இந்திய இசைச் சமவெளியில் தவழ்ந்து;உலக இசைக்கடலில் நுழைந்தஇசை நதியே !தமிழ்த் திரை நிலத்தில்விழுந்து முளைத்த விதையே!இசையுலகில் செய்தாய்புதிய விதியே!சுற்றி வரும் பூமிக்கு காதிருந்தால்சற்று நேரம் நின்றுவிட்டுத்தான் செல்லும்!உன் இசை ஒலிக்கும்போது,காற்று கூட களிப்படையும்! உன் இசையைக் கடத்தும்போது,வெற்றி தேவதைக்கும் சந்தோஷம்;உன் கால்களை பற்றிக்கொள்ளும்போது!மயக்கும் இசை பிறக்கும்உன் மனதில்; கலக்கும் இசை கைகூடும் உன் கைகளில்!உன் கண்களில் கூடதெரிவது இசை வெளிச்சம்;உன் இதயம்கூடதாளத்தோடுதான் துடிக்கும்!நாட்டுப்பற்றை நாற்பத்தேழோடுமறந்து போன மக்கள் மனதில்வந்தே மாதரம் மூலம்மீண்டும் வந்தமரச் செய்தாய்!இளைஞர்கள் மனதில்இசையால் இடம் பிடித்தாய்!இந்திய இசையை இமயத்தில்ஏற்றி விட்டாய்!புதுப்புது இசை வடிவங்களின்பிரம்மாவே! நீ ஆஸ்கார் வாங்கியபோது ஆ! என ஆச்சரியப்பட்டது உலகம்! ஜெய் ஹே! என்று முடியும் தேசிய கீதம் கூட - இனி ஜெய் ஹோ! என்று மாறிவிடுமோ? உன்னை தமிழகத்தில் பிறக்கச் செய்ததால் இறைவனை போற்றுகிறோம்! 'எல்லாப்புகழும் இறைவனுக்கே!' ************************************************************************* செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!பகுதி3
பக்கங்கள்
▼
very nice sir....enjoyed a lot reading this...:D
பதிலளிநீக்குThank You.. :)
பதிலளிநீக்குnice
பதிலளிநீக்கு