக்க சற்று மிகைப்படுத்த கதைகள் உண்டு

   Delete
  4. [[அய்யர் என்று இருப்பதே தங்கள் கோபத்திற்கு காரணம் என்று நினைக்கிறேன். பிராமணர் அல்லாத பிரபலங்களுக்கும் அவர்களது சிறப்பை விளக்க சற்று மிகைப்படுத்த கதைகள் உண்டு]]

   This is the typical way...the so-called elites circumvent the issue..
   This Iyer business in unwarned...

   let me tell you..Muthuswami maybe a genius....but this story....yes...this story is a lie!

   அதெப்படி என் கோபம் (இதில் எது கோபம்)--பொய்யை போய் என்று சொல்வது தப்பா? பொய் என்று சொன்னால் கோபமா?

   எனக்கும் ஐயருக்கும் என்ன வாய்கா வரப்பு சண்டை..உங்கள் எழுத்தை நியாபப் படுத்துங்கள்...

   அதை விட்டு...ஐயர் என்று .திசை திருப்ப வேண்டாம்!

   Delete
  5. வாஞ்சி நாதன் ஆஷை சுட்டதின் காரணம்--தேசப்பற்று இல்லை என்று அன்றே எழுதினேன்.

   இன்று...பலர் அவன் ஒரு ஜாதி வெறி பிடித்த மிருகம் என்று கூறுகிறார்கள்..

   இங்கு சென்று படியுங்கள்...
   http://valipokken.blogspot.com/2014/11/blog-post_20.html

   பொய்யை உண்மையாகுவதே அவர்கள் வேலை...

   பொய்யன் பாரதிக்கு பொன்னாடை..
   வெள்ளைக்காரனுக்கு மன்னிப்பு கடிதம் எழுதியதில் Guinness record வைத்துள்ள பாரதிக்கு பொன்னாடை!
   தமிழ்நாட்டின் ஒரே உண்மை வீரன் வ.வு.சிக்கு (சிதம்பரனாருக்கு) கப்பல் ஒட்டிய தமிழனுக்கு பன்னாடை!
   ----இதாண் இந்தியா!

   Delete
  6. மன்னிக்கவும் நம்பள்கி சார்!
   இந்தக் கதை உண்மையானதாக இருக்க முடியாது அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதோடு நீங்கள் விட்டிருந்தால் இந்த எண்ணம் எனக்கு தோன்றி இருக்காது
   //எதோ அவர்களுக்கு உடம்பெலாம் மூளை மாதிரி ஒரு பிரமையை உண்டு பண்ணி--சூத்திரர்கள் என்றென்றும் அவர்களை அண்ணாந்து பார்க்கும்படி வைத்துள்ளார்கள்..// என்றுசொன்னதால்தான் இந்த எண்ணத்திற்கு வர நேர்ந்தது,
   வ.உ.சி க்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறவில்லை என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு.அதைப் பற்றிய பதிவு ஒன்றையும் எழுத குறிப்புகள் வைத்திருக்கிறேன். அப்படித் தேடிய போது கிடைத்த தகவல் வ.உ.சியின் மகன் பெயர் வாலேஸ்வரன் என்பது . அவருக்கு உதவிய வாலஸ் என்ற வெள்ளைக்காரரின் நினைவாகத் தான் இந்தப் பெயர் வைக்கப்பட்டது. அதனால் அவர் ஆங்கிலேயரை உயர்வாகக் கருதினார் என்று சொல்ல முடியாது.

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. கொஞ்சம் யோசிக்க வைக்கிறது ... எப்படி சொன்னார் என்கிற சூழலை சொல்லியிருந்தால் சந்தேகம் வர வாய்ப்பிருக்காது ...

  ReplyDelete
 8. இது உண்மை வரலாறா என்பது ஐயமே!

  ReplyDelete
 9. ஒருரூபாய்க்கு இவ்வளவு புத்திசாலித்தனமா?

  ReplyDelete
 10. இது குழந்தைகளுக்காக புனையப்பட்ட கதையாகத்தான் இருக்கும் அதாவது எள் என்றால் எண்ணெய்யாக இருக்க வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு புரிய வைப்பதற்காக எழுத்தப்ட்டதாகவே இருக்கும்.  சிங்கம் படத்தில் விவேக்கை கடையில் அரிசி மூட்டைகள் வந்திருப்பதாக விசாரிக்க சொல்லுவார் சூரியாவின் அப்பா விவேக் அதை மட்டும் கேட்டு விசாரிப்பார் அதையே சூர்யாவிடம் கேட்கும் போது அவர் பல விபரங்களை மட மட என்று சொல்லுவார். அதையும் பார்த்து ரசித்த கூட்டம்தான் நாம்.. எனக்கென்னவோ குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா எழுதிய பெரியோர் வாழ்விலே என்ற நூலை படித்தவர்கள்தான் இந்த சிங்கம் படத்தை எடுத்தவ்ர்களாக இருக்க வேண்டும்.


  அந்த காலத்தில் வள்ளியப்பா புத்தகம் எழுதினார் அவரைப் போல உள்ளவர்கள் பலர் இந்த காலத்தில் வாட்ஸ் அப் செய்திகளை பறிமாறிக் கொள்கின்றனர் அவ்வளவுதான்

  ReplyDelete
  Replies
  1. சரியாகப் புரிந்து கொண்டீர்கள் மதுரைத் தமிழன்

   Delete
  2. There is a similar story of Thenali raaman too!

   Delete
 11. ஆச்சரியமாக இருக்கிறது...

  ReplyDelete
 12. இதுவரை அறியாத செய்தி
  அவசியம் அறிந்திருக்கவேண்டிய செய்தியை
  அருமையான பதிவாக
  சுவாரஸ்யமான பதிவாகத் தந்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. சுவையான செய்திகள்தான்!
  ஆனால், நம்பலாமா?? ?? ??

  மற்றபடி,
  நீதிபதி பதவியை பெற்ற முதல் இந்தியர் சர். டி. முத்துசாமி அவர்கள் தன் நீதிப் பணியில் செய்த சாதனைகள் சிறிது விளக்கமாக பதிவிடலாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 14. ஏதோ கதை சொல்கிறீர்கள் என்று படித்துக்கொண்டே வந்தேன். கடைசியில் முத்தாய்ப்பாக ஒரு அரிய மனிதரை அறிமுகப்படுத்தியுள்ளதை அறிந்து வியந்தேன்.. நன்றி.

  ReplyDelete
 15. நல்ல கதைதான்... ஆனால் நடுவில் விமர்சனங்கள் யோசிக்க வைக்கிறது..

  ReplyDelete
 16. பாராட்டப்பட வேண்டிய விசயமே.....

  ReplyDelete
 17. வணக்கம்
  அண்ணா
  வியக்கவைக்கும் திறமை சொல்லிச்சென்ற விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 18. வியப்பான தகவல். நம்பள்கி சந்தேகமும் நியாயமானது.

  ReplyDelete
  Replies
  1. இதே பதிவுக்கு பதிவர் வவ்வால் எப்படி பின்னூட்டமிடுவார் என்று ஊகித்தேன்

   "முரளி. இது ஒன்றும் யாருக்கும் காணப்படாத அறிய திறமை இல்லை.ஒரு அலுவலகத்தில் பணி புரிபவர் அந்த அலுவலகத்தில் உள்ள வி.ஐ.பி.க்களின் விவரங்களை ஆர்வத்தின் காரணமாக தெரிந்து கொள்வது வழக்கம்தான். நிறைய நில புலன்கள் இருப்பவர்களின் தகவல்களை அவ்வாறு பார்த்திருக்கலாம். மொத்த சொத்தின் அளவு தெரிந்திருந்தால் வரி ஏக்கருக்கு இவ்வளவு ருப்பாய் என்று கணக்கிடுவதற்கு ராமானுஜம் ஒன்றும் வர வேண்டியதில்லை.

   Delete
 19. அய்யா வணக்கம். நல்ல பதிவு.உண்மையா..?இப்படி நடந்திருக்குமா?..கேள்விகள் வந்துகொண்டுதான் இருக்கும்.
  நம்மவர்கள்,உண்மையான நிகழ்சிகளோடு கொஞ்சம் அதிசயங்களையும் கலந்து சொல்லிச் சொல்லியே பழகி விட்டார்கள்.! நம் இலக்கிய வரலாறு,நாட்டு வரலாறு...இப்படி எல்லா வரலாறுகளிலும்..இந்த' மிகைப்படுத்துதல்'....நிறைய இருக்கும்.அதெல்லாம் இனம் கண்டு நீக்கி,உண்மையானவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும்..!

  ReplyDelete
 20. அந்த சிறுவன் சொன்னது எப்படி சாத்தியம் என்று பலர் இங்கே கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் இவ்வாறு கேள்வி கேட்பதுதான் எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது.

  இதில் என்ன அதிசயம்...? . //திருவாரூரிலே ஒரு தாசில்தார் இருந்தார்.// இதைக் கூர்ந்து கவனியுங்கள்..!

  பொதுவாகவே திருவாரூரில் பிறந்தவர்களுக்கு நுட்பமான அறிவும், சமயோசித புத்தியும், பின் நடப்பவற்றை முன் கணிக்கும் அபாரத் திறமையும், உலகையே ஆளும் வல்லமையும், கண்ணிலே கணக்கு போடும் டேலண்டும் , பார்த்தவுடனேயே பக் என்று பற்றிக்கொள்ளும் ஆளுமையும் நிறைந்தவர்கள் என்பது உலகமே அறிந்த விசயமாச்சே.. அப்படியிருக்க..இப்படி ஒரு பெருத்த சந்தேகம் உங்களுக்கு வந்ததே ஆச்சர்யம்தான்.

  சரி..சரி... நானும் திருவாரூர் காரன்தான் :-)

  ReplyDelete
 21. ஹலோ! நண்பரே !
  இன்று உலக ஹலோ தினம்.
  (21/11/2014)

  செய்தியை அறிய
  http://www.kuzhalinnisai.blogspot.com
  வருகை தந்து அறியவும்.
  நன்றி
  புதுவை வேலு

  ReplyDelete
 22. சிந்திக்கும் பகிர்வு.சிலருக்கு அபார ஞான சக்தி இருக்கும் கணக்கில் அது போல இவருக்கும் இருந்திருக்கலாம்.

  ReplyDelete
 23. ஒரு வி.ஐ.பி யின் வரி பாக்கியை ஆர்வத்தின் காரணமாக அந்த சிறுவன் ஏற்கனவே தெரிந்துவைத்திருப்பதில் ஒன்றும் சந்தேகப்பட வேண்டியத்தில்லையே!! நம்ம வசம் ஒப்படைக்கப்பட்ட கோப்புகளை கொஞ்சம் ஆர்வகோளாறு பிடித்த ஆட்கள் இப்படி தெரிந்து வைத்திருப்பார்கள் தான். பொதுஅறிவு பதிவு நல்ல காரசாரமா போய்ட்டிருக்கு:))

  ReplyDelete
 24. அழ .வள்ளியப்பா நன்றாகத்தான் அழ வைத்து பார்க்கிறார் :)
  த ம 9

  ReplyDelete
 25. முரளி அய்யா, தாமத வருகைக்கும் சென்னை வந்தும் தங்களைச் சந்திக்க இயலாமல் திரும்பியமைக்கும் மன்னிக்க வேண்டுகிறேன். மறந்துபோன ஒரு மாமேதையின் குழந்தைப்பருவத் திறமைகளை அறியச்செய்தமைக்கு நன்றி
  முரளி.இதுபோலும் அரிய நிகழ்வுகளைக் குழந்தைகளுக்குச் சொல்லவேண்டிய (பெரியவர்களுக்குமான) கதையைத்தான் தொகுத்திருக்கிறார் குழந்தைக்கவிஞர்!

  ReplyDelete
  Replies
  1. த.ம.(10)
   நன்றி முரளி அய்யா.

   Delete
 26. எப்படியோ பல பதிவுகள் தப்பித்துப் போகின்றன......இதுவும் அப்படியே!

  சரி....இந்தக் கதை மிகவும் ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது. கதை எப்படியோ போகட்டும்...மிகையோ இல்லையோ...அதில் உள்ள நல்ல தகவல்களை மட்டும் நாம் எடுத்துக் கொள்ளலாமே! சரித்திரத்திலும் பல தகவல்கள் புனையப்பட்டதாகவும், மிகைப்படுத்தப்பட்டதாகவும், அவரவர் கண்ணோட்டத்தில் (விருமாண்டி பாணியில்) தானே எழுதப்படுகின்றது...... பல அரிய தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. //எப்படியோ பல பதிவுகள் தப்பித்துப் போகின்றன..//
   சார் நீங்க எந்த அர்த்தத்தில் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.

   Delete
 27. பகுத்தறிவாலர்களின் கேள்விகளுக்கெல்லாம் நேரடியாக பதில் சொல்ல மாட்டீர்களா?

  ReplyDelete
 28. புளுகை சொல்லி ஏன் குழந்தைகள் மனதை கெடுக்க வேண்டும்.
  உண்மையை சொல்லி வளர்க்க பல கதைகள் உண்டே.
  இது ஒரு கூட்டத்தின் மீது பெருமை கற்பிக்கும் வெட்டி வேலையே.

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895