என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Thursday, June 2, 2016

விகடனில் வெளிவராத 10 செகண்ட் கதைகள்      விகடனில் 10 செகண்ட் கதைகள் என்ற தலைப்பில் வெளியாகின்றன. நானும் ஒரு சில கதைகளை அனுப்பினேன் பிரசுரம் ஆகவில்லை . விகானில் வெளியாகும் பல 10 செகண்ட்  கதைகள் எனது கதையை விட மோசமாக இருப்பது போல்தான் தோன்றுகிறது. சரி விகடன் வெளியிடா விட்டால்  என்ன? நமது வலைப்பூ எதற்கு இருக்கிறது. எப்படி எழுதினாலும் சகித்துக் கொள்ள நீங்கள் இருக்கிறீர்கள் கவலை எதற்கு?

    சிலகதைகள் ஜோக்குகள் ஒரு குறிப்பிட்ட  குறுகிய காலத்திற்கே பொருந்தும். இதில் உள்ள இரண்டு கதைகள் அப்படிப்பட்டவைதான். விசாரணை, இறுதி சுற்று படங்கள் வெளியானபோது எழுதப் பட்டவை. அந்த நேரத்தில் வெளியாகி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருந்தாலும் இன்னும் காலம் கடக்கு முன் வெளியிட்டுவிட்டேன். 

விசாரணை
                              (10 செகண்ட் கதை ) 
வீட்டுக்கு தெரியாமல்  விசாரணை படம் பார்த்துவிட்டு சிகரெட் பிடித்துக் கொண்டே வந்த வினோத்தை ஒரு போலீஸ்காரரின் கரங்கள் இறுகப்பற்றின.  பயந்துபோன வினோத் அதிர்ச்சியுடன்  "அப்பா" என்றான்  

*************************************************************************

இறுதிச் சுற்று 

"இறுதிச் சுற்று வரை உன்னால் தாக்குப் பிடிக்க முடியாது" என்ற கணவனின் வார்த்தையை பொய்யாக்கி  108 வது இறுதிச் சுற்றை முடித்து கோவிலில் வேண்டுதலை நிறைவேற்றினாள் 90  வயது சுந்தரி பாட்டி 
*************************************************************************************
ஜீவகாருண்யம் 
 
"தம்பி! , அங்கே எறும்புப் புற்று இருக்கிறது பார்த்து காலை வை" என்ற பெரியவரிடம், இளைஞன் ஏளனத்துடன், "ஐயா!எறும்பு கடித்து நான் சாக மாட்டேன்" என்றான்
"உன் கால்மிதிபட்டு எறும்புகள் சாகுமே!"என்றார் பெரியவர் கவலையுடன் 

*****************************************************************************************


18 comments:

 1. ஹாஹாஹா ரசித்தேன் நண்பரே
  தமிழ் மணம் 2

  ReplyDelete
 2. கதைகள் அருமை. ஜீவகாருண்யம் நெகிழ்ச்சி!

  ReplyDelete
 3. வேண்டுதலை நிறைவேற்றினாள் 90 வயது சுந்தரி பாட்டி ,இந்த வயதில் அப்படியென்ன வேண்டுதல் ?இனி ,கிழவனுக்குத்தான் அனர்த்தம் !இறுதிவரை அவர் தாக்கு பிடிப்பாரா :)

  ReplyDelete
 4. மூன்றுமே அருமை. இதை ஹைக்கூ கதைகள் கூட என்று சொல்லலாமோ?

  விகடனில் முதலில் இந்தக் கதைகளை ஆச்சர்யத்துடன் படித்துக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் பொறுமை இல்லை! நம் ' தளிர்'சுரேஷ் இதைப் பார்த்தால் அவரும் எழுதுவார். சுரேஷுக்கு அபாரத் திறமை.. ஜோக் மழை பொழிகிறார். ஹைக்கூ நிறைய எழுதறார்.

  நீங்கள் என் ப்ளாக்கில் சொல்லி இருக்கும் தமிழ்மணப் பிரச்னை எனக்கு ரமணி ஸார் ப்ளாக்கில் வரும். உங்கள் தளத்தில் அப்படி இல்லை. எப்பவுமே எளிதாக இருக்கிறது வாக்களிக்க.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான். ஒரு மாற்றத்திற்காக எபோதாவது இந்தக கதைகள் சுவாரசியம் தரும்.விகடனில் நிறைய போடுவதால் சுவாரசியம் குறைந்துவிடுகிறது. விகடன் கதைத் தேர்வில் கவனம் செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது.குலுக்கள் முறையில் சிலவற்றை எடுத்துப் போடுவது போலவே உள்ளது தளிர்சுரேஷ் ஜோக்குகள் ,
   கதைகள்,ஹைக்கூக்களை மழையாகப் பொழிகிறார். அவர் அபார திறமை வாய்ந்தவர் என்பதில் சந்தேகம் இல்லை.திரட்டிகளின் உதவியின்றியே ஏராளமான பார்வையாளர்களை பெற்றிருக்கிறார்.அவருக்கு வாழ்த்துகள்

   Delete
  2. ஸ்ரீராமின் சுரேஷ் பற்றிய கருத்தை வழிமொழிகின்றோம். அபாரத் திறமை படைத்தவர்.

   காலையில் இதை அடுத்த பின்னூட்டமாகப் போட்டு போகவே இல்லை உங்கள் தளம் திறக்காமல் செர்வர் பிரச்சனை என்று ஏதேதோ சொல்லியது. முந்தைய பின்னூட்டம் இரு முறை வந்துள்ளது இப்பொது தெரிகின்றது..

   Delete
 5. அருமை அருமை!! 90 வயதுப் பாட்டியும் ஜீவகாருண்யமும் ஈர்த்தன

  ReplyDelete
 6. அருமை அருமை!! 90 வயதுப் பாட்டியும் ஜீவகாருண்யமும் ஈர்த்தன

  ReplyDelete
 7. செகண்ட் கதைகள் நச்....ரசனையாக இருக்கிறது சகோ

  ReplyDelete
 8. Agree with you. Vijayan is not seriously selecting the stories.Some look like meaningless tweets. I like all your 3stories and particularly the last one.

  ReplyDelete
 9. Agree with you. Vijayan is not seriously selecting the stories.Some look like meaningless tweets. I like all your 3stories and particularly the last one.

  ReplyDelete
 10. கதைகள் அருமை.
  வாக்கியத்தில் அமைத்து எழுதுக என்று தமிழ் பாடத்தில் ஒரு வாக்கியம் கொடுத்தால் எழுதுவது போல் இருக்கிறது. அருமை.
  தொடருங்கள். படிக்க நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 11. குறுங்கதைக்ள் நன்று . இருந்தாலும் படித்து அனுபவிக்கும் பலன் கிடைப்பதில்லை. நானும் சில எழுதி கை விட்டிருக்கிறேன்

  ReplyDelete
 12. அருமையான கதைகள் சார்! பின்னூட்டத்தில் என்னைப் பற்றி ரொம்பவே பாராட்டி இருக்கிறீர்கள் நீங்களும் ஸ்ரீராம் சாரும். வலைப்பூவை என்னுடைய பயிற்சிக் களமாகவே நானும் பார்க்கிறேன். உங்களின் மெருகேற்றல், ஆலோசனைகளை கேட்டு திருத்திக் கொள்கிறேன். விகடனுக்கு சில ஜோக்ஸ், செகண்ட் கதைகள் அனுப்பினேன். பிரசுரம் ஆகவில்லை. அதன் பின்னரே நானும் 10 செகண்ட் கதைகளை வலையேற்றத் துவங்கினேன். நன்றி!

  ReplyDelete
 13. மூன்றுமே தரமான கதைகள். ‘ஜீவகாருண்யம்’ மறக்க இயலாதது. பாராட்டுகள் முரளி.

  சிரந்த சில கதைகள் உதவி ஆசிரியர்களாலேயே நிராகரிக்கப்படுகின்றன. பிரபலங்களின் படைப்புகள் மட்டுமே நேரடியாக ஆசிரியரின் பார்வைக்குச் செல்கின்றன. எல்லா இதழ்களுமே ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்தான்.

  ReplyDelete
 14. மூன்று கதைகளும் அருமையாக இருந்தன.ஜீவகாருண்யம் மனதை தொட்டது.
  நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 15. கதைகள் மிக அருமை.

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895