சூரிய கிரகணம் நமக்குத் தெரியும். நிலா பூமிக்கும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வந்து சூரியனை மறைக்கும் நிகழ்வு சூரிய கிரகணம். இந்நிகழ்ச்சிஅடிக்கடி நடைபெறுவதை நாம் பார்த்திருக்கிறோம். சந்திர கிரகணமும் நாம் அறிந்ததே. ஆனால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் இன்னொரு கோளான வெள்ளி சூரியனின் பரப்பை மறைக்கும் நிகழ்வு ஒன்று உண்டு. அதற்கு வெள்ளிக் கடவு.(Venus Transit) என்று பெயர்.இது மிகவும் அரிய நிகழ்வாகும். இந்நிகழ்வை ஜூன்6, 2012 அன்று காலையில் சூரியன் உதித்ததில் இருந்தே இதனைக் காணலாம்.
இதுபோல் அடுத்த நிகழ்வு 125 ஆண்டுகளுக்குப் பிறகு 2117 டிசம்பரில்தான் நடக்கும். ஒரு நூற்றாண்டில் இரண்டு முறை மட்டுமே வெள்ளிக் கடவு நடக்கும்.
சூரிய கிரகணம் போல் இது சூரியனை முழுவதுமாக மறைக்காது. சூரியனின் பரப்பை சிறு கருப்புப் பந்து கடப்பது போல் சூரியனை இடமிருந்து வலமாகக் கடக்கும் இதனை வெறும் கண்களால் காண இயலாது. இந்த நிகழ்வின்போது சூரியனை நேரடியாக வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. அதற்கென்று வடிகட்டி(filter) பொருத்தப்பட்ட கண்ணாடிகளையே பயன்படுத்தவேண்டும்.புகை படியவைக்கப்பட்ட கண்ணாடிகள் வழியாகவோ கூலிங் க்ளாஸ் வழியாகவோ பார்க்கக் கூடாது.
இதைப் பார்க்க எளிய வழி சிறிய முகம்பார்க்கும் கண்ணாடி சூரிய ஒளியை அறைக்குள் ஊசி முனை ஒரு அட்டையில் அளவுள்ள துளையின் வழியே செலுத்தி பிரதிபலித்து அந்த பிம்பம் சுவற்றில் விழும்படி செய்ய வேண்டும். அந்த பிம்பம் வட்ட வடிவமாக இருக்கும். அதில் வெள்ளி கோள் சிறு புள்ளியாக கடந்து செல்வதை பார்க்கமுடியும்.
சுவற்றில் விழும் பிம்பத்தைத்தான் பார்க்க வேண்டுமே தவிர கண்ணாடியிலும் சூரியனைப் பார்க்கக் கூடாது.
படத்தில் உள்ளதுபோல் ஒரு பந்தில் சிறுமுகம் பார்க்கும் கண்ணாடித் துண்டை ஒட்டி சூரிய ஒளியை பிரதிபலிக்கச் செய்யலாம். சூரிய ஒளியின் திசையை எளிதில் மாற்றி அமைத்து சுவற்றில் பிம்பம் விழச் செய்யவே பந்தின்மீது கண்ணாடி ஒட்டப்பட்டு ஒரு டம்பளர் மேல் வைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட படத்தில்உள்ளதுபோலவும் பார்க்கலாம்.
(தினந்தோறும் கிழக்கு வானில் நட்சத்திரம் ஒன்று ஜொலிப்பது தெரியும்.உண்மையில் அது நட்சத்திரம் அல்ல. வெள்ளிக் கோளாகும். மாலையில் இதனை மேற்கிலும் காணலாம்.)
உங்கள் வீட்டில் இருந்தே இந்த நிகழ்ச்சியை June 6ஆம்தேதி காலை 5.50 முதல் 10.30 வரை காணலாம்.
உங்கள் பிள்ளைகள் ,தம்பி தங்கைகளுக்கு பாதுகாப்புடன் இந்நிகழ்வை காட்டி மகிழுங்கள். முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்ச்சியை பார்க்கும் சிறுவர் சிரறுமியரில் ஒரு கலீலியோ , கெப்ளரோ மறைந்திருக்கலாம்.
சென்னை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கிலும் இந்நிகழ்ச்சியை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
**********************************************************************************
(தினந்தோறும் கிழக்கு வானில் நட்சத்திரம் ஒன்று ஜொலிப்பது தெரியும்.உண்மையில் அது நட்சத்திரம் அல்ல. வெள்ளிக் கோளாகும். மாலையில் இதனை மேற்கிலும் காணலாம்.)
உங்கள் வீட்டில் இருந்தே இந்த நிகழ்ச்சியை June 6ஆம்தேதி காலை 5.50 முதல் 10.30 வரை காணலாம்.
உங்கள் பிள்ளைகள் ,தம்பி தங்கைகளுக்கு பாதுகாப்புடன் இந்நிகழ்வை காட்டி மகிழுங்கள். முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்ச்சியை பார்க்கும் சிறுவர் சிரறுமியரில் ஒரு கலீலியோ , கெப்ளரோ மறைந்திருக்கலாம்.
சென்னை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கிலும் இந்நிகழ்ச்சியை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
**********************************************************************************
நம் வாழ்நாளில் காண முடியாத அறிய நிகழ்வைக் காண ..
பதிலளிநீக்குவழி காண்பித்ததற்கு நன்றி..
அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு
பதிலளிநீக்குபடங்களுடன் மிக மிக எளிமையாக
அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம்
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 1
பதிலளிநீக்குபயனுள்ள தகவல். நன்றி.
பதிலளிநீக்குசந்திர சூரிய கிரகணங்கள் தான் எல்லோருக்கும் தெரியும். வெள்ளிக் கடவு ( Venus Transit ) என்ற புதிய நிகழ்வைச் சொன்னமைக்கு நன்றி! ( அறிய நிகழ்வு என்பது தவறு. அரிய நிகழ்வு என்பதே சரி )
பதிலளிநீக்குஅறிய நிகழ்வை அருமையாக பதிவாக்கிய விதம் அருமை .
பதிலளிநீக்குத.ம.2
பகிர்வுக்கு நன்றி ..!
பதிலளிநீக்குபயனுள்ள தகவல். நன்றி.
பதிலளிநீக்குசில வேலைகள் காரணமாக பதிவுலக பக்கம் வர முடிவதில்லை..தங்களது வருகையைக் கண்ட பிறகே இங்கு வருகிறேன்..
பதிலளிநீக்குஇந்த அரிய வாய்ப்பை இன்று காண தவறிவிட்டேன்..ஆனால், சில தகவல்களை அறிந்துக்கொள்ள உதவி புரிந்த இப்பதிவு...பயனுள்ளது.மிக்க நன்றி.
அருமையான வழிகளை தந்திருக்கிறீர்கள். அடுத்தமுறை வரும்வரை தாக்குப்பிடிக்க மாட்டோம். இந்த முறையே கண்டிப்பாப பார்க்கவேண்டும்.
பதிலளிநீக்குஅருமையான பதிவு.வலைச்சரத்தில் என் பதிவுகளையும் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி நண்பரே.
பதிலளிநீக்குநல்ல பதிவு.பயனுள்ள விடயம்.
பதிலளிநீக்குஅடடா . தவற விட்டாச்சே.
பதிலளிநீக்குஅடுத்த முறை பார்க்க - இன்னொரு ஜென்மம் எடுக்கனுமே.
thankyou very much for introducing my post
பதிலளிநீக்குI really missed this opportunity
பதிலளிநீக்குCE9D559118
பதிலளிநீக்குhacker bulma
kiralık hacker
tütün dünyası
hacker bul
hacker kirala