என்னை கவனிப்பவர்கள்

புரோகிதரே போதும் கவிதை எழுதியவர்

நேற்று பதிவிட்ட மூன்று கவிதைகளையும் எழுதியவர் கவிஞர் மீரா.
மரபுக் கவிதைகள்  எழுதி இருந்தாலும் புதுக் கவிதைகள் மூலம் வாசகர்கள் மனதில் இடம் பெற்றவர்.
இயற்பெயர் : மீ.இராசேந்திரன் 
கவிதைகள் இடம் பெற்ற நூல்: ஊசிகள்
இவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப் பட்டுள்ளன
அவர் இப்போது உயிருடன் இல்லை.
இவர் பெயரில் வலைத் தளம் உள்ளது.
http://kavignarmeera.blogspot.in/2010/09/blog-post_25.html

மீரா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்கள்
01.  பாரதியம்
02.  எதிர்காலத் தமிழ்க்கவிதை
03.
04.  கவிதை ஒரு கலந்துரையாடல்
05.  கோடையும் வசந்தமும்
06.  குக்கூ
07.  மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு
08.  மீரா கட்டுரைகள்
09.  மீ.இராசேந்திரன் கவிதைகள்
10.  மூன்றும் ஆறும்
11.  முகவரிகள்
12.  ஊசிகள்
13.  சுயம்வரம்
14.  வா இந்தப்பக்கம்

முதலில் விடையை சரியாக வவ்வால் சொல்லிவிட்டார்.
அதற்கான குறிப்பையும் விட்டுச் சென்றார்
அதை வைத்து மின்னல் வரிகள் பாலகணேஷ் அவர்களும் விடையை ஊகித்து விட்டார்.
இராஜேஸ்வரியும் விடையை சரியாக கணித்து விட்டார். வவ்வாலின் குறிப்பை வைத்து சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன்.
பாராடுக்கள்
வருகை தந்த அனைவருக்கும் நன்றி

**************************************************************************************************************

3 கருத்துகள்:

  1. என் பெயர் பாபு . நான் சமீபத்தில் தான் உங்கள் இணையதளத்தை பார்த்தேன் . மிகவும் அருமையாக இருக்கிறது . தளத்தில் உள்ள அனைத்தும் நன்றாக இருக்கிறது.

    babuworld123@gmail.com
    www.babuworld2013.blogspot.in

    மேலே உள்ள இணையதளத்தை நான் சமீபத்தில் உருவாக்கினேன் . இதை பார்த்து விட்டு எதாவது தவறு இருந்தால் சொல்லுங்க திருத்திக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. “ இல்லை கடவுள்...
    ...போத்தனூர்க் காவலர்
    புலனாய்வு செய்கிறார்“ என்றலலவா அந்தக் கவிதை முடியும்? ஊசி ஊசியாகக் குத்தும் கவிதைகள் என்னை மட்டும் சொல்லவேண்டாம் என்றதற்கு, எனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன் யுவர் ஆனர்... இந்த முரளி அய்யாவுக்கு திரு மன்மோகன் சிங்கை தேர்தலில் ஆதரித்து ஒரு மாதம் பிரச்சாரம் செய்யும்படி தண்டித்திட வேண்டுமாய்ப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஐயா
    இது தான் திறமைக்கான தேடல் என்பது. மீரா அவர்களின் கவிதையைப் பகிர்ந்ததோடு அவரது படைப்புகளையும் காட்சிப்படுத்தியமைக்கு நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895