பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
பாலகுமாரன் கவிதைகள்
தமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை
TAMILNADU 7TH PAY COMMISSION FIXATION STATMENT
TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்
கணினிக் குறிப்புகள்
என்னைப் பற்றி
கவிதைகள்
புதிர் விடை
என் கற்பனையில் வடிவேலு
புரோகிதரே போதும் கவிதை எழுதியவர்
Rajyasaba Election : Model Voting and counting
எனது பதிவுகளின் பட்டியல்
கமலஹாசன் கவிதை
எண்ணங்கள்
▼
நானும் நானும்
( மனித மனதின் முரண்பாடுகளை வெளிப்படுத்தும் கவிதை.
படித்து உங்கள் கருத்தை சொல்வீர்!)
என்னுள் இருப்பது இரண்டு ‘நான் ’கள்
என்னையே கேட்டேன் எண்ணிலா ‘ஏன்?’கள்
நான் என்பது முரண்பாட் டுருவம்
நானும் நானும் எதிரெதிர் துருவம்
பொய்யைச் சொல்லி உதவியும் செய்வேன்
மெய்யைச் சொல்லி மாட்டியும் கொள்வேன்
புதுமை கண்டு போற்றவும் செய்வேன்
பழமை கண்டும் வியந்தும் போவேன்
முதிர்ந்த அறிவுடன் கருத்தும் சொல்வேன்
முட்டாள் தனமாய் நடந்தும் கொள்வேன்
தெளிந்த கருத்தில் குழப்பம் அடைவேன்
குழம்பிய நிலையில் தெளிவும் பெறுவேன்
கண்டதை எழுதி கவிதை என்பேன்
கவிதை படைத்துக் குப்பை என்பேன்
சிறுமை கண்டு சீறவும் செய்வேன்
துரோகம் கண்டு ஒதுங்கியும் செல்வேன்
வறியவர் கண்டு வாடவும் செய்வேன்
வறுமை கண்டு ஓடவும் செய்வேன்
பனியைப் போல உருகியும் விடுவேன்
பாறை போலே இறுகியும் விடுவேன்
இயந்திர ஒலியில் இசையை உணர்வேன்
இசையைக் கூட இரைச்சல் என்பேன்
காதலை ஒருநாள் கடவுள் என்பேன்
காமம் என்று மறுநாள் சொல்வேன்
முற்றும் துறந்திட முயற்சியும் செய்வேன்
சற்று நேரத்தில் சஞ்சலம் கொள்வேன்
அடக்கம் நானில் அடங்கி இருக்கும்
ஆணவம்இன்னொரு நானில் தொனிக்கும்
நானே வெல்வேன்! நானே தோற்பேன்!
நானின் தன்மை அறியா தலைவேன்
எதிரெதிர் 'நான்’கள் என்னுள் உறங்கும்.
எப்பொழுது எதுவெனத் தெரியா தியங்கும்
நான்கள் எனக்கு அடங்கு வதில்லை!
வழிவகை தெரிந்தால் தீருமென் தொல்லை!
**********************************************************
இதையும் படியுங்க!
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.
பதிலளிநீக்குமுதிர்ந்த அறிவுடன் கருத்தும் சொல்வேன்
பதிலளிநீக்குமுட்டாள் தனமாய் நடந்தும் கொள்வேன்
தெளிந்த கருத்தில் குழப்பம் அடைவேன்
குழம்பிய நிலையில் தெளிவும் பெறுவேன்..
Naan rasiththa varigal nanbare
நன்றி! தமிழ் தாசன்!
பதிலளிநீக்கு