என்னை கவனிப்பவர்கள்

எண்ணங்கள்

ஊழல் ஒழியுமா?


ஊழலை ஒழிக்க அன்னா ஹசாரே (ANNA HAZARE) போராடி வருகிறார். லோக்பால் மசோதாவில் பிரதமரையும் சேர்க்கக் கோரி அவர் நடத்திய போராட்டம் நாட்டு மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியது என்பது உண்மை. ஆனால் ஊழல் ஒழிப்பு எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை அறிய இயலவில்லை.

            ஒரு ஊராட்சி தலைவர் அல்லது வார்டு உறுப்பினர் தனது பதவிக் காலத்திற்குள் பல லட்சங்களை எந்தவித உழைப்புமின்றி சம்பாதித்து விடுகிறார். பதவிக்கு முன்பும் பின்பும் அவர்களுடைய சொத்து மதிப்பில் மிகப் பெரும் வித்தியாசம் இருப்பது கண்கூடு. பாரபட்சமற்ற ரெய்டு நடத்தினால் பல உள்ளாட்சி தலைவர்கள் வருமானத்துக்கும் அதிகமான சொத்து இருப்பதை கண்டுபிடிக்க முடியும். உள்ளாட்சி பிரதிநிதிகளே இப்படி என்றால் M.L.A,  M.P  அமைச்சர்களைக் கேட்கவே வேண்டாம். மக்களும் இதனை சாதாரண விஷயமாகவே எடுத்துக் கொள்கிறார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் நேர்மையானவர்களும் நாணயமானவர்களும் இருக்கிறார்கள்

      உண்மையாகவே மிகவும் நேர்மையான ஒருவர் பதவிக்கு வந்தால் மக்கள் அனைவரும்  அதை விரும்புவார்கள் என்று சொல்ல முடியாது. மக்கள் செய்யும் சில சிறிய அளவிலான விதி மீறல்களைஎல்லாம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பேன் என்று ஒருவர் தேர்தல் வாக்குறுதி  கொடுத்தால் மக்கள் அவருக்கு வாக்களிப்பார்களா?

      தெரிந்தோ தெரியாமலோ மக்கள் ஊழலுக்கு துணை போகிறார்கள். அரசு அதிகாரிகளும் பல விஷயங்களில் அரசியல்வாதிகளுக்கு ஏற்ப விதி மீறல்களைச்  செய்து  ஊழலை வளர்க்கிறார்கள்.

      இந்நிலையில் அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு பல்லாயிரக் கணக்கானவர்கள் ஆதரவு தெரிவித்தனர். எனவே அன்னா  ஹசாரே மேயர், நாடாளு மன்ற உறுப்பினர், சட்ட மன்ற உறுப்பினர்  தேர்தலில் நின்று வென்று ஊழலுக்கு எதிரான மக்கள் எண்ணத்தை மெய்ப்பிக்க வேண்டும். பின்னர் வெளிப்படையாக செயல்களை மேற்கொண்டு சிறந்த முன் உதாரணமாகத் திகழ வேண்டும் என்பதே என் விருப்பம்.

2 கருத்துகள்:

  1. எனவே அன்னா ஹசாரே மேயர், நாடாளு மன்ற உறுப்பினர், சட்ட மன்ற உறுப்பினர் தேர்தலில் நின்று வென்று - ithai chonnathil irunthu thaangkaL avaraiyum oru oozal pErvaLiyaaka maarach cholkirIrkaL enpathu thinnamaakiRathu

    பதிலளிநீக்கு
  2. ஊழல் அரசியல் வாதிகளை திருத்த முயல்வதை விட தானே நல்ல அரசியல்வாதியாக மாறிக் காட்டுவதுதானே சிறந்தது. ஊழலற்ற நேர்மையானவர்கள் மக்கள் ஆதரவை முழுவதுமாக பெற்றுவிட முடியாது. அப்படி பெற்றுக் காட்டி முன்மாதிரியாகத் திகழ்வதற்காகத்தான் நேரடி அரசியலில் இறங்கச் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895