என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

புதிர் விடை


விடை :
 பேப்பர் காரரோட ஆசை நிறைவேறாது. பேப்பர் பிளாஸ்டிக் இரும்பு இவற்றின் எடை அந்த நாளில் குறைந்தால் . அவர் வைத்திருக்கும் எடைக்  கற்களும் அதற்கேற்றார் போல் எடை இழக்குமே. இதை மறந்து விட்டார்  பேப்பார்காரர்
*************************************************************************
அந்த எண் 101 
எப்படி?
உதாரணத்திற்கு 17 எடுத்துக் கொள்ளுங்கள்  17 x 101 = 1717
எந்த இரண்டு இலக்கஎண்ணை எடுத்துக் கொள்கிறோமோ அது இரண்டு முறை எழுதப்பட்ட நான்கு இலக்க எண்ணாக மாறிவிடும் 101ஆல் பெருக்கும்போது.

இதை  எப்படி கண்டு பிடிப்பது 
வழி: 1
எடுத்துக்காட்டுக்கு 51   இதை அந்த எண்ணால் பெருக்கும்போது 5151 என்று வர வேண்டும். அப்படியானால் 5151 ஐ 51 ஆல் வகுத்தால் கிடைப்பது 101.
எல்லா இரண்டிலக்க எண்களுக்கு இது பொருந்தும்.

வழி: 2 
இந்த  அமைப்பை கவனித்தால் ஒன்றை புரிந்து கொள்ள முடியும் 
கொடுத்துள்ள  நிபந்தனைப் படி

இரண்டிலக்க எண்                பெருக்கல்பலன்

31          x      --------                 3131
25          x      -------                  2525
46          x      -------                  4646

பெருக்கல்  பலன் இரண்டிலக்க என்னை விட100 மடங்குக்கு மேல் இருப்பதை காணலாம். 31 ஐ 100 ஆல் பெருக்கினால் 3100 அதனுடன் அதே 31 கூட்டினால் 3131 அதாவது 101 மடங்கு.

வழி 3

இந்த முறை அல்ஜீப்ரா பயன்படுத்தி விடை காண்பது. யாரேனும் கேட்டால் சொல்கிறேன்.
இதனை பயன் படுத்த அறிந்து கொண்டால் பல கணக்குகளுக்கு தீர்வு காண முடியும்.
*********************************************************************************

Tamilmanam Tamil blogs Traffic Rank

17 comments:

 1. கணக்கில் ஓரளவுக்கு தேர்ச்சி முறை உண்டு என்றாலும் இது கொஞ்சம் தடுமாற வைத்தது என்னமோ உண்மை.
  நல்ல புதிர் நன்றி
  அல்ஜீப்ரா முறையையும் சொன்னால் தன்யனாவேன்
  நன்றி!

  ReplyDelete
 2. நானும் யோசித்து யோசித்து பார்த்தேன்...
  முடியவில்லை...
  அதான் இங்கே வந்து பார்த்துவிட்டேன்...
  ==
  நல்ல ஆக்கம் நண்பரே...
  அந்த அல்ஜீப்ரா முறையைக் கொஞ்சம் சொல்லுங்களேன்
  உதவியாக இருக்கும்.

  ReplyDelete
 3. ஹிஹி.... 'விடை'யை உடனே கிளிக்கிக் கொண்டு இங்கு வந்துட்டோம்ல....!

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி ஹி ஹி நாங்களுந்தான்

   Delete
 4. நல்ல அறிவுரை மற்றும் புதிர் கணக்கு .நீங்கள் சொன்னதும் சரி மேலும் 99x9+9-9 எப்படி பெருக்கினாலும் கூட்டுத்தொகை 9 தான் வரும்

  ReplyDelete
 5. தமிழ்மணம் ஓட்டுப் பட்டை எங்கே நண்பரே

  ReplyDelete
 6. இது விடைக்காக உருவாக்கின பக்கம் புதிர் இருக்கிற பக்கத்துக்கு வாங்கசார். அங்க இருக்கு ஓட்டுப பட்டை இதுல இணைக்க முடியுமான்னு தெரியல முயற்சி பண்ணி பாக்கறேன்.

  ReplyDelete
 7. அருமையான சுவாரஸ்யமான புதிர்..பாராட்டுக்கள்..

  ReplyDelete
 8. அருமையான புதிர் கணக்கு. குழந்தைகளுக்கு நிச்சயம் மகிழ்வைத் தரும்

  ReplyDelete
 9. 99 வரைக்கும் நீங்கள் சொல்வது சரி.

  ReplyDelete
 10. இரண்டிலக்கம் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதைக் கவனிக்கத் தவறினேன்; மன்னிக்கவும்.

  ReplyDelete
 11. தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
  அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
  அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்

  ReplyDelete
 12. தேவையான செய்தி! நன்றி முரளி!

  ReplyDelete
 13. BEST WISHES
  this article is selected by VALAICHARAM (best article)
  on 18/02/2015

  puthuvai velou
  www.kuzhalinnisai.blogspot.com

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895