ஒரு கைம்பெண்ணின் குரல்
எழுதி
அழிக்கப்பட்ட
வெள்ளைத்தாள்கள்
பாதி எழுதி
விடப்பட்ட
கவிதைகள்
முழுவதும்
வாசிக்கப்படாத
முழு நாவல்கள்
சேர்க்கப்பட்ட
முகவரியிலிருந்து
திருப்பி அனுப்பப்பட்ட
தபால்கள்
புகுந்த வீட்டால்
புறந்தள்ளப்பட்டவர்கள்
பிறந்த வீட்டை
இன்னொரு புகுந்த
வீடாய் நினைத்து
மீண்டும் நுழைந்தவர்கள்
இந்தப்
பாதிக் கவிதையை
எந்தப்
புத்தகத்துடனாவது
இணைத்துவிட
முயற்சி நடக்கிறது.
அக்கறையினாலா?
அல்ல! அல்ல!
பழைய காகிதத்தை
எவ்வளவு நாள்
பாதுகாப்பது?
இணையத்திலும்
பத்திரிகையிலும்
பழைய
பேப்பர் காரனை
தேடிக்
கொண்டிருக்கிறார்களாம்
அதுகிடக்கட்டும்!
நான் எப்படியும்
நன்றி சொல்லித்தான்
ஆக வேண்டும்!
குப்பை
தொட்டியில்
எறிந்துவிடாமல் இருப்பதற்காக!
**************************************************************
நன்றாக இருக்கிறது உங்கள் கவிதை
பதிலளிநீக்குநன்றி மதுரை தமிழன்
நீக்குமிக மிக அருமை
பதிலளிநீக்குமீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்
அருமையான படைப்பு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
Tha.ma 1
பதிலளிநீக்குநன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்!
பதிலளிநீக்குமுன்பே, உடன்கட்டையில்
குப்பையாக எரிந்து போனவர்களுக்கு..
அந்த நெருப்பு
சுட்டதால்தான்..
இந்தளவேனும் மற்றம்!!!(?)...
வணக்கம் முரளி.
பதிலளிநீக்குசமூக மாற்றத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.இன்னும் மாற்றங்கள் நிறையவே தேவை எங்களுக்கு !
வணக்கம்! வெள்ளைத் தாளில், கனத்த இதயத்தின் கறுப்பு நினைவுகள் உங்கள் கவிதை. இன்னும் எத்தனை காலம் இந்த சமூகத்தில் இந்த அவலம் இருக்கும் என்று தெரியவில்லை! வெள்ளைப் புடவை வழக்கம் முன்பு போல் இப்போது அதிகம் இல்லை.
பதிலளிநீக்குஅழகாகச் சொன்னீர்கள்..
பதிலளிநீக்குமனதைத் தொட்ட கவிதை!
பதிலளிநீக்குமனதைத்தொட்ட வெகு அழகான அர்த்தமுள்ள கவிதை.
பதிலளிநீக்கு//அக்கறையினாலா?
அல்ல! அல்ல!
பழைய காகிதத்தை
எவ்வளவு நாள்
பாதுகாப்பது?
இணையத்திலும்
பத்திரிகையிலும்
பழைய
பேப்பர் காரனை
தேடிக்
கொண்டிருக்கிறார்களாம் //
சூப்பர் வரிகள். நான் மிகவும் ரஸித்தேன்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
பதிலளிநீக்கு"மனதைத்தொட்ட வெகு அழகான அர்த்தமுள்ள கவிதை."
நன்றி அய்யா!
மனதைக்குடையும் கவிதை!
பதிலளிநீக்கு1D32C05078
பதிலளிநீக்குtakipçi alma
chita swivel accent chair
2CCAFBE859
பதிலளிநீக்குCanlı Show Whatsapp
Sanal Seks
Webcam Show