என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Monday, February 16, 2015

வலைப்பக்கத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் 2015 Live Score காட்டும் Gadget சேர்க்க


   உலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்கி விட்டது .நேற்று இந்தியா பாக்கிஸ்தான் போட்டி பரபரப்பாக நடந்து முடிந்தது.விராத் கோலி, சுரேஷ் ரைனாவின் அதிரடியில் ஸ்கோர் 300 ஐ எட்டியது என்றாலும்  320ஐ தாண்டும் என்று எதிர்பார்த்த வேளையில் சடசடவென்று 8 விக்கெட்  வீழ்ந்துவிட்டது .
பாகிஸ்தானின் திறமையான ஆட்டக்காரர்கள் இருந்தும் வழக்கம் போல் சொதப்பினர். அனுபவமில்லா வீரர்கள் அதிகம் இடம் பெற்றிருந்தனர். சாஹித் அஃப்ரிடி மிஸ்பா இருவரும் மட்டுமே எனக்கு தெரிந்த வீரர்களாக இருந்தனர். அஃப்ரிடி தாத்தா இன்னும் இரண்டு மூன்று உலகக் கோப்பைகள் ஆடுவார் போலிருக்கிறது . ஏழடி உயரம் உள்ள முகமது இர்பான் அசுர வேகத்தில் பந்து வீசினாலும் வாசிம் அக்ரம் போல இந்திய வீரர்களை அச்சுறுத்த முடியவில்லை , பீல்டிங்கில் இந்தியாவை விட பின் தங்கியே உள்ளனர்.
பவுலிங்கில் இந்தியா வீக் என்றாலும் அதிக ஸ்கோர் இருந்ததால் வெற்றி பெற முடிந்தது. இப்படியே தொடர்ந்தால் மகிழ்ச்சி
அது கிடக்கட்டும். மேட்ச் நடந்து கொண்டிருக்கும்போது லைவாக ஸ்கோர் அறிய இணையத்தில் ஏராளமான வழி முறைகள் உள்ளன. உங்கள் வலைப் பதிவிலேயே லைவாக ஸ்கோர் தெரிவிக்கும்  விட்ஜெட் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? .உங்கள் பதிவுகளை படிக்க வரும் கிரிக்கெட் ரசிகர்கள்  நடந்து  கொண்டிருக்கும் மேட்ச்சின் Ball by ball  லைவ் ஸ்கோர் அறிய இலவச விட்ஜெட்கள் கிடைக்கின்றன.
இணைக்கும் வழிமுறை யை கூறுகின்றேன். விரும்பினால் இணைத்துக் கொள்ளுங்கள் www.cricwaves.com என்ற இணைய தளம் விதம் விதமான விட்ஜெட்களை வழங்குகின்றன. அவற்றில் ஒன்றை இணைக்கும் முறை  கீழே தந்திருக்கிறேன்
கீழ்க் கண்ட நிரலை காப்பி செய்து கொள்ளுங்கள்
<script type="text/javascript"> app="www.cricwaves.com"; mo="f1_kzd"; nt="flash"; mats =""; tor =""; Width='302px'; Height='252px'; wi ="w"; co ="flash"; ad="1"; </script><script type="text/javascript" src="http://www.cricwaves.com/cricket/widgets/script/scoreWidgets.js"></script>
 1. உங்கள் வலைப்பூவின் பிளாக்கர் கணக்கில் நுழைந்து
Lay Out ஐ க்ளிக் செய்து   Add a Gadget சொடுக்கவும்

2. தொடர்ந்து படத்தில் உள்ளவாறு HTML/JavaScript ஐ தேர்ந்தெடுக்கவும்


3.காப்பி செய்த நிரலை படத்தில் உள்ளபடி பேஸ்ட் செய்யவும்


4. சேவ் கொடுத்து வெளியேறுங்கள்.

இப்போது  விட்ஜெட் வலது புறத்தில் உள்ளது போல் தோற்றமளிக்கும் நடந்து கொண்டிருக்கும் கிரிக்கெட் போட்டிகளின் ஸ்கோர் அதில் உடனுக்குடன் தெரிவதைப் பார்க்கலாம்.
இதேபோல  உலகக் கோப்பை போட்டியில் ஒவ்வொரு நாடும் பெற்ற புள்ளிக் கணக்கையும் காட்டும் விட்ஜெட் உள்ளது வேண்டுமெனில் அதனையும் இணைத்துக் கொள்ளலாம்


*****************************************************************

நன்றி www.cricwaves.com

15 comments:

 1. பயனுள் தகவல் நண்பரே பலருக்கும் எனக்கல்ல...
  தமிழ் மணம் 1

  ReplyDelete
  Replies
  1. உடனே வந்து கருத்திட்டமைக்கு நன்றி ஒரு மாருதலுக்குத்தான் இந்தப் பதிவு வலைப்பக்கத்தின் பார்வையாளர் எண்ணிக்கை கூடவும் வாய்ப்பு உண்டு,

   Delete
 2. அனைவருக்கும் பயன்படும் தகவல்
  பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அப்ரிடியை மட்டும் தாத்தா என்று சொன்னால் எப்படி? யூனிஸ்கான், மிஸ்பா மட்டும் என்ன?

  பாகிஸ்தானை வென்றதே பாதி திருப்தி கிடைத்து விட்டது. இனி உ.கோ கிடைக்கவில்லை என்றால் கூட பெரிதும் பாதிக்காது.

  பயனுள்ள தகவல் கொடுத்துள்ளீர்கள்.

  ReplyDelete
 4. விட்ஜெட் இணைப்பு பற்றிய விரிவான செய்முறை, கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள பதிவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

  நன்றி முரளி.

  ReplyDelete
 5. கிரிக்கொட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய பதிவு
  நன்றி ஐயா
  தம +1

  ReplyDelete
 6. அதிக பயனுள்ள பதிவு, ரசிகர்களுக்கு. எனக்கும் இதற்கும் வெகு தூரம்.

  ReplyDelete
 7. சீசன் பதிவு!!! கலங்குங்க அண்ணா!

  ReplyDelete
 8. வணக்கம்
  அண்ணா.
  பதிவை அசத்தி விட்டீர்கள் நல்ல விளக்கம் யாவரும் பயன் பகிர்வுக்கு நன்றி த.ம9

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 9. என்னைப் போல் கணினி அறிவு குறைந்தவர்கள் செய்து பார்க்கத் தயக்கம் காட்டலாம். எதையோ செய்யப்போய் இருபதற்கும் பங்கம் வரக்கூடாது அல்லவா?கிரிக்கட் உலகில் ஏறத்தாழ எல்லா டீம்களுமே சம பலம் பெற்றவை. அன்றைய ஆட்டத்தில் யார் நன்றாக ஆடுகிறார்களோ அவர்களே வெற்றி பெருகின்றனர். கன்ஸிஸ்டண்ட் ஆக ஆஸ்திரேலியா விளையாடுகிறது.

  ReplyDelete
 10. அப்ரிடியை விட மிஸ்பாவும் யூனூஸ் கானும் மூத்தவர்கள்! பாகிஸ்தானின் பாச்சா இந்த முறையும் இந்தியாவிடம் பலிக்காதது ஆச்சர்யமே! பயனுள்ள தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அப்ரிடி இளம் வயதிலேயே விளையாட வந்து விட்டார் என்று நினைக்கிறன்

   Delete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895