பக்கங்கள்

வெள்ளி, 27 ஜனவரி, 2012

முகம் தெரியாத முதல்வர்கள்



      63 வது 
      இனிய  
     குடியரசு தின
      வாழ்த்துக்கள்!  


      படத்தில் உள்ள இருவரும் யாரென்று தெரியுமா? இருவருக்கும் ஒரு சிறப்பு உண்டு. முதலில் உள்ளவர் இந்திய சுதந்திரம் அடைந்தபோது தமிழகத்தின் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள்.இரண்டாவதாக உள்ளவர் நமது முதல் குடியரசு தினத்தின்போது முதல் அமைச்சராக இருந்த குமார சாமி ராஜா அவர்கள்.
      நாடெங்கிலும் குடியரசு தினவிழா கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் இன்றைய தினத்தில் அன்றைய முதல்வர்கள் யாராக இருக்கும் என்று தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதை தேடித் தெரிந்து கொண்டேன். என்னைப்போல் தெரியாதவர்கள் சிலர் இருக்கலாம். அதற்காகவே இந்தப் பதிவு. 
    நாம் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இன்றைய தேதி வரை முதல்வர்களாக பணியாற்றியவர்களை பட்டியலிட்டிருக்கிறேன். தவறு இருப்பின் சுட்டிக் காட்டவும்.

         பெயர்                             பதவிக்காலம்

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்        23.03.1947 முதல் 06.04.1949 வரை 
குமாரசாமி ராஜா                                 06.04.1949 முதல்  09.04.1952 வரை 
ராஜாஜி                                  04.04.1952 முதல் 13.04.1954 வரை 
காமராஜர்                               13.04.1954 முதல் 31.03.1957 வரை 
காமராஜர்                               13.04.1957 முதல் 01.03.1962 வரை 
காமராஜர்                                15.03.1962 முதல் 02.10.1963 வரை 
பக்தவச்சலம்                            02.10.1963 முதல் 06.03.1967 வரை 
அண்ணாதுரை                          06.03.1967 முதல் 03.02.1969 வரை 
நெடுஞ் செழியன்                       03.02.1969 முதல் 10.02.1969 வரை 
மு.கருணாநிதி                          10.02.1969 முதல் 04.01.1971 வரை 
மு.கருணாநிதி                          15.03.1971 முதல் 31.01.1976 வரை 
எம்.ஜி.ஆர்.                               30.6.1977 முதல் 17.2.1980 வரை
எம்.ஜி.ஆர்.                               9.6.1980 முதல் 15.11.1984 வரை
எம்.ஜி.ஆர்.                              10.2.1985 முதல் 24.12.1987 வரை
நெடுஞ் செழியன்                       24.12.1987 முதல் 7.1.1988 வரை
ஜானகி எம்.ஜி.ஆர்.                     7.1.1988 முதல் 30.1.1988 வரை
மு.கருணாநிதி                         27.1.1989 முதல் 30.1.1991 வரை
ஜெ.ஜெயலலிதா                        24.6.1991 முதல் 12.5.1996 வரை
மு.கருணாநிதி                         13.5.1996 முதல் 13.5.2001 வரை
ஜெ.ஜெயலலிதா                       14.5.2001 முதல் 21.9.2001 வரை
ஓ.பன்னீர்செல்வம்                     21.9.2001 முதல் 1.3.2002 வரை
ஜெ.ஜெயலலிதா                       2.3.2001 முதல் 13.5.2006 வரை
மு.கருணாநிதி                         13.5.2006 முதல் 15.5.2011 வரை
ஜெ.ஜெயலலிதா                       16.5.2011 முதல் 


********************************************************************************************* 

3 கருத்துகள்:

  1. முன்னாள் முதல்வர்களை அடையாளங்காட்டிய புகைப்படங்களுக்கு நன்றி. மற்ற முதல்வர்கள் பற்றிய விவரங்களையும் அளித்து அறியச் செய்ததற்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இந்தப் பதிவிற்கு நிறைய கருத்துக்கள் வரும் என்று எதிர் பார்த்தேன். கல்விமுறையில் ஈடுபாடு கொண்டுள்ள தங்களுடைய ஒரு கருத்து பலபேருடைய கருத்துகளுக்கு சமம் என்று கருதி மகிழ்ச்சி அடைகிறேன்.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895