என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 11 டிசம்பர், 2014

நதிகள் இணைப்புக்கு முதல் குரல் கொடுத்தவன்

         
                            (இன்று பாரதியின் பிறந்த நாள்) 

 நான் +2  படிக்கும்போது பள்ளி இலக்கிய மன்றத்தில்  பாரதியின் பிறந்த நாள் விழா கொண்டாடினார்கள். அப்போது பாரதி பற்றி ஒரு கவிதைப் போட்டி வைக்கப் பட்டது. மாலையில் விழா. காலையில் பத்து மணிக்கு வகுப்புகளுக்கு போட்டியில் கலந்து கொள்பவர்கள் உடனே வர வேண்டும் என்று அறிவிக்கப் பட்டது. குருட்டு தைரியத்தில் நானும் கலந்து கொண்டேன். பாரதி பற்றி எழுத வேண்டும் இரண்டுமணி நேரம் அவகாசம் வழங்கப் பட்டது. கண்ணதாசனின் காலக் கணிதம் என்ற ஒரு கவிதை எனக்கு முழுதுமாக மனப்பாடம். அந்த சந்தத்தை கொண்டு ஏதோ மனதில் தோன்றியதை எழுதிக் கொடுத்தேன். முதல் பரிசு ஒரு மாணவிக்கு. எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.  எனக்கு ஆச்சர்யமாகத் தான் இருந்தது.
இதோ அந்த கவிதை. இதனை நான் பதிவெழுத தொடங்கியபோது வெளியிட்டிருந்தாலும் அப்போது அதனை படித்தவர் மிகக் குறைவு என்பதால் மீண்டும் அந்தக் கவிதை(?) உங்கள் முன் (இப்ப  மட்டும் நிறையப் பேர் படிப்பாங்களான்னு கேக்கக் கூடாது!)


             எட்டய புரத்தில் ஒளியாய்ப் பிறந்தவன்
          ஏட்டிலும் பாட்டிலும் சிறந்து வளர்ந்தவன்

          தோன்றிற்  புகழொடு தோன்றிய தமிழ்மகன்
          சான்றோர் பலரும் போற்றிய கலைமகன்

          முறுக்கு மீசை முகத்தில் வைத்தவன்
          நறுக்கு மீசைக் கவிஞனின் குருஅவன்

          தெருக்களில் கூட தேசியம் வளர்த்தவன்
          நெருப்பு வார்த்தையில் தீயவை சுட்டவன்

          பெண்மை பெரிதெனப்  போற்றிச் சொன்னவன்
          உண்மையை உலகுக் கஞ்சாது உரைத்தவன்

          தீக்குள் விரலை வைத்துப் பார்த்தவன்
          நாக்கில் கலைமகள் வாசம் பெற்றவன்

          காக்கை குருவிகள் நம்மினம் என்றவன்
          கழுதையைக் கூட கட்டி அணைத்தவன்

          சாதியை எதிர்த்து சாட்டை எடுத்தவன்
          வேதியர் நடைமுறை விரும்பா வித்தகன்

          தேனினும் இனியதாய் தமிழை நினைத்தவன்
          ஆணும் பெண்ணும் சமமெனச் சொன்னவன்

          கற்பு ஆணுக்கும் உண்டெனப் பகன்றவன்
          அற்ப மனிதரை துச்சமாய் மதித்தவன்

          சிறுமை கண்டு சீறியும்  எழுந்தவன்
          வறுமை வாட்டினும் செம்மையாய் வாழ்ந்தவன்

          கண்ணன் மீது கவிதைகள் சமைத்தவன்
          கண்ணம் மாவை கவிதையில் நனைத்தவன்

            பாஞ்சாலி சபதம் படைத்து அளித்தவன்
          பதினெண் மொழிகள் படித்து அறிந்தவன்

          நதிநீர்  இணைக்க முதல் குரல் கொடுத்தவன்
          அதிக முள்ளதை  பங்கிடப் பகர்ந்தவன்

          இருக்கும் வரையில் ஏழ்மையில் உழன்றவன்
          இறந்த பின்னும் நிலையாய்  நிற்பவன்  

********************

15 கருத்துகள்:

  1. // ஆணும் பெண்ணும் சமமெனச் சொன்னவன்
    கற்பு ஆணுக்கும் உண்டெனப் பகன்றவன் //

    முதல் பரிசு உங்களுக்கே...

    பதிலளிநீக்கு
  2. நன்றாக இருக்கிறது சகோ...பள்ளியில் 2 பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பாக இருக்கிறது! அன்றே நதிநீர் இணைப்பு பற்றி சிந்தித்து இருப்பது பாரதி தீர்க்க தரிசி என்று தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    (முரளி)அண்ணா
    கருத்து நிறைந்த கவியை
    பார்ப்போர் உள்ளமது குளிர்கிறது
    சிறப்பான வரிகள் பகிர்வுக்கு நன்றி த.ம4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. நான்கு லட்சம் viewers !! அதிகமாக தானே பார்த்திருகிறார்கள் அண்ணா!
    **
    இருக்கும் வரையில் ஏழ்மையில் உழன்றவன்
    இறந்த பின்னும் நிலையாய் நிற்பவன் ** அழகாகத் தொடங்கி அழுத்தமாக முடித்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக கவிதைகளை வாசிப்பவர்கள் குறைவு. என்பதையே குறிப்பிட்டேன்.

      நீக்கு
  6. பாரதியை நினைத்தால் வரும் எண்ணங்களின் தொகுப்பு அழகு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. நானும் எழுதத் தொடங்கிய போது பாரதியின் படத்தை வைத்துக் கொண்டு தான் எழுதத் தொடங்கினேன். இன்னமும் நெருங்கிய நண்பர்கள் என்னை முண்டாசு என்று தான் அழைக்கின்றார்கள். வாழ்த்துகள் முரளி.

    பதிலளிநீக்கு
  8. இப்போது நாங்கள் முதல் பரிசு தருகிறோம், ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் எழுதியது இன்றும் பொருந்துவதாக உள்ளது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. அருமை! அழகிய கவிதை! வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895