என்னை கவனிப்பவர்கள்

சனி, 14 பிப்ரவரி, 2015

காதலுக்கு கண் உண்டா? தீர்ப்பு சொல்லுங்கள் உருக்கமான காதல் கதை



எட்டிப் பார்த்து படித்த குட்டிக் கதை 

காதலுக்கு கண் உண்டா

"நான் உன்னை காதலிக்கிறேன் "என்றான் அவன் 

அவள்"உனக்கு கண் உண்டா? மடையனே! எனக்கு கண் இல்லை" 

"  காதலுக்கு இல்லை. ஆமாம்  நீதான் என் காதல்"

"உளறாதே! இந்த உலகத்தில் யாரையும் எனக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக ஆண்களைக் கண்டாலே! சாரி எனக்கு கண்தான்  தெரியாதே நான் எப்படிக் காண முடியும் ஆண்களை நினைத்தாலே பிடிப்பதில்லை அனைவரும்   ஏமாற்றுக் காரர்கள். போய்விடு "

   "நான் அப்படிப் பட்டவன் அல்ல உன்னை உளப் பூர்வமாக காதலிக்கிறேன். உன்னை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். உன்னை என் உள்ளங்கைகளில் தாங்குவேன். உன் நகங்களில் கூட அழுக்கு சேர விடமாட்டேன்.உன் தலை முடி உதிர்ந்தால் கூட என் இதயம் பலமாக அதிரும். என் உதிரம் கொதிக்கும்.என்னை நம்பு "

" நான் பணக்காரி என்பதால்தானே இந்த காதல் வசனம் பேசுகிறாய். கண் இல்லாவிட்டாலும் நான் அழகாக இருக்கிறேன் என்று சொல்கிறார்கள். அழகும் எனக்கிருக்கும் ஏராளமான சொத்தும்தானே இந்தக் காதலை உருவாக்கி இருக்கிறது. அதனை அபகரித்துக் கொண்டு ஆட்டம் போடத்தானே இந்த காதல் நாடகம். சொத்தையும் அனுபவித்துக் கொள்ளலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம்   எனக்கு என்ன தெரியவா போகிறது என்றல்லவா திட்டம் போடுகிறாய். தியாகி என்ற பட்டமும் கிடைக்கும் வசதிகளும் கிடைக்கும் அதுதானே உன் நோக்கம் "

    "ஏனிப்படி கோபத்துடன் பேசுகிறாய். உன் அழகான முகத்திற்கு கோபம் பொருந்தவில்லை .என் காதலைக் கொச்சைப் படுத்தாதே . உனக்காக என்ன செய்தால் என் காதலை நம்புவாய்" 
  
   "ஒன்றும் செய்ய வேண்டாம்.பாவம் நீ! பார்வை இல்லாதவளை திருமணம் செய்து என்ன சுகம் காணப் போகிறாய்.எனது சொத்து முழுமையும் செலவு செய்தாவது பார்வை பெற முயல்வேன். ஒருவேளை பார்வை கிடைத்தால் சொல்லி அனுப்புகிறேன் வா ! அப்போது முடிவு சொல்கிறேன்.

"நான் உனக்காக காத்திருப்பேன். எனக்கு காலம் ஒரு பொருட்டல்ல. பார்வை கிடைக்கட்டும். அப்போது நான் உன்முன் வந்து நிற்கிறேன்"...

நாட்கள்


 அவள் மனதில் சமீப காலங்களில்  இப்படித் தோன்றுகிறது 
"ரொம்பவும் புண்படுத்தி  அனுப்பி விட்டோமோ அவன் இப்போதெல்லாம் வருவதில்லை. போலிருக்கிறதே! அவன் வந்தால் கூட ஒரு வாசமும் சேர்ந்தல்லவா வரும். அல்லது வந்தும் என்னை தொல்லை செய்ய  விரும்பாமல்  என்று வாய் திறக்காம் போய்விடுகிறானோ.எவ்வளோ பேர் போகிறார்கள் வருகிறார்கள் அவன் காலடி ஓசை என் காதுகளுக்கு நன்றாக தெரியுமே! நான்தான் அவனை விரட்டி விட்டேனே அவனை ஏன் எதிர் பார்க்க வேண்டும். இந்த பாழாய்ப் போன மனது . ஒருவேளை நானும் அவனை காதலிக்கிறேனோ?

     "சரி! போகட்டும் இன்னும் சில நாள்தானே! கண் பார்வைக்கான ஆபரேஷன் ஏற்பாடுகள் முடிந்துவிட்டது .கவலைப் படவேண்டாம் எப்படியாவது கண்பார்வை வர வைக்க வேண்டியது என் பொறுப்பு டாக்டர் ஒப்புக் கொண்டார் . நான் இந்த உலகத்தைபார்ப்பது உறுதி என்றல்லவா சொல்லி இருக்கிறார் .
............................ ...........

   "இதோ அனைத்தும் நல்ல படியாக முடிந்தது . என் கண்கள் திறக்கப் போகின்றன. இருட்டை மட்டுமே உணர்ந்திருந்த நான் வெளிச்சத்தை பார்க்கப் போகிறேன்.......... ஆ! பார்த்து  விட்டேன் உலகத்தை. இந்த மகிழ்ச்சியை யாரிடம் சொல்வது?அவனுக்கு சொல்லி அனுப்பலாமா? அவன் வருவானா?  நிச்சயம் வருவான் .  அவன் காதல் உண்மையாயின் வருவான்.....அவன் முகம் எப்படி இருக்கும்? என்னைப் பார்த்ததும் துள்ளிக் குதிப்பானா? அள்ளியெடுத்து அணைத்துக் கொள்வானா?.....................

    அவளைப் பார்க்க யாரோ வந்திருப்பதாக  சொன்னார்கள். வரச் சொன்னாள் "ஒரு வேளை அவனாக இருக்குமோ?" அவனாக இருக்வேண்டும் என்று ஆசைப் பட்டாள். 

     வந்தவன் பார்வையில்லாத ஒருவன். ஏமாற்றமடைந்தாள் . ஒருவேளை உதவிகேட்டு வந்திருப்பான் போலிருக்கிறது " என்று எண்ணியவாறே 

"யார் நீ " என்றாள்

    "என்னைத் தெரியவில்லையா! நீ மனதில் நினைத்தாய் அல்லவா நான் வந்து விட்டேன்.உன் காதலுக்காக தவம் கிடந்தவன் நான்தான் . பார்வை கிடைத்ததும் திருமணம் செய்துகொள்கிறேன் என்றாயே! அன்பே! இப்போதாவது உன் சம்மதத்தை சொல்வாயா? 

  " என்ன? நீதான் என்னை காதலித்தவனா? உருகி உருகி பேசியவன் நீதானா? ஏன் பொய் சொன்னாய்?

     உனக்கு கண் தெரியாது என்பதை மறைத்து விட்டாயே. உன் காதலை  என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. பார்வையற்றவனோடு காலம் முழுதும் நான் வாழ முடியாது.எனக்கு பார்வை இப்போது இருக்கிறது.நீ காதலித்தாய் என்பதற்காக இன்னொரு முறை குருட்டு வாழ்க்கை ஏன் வாழ வேண்டும் . என்னை மன்னித்து விடு தயவு செய்து போ! ......... ................ .............
ஏன் இன்னும் நிற்கிறாய் ..
"ஒரு நிமிடம் உன்னை பார்த்துவிட்டுப் போகிறேன் 
"நீ என்னைப் பார்க்க முடியாதே !"

" ஆமாம் ஆனால் நான்  என்னைப் பார்க்க முடியும் . இதோ  என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உன்னில் இருந்து என்னைப் பார்க்கும் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்? .......
        நான் வருகிறேன். வாழ்க வளமுடன் .. என் கண்களை நன்றாக கவைத்துக்கொள் " சொல்லி விட்டு மெதுவாக ஸ்டிக்கை ஊன்றி நடந்தான் 

    அவள் குழப்பத்துடன் அருகில் இருந்தவர்களிடம் கேட்டாள் "அவன் என்ன சொல்லிவிட்டுப் போகிறான். ஒன்றும் புரியவில்லையே!" 

அவர்கள்  சொன்னார்கள் "அவன்தான் உனக்கு கண்தானம் செய்தவன்"

                                             ****************
அவனைப் பொறுத்தவரை காதலுக்கு கண்ணில்லை 
அவளைப்பொருத்தவரை காதலுக்குக் கண் உண்டு .
உங்கள் தீர்ப்பு என்ன?
நீங்கள் யார் பக்கம்?

*********************************************************************************
இடையில் ஒரு வார்த்தை ஓடுகிறதே அது எதற்கு என்று புரிகிறதா?

************************************************************************************************** 
முந்தைய குட்டிக் கதைகள் 




15 கருத்துகள்:

  1. //காதலுக்கு கண் உண்டா?//

    In General, ஆண்களை பொறுத்தவரை, கல்யாணத்திற்கு முன்பு அல்லது தான் காதலிக்கப்படும் வரை ஆண்களின் காதலுக்கு கண்கள் இல்லை.
    பெண்களை பொறுத்தவரை, எனக்கு தெரியவில்லை.

    நான் இந்த இரண்டு பேர் பக்கமும் இல்லை.

    பதிலளிநீக்கு
  2. கண் உண்டு... மனம் இருப்பதில்லை...

    நாட்கள் நகர்கின்றன...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரெக்ட் . டிடிக்கு புரியாம இருக்குமா ?
      புதுசா ஒண்ணை போட்டிருக்கேன் யாரும் கவனிக்காம போய்ட்டா என்ன பண்றது.அதுக்குத்தான் நானே அதை கவனிக்க வைக்க ... ஹிஹிஹி

      நீக்கு
  3. கண்னை விற்று சித்திரம் வாங்குதல் என்பது இதுதானோ
    தம +1

    பதிலளிநீக்கு
  4. அவ்வளவு கஷ்டப்பட்டு எதற்கு கண்ணை கொடுக்க வேண்டும் நடைமுறை வாழ்க்கையை யோசிக்கும் யாரும் இந்த மாதிரி கேனத்தனமான வேலைகளை செய்ய மாட்டார்கள்.....வாழு வாழ விடு......நன்றி

    பதிலளிநீக்கு
  5. அவ்வளவு கஷ்டப்பட்டு எதற்கு கண்ணை கொடுக்க வேண்டும் நடைமுறை வாழ்க்கையை யோசிக்கும் யாரும் இந்த மாதிரி கேனத்தனமான வேலைகளை செய்ய மாட்டார்கள்.....வாழு வாழ விடு......நன்றி

    பதிலளிநீக்கு
  6. நாட்கள் நகர்வதை கண்கூடாக பார்த்தேன் :)
    த ம 1

    பதிலளிநீக்கு
  7. காதல் உண்மையா, பொய்யா, கண் உண்டா, இல்லையா 80 இருக்கட்டும் அவனது காதல் உண்மையே.... இதுதான் தியாக காதல் வாழ்க.
    அருமை நண்பரே வாழ்த்துகள்.
    தமிழ் மணம் 8

    பதிலளிநீக்கு
  8. காதல் என்பது வெறும் பருவ மயக்கம். அதனால், நான் யார் பக்கமும் இல்லை முரளி.

    பதிலளிநீக்கு
  9. திண்டுக்கல் தனபாலனும், ஸ்ரீனிவாசனும் நான் சொல்ல வேண்டிய கருத்தை சொல்லிவிட்டு சென்றுவிட்டாங்க. அதே கருத்தை சொன்ன காப்பி பேஸ்ட் கேஸுல என்னை உள்ளே தள்ளி உதைச்சிடுவாங்க... அதனால அனுபவ ரீதியான கருத்தை சொல்லிடுறேன் ஆனால் அதை மட்டும் எங்கவீட்டு மாமிகிட்ட சொல்லிடாதீங்க

    மூளை உள்ளவன் காதலிக்க மாட்டான் அதனால் காதலிக்க மூளை தேவையில்லைங்க

    பதிலளிநீக்கு
  10. கொஞ்சம் சிக்கலாக இருக்கிறது. என்ன சொல்வது என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  11. நாட்கள் நகர்கிற டெக்னிக் சூப்பர் அண்ணா!! அது எப்படின்னு ஒரு பதிவா போடுங்களேன்:)

    பதிலளிநீக்கு
  12. ஒரு சில வாக்கியங்களைப் படித்தபோதே கதை தெரிந்து விட்டது. நான் முன்பே படித்திருக்கிறேன். விஜய் டீவியில் வரும் கனெக்‌ஷன் தொடர் நினைவுக்கு வந்தது நாட்கள் நகர்வதைக் கவனித்தபோது.

    பதிலளிநீக்கு
  13. அடடே... அவன் ஒரு கண்ணு மட்டும் கொடுத்திருந்தா ரெண்டு பேரும் பார்த்திருக்கலாமே...காதலித்திருக்கலாமே...கண்ணாலம் பண்ணிருக்கலாமே.....

    பதிலளிநீக்கு
  14. கதைக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்! நிஜத்தில் இப்படியெல்லாம் நடக்க சான்ஸே இல்லை!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895