தமிழ்ப் பதிவர்கள் ஆங்கிலப் பதிவர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்று தன்மானத்துடன் முழக்கமிட்ட கேபிள் சங்கர் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்..
தமிழ் வலைப்பதிவிற்கு புதியவன் நான். தமிழ் வலைப் பதிவுகளில் இல்லாத விஷயங்களே இல்லை என்று அடித்துச் சொல்லும் அளவிற்கு ஏராளமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன என்பதை தெரிந்துகொண்டேன். உள்ளடக்கத்திலும் டெக்னிக்கல் விஷயங்களிலும் நம்மவர்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல.
அதிக டிராஃபிக் உடைய வலைப்பூக்களும் தமிழில் உள்ளன. ஆனால் Google Adsense approval தமிழ் பிளாக்குகளுக்கு கிடைப்பதில்லை. என்பது பல்வேறு வலைப்பூக்களைப் பார்வையிடும்போது தெரிய வருகிறது.கூகுள் அட்சென்ஸ் அனுமதிக்கும் 32 மொழிகளில் தமிழ் இல்லை என்பது வருத்தத்திற்கு உரியதே!
அந்த மொழிகளில் உள்ள ஒருசிலவற்றை விட, தமிழில் அதிகமான வலைப்பூக்களும் பார்வையாளர்களும் உள்ளனர் என்றே நினைக்கிறேன்.
மற்ற நாட்டு மக்களைவிட இந்தியர்கள் விளம்பரத்தால் ஈர்க்கப் படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அப்படி இருந்தும் ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளை கூகுள் அங்கீககரிக்காதது துரதிர்ஷ்டமே. மேலும் விளம்பரங்கள் பிராந்திய மொழிகளில்தான் அமையவேண்டும் என்று எந்த பதிவரும் கூறப்போவதில்லை. தமிழ் ப்ளாக்குகளில் ஆங்கிலத்தில் விளம்பரம் தரலாமே. தமிழில் எழுத வசதிகளைத் தரும் கூகுள் விளம்பர விஷயத்தில் தமிழ் வலைப் பூக்களுக்கு ஆதரவு அளிக்கும் நாள் எந்த நாளோ?
பெரும்பாலான பதிவர்கள் நல்ல பணியில் இருக்கிறார்கள். அவர்கள் பதிவுகள் மூலம் வருவாய் ஈட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் களமாகவே வலைப் பூக்களைப் பயன்படுத்துகின்றனர்.
TATA போன்ற நிறுவனங்கள் வழங்கும் ஆலோசனைகள் நமக்கு உதவாவிட்டாலும் கேபிள் சங்கர் (cable sankar) உள்ளிட்ட முன்னணிப் பதிவர்கள் இணைந்து வலைப்பதிவர்களுக்கான ஒரு சங்கத்தை ஏற்படுத்தி தமிழ்ப் பதிவர்களுக்கு உண்மையிலேயே உதவ முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உள்ளூர் விளம்பரங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பற்றி ஆலோசனைகள் கொடுக்கவும், ஆட்சென்சில் தமிழைச் சேர்க்கவும் முயற்சி மேற்கொள்ள இதுபோன்ற அமைப்புகள் உதவும் என்று நம்புகிறேன். ஏற்கனவே இதுபோன்ற சங்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை.
விளம்பரங்கள் கிடைத்து பொருளீட்ட முடியும் என்பது உறுதியானால் மேலும் தரமான பயனுள்ள பல்வேறு வகையான பதிவுகள் நமக்கு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!பகுதி 2
செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!பகுதி 1
ஜூனோ! எங்கள் செல்லமே!

3BE520F4D7
பதிலளிநீக்குŞov Numarası
Ücretli Show
Skype Show