என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

விகடன்.காம் இல் எனது பதிவு + ஆசிரியர் கவிதை ஹிட் ஆச்சர்யம்


பொதுவாக மற்ற பதிவுகளுக்கு கிடைக்கும் ஹிட்ஸ்களின் எண்ணிக்கை யை  விட  எனது கவிதைகளுக்கான ஹிட்ஸ்கள் குறைவாகத் தான் இருக்கும் அதற்கு விதிவிலக்காக  ஒரே ஒரு கவிதை அமைந்திருக்கிறது . 
அதவும் 2013 செபடம்பர் 5 அன்று நான் "உண்மையான ஆசிரியர் இப்படித்தான்  இருப்பாரோ என்ற கவிதையை பதிவிட்டேன். கவிதைகளுக்கு ஆயிரம் ஹிட்ஸ் கிடைப்பதே அரிதாக இருக்கும் நிலையில் இந்தக் கவிதை  இன்று   வரை 7312 முறை பார்க்கப் பட்டுள்ளது ஆச்சர்யம் அளிக்கிறது. அதுவும் கடந்த  சில நாட்களாக ஆசிரியர் பற்றி தேடுவோர் கண்ணில் சிக்கி படிக்கப் படுவதாக tynt publishing tool இன் புள்ளி விவரம் தெரிவிக்கிறது  கடந்த வாரத்தில்  மட்டும்  கிட்டத்தட்ட 2000 ஹிட்ஸ் கிடைத்துள்ளதோடு கிட்டத் தட்ட 90 முறைக்கு  மேல்  இதன் டெக்ஸ்ட் காப்பி செய்யப் பட்டதாகவும்  தெரிவிக்கிறது. ஒரு  பழைய பதிவு இத்தனை முறை பார்க்கப்படுவது ஆச்சர்யம் அளிக்கிறது. புதிய பதிவுகளை பின்தள்ளி முன் நிற்பதற்குக் காரணம் ஆசிரியர்கள்தான் என்பதில் ஐயமில்லை.



     இக்கவிதையை  செல்போனில் நானே வாசித்து ஆடியோவாக பதிவு செய்து படக் காட்சி உருவாக்கி ஆடியோ இணைத்து யூ ட்யூபிலும் வெளியிட்டுள்ளேன்.  குறைவான தரமுடைய வீடியோ  என்ற போதிலும் அதனையும் 4,479 பேர் பார்த்துள்ளது  மகிழ்ச்சி அளிக்கிறது.





பலமணி நேரம் போதித்து தூக்கத்தை வரவழைப்பவர் அல்ல ஆசிரியர்
சில மணித்துளிகள் பேசினாலும் தாக்கத்தை ஏற்படுத்துபவர்தான் உண்மையான ஆசிரியர்

தனது அறிவால் கற்பிப்பவரை விட நடத்தையால் கற்பிப்பவரே சிறந்த ஆசிரியர்.
காலம் கடந்தும் மாணவர் மனதில் நிலைத்திருப்பவரே உன்னத  ஆசிரியர்.

       ஆசிரியப் பணியை உண்மையான ஈடுபாட்டோடு செய்துகொண்டிருக்கும் ஆசிரியர்களும் செய்த ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகள். ஏற்றிய ஏணியை எப்போதும் நினைத்துப்பார்ப்போருக்கும் வாழ்த்துகள் 

***********************************************************************


இரண்டு நாட்களுக்கு முன்னர் விகடன்.காம் இல்  வாசகர் பக்கத்தில் எனது (கு)லுங்கி அழுது கேட்கிறேன் என்னை ஏன் கைவிட்டீர்? என்ற பதிவு வெளியாகி இருக்கிறது .புகைப்படத்துடன் வெளியிட்ட விகடனுக்கு நன்றி
விகடனில் படிக்க
http://www.vikatan.com/news/article.php?aid=51914
(கு)லுங்கி அழுது கேட்கிறேன் "ஏன் என்னை கைவிட்டீர்?"

என்வலைப்பதிவில் படிக்க
(கு)லுங்கி அழுது கேட்கிறேன் "ஏன் என்னை கைவிட்டீர்?"
"என்னை ஏன் கைவிட்டீர் என்ற தலைப்புக்கு சற்று பயந்தேன் ,.யாரும் தவறாக எடுத்துக் கொண்டுவிடக் கூடாது என்ற அச்சம் இருந்தது.நல்ல வேளை யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை. நகைச்சுவையாக எடுத்துக் கொண்டமைக்கு நன்றி

***************************************************************

படித்து விட்டீர்களா

 மதுமொழிகள் 




31 கருத்துகள்:

  1. பிரபலமான ஆசிரியர்(பதிவர்) ஆகிவிட்டீங்க....பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  2. வீடியோவில் குரல் மிக நன்றாகவே வந்து இருக்கிறது முழுவதும் கேட்டு மகிழ்ந்தேன்

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள்!
    தாங்கள்
    சிறந்த, அமைதியான படைப்பாளி
    அதற்கு
    விகடன்.கொம் இல் வெளியான பதிவு
    சான்றாக இருந்தாலும்
    தங்கள் வலைப்பூவிற்கென
    குறைவில்லாத வாசகர் இருப்பதே
    சிறப்பென்பேன் - மேலும்
    படைப்புலகில் சிறந்து விளங்க
    மீண்டும் எனது வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  4. குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த பதிவு அதன் மதிப்பை பெற்றது சரி ,உங்களுக்கு சன்மானம் எதுவும் வந்ததா .தி என் எம் ஜி :)

    பதிலளிநீக்கு
  5. என்னதான் வலைப்பூவில் வாசகர்களைப் பெற்றிருந்தாலும் பத்திரிக்கையில் படைப்பு வெளியாகும்போது அதன் மகிழ்ச்சியே தனி என்று தெரிகிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஐயா, இன்னும் சிலரும் படிக்க வாய்ப்பிருக்கிறது என்ப்பதால்

      நீக்கு
  6. வாழ்த்துகள்! வாழ்த்துகள்! அருமையான பதிவு வெளியானதற்கு! தங்கள் தளத்தில் அப்போதே வாசித்து சிரித்தோம் நாங்கள்....கவிதையும் அருமை !!!தாங்கள் இப்போது பிரபல பதிவர் ஆசிரியர்...!!!!! அந்த வார்த்தைகள் மிகவும் அருமை....உண்மையும் கூட!!! வாழ்த்துகள் மீண்டும் மீண்டும்! நாங்கள் எல்லோருமே பெருமைப்படுகின்றோம்....

    பதிலளிநீக்கு
  7. கைலி பற்றிய பதிவையும் , அது விகடன் டாட் காமில் வெளியாகியிருக்கும் விஷயமும் பார்த்து மகிழ்ந்தேன்.பொது இடங்களுக்கும் வெளிநிகழ்ச்சிகளுக்கும் வரும்போது மட்டும்தான் கலைஞரும் வேட்டியில் வருவார். வீட்டில் இருக்கும்போதெல்லாம் இன்னமும் கைலிதான். கைலி பற்றிய உங்கள் வருத்தம் நியாயமானதே.
    தங்களுக்கு ஆசிரியர் தின விழா வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. மிக்க மகிழ்வளிக்கும் செய்தி
    சாதனைகள் தொடர நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. மென்மேலும் வளர வாழ்த்துகள் நண்பரே

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்
    அண்ணா
    வாழ்த்துக்கள்..த.ம 11
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துக்கள் இனி விகடன் புகழ் முரளிதரன் என்று பட்டம் சூட்டுவோம்.

    பதிலளிநீக்கு
  12. விகடனில் வந்தாலும் வராவிட்டாலும், நாங்கள் நிரந்தர வாசகர்கள், ரசிக்கிறோம்.

    பதிலளிநீக்கு

  13. இலங்கையில் லுங்கி என் சொல்வது இல்லை .சாரம் என்றுதான் சொல்வார்கள்
    உங்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி இங்கு கனடாவில் தமிழ் ர்களின் கடைகளில்
    விற்பனைக்கு கிடை க்கிறது . எப்போதும் படுக்கைக்கு செல்லும்போது நான் அணிவது சாரம்தான் (லுங்கி) ,பல விதத்திலும் வசதியானது.
    நீங்கள் விகடன் வாயிலாக அடைந்த பிரபல்யம் ஒரு வலைபதிவர் என்ற வகையில் எனக்கு மிகவும் சந்தோசத்தினை அளிக்கிறது .வாழ்த்துக்கள் சகோ :-)

    பதிலளிநீக்கு
  14. விகடனில் தங்களின் பதிவு கண்டேன். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. இனிய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895